Sunda and Upasunda! | Adi Parva - Section 211 | Mahabharata In Tamil
(ராஜ்யலாப பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : சுந்தன் உபசுந்தன் ஆகியோரின் கடுந்தவம்; பிரம்மா அவர்களுக்குக் கொடுத்த வரம்; கொடுக்க முடியாத வரம்; மாற்றிக் கொடுத்த வரம்; மகிழ்ச்சி நிறைந்த தைத்தியர்களின் நகரம்…
வைசம்பாயனர் சொன்னார், "யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, ஓ யுதிஷ்டிரா, நான் சொல்லப்போகும் இந்தப் பழைய கதையை உனது தம்பிகளுடன் சேர்ந்து நடந்தது அத்தனையும் நடந்தபடியே கேள்.(1) பழங்காலத்தில் பெரும் பலம் வாய்ந்தவனும், பெரும் சக்தியும் பலமும் கொண்வனுமான தைத்தியன் ஒருவன், பெரும் அசுரனான ஹிரண்யகசிபுவின் {விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்பட்டவன்} குலத்தில் நிகும்பன் என்ற பெயரில் பிறந்திருந்தான்.(2) அந்த நிகும்பனுக்குச் சுந்தன், உபசுந்தன் என்ற இரு மகன்கள் பிறந்தார்கள். அந்தப் பலம் வாய்ந்த அசுரர்கள் இருவரும், பெரும் சக்தியையும், பயங்கரமான ஆற்றலையும் கொண்டிருந்தார்கள். அச்சகோதரர்கள் இருவரும், கடுமையானவர்களாகவும், தீய இதயம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(3) அந்தத் தைத்தியர்கள் இருவரும் ஒரு தீர்மானத்துடன் கூடியவர்களாக, ஒரே சாதனைகளையும், முடிவுகளையும் எப்போதும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து அனுபவித்தனர்.(4) ஒருவருக்கு ஒருவர் ஏற்கும் வகையில் செயல்களைச் செய்து, அந்தச் சகோதரர்கள் இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தனர். எங்குச் சென்றாலும் சேர்ந்தே சென்றனர்.(5)
ஒரே வகையான தீர்மானமும், பழக்க வழக்கமும் கொண்ட அவர்களைக் காணும் போது, இரு பகுதிகளாகப் பிரிந்த ஒரே மனிதனைப் போலத் தெரிந்தனர். பெரும் சக்தி கொண்டு, எல்லாவற்றிலும் எப்போதும் ஒரே தீர்மானம் கொண்ட அந்தச் சகோதரர்கள் இவ்வாறே படிப்படியாக வளர்ந்தும் வந்தனர்.(6) ஒரு காரணத்துக்கான செயலைச் செய்து, மூன்று உலகங்களையும் அடக்கி ஆள விருப்பம் கொண்ட அந்தச் சகோதரர்கள், சரியான ஆயத்தங்களுக்குப் பிறகு, விந்திய மலைக்குச் சென்றனர். அங்கே சென்று கடும் தவங்களைச் செய்தனர்.(7) பசியாலும், தாகத்தாலும் துன்புற்றுத் தலையில் சடாமுடி தரித்து, மரவுரி {மரப்பட்டைகளால் ஆன உடுப்பு} உடுத்தி, நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மத் தகுதி அடைந்தனர்.(8) அவர்கள் தங்களை தலை முதல் கால் வரை அழுக்காக்கிக்கொண்டு, காற்றை மட்டுமே உண்டு, கால் கட்டைவிரலில் நின்று தவம் செய்தனர். பிறகு தங்கள் உடல் சதைகளைத் துண்டுகளாக அறுத்து நெருப்பில் போட்டனர். தங்கள் கரங்களை உயரத் தூக்கியபடி, நிலைத்த கண்களுடன், அவர்கள் நோற்ற தவம் நீண்ட காலமாக தொடர்ந்தது.(9)
அவர்கள் அப்படி தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், ஓர் அற்புதமான நிகழ்வு நடந்தது. அவர்களது தவத்தின் சக்தியினால் நீண்ட காலமாகக் கொதிப்படைந்திருந்த விந்தியமலை அனைத்துப்புறங்களிலும் புகையை வெளியிடத் தொடங்கியது.(10) அவர்களது கடுந்தவத்தின் மகிமையைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்தனர். அவர்களது தவமானது முன்னேற்றம் அடையாமல் இருக்க, அந்தத் தேவர்கள் எண்ணற்ற தடைகளை அவர்களுக்கு உண்டாக்கினர்.(11) தேவர்கள் தொடர்ச்சியாக அச்சகோதரர்களை, விலைமதிப்புமிக்க பல பொருட்களைக் கொண்டும், மிகுந்த அழகுடைய கன்னிகைகளைக் கொண்டும் அவர்களை மயக்க முயன்றனர். இருப்பினும் அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை.(12)
தேவர்கள், அந்தச் சிறப்புமிகு சகோதரர்களின் முன்னிலையில் தங்கள் மாய சக்தியைப் பயன்படுத்தித் மீண்டும் மீண்டும் முயன்றனர். அவர்களது சகோதரிகள், தாய்மார்கள், மனைவியர் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும், கலைந்த கேசம், ஆபரணம் மற்றும் உடைகளுடன் அவர்களை நோக்கிப் பயத்துடன் ஓடி வருவது போலவும், கையில் கதாயுதம் கொண்ட ஒரு ராட்சசன் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டு வருவதாகவும் அவர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} கண்டனர்.(13,14) அப்படி ஓடி வந்த பெண்கள் அந்தச் சகோதரர்களை நோக்கி, "எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று கேட்பது போலவும் தோன்றிற்று. ஆனால், இவையாவும் அவர்களை அசைக்கவில்லை. அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை.(15) இந்தக் காட்சி அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாததைக் கண்ட போது அந்த மங்கையரும், ராட்சசனும் அவர்களது பார்வையில் இருந்து மறைந்து போனார்கள்.(16)
