Kandavaprasta became the capital of Pandavas! | Adi Parva - Section 209 | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பாண்டவர்களைக் காண்டவப்பிரஸ்தம் போகச் சொன்னது; கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்டு பாண்டவர்கள் அங்கே சென்றது; வியாசரைக் கொண்டு நகரத்துக்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்து அளந்தது; நகரை நிர்மாணித்தது; இந்திரப்பிரஸ்தத்தின் சிறப்பு விவரிப்பு; கிருஷ்ணன் துவாரகை திரும்பியது...
வைசம்பாயனர் சொன்னார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட துருபதன், "ஓ பெரும் ஞானம் கொண்ட விதுரரே, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது. மதிப்பிற்குரியவரே, நானும் இக்கூட்டணியின் விளைவை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்திருக்கிறேன்.(1) இந்த இளவரசர்கள் தங்கள் மூதாதையர் நாட்டுக்குத் திரும்புவதே சரியானது. ஆனால் அதை நானே சொல்வது சரியாகாது.(2) குந்தியின் வீர மகனான யுதிஷ்டிரனோ, பீமனோ, அர்ஜுனனோ, மனிதர்களில் காளைகளான இரட்டையர்களோ செல்வதற்கு விருப்பப்பட்டு, அறவிதிகள் அனைத்தையும் அறிந்த ராமனும் (பலதேவனும் {பலராமனும்}), கிருஷ்ணனும் அதே மனம் கொண்டார்களென்றால், பாண்டவர்கள் அங்கே செல்லட்டும். ஏனென்றால் இந்த மனிதப்புலிகள் (ராமனும் {பலராமனும்} கிருஷ்ணனும்), பாண்டுவின் மகன்களுக்கு நன்மையைச் செய்வதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றான் {துருபதன்}.3,4)
இதைக்கேட்ட யுதிஷ்டிரன், "ஓ ஏகாதிபதி {துருபதரே}, எங்கள் தம்பிகளுடன் சேர்ந்த நாங்கள், இப்போது உம்மை நம்பியிருக்கிறோம். நீர் ஆணையிட விரும்பும் செயலை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்வோம்" என்றான்".(5)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, "நான் பாண்டவர்கள் செல்ல வேண்டும் என்றே கருதுகிறேன். ஆனால், நாம் அனைவரும் அறவிதிகள் அனைத்தையும் அறிந்த மன்னன் துருபதனின் கருத்துக்குக் கட்டுப்பட வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}.(6)
துருபதன், "நான் இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்} எண்ணுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன்.(7) பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்கள் கிருஷ்ணனுக்கு எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படியே என்னிடமும் நடந்து கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(8) குந்தியின் மகனான யுதிஷ்டிரன் கூட பாண்டவர்களின் நலனில், மனிதர்களில் புலியான கேசவனை விட {கிருஷ்ணனை விட} உறுதியாக இருக்க மாட்டான்" என்றான் {துருபதன்}.(9)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சிறப்புவாய்ந்த துருபதனால் ஆணையிடப்பட்ட பாண்டவர்கள், கிருஷ்ணன், விதுரன் ஆகியோர் துருபதனின் மகளான கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, புகழ்பெற்ற குந்தியையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரம்} நோக்கிப் பயணித்தனர். அப்படி அவர்கள் பயணிக்கும்போது அவர்கள் இன்பத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வழியில் ஆங்காங்கே பல இடங்களில் தங்கிப் பயணித்தனர்.