வணக்கம். சமீபத்தில் தங்களது மகாபாரதம் மொழிபெயர்ப்பு பதிவுகளை பற்றி
அறிமுகம் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். தங்களது
முயற்சி முக்கியமானது மேலும் பாராட்டத்தக்கது. மகாபாரதம் ஒரு கடல்; அதைத்
தமிழில் தரும் எண்ணத்திற்கு முதலில் வந்தனங்கள். நீண்ட நாளாக நான்
தேடிக்கொண்டிருந்ததை கண்டடைந்துவிட்ட மகிழ்ச்சியை அடைகிறேன். தொடர்ந்து
சிறப்பாக எழுதுங்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அன்புடன்,
பூமி...
(Boominathan Ayyadurai)
***********************************************************
நண்பர் திரு.பூமிநாதன் அவர்களுக்கு,
பதிவுகளைக் கண்டு வாழ்த்தியமைக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல மகாபாரதம் ஒரு பெருங்கடல்தான். இது போன்ற வாசகர்கள் அளிக்கும் ஊக்கங்களைக் காணும் போது, எனது பணி இன்னும் சிறக்கும்.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப் பேரரசன்