இறுதியாக, அனைவரின் நலனையும் வேண்டுபவனும், தலைவர்களுக்குத் தலைவனூமான பெரும்பாட்டன் {பிரம்மன்}, அந்தப் பெரும் அசுரர்களிடம் வந்து, அவர்கள் விரும்பிய வரத்தைக் கேட்குமாறு சொன்னான்.(17) பெரும் ஆற்றலைக் கொண்ட சகோதரர்களான சுந்தனும் உபசுந்தனும், பெரும்பாட்டனைக் {பிரம்மனைக்} கண்டு, தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து, கரங்களைக் கூப்பி அவருக்காகக் காத்திருந்தனர்.(18) அந்தச் சகோதரர்கள் இருவரும் {சுந்தனும், உபசுந்தனும்} அந்தத் தேவனிடம், "ஓ பெரும்பாட்டனே, நீர் எங்களது தவத்தால் மனநிறைவு அடைந்தீரேயானால்,(19) ஓ தலைவா, எங்களுக்கு அனைத்து ஆயுதங்களின் அறிவையும், மாய சக்திகளின் அறிவையும் கொடுத்து நன்மையைச் செய்வீராக. நாங்கள் பெரும்பலத்துடன் விரும்பிய உருவை எடுக்கும் சக்தியை எங்களுக்குத் தந்தருளும். இறுதியாக எங்களுக்குச் சாகா வரத்தை அருள்வீராக" என்று கேட்டனர் {சுந்தனும், உபசுந்தனும்}.(20)
அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன், "சாகாவரம் தவிர்த்து, நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் மட்டும் மரணம் நேரும் வகையில் நீங்கள் வரம் கேட்டால், மரணிக்காதவர் போலவே வாழலாம்.(21) அரசுரிமையில் மட்டுமே விருப்பங்கொண்டு நீங்கள் இக்கடுந்தவத்தை இயற்றியதால், என்னால் உங்களுக்கு சாகாவரம் தர முடியாது.(22) நீங்கள் மூன்று உலகத்தையும் அடக்கி ஆளவே கடும் தவம் இயற்றினீர்கள். ஓ பெரும் பலம் வாய்ந்த தைத்தியர்களே, நீங்கள் கேட்ட அந்த ஒரு விருப்பத்தை {சாகா வரத்தை} மட்டும் என்னால் தர முடியாது" என்றான்".(23)
நாரதர் தொடர்ந்தார், "பிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுந்தனும், உபசுந்தனும், "ஓ பெரும்பாட்டனே, எங்களில் ஒருவரால் தவிர, அசைவன, அசையாதன என்ற மூவுலகத்தில் இருக்கும் படைக்கப்பட்ட எந்தப் பொருளினாலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது" என்று கேட்டனர்.(24)
அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "இப்பொழுது நீங்கள் கேட்ட விருப்பத்தை நான் உங்களுக்கு அருள்கிறேன். உங்கள் மரணம் உங்கள் விருப்பப்படியே நிர்ணயிக்கப்படுகிறது" என்று சொல்லி வரத்தைக் கொடுத்து, அவர்களின் தவத்தைக் கைவிட வைத்து, தனக்கு உரிய பகுதிக்குச் சென்றுவிட்டான்.(25,26)
பலம் வாய்ந்த சகோதரர்களான அந்தத் தைத்தியர்கள் {சுந்தனும், உபசுந்தனும்}, பல வரங்களைப் பெற்று, அண்டத்தில் யாராலும் கொல்லப்பட முடியாதவர்களாக ஆனார்கள். அவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.(27) பெரும் நுண்ணறிவைக் அந்தத் தைத்தியர்களின் உறவினர்களும், நண்பர்களும், வெற்றி மகுடம் சூடிப் பல வரங்களைப் பெற்றுத் திரும்பியிருக்கும் அவர்களைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.(28) சுந்தனும், உபசுந்தனும் தங்கள் சடா முடிகளைக் களைந்து தலையில் மகுடம் சூடினர். விலை உயர்ந்த ஆடைகளையும், அணிகலன்களையும் அணிந்து மிகுந்த அழகுடன் காட்சியளித்தனர்.(29) அவர்கள் தகுந்த நேரமாக இல்லாதிருந்தாலும், தங்கள் நகரத்தில் ஒவ்வொரு இரவும் சந்திரனை உதிக்க வைத்தனர். அவர்களது நண்பர்களும், உறவினர்களும் இதயத்தில் ஆனந்தம் அடைந்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, இன்பத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.(30)
"உண்பாயாக", "ஊட்டுவாயாக", "கொடுப்பாயாக", "மகிழ்விப்பாயாக", "பாடுவாயாக", "குடிப்பாயாக" போன்ற உற்சாகக் குரல்களே அனைத்து வீடுகளிலும் தினம் தினம் கேட்டன.(31) ஆங்காங்கே சத்தமான குரல்களுடன், கைதட்டல்களும் சேர்ந்து அந்தத் தைத்தியர்களின் நகரத்தையே நிறைத்தது.(32) நினைத்த உருவை அடையும் அந்தத் தைத்தியர்கள் எல்லாவகையான இன்ப விளையாட்டுகளிலும் ஈடுபட்டும், ஒரு முழு வருடத்தையே ஒரு நாளாகக் கருதிக் காலம் கடப்பதையே அறியாது இருந்தார்கள்" என்றார் {நாரதர்}."(33)

ஆங்கிலத்தில் | In English |