The feast and the exhibition! | Adi Parva - Section 196 | Mahabharata In Tamil
(வைவாஹிக பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : குந்தியுடன் துருபதன் வசிப்பிடத்திற்குச் சென்ற பாண்டவர்கள்; பாண்டவர்களைச் சோதிப்பதற்காக பல பொருட்களைக் கொண்டு வந்த துருபதன்; திரௌபதியும் குந்தியும் அந்தப்புரம் சென்றது; உணவுக்குப் பிறகு ஆயுத வரிசையைப் பார்வையிட்ட பாண்டவர்கள்; ஒரு தீர்மானத்திற்கு வந்த துருபதன்...
வைசம்பாயனர் சொன்னார், "{அப்படி வந்த இரண்டாம்} தூதுவன், "மன்னர் துருபதர், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு மணமகனுக்கு அருமையான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். உங்கள் தினசரிக் கடமைகளை முடித்துவிட்டு அங்கே வருவீராக. கிருஷ்ணையின் {திரௌபதியின்} திருமணம் அங்கே நடைபெறும். தாமதிக்காதீர்.(1) அற்புதமான குதிரைகள் பூட்டித் தங்கத்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தத் தேர் மன்னர்களுக்குத் தகுதியுடையது. அவற்றில் செலுத்திக் கொண்டு பாஞ்சால மன்னனின் வசிப்பிடத்திற்கு வாருங்கள்" என்றான்".(2)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தக் குரு குல காளைகள், புரோகிதரை அனுப்பிவிட்டுக் குந்தியையும், கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அந்த தேர்களில் ஒன்றில் ஏற்றி, அந்த அற்புதமான வாகனங்களில் தாங்களும் ஏறிக்கொண்டு துருபதனின் இடத்தை நோக்கிச் சென்றனர்.(3) அதே வேளையில், ஓ பாரதா {ஜனமேஜயா}, தனது புரோகிதர் மூலமாக யுதிஷ்டிரனின் வார்த்தைகளை அறிந்த துருபதன், அந்த வீரர்களின் குலத்தை அறிய எண்ணி, பல்வேறு பொருட்களின் பெரும் தொகுப்பைத் (நான்கு வகை வர்ணங்களின் படி திருமணத்திற்குத் தேவையான பொருட்களைத்) தயாராக வைத்திருந்தான். கனிகளையும், புனிதமான மாலைகளையும், கவசங்களையும், கேடயங்களையும், தரைவிரிப்புகளையும், பசுக்களையும், விதைகளையும், பல்வேறு பொருட்களையும், விவசாயத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்திருந்தான்.(4,5)
ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, அந்த மன்னன், பல கலைப்பொருட்களையும், பல்வேறு விளையாட்டுக் கருவிகளையும் திரட்டி வைத்தான்.(6) பல்வேறு அற்புதமான கவசங்களையும், பளபளக்கும் கேடயங்களையும், வாட்களையும், உறுதியான கூர்வாள்களையும், குதிரைகளுடன் கூடிய அழகான தேர்களையும், முதல்தரமான விற்களையும், அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்புகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஏகப்பட்ட கணைகளையும் திரட்டி வைத்தான். அம்புகளையும், கணைகளையும், போர்க்கோடாரிகளையும், போர்த்தளவாடங்களையும் கூட அவன் {துருபதன்} தயாராக வைத்திருந்தான். பல்வேறு படுக்கைகள், தரைவிரிப்புகள், பல அற்புதமான பொருட்கள், பலவகை ஆடைகள் அந்தத் தொகுப்பில் இருந்தன.(7,8)
{பாண்டவர்கள் அடங்கிய} அந்தக் குழு, துருபதனின் வசிப்பிடத்தை அடைந்ததும், குந்தி, அறம்சார்ந்த கிருஷ்ணையை மன்னனின் {துருபதனின்} அந்தப்புரத்திற்குள் அழைத்துச் சென்றாள். மன்னனின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள், மகிழ்ச்சிகரமான இதயத்துடன் குருக்களின் ராணியை {குந்தியை} வழிபட்டனர்.(9) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சிங்கத்தின் நடை கொண்டு, மான் தோலால் ஆன மேலாடை அணிந்து பார்ப்பதற்குப் பெரும்பலம்வாய்ந்த காளைகளைப் போல பாண்டவர்கள் இருந்தனர். அகன்ற தோள்களுடனும், பெரும் பாம்புகளைப் போன்று நீண்டு தொங்கும் கரங்களுடன் இருந்த மனிதர்களில் முதன்மையான {பாண்டவர்களில்} ஒவ்வொருவரையும் கண்ட மன்னனும் {துருபதனும்}, மன்னனின் அமைச்சர்களும், மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, மன்னனின் நண்பர்களும், பணியாட்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.(10,11) அந்த வீரர்கள், பாதத்தைத் தாங்கும் மனைப் பலகையுடன் கூடிய அற்புதமான இருக்கைகளில், எந்தத் தடுமாற்றமும், தயக்கமும் இல்லாமல் அமர்ந்தனர். மனிதர்களில் முதன்மையான அவர்கள், ஒருவர் பின் ஒருவராக, அவரவர் வயதுக்குத் தக்க வரிசையாக, அந்த விலையுயர்ந்த இருக்கைகளில் சிறிதும் அச்சமற்று அமர்ந்தனர்.(12)
அந்த வீரர்கள் அமர்ந்ததும், நன்கு உடுத்திய ஆண் மற்றும் பெண் பணியாட்களும், திறன் வாய்ந்த சமையற்காரர்களும், மன்னர்களுக்குத் தகுந்த பண்டங்களைத் தங்கம் மற்றும் வெள்ளி வட்டில்களில் {தட்டுகளில்} கொண்டு வந்தனர்.(13) அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் உணவுகளை உண்டு, பெரும் மனநிறைவைக் கொண்டனர். அந்த இரவு உணவு முடிந்ததும், அந்த வீர மனிதர்கள், அங்கிருந்த பொருட்களை எல்லாம் கடந்து, போர்க்கருவிகளைப் பார்வையிட்டனர்.(14) இதைக் கண்ட துருபதனின் மகனும், துருபதனும், தங்கள் நாட்டின் தலைமை அமைச்சர்களுடன் கூடி, குந்தியின் மகன்களை அரச ரத்தம் உடையவர்களாக அறிந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(15)

ஆங்கிலத்தில் | In English |