Parasara's Rakshasa sacrifice! | Adi Parva - Section 183 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் சொல் மதித்து உலகத்தை அழிப்பதைக் கைவிட்ட பராசரர்; ராட்சசர் அழிவுக்கான வேள்வியைச் செய்து பல ராட்சசர்களை அழிப்பது; பிறகு அத்ரி, புலஸ்தியர், புலஹர் கிரது ஆகியோரின் சொல் கேட்டு அவ்வேள்வியை நிறுத்தியது...
கந்தர்வன் தொடர்ந்தான், "சிறப்புமிகுந்த வசிஷ்டரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த பிராமண முனிவர் {பராசரர்} உலகத்தை அழிக்கத் தன்னைத் தூண்டிய கோபத்தை அடக்கிக் கொண்டார்.(1)ஆனால், வேதமறிந்தவர்களில் முதன்மையானவரும், சக்திரியின் மகனும், பெரும் சக்தியைக் கொண்ட முனிவருமான பராசரர், ஒரு பெரும் ராட்சச வேள்வியை நடத்தினார்.(2) (தமது தந்தையான) சக்திரியின் படுகொலையை நினைத்துப் பார்த்த அந்த முனிவர் முதிர்ந்த மற்றும் இளமையான ராட்சசர்களைத் தான் நடத்திய வேள்வியின் மூலமாக எரித்தார்.(3) (தமது பேரனின்) இரண்டாவது உறுதிமொழியில் குறுக்கிடக்கூடாது என்று உறுதியேற்ற வசிஷ்டர், ராட்சசர்களின் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லை.(4) பராசர முனிவர் அவ்வேள்வியில் சுடர்விட்டெரியும் மூன்று நெருப்புகளுக்கு எதிரில் நான்காவது நெருப்பாக அமர்ந்திருந்தார்.(5)
அந்தச் சக்திரியின் மைந்தன் {பராசரர்}, மேகத்தை விட்டு வெளியே வரும் சூரியனைப் போல, பெருமளவு தூய்மையாக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்டதும், களங்கமற்றதுமான தனது வேள்வியின் மூலம் முழு வானமண்டலத்தையும் ஒளிமயமாக்கினார்.(6) அப்போது, வசிஷ்டரும், பிற முனிவர்களும், தன்னொளின் மூலமே ஒளிரும் இந்த முனிவரை {பராசரரை} இரண்டாவது சூரியன் போலக் கருதினர்.(7) விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட பெருமுனிவரான அத்ரி, மற்றவர்களால் செய்ய முடியாத மிகக்கடுமையான சாதனையாக அவ்வேள்வியை முடித்து வைக்க எண்ணி, அவ்விடத்திற்கு வந்தார்.(8) ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனனே}, மேலும் ராட்சசர்களைக் காக்க விரும்பிய புலஸ்தியர், புலஹர், பல பெரும் வேள்விகளை நடத்திய கிரது ஆகியோரும் அங்கே வந்தனர்.(9) ஏற்கனவே பல ராட்சசர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்கள், எதிரிகளை ஒடுக்கும் பராசரரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்.(10)
அவர்கள், "ஓ குழந்தாய், இந்த உனது வேள்விக்கு எந்தத் தடையும் இல்லை என்று நம்புகிறோம். உனது தந்தையின் மரணத்தைப் பற்றி அறியாத அப்பாவி ராட்சசர்களையும் கொன்ற இந்தப் படுகொலையை நினைத்து நீ மகிழ்ச்சி கொள்கிறாயா?(11) இவ்வாறு எந்த உயிரினத்தையும் கொல்வது உனக்குத் தகாது. ஓ குழந்தாய், தவத்துக்குத் தன்னை அர்ப்பணிக்கும் பிராமணனின் தொழில் இஃதல்ல.(12) அமைதியே {சாந்தியே} உயர்ந்த அறமாகும். எனவே, ஓ பராசரா, நீ அமைதியை நிலைநிறுத்துவாயாக. ஓ பராசரா, இவ்வளவு உயர்ந்தவனாக இருந்தும், நீ இப்படிப்பட்ட பாவகரக் காரியத்தை எப்படிச் செய்கிறாய்?(13) அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்த சக்திரியை {பராசரரின் தந்தை; வசிஷ்டரின் மூத்த மகன்} மீறி நடப்பது, உனக்குத் தகாது. எந்த உயிரினத்தையும் முற்றாக அழிப்பது உனக்குத் தகாது.(14) ஓ வசிஷ்ட குல வழித்தோன்றலே, உனது தந்தை முன்பு தான் பெற்ற சாபத்தாலேயே அவ்வாறு இறந்தான். சக்திரியின் தனிப்பட்ட பிழையின் காரணமாகவே அவன் வானுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்.(15)
ஓ முனியே, சக்திரியை விழுங்கும் அளவுக்கு எந்த ராட்சசனுக்கும் சக்தி கிடையாது; அவனே தனது மரணத்தை வரவழைத்துக் கொண்டான்.(16) ஓ பராசரா, விஷ்வாமித்திரரும் இக்காரியத்தில் வெறும் கருவியே. சக்திரி, கல்மாஷபாதன் ஆகிய இருவரும் வானுலகத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.(17) சக்திரிக்கு இளையவர்களான, வசிஷ்டரின் மற்ற மகன்களும் தேவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.(18) ஓ குழந்தாய், வசிஷ்ட மைந்தனின் வாரிசே, அப்பாவி ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கிய வேள்வியை நடத்திய நீயும் இது விஷயத்தில் வெறும் கருவியே. குழந்தாய், நீ அருளப்பட்டிருப்பாயாக! இவ்வேள்வியைக் கைவிடுவாயாக. இஃது ஒரு முடிவுக்கு வரட்டும்" என்றனர் {அப்பெரும் முனிவர்கள்}".(19,20)
கந்தர்வன் {அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், "புலஸ்தியராலும், நுண்ணறிவு கொண்டவரான வசிஷ்டராலும் இப்படிச் சொல்லப்பட்ட சக்திரியின் மைந்தனான, அந்தப் பெரும் பலம்வாய்ந்த முனிவர் {பராசரர்}, அவ்வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(21) ராட்சசர்கள் அழிவுக்காக அவ்வேள்வியில் மூட்டப்பட்ட அந்த நெருப்பை, அம்முனிவர் இமயத்துக்கு வடக்கில் உள்ள பெருங்காட்டில் விட்டார்.(22) அந்த நெருப்பு ராட்சசர்களையும், மரங்களையும், கற்களையும் அனைத்துக் காலங்களிலும் அழித்து வருவதை இன்றும் காணலாம்" {என்றான் கந்தர்வன்}.(23)

ஆங்கிலத்தில் | In English |