Draupadi regained her virginity every day! | Adi Parva - Section 200 | Mahabharata In Tamil
(வைவாஹிக பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் முதலான பாண்டவர்கள் வயதுக்குத் தக்க வரிசையில் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டது...
வைசம்பாயனர் சொன்னார், "இதைக் கேட்ட துருபதன், "ஓ பெரும் முனிவரே {வியாசரே}, நீர் சொல்வதைக் கேட்காதிருந்தால், நான் முன்பு சொன்னவாறே நடந்து கொண்டிருப்பேன். இப்போது நான் அனைத்தையும் அறிந்ததால், தேவர்களால் தீர்மானிக்கப்பட்டதற்கு நான் வேறுபட்டிருக்க முடியாது. எனவே, நீர் சொன்னதைச் செய்ய நான் தீர்மானிக்கிறேன்.(1) விதியின் முடிச்சு அவிழ்க்கப்பட முடியாதது. இந்த உலகத்தில் இருக்கும் எதுவும் நமது செயல்களின் விளைவு கிடையாது {விளைவால் ஏற்பட்டவை கிடையாது}. ஒரு மணமகனை அடையும் நோக்கில் எங்களால் எது நிர்ணயிக்கப்பட்டதோ, அது இப்போது பலருக்கு {பல மணமகன்களுக்கு} ஆதரவாக முடிகிறது.(2) கிருஷ்ணை {திரௌபதி} (தனது முந்தைய பிறப்பில்) திரும்பத் திரும்ப, "எனக்குக் கணவனைக் கொடு" என்று பெரும் தேவனிடமே {சிவனிடமே} வரம் கேட்டிருக்கிறாள். இக்காரியத்தில் சரியும், தவறும் அந்தத் தேவன் மட்டுமே அறிவான்.(3) என்னைப் பொறுத்த மட்டில், சங்கரன் எதைத் தீர்மானித்தாலும், அது சரியோ, தவறோ பாவம் என்னைத் தொட முடியாது. எனவே, விதிக்கப்பட்டது போலவே இவர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் கிருஷ்ணையின் {திரௌபதியின்} கரங்களை உரிய சடங்குகளுடன் பெறட்டும்" என்றான்".(4)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சிறப்புமிக்க வியாசர், நீதிமானான யுதிஷ்டிரனிடம், "ஓ பாண்டுவின் மகனே, இன்று ஒரு நன்னாள் {அதிர்ஷ்டகரமான நாள்}! இன்று பூச(ம்) நட்சத்திரக்கூட்டத்திற்குள் சந்திரன் நுழைகிறான். இன்றே, உனது சகோதரர்களுக்கு முன்பு, நீ முதலில் கிருஷ்ணையின் {திரௌபதியின்} கரங்களைப் பெற்றுக் கொள்வாயாக" என்றார்.(5)
வியாசர் இப்படிச் சொன்னதும், மன்னன் யக்ஞசேனனும் {துருபதனும்}, அவனது மகனும் {திருஷ்டத்யும்னனும்} திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஏகாதிபதி, பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைத் திருமணப் பரிசாகத் தர, தயாராக வைத்திருந்தான். அவனது மகளான கிருஷ்ணை குளித்த பிறகு, பல நகைகளாலும், முத்துக்களாலும் அவளை அலங்கரித்துக் கொண்டு வந்தான்.(6) மன்னனின் நண்பர்களும், உறவினர்களும், நாட்டின் அமைச்சர்களும், பல பிராமணர்களும், அந்நாட்டுக் குடிமக்களும் அத்திருமணத்தைக் கண்டு மகிழ அங்கே வந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தகுதிகளுக்கேற்ப இருக்கைகளில் அமர்ந்தனர்.(7) தாமரை மலர்களாலும் அந்த அரண்மனை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அல்லி மலர்கள் தூவப்பட்ட முற்றத்தில், படைகளை அழகாக வரிசையாக நிற்க வைத்து, வைரங்களும் ரத்தினங்களும் பதிக்கப்பட்ட அந்த அரண்மனை, நட்சத்திரங்களால் நிரம்பிய வானம் போல முக்கிய மனிதர்களின் கூட்டத்தால் நிறைந்திருந்தது.(8) இளமையுடன் கூடிய அந்தக் குரு குல இளவரசர்கள் {பாண்டவர்கள்}, குளித்து முடித்து, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டு, விலையுயர்ந்த ஆடை உடுத்தி, சந்தனக்குழம்பால் நறுமணமாக்கப்பட்டு, வழக்கமான அறச்சடங்குகள் செய்து,(9) நெருப்பின் பிரகாசமுள்ள தங்கள் புரோகிதர் தௌமியரை உடன் அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்திற்குள் பெரும் காளைகள் பசுவின் கொட்டகையில் நுழைவது போல மகிழ்ச்சிகரமான இதயத்துடன் தகுந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நுழைந்தனர்.(10)
