The story of Tilottama said by Narada! | Adi Parva - Section 210 | Mahabharata In Tamil
(ராஜ்யலாப பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் சபைக்கு நாரதர் வருகை; சுந்தன் உபசுந்தன் கதையை மேலோட்டமாகச் சொல்வது; அந்தக்கதையை விரிவாகச் சொல்லுமாறு பாண்டவர்கள் நாரதரை வேண்டுவது…
ஜனமேஜயன், "ஓ தவத்தை செல்வமகாக் கொண்டவரே! எனது முப்பாட்டன்களான அந்த உயர் ஆன்மா கொண்ட சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், இந்திரப்பிரஸ்தத்தின் அரசுரிமையைப் பெற்ற பிறகு என்ன செய்தார்கள்? அவர்களுடைய மனைவியான திரௌபதி அவர்கள் அனைவருக்கும் எப்படிக் கீழ்ப்படிந்து நடந்தாள்?(1,2) அனைவரும் ஒரு மனைவியிடம் இணைக்கப்பட்டு இருக்கும்போது, மனிதர்களை ஆண்ட அந்தச் சிறப்புமிகுந்த ஆட்சியாளர்களிடம், கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} குறித்து எந்த மன வேற்றுமையும் நிகழவில்லையா?(3) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} இணைந்த பின் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி நடந்து கொண்டனர் என்பதைக் குறித்து அனைத்தையும் நான் முழுமையாகக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான் {ஜயமேஜயன் வைசம்பாயனரிடம்}.(4)
வைசம்பாயனர் சொன்னார், "எதிரிகளை வாட்டுபவர்களான அந்தப் பாண்டவர்கள், திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் நாட்டை அடைந்த பிறகு, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து காண்டவப்பிரஸ்தத்தில் மகிழ்ச்சியாக தங்கள் நாட்களைக் கடத்தினர்.(5) பெரும் சக்தி கொண்ட யுதிஷ்டிரன், எப்போதும் உண்மையைப் பற்றிக் கொண்டு, அந்த நாட்டை அடைந்ததிலிருந்து, தனது தம்பிகளின் துணையுடன் அறம் சார்ந்து அதை ஆண்டான்.(6) பெரும் ஞானம் கொண்ட பாண்டுவின் மகன்கள், உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்து, அனைத்து எதிரிகளையும் வென்று, அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.(7) மனிதர்களில் காளைகளான அவர்கள், பெருமதிப்பிற்குரிய தங்கள் அரச அரியணையில் அமர்ந்து, தங்கள் அரசியல் கடமைகளை நிறைவேற்றினர்.(8)
ஒருநாள், அப்படி அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும்போது, ஊர்சுற்றி வந்த தெய்வீக முனிவரான நாரதர் அங்கே வந்தார்.(9) அம்முனிவரைக் கண்ட யுதிஷ்டிரன், அவருக்குத் தான் அமர்ந்திருந்த அழகான ஆசனத்தைக் கொடுத்தான். அந்தத் தெய்வீக முனிவர் அமர்ந்த பிறகு, ஞானமுள்ள யுதிஷ்டிரன், அவனது கையாலேயே அவருக்கு அர்க்கியத்தைக் {நீரில் மலர் தூவி கொடுப்பது} கொடுத்தான். அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அந்த முனிவரிடம் தனது நாட்டின் நிலையைப் பற்றிச் சொன்னான்.(10,11) அந்த முனிவர் {நாரதர்}, வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு பெரும் மனநிறைவை அடைந்து, அவனை {யுதிஷ்டிரனை} வாழ்த்தி ஆசீர்வதித்தார். அந்த மன்னனை அமரக் கட்டளையிட்டார். முனிவரால் {நாரதரால்} கட்டளையிடப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்} அமர்ந்தான். (12)
மன்னன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} அந்தச் சிறப்புமிக்கவரின் {நாரதரின்} வருகையைச் சொல்லி அனுப்பினான். முனிவரின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்ட திரௌபதி, தன்னைச் சரியான முறையில் தூய்மைப்படுத்திக் கொண்டு, மிகுந்த மரியாதையுடன் பாண்டவர்களுடன் நாரதர் இருந்த இடத்திற்கு வந்தாள். அறம்சார்ந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, தெய்வீக முனிவரின் {நாரதரின்} பாதங்களை வழிபட்டு, அவர் முன்பு குவிந்த கரங்களுடன் கண்களுக்கு மறைவாக நின்றாள்.(13-15) சிறப்புவாய்ந்த நாரதர், அவளைப் பலவாறாக வாழ்த்தி, அந்த இளவரசியை ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.(16)
அந்தச் சிறப்புமிக்க முனிவர், கிருஷ்ணை {திரௌபதி} சென்றதும், யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்கள் அனைவரையும் தனியாக அழைத்து,(17) "புகழ்பெற்ற பாஞ்சால இளவரசி {திரௌபதி} நீங்கள் அனைவரும் மணந்த மனைவியாவாள். எனவே, உங்களுக்குள் வேற்றுமை உருவாகாதவாறு, உங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.(18) பழங்காலத்தில், மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்ட சகோதரர்களான சுந்தன், உபசுந்தன் ஆகிய இருவொரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டால் அன்றி வேறு ஒருவர் அவர்களை அழிக்க முடியாது {அப்படிப்பட்ட வரத்தை அவர்கள் பெற்றிருந்தனர்}.(19) அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே நாட்டை ஆண்டு, ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே படுக்கையில் உறங்கி, ஒரே ஆசனத்தில் அமர்ந்து, ஒரே தட்டில் உணவும் உண்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் திலோத்தமைக்காக ஒருவரை ஒருவர் கொன்றனர்.(20) எனவே, ஓ யுதிஷ்டிரா, நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உள்ள நட்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் வேற்றுமை உருவாகாமல் செயல்படுங்கள்" என்றார் {நாரதர்}.(21)
இதைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ பெரும் முனிவரே, அசுரர்களான சுந்தனும், உபசுந்தனும் யாருடைய மகன்கள்? எப்போது அவர்களுக்குள் வேற்றுமை உருவாகி ஒருவரை ஒருவர் கொன்றனர்?(22) சகோதரர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் கொல்ல வைத்த திலோத்தமை யாருடைய மகள்? அவள் ஓர் அப்சரசா (நீர்த் தேவதையா) அல்லது ஏதாவது தேவனின் மகளா?(23) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஓ பிராமணரே {நாரதரே}, நடந்தது அத்தனையும் அது நடந்தவாறே அறிய நாங்கள் விரும்புகிறோம். இது குறித்த எங்கள் ஆவல் அதிகரிக்கிறது" என்றான் {யுதிஷ்டிரன்}".(24)

ஆங்கிலத்தில் | In English |