(10,11) அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} நகரத்தின் அருகே வந்துவிட்டார்கள் என்பதைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன், பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்க கௌரவர்களை அனுப்பினான்.(12) ஓ பாரதா, அப்படி எதிர்கொண்டு அழைக்கச் சென்றவர்கள் பெரும் வில் கொண்ட விகர்ணனும், சித்ரசேனனும், போர்வீரர்களில் முதன்மையான துரோணரும், கௌதம குலத்தின் கிருபரும் ஆவர்.(13) இவர்களால் {கௌரவர்களால்} சூழப்பட்ட அந்தப் பெரும் பலம்வாய்ந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, அங்கு சேர்ந்த கூட்டத்தைக் கண்டு பிரகாசத்தில் பெருகி, மெதுவாக ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தனர்.(14) மொத்த நகரமே அங்கு கூடியிருந்த கூட்டத்தின் ஆவல்ததும்பிய ஆர்ப்பரிப்பால் ஒளியூட்டப்பட்டு இருந்தது. மனிதர்களில் புலிகளான அவர்கள், தங்களைக் கண்ட அனைவரின் இதயத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பினர்.(15)
மக்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பாண்டவர்கள், அப்படி முன்னேறிக் கொண்டிருக்கும்போது, தங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கும் குடிமக்களின் சத்தமான பேச்சைக் கேட்டனர்.(16) சிலர், "இதோ, அனைத்து அறவிதிகளையும் அறிந்து, நம்மை {குடிமக்களை} எப்போதும் தங்கள் நெருங்கிய உறவினர்கள் போலப் பாதுகாக்கும் அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்} திரும்பிவிட்டான்" என்றனர்.(17) இன்னும் வேறு இடங்களில், "மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பாண்டு, நமக்கு உகந்ததைச் செய்யக் கானகத்திலிருந்து திரும்பிவிட்டான், என நிச்சயமாகத் தெரிகிறது" என்றனர்.(18) இன்னும் சிலர், "குந்தியின் வீர மைந்தர்கள் {பாண்டவர்கள்} நகரம் {ஹஸ்தினாபுர நகரம்} திரும்பிய பிறகு, நமக்கு என்ன நன்மைதான் நேராது?(19) நாம் எப்போதாவது தானம் செய்திருந்தாலோ, நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டிருந்தாலோ, நமக்கு ஏதாவது ஆன்மத் தகுதி இருந்தாலோ, அந்தச் செயல்களுடைய அறத்தின் தகுதிகளைக் கொண்டு பாண்டவர்கள் இந்த நகரத்தில் நூறு ஆண்டுகளுக்கு இருக்கட்டும்" என்றனர்.(20)
இறுதியாகப் பாண்டவர்கள் இடத்தை அடைந்து {அரண்மனையை அடைந்து}, திருதராஷ்டிரன் மற்றும் சிறப்பு மிகுந்த பீஷ்மரின் கால்களை {கால்களில் விழுந்து} வழிபட்டனர். அவர்கள் மதிப்பிற்குரிய அனைவரின் கால்களையும் வழிபட்டனர்.(21) (அங்கு குழுமியிருந்த) அனைத்துக் குடிமக்களின் நலனையும் விசாரித்தார்கள். இறுதியாகத் திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குள் நுழைந்தனர்.(22) சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அவர்கள், மன்னன் திருதராஷ்டிரன் மற்றும் சந்தனுவின் மகன் பீஷ்மரால் (சபைக்கு) அழைக்கப்பட்டார்கள்.(23)
அவர்கள் வந்ததும், மன்னர் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்வதைக் கேட்பாயாக. உங்களுக்குள் மீண்டும் (உங்களுக்கும், உங்கள் பங்காளிகளுக்கும்) வேற்றுமை உருவாகாதிருக்க காண்டவப்பிரஸ்தத்திற்குச் செல்லுங்கள்.(24) அங்கே உங்கள் வசிப்பிடத்தை நீங்கள் அமைத்துக் கொண்டால், உங்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. வஜ்ரதாங்கியால் {இந்திரனால்} காக்கப்படும் தேவர்களைப் போலப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்கப்பட்டுப் பாதி நாட்டை அடைந்து, காண்டவப்பிரஸ்தத்தில் வசித்திருங்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.(25)