வேதங்களை நன்கு அறிந்தவரான தௌமியர், புனித நெருப்பை மூட்டி, தகுந்த உச்சரிப்புகள் கொண்ட வாழ்த்துகளுடன் {மந்திரங்களுடன்} தூய்மையாக்கப்பட்ட நெய்யை அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பில் விட்டார். யுதிஷ்டிரனை அழைத்தவரும், மந்திரங்கள் அறிந்தவருமான தௌமியர், அவனைக் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்து வைத்தார்.(11) நெருப்பை {ஏழுமுறை} வலம் வந்த மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் கரம்பற்றினர். இந்த ஒருங்கிணைப்பு முடிந்ததும், புரோகிதரான தௌமியர், போர்க்கள ரத்தினமான யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, அரண்மனையை விட்டு வெளியேறினார்.(12) அதன்பிறகு, குருகுலத்தைத் தழைக்கச்செய்பவர்களும், பெருந்தேர்வீரர்களுமான அந்த இளவரசர்கள், ஆடம்பர உடை உடுத்திக் கொண்டு, அடுத்த அடுத்த நாட்களில், அந்தப் புரோகிதரின் துணையுடன் அந்தப் பெண்களில் சிறந்தவளின் கரங்களைப் பற்றினர்.(13) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீக முனிவர் {வியாசர்} என்னிடம், இந்தத் திருமணங்களுக்குத் தொடர்புடைய, இயல்புக்குமிக்க ஓர் அற்புதமான காரியத்தைச் சொன்னார். அதாவது, கொடியிடை கொண்ட அந்தச் சிறப்புமிக்க இளவரசி, முந்தைய நாள் திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் தனது கன்னித் தன்மையை மீண்டும் பெற்றாள் என்றார்.(14)
திருமணங்கள் முடிந்த பிறகு, மன்னன் துருபதன், அந்தப் பெரும் தேர் வீரர்களுக்குப் பல்வேறு அற்புதமான செல்வங்களைக் கொடுத்தான். அந்த மன்னன் {துருபதன்}, தங்கக் கடிவாளத்துடன் கூடிய நான்கு குதிரைகள் பூட்டப்பட்டவையும், தங்கக்கூடுகள் கொண்டவையுமான நூறு தேர்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(15) தங்கச் சிகரங்கள் கொண்ட நூறு மலைகளைப் போல நெற்றிப் பொட்டிலும், முகங்களிலும் அனைத்து நற்குறிகளும் கொண்ட நூறு யானைகளையும் கொடுத்தான். அழகான ஆடைகளுடனும், ஆபரணங்களுடனும், பூவேலை அலங்காரங்களுடனும் கூடியவர்களும், இளமையின் தொடக்கத்தில் இருந்தவர்களுமான நூறு பெண் பணியாட்களை, தெய்வீக அழகுடன் கூடிய அந்த இளவரசர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தான்.(16) அந்தச் சந்திர குலத்தின் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதி {துருபதன்}, புனித நெருப்பைச் சாட்சியாக வைத்துக் கொண்டு, இவை யாவற்றையும், இன்னும் பல பரிசுகளையும், பெரும் செல்வத்தையும், பல விலையுயர்ந்த ஆடைகளையும், பிரகாசமான ஆபரணங்களையும் கொடுத்தான்.(17) பெரும் பலம் பொருந்திய பாண்டுவின் மகன்கள், திருமணம் முடிந்து, தாங்கள் இரண்டாவது ஸ்ரீ-யைப் போல இருந்த கிருஷ்ணையை {திரௌபதியை} அடைந்து, பாஞ்சால மன்னனின் {துருபதனின்} தலைநகரில் {காம்பில்யத்தில்} பல இந்திரர்கள் இருப்பது போல, தங்கள் நாட்களை இன்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் கடத்தினார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(18)

ஆங்கிலத்தில் | In English |