Vadvamukhaagni created by wrath! | Adi Parva - Section 182 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : பித்ருக்களின் சொற்படி ஔர்வர் தமது கோபத்தைப் பெருங்கடலில் விட்டது...
கந்தர்வன் சொன்னான், "வசிஷ்டர் தனது விவரிப்பைத் தொடர்ந்தார், "ஓ குழந்தாய் {பராசரா}, பித்ருக்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஔர்வர், அவர்களுக்கு இப்படி மறு மொழி கூறினார்."பித்ருக்களே, கோபம் கொண்ட நான் உலகத்தின் அழிவுக்காக செய்த தவம் வீணாகப் போகக்கூடாது.(1) யாருடைய கோபமும், சபதமும் வீணாகப் போவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் எனது தவத்தைச் சாதிக்கவில்லையெனில், காய்ந்த மரத்தை உட்கொள்ளும் நெருப்பைப் போல, எனது கோபமே என்னை எரித்துவிடும்.(2) தகுந்த காரணத்திற்காக ஏற்படும் சீற்றத்தை ஒடுக்கும் மனிதன், வாழ்வின் மூன்று முனைகளை (அறம், பொருள், இன்பம்) சமமாக அடைய முடியாதவன் ஆகிவிடுவான்.(3) மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மன்னனால் வெளிப்படுத்தப்படும் கோபத்திற்குத் தகுந்த பயன் இல்லாமல் இல்லை {பயன் இருக்கிறது}. அந்தக் கோபம் தீயவர்களை அடக்கி, நேர்மையானவர்களைக் காக்கப் பயன்படுகிறது.(4)
நான் பிறப்பதற்கு முன், எனது தாயின் தொடைக்குள் இருக்கும்போது, நமது குலத்தவர் க்ஷத்திரியர்களால் அழிக்கப்படும்போது, எனது தாய் மற்றும் நமது குலப் பெண்களின் துக்கம் நிறைந்த அழுகையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.(5) பித்ருக்களே, அந்த க்ஷத்திரியப் பாவிகள் பிறக்காத குழந்தைகளையும் சேர்த்து பிருகு குலத்தவரைக் கூட்டமாகக் கொன்றொழித்தபோது, கோபமே எனது ஆன்மா முழுவதும் நிறைந்திருந்தது.(6) பிரசவிக்கும் நேரத்தின் அருகிலிருந்த நமது குல கர்ப்பிணித் தாய்மார்களும், எனது தாயும், எனது தந்தையும் மிகவும் அச்சமடைந்து, தங்களைக் காக்க ஒருவரும் இல்லாமல் இருந்தனர்.(7) பிருகு குலத்தின் பெண்கள் ஒரு காப்பாளனையும் காணாத போது, எனது தாய் என்னைத் தனது தொடைகளில் பிடித்து வைத்தாள்.(8) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் {குற்றம் புரிபவர்கள்} தண்டிப்பவன் எவனையும் காணவில்லையென்றால், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10)
காக்கும் அதிகாரமும், பாவங்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லை என்றால், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் தண்டிப்பவன் எவனையும் காணவில்லையெனில், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10) காக்கவும், பாவங்களைத் தண்டிக்கவும் அதிகாரம் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லையெனில், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11)
மன்னர்களுக்கும், பிறருக்கும் என் குலத்தவரைக் காக்கும் அதிகாரம் இருந்தும், வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போட்டு, அவர்களைக் காக்காமல் இருந்தனர். எனவே, நான் அவர்களிடம் கோபம் கொள்ள நியாயம் இருக்கிறது. நானே அநீதியைத் தண்டிக்கவல்ல படைப்பின் தலைவனாவேன். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வல்லனல்லேன்.(12,13) இக்குற்றங்களைத் தண்டிக்கவல்லவனாயிருந்தும், நான் அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகை அழித்தொழிப்புகளையே செய்வார்கள்.(14) எனது கோபத்தீ இவ்வுலகை எரிக்கத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அஃது எனது சக்தியையும், என்னையும் சேர்த்து எரித்துவிடும்.(15) ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுவீர்களாக." என்றார் {ஔர்வர்}".(16)
வசிஷ்டர் தொடர்ந்தார், "அதற்கு அந்தப் பித்ருக்கள், "உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி வீசுவாயாக. அஃது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன.(17) சாறு {நீர்மை கொண்ட} அனைத்துப் பொருட்களிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்டமே நீரால் ஆனதுதான். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடுவாயாக.(18) ஓ பிராமணா, நீ விரும்பினால், அந்தக் கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அஃது உட்கொண்டபடி இருக்கட்டும்.(19) ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும், தேவர்களும் அழிய மாட்டார்கள்" என்றனர் {பித்ருக்கள்}".(20)
வசிஷ்டர் தொடர்ந்தார், "ஓ குழந்தாய் {பராசரா}, அதன் பிறகு ஔர்வர் தமது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டார்.(21) பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போன்ற வடிவத்தில் இருந்தது. எனவே, அதை வடவாமுகம் {வடவாமுக அக்னி} என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர்.(22) அதன் வாயிலிருந்து பெரும் நெருப்புக் கிளம்பி அந்தப் பெருங்கடலின் நீரை உட்கொண்டது. ஓ பராசரா, உயர்ந்த உலகங்களில் உள்ள ஞானமுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களை நீ அறிந்தவனாக இருக்கிறாய். எனவே அருளப்பட்டவனே, நீ உலகங்களை அழிக்கக்கூடாது" என்றார் {வசிஷ்டர்}.(23)

ஆங்கிலத்தில் | In English |