வைசம்பாயனர் தொடரந்தார், "திருதராஷ்டிரன் சொன்னதை ஏற்றுக் கொண்ட மனிதர்களில் காளைகளான அவர்கள் {பாண்டவர்கள்}, அம்மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்கிவிட்டு, ஹஸ்தினாபுரத்தில் இருந்து புறப்பட்டனர். பாதிநாட்டுடன் மனநிறைவு அடைந்து, சீர்படுத்தாத பாலைவனமான காண்டவப்பிரஸ்தத்திற்கு நகர்ந்தனர்.(26,27) குன்றாத பிரகாசம் கொண்ட அந்த வீரர்களான பாண்டவர்கள், கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்டு அங்கு வந்து, அந்த இடத்தை அழகுபடுத்தி, அதை இரண்டாவது சொர்க்கமாக்கினர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த தேர் வீரர்கள் {பாண்டவர்கள்}, துவைபாயனரின் {வியாசரின்} துணையுடன் ஒரு புனிதமான, மங்கலமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, சில குறிப்பிட்ட பரிகாரம் {நிறைவு கொள்ளச் செய்யும்} சடங்குகளைச் செய்து, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை தங்கள் நகரத்திற்கு என அளந்தனர். அந்த இடத்தைச் சுற்றிக் கடல் போன்று அகலமாக அகழி தோண்டி, சுற்றிலும் பஞ்சு போன்ற மேகத்தைத் தொடுவதைப் போன்றும் சந்திரனின் கதிர்களைப் போன்றும் வெண்மையான வானுயர் {சொர்க்கத்தைத் தொடுமளவுக்கு} மதில்களைக் கட்டினர்.(28-30)
நகரங்களில் முதன்மையான அந்த நகரம், நாகர்கள் நிறைந்த போகவதியைப் (பாதாள உலகத்தின் தலைநகரத்தைப்} போன்று இருந்தது. அஃது அரண்மனைகளுடனும், எண்ணிலடங்கா வாயில்களுடனும், அந்த வாயில்கள் இரண்டு கதவுகளாகக் கருடனின் விரிந்த சிறகுகளைப் போல இருந்தன.(31) அது மேகங்களைப் போன்ற வாயில்களால் பாதுகாகப்பட்ட உயர்ந்த மந்தர மலையைப்ப போல இருந்தது. தாக்குவதற்குத் தயாரான ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, எதிரிகள் சாதாரணமாக எண்ணாதவாறு இருந்தது. எப்போதும் தயாராக இருக்கும் இரு நாக்குக் கொண்ட பாம்புகளைப் போன்ற கணைகளாலும், பல ஏவுகணைகளாலும் நிறைந்திருந்தது. சுவரினூடே இருந்த கோபுரங்கள், ஆயுதம் தாங்கிய மனிதர்களால் நிரம்பியிருந்தது. சுவர் முழுவதும் எண்ணிலடங்கா வீரர்கள் முழு நீளத்திற்கும் வரிசையாக நின்றனர். ஆயிரக்கணக்கான கூரிய கொக்கிகளும், சதக்னிகளும் (நூறு பேரைக் கொல்லும் இயந்திரம்), மேலும் பல போர் இயந்திரங்களும் அங்கே இருந்தன. அந்தச் சுவர்களில் பெரிய இரும்புச் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தன. இவை எல்லாவற்றாலும் அந்த முதன்மையான நகரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(32-34) அந்த நகரத்தின் தெருக்கள் அகலமாகவும், அற்புதமாகவும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே விபத்துக்கான அச்சமே இல்லாமல் இருந்தது.(35) தெருக்கள் எங்கும் கணக்கற்ற மாளிகைகளுடன் இருந்த அந்த நகரம் அமராவதியைப் போல இருந்தது. அதன் காரணமாகவே அந்த நகரம் இந்திரப்பிரஸ்தம் (இந்திரனின் நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.(36)
