Marriage Gifts obtained by Yudhishthira! | Adi Parva - Section 201 | Mahabharata In Tamil
(வைவாஹிக பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : திரௌபதிக்கு குந்தியின் அறிவுரைகளும் ஆசீர்வாதமும்; பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் அனுப்பிய பரிசுகள்...
வைசம்பாயனர் சொன்னார், "மன்னன் துருபதன், பாண்டவர்களின் சம்பந்தம் ஏற்பட்ட பிறகு, அவனது அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான். உண்மையில் அந்த ஏகாதிபதி தேவர்களிடம் கூட அன்று முதல் அச்சமற்று இருந்தான்.(1) சிறப்புமிகுந்த துருபதனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகள் குந்தியை அணுகி, அவளிடம் தங்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களது தலையால் தரையைத் தொட்டு அவளது பாதத்தை வணங்கினர்.(2) சிவப்புப் பட்டு உடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, கை மணிக்கட்டில் இன்னும் திருமணத்திற்கான நோன்புக் கயிற்றைக் கொண்டு, தனது மாமியாரை மரியாதையுடன் வணங்கி, அவள் முன்பு அடக்கமாகக் கைக்கூப்பி நின்றாள்.(3)
பிருதை {குந்தி}, பெரும் அழகும், அனைத்து நற்குறிகளும், இனிமையான மனநிலையும், நல்ல குணமும் படைத்த தனது மருமகளிடம், தான் கொண்ட அன்பின் காரணமாக,(4) "சச்சி தனது கணவனான இந்திரனிடமும், ஸ்வாஹா விபாவசுவிடமும் {அக்னியிடமும்}, ரோஹிணி சோமனிடமும், தமயந்தி நளனிடமும்,(5) பத்தரை வைஸ்ரவணனிடமும் {குபேரனிடமும்}, அருந்ததி வசிஷ்டரிடமும், லட்சுமி நாராயணனிடமும் எப்படி இருப்பார்களோ அதே போல நீயும் உனது கணவர்களுடன் இருப்பாயாக.(6) ஓ இனியவளே, மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் கொண்டு, அனைத்தும் கொண்ட வீர மகன்களையும் நீ பெறுவாயாக. நற்பேறும், வளமையும் உனக்காகக் காத்திருக்கட்டும். பெரும் வேள்விகளில் ஈடுபடும் உனது கணவர்களுக்காக நீ எப்போதும் காத்திருக்க வேண்டும். உனது கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பாயாக.(7)
உனது வசிப்பிடத்திற்கு வரும் விருந்தினர்களையும், அந்நியர்களையும், பக்திமான்களையும், பெரியவர்களையும், சிறுவர்களையும் முறையாக ஆதரிப்பாயாக.(8) உனது கணவனான நீதிமான் யுதிஷ்டிரனுடன் சேர்ந்து குருஜாங்கலத் தலைநகருக்கும் {ஹஸ்தினாபுரத்திற்கும்}, அந்த நாட்டிற்கும் {குருஜாங்கலத்திற்கும்} ராணியாக நியமிக்கப்பட்டிருப்பாயாக.(9) ஓ மகளே, உனது கணவர்களின் பெரும்பலத்தாலும், ஆற்றலாலும் வெற்றிகொள்ளப்பட்ட மொத்த பூமியையும் ஒரு பெரும் குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} பிராமணர்களுக்குக் கொடுப்பாயாக.(10) ஓ அனைத்தும் அடைந்தவளே, உயர் வகை ரத்தினங்கள் அனைத்தையும் அடைந்து நற்பேறு பெற்றவளாக, மகிழ்ச்சியுடன் நூறு வருடங்கள் வாழ்வாயாக.(11) ஓ மருமகளே, சிவப்புப் பட்டு உடுத்தியிருக்கும் உன்னைக் கண்டு நான் மகிழ்வது போல, சாதனை செய்ய மகனுக்கு நீ தாயாகும் போதும் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றாள்".(12)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டு மகன்களின் திருமணம் முடிந்ததும், அவர்களுக்கு ஹரி (கிருஷ்ணன்} பல்வேறு தங்க ஆபரணங்களையும், முத்துக்களையும், வைடூரியங்களையும் பரிசாக அனுப்பி வைத்தான்.(13) மேலும், அந்த மாதவன் (கிருஷ்ணன்) பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளையும், அழகுடன் கூடிய மென்மையான போர்வைகளையும், உயர் மதிப்புடைய விலங்குகளின் தோல்களையும், விலையுயர்ந்த பல படுக்கைகளையும், தரைவிரிப்புகளையும், வாகனங்களையும் அனுப்பி வைத்தான். நூற்றுக்கணக்கான பாத்திரங்களையும், ரத்தினங்கள் மற்றும் வைரங்களையும் அனுப்பி வைத்தான்.(14,15) மேலும், பல நாடுகளில் இருந்து வந்த அழகும், இளமையும் கொண்டு பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் பணியாட்களையும் கொடுத்தான்.(16) மத்ர நாட்டிலிருந்து, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட பல யானைகளையும், விலை உயர்ந்த சேணத்துடன் {குதிரை உடுப்பு}, பெரிய பற்களுடைய பல அற்புதமான குதிரைகளையும், தேர்களையும் பல வண்ணங்களில் கொடுத்தான்.(17) எல்லையற்ற ஆன்மா கொண்டவனும், மதுவைக் {மது என்ற ராட்சசன்} கொன்றவனுமான அவன் {மதுசூதனான கிருஷ்ணன்}, பசும்பொன் நாணயங்களைக் கோடிக் கோடியாகக் குவியல்களாக அனுப்பி வைத்தான்.(18) நீதிமானான யுதிஷ்டிரன் கோவிந்தனை {கிருஷ்ணனை} நிறைவு கொள்ளச் செய்ய எண்ணி, அந்தப் பரிசுகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(19)

ஆங்கிலத்தில் | In English |