நகரத்தில் ஒரு மகிழ்ச்சி நிறைந்த மங்கலமான இடத்தில் பாண்டவர்களின் அரண்மனை அனைத்து விதமான செல்வங்களும் நிரம்பி எழுந்தது. அது தேவலோகப் பொருளாளராள {பொக்கிஷ அதிகாரியான} குபேரனின் மாளிகையைப் போல இருந்தது. அது மின்னலுடன் கூடிய அடர்த்தியான மேகக்கூட்டம் போல இருந்தது.(37) அந்த நகரம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, வேதங்களையும், பல மொழிகளையும் நன்கு அறிந்த கணக்கற்ற பிராமணர்கள் அங்கே வசிக்க விரும்பி வந்தனர்.(38) பொருளீட்ட விரும்பிப் பல திக்குகளிலிருந்தும் கணக்கற்ற வியாபாரிகள் அந்த நகரத்திற்கு வந்தனர். கலைகளில் நிபுணத்துவம் வாய்ந்த கணக்கற்ற மனிதர்களும், தங்கள் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்பி வந்தனர்.(39) அந்த நகரத்தைச் சுற்றி கனிகளும், மலர்களும் தரக்கூடிய கணக்கற்ற மரங்களுடன் கூடிய பல நந்தவனங்களும் ஏற்படுத்தப்பட்டன.(40)
அங்கே மாமரங்களும், ஆம்ராதக மரங்களும், கடம்ப மரங்களும், அசோக மரங்களும், சண்பக மரங்களும், புன்னை மரங்களாலும், நாக, எலுமிச்சை மரங்களாலும், பலா மரங்களாலும், சால {ஆச்சா} மரங்களாலும், பனை மரங்களாலும், தமல, வாகுல {மகிழ மரங்களாலும்}, நறுமணமிக்கக் கேதக {தாழை} மரங்களாலும்,(41) அழகாகப் பூத்துக் குலுங்கித் தனது கனிகளின் எடையால் கிளைகள் தாழ்ந்து தொங்கும் பெரும் அமலக {அருநெல்லி} மரங்களாலும், லோத்ர மரங்களாலும், பூத்துக் குலுங்கும் அங்கோல மரங்களாலும்,(42) நாவல் மரங்களாலும், பாதாள {பாதிரி}, குஞ்சக {நீர்நொச்சில்}, அதிமுக {தினிசம்}, கரவிர {அலரிச்செடிகளாலும்}, பாரிஜாத மரங்களும், அதைப் போன்ற கணக்கிலடங்காப் பல வகை மரங்களும்,(43) பூக்களாலும், கனிகளாலும், உயிருடன் கூடிய இறக்கையுள்ள உயிரினங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அந்தப் பசுந்தோட்டங்கள் கோகிலப் (கரும்பறவை) {குயில்} பறவைகள் மற்றும் மயில்களின் இனிய கானத்தால் கிறங்கடிக்கப்பட்டு இருந்தன.(44)
அங்கே இன்ப வீடுகளும் {நீர் விளையாட்டு இடங்கள்} கண்ணாடிகளைப் போலப் பிரகாசமாக இருந்தன. சுத்தமான நீர் நிறைந்த பெரும் தடாகங்களும் {ஏரிகளும்}, தாமரையும், அல்லி மலர்களும் சூழ்ந்து, அன்னங்களாலும், வாத்துகளாலும் சக்கரவகங்களாலும் {ஒருவகை அன்னப்பறவை} அலங்கரிக்கப்பட்ட தடாகங்களும் நிறைந்திருந்தன. அங்கே நல்ல நீர்வாழ் செடிகள் வளர்ந்திருந்த இனிமையான குளங்களும் இருந்தன. பெரும் அழகுடனும், பெரிய அளவிலும் பல்வேறு குளங்கள் அங்கே இருந்நதன.(45-47) ஓ மன்னா, நல்ல மனிதர்கள் வசித்த அந்தப் பெரிய நாட்டில் வாழ்ந்த பாண்டவர்களின் மகிழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.(48) அறம் சார்ந்த பீஷ்மர் மற்றும் மன்னன் திருதராஷ்டிரன் ஆகியோர் தங்களிடம் அறத்தின்படி நடந்து கொண்டதன் விளைவாக, பாண்டவர்கள் காண்டவப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடம் ஆக்கிக் கொண்டார்கள்.(49) அந்த ஐந்து பெரும் பலம்வாய்ந்த வீரர்கள் {பாண்டவர்கள்} ஒவ்வொருவரும் ஓர் இந்திரனுக்குச் சமமாக இருந்தனர். அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த முதன்மையான நகரம், நாகர்களால் அலங்கரிக்கப்பட்ட போகவதி நகரம் போல இருந்தது.(50) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பாண்டவர்களை அங்கே அமர்த்திவிட்டு, அந்த வீரனான கிருஷ்ணன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடை பெற்றுக் கொண்டு, ராமனுடன் {பலராமனுடன்} துவாரவதிக்குத் திரும்பிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

ஆங்கிலத்தில் | In English |