Brothers deceased due to lust! | Adi Parva - Section 214 | Mahabharata In Tamil
(ராஜ்யலாப பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : சுந்தனும், உபசுந்தனும் பெரும் இன்பத்துடன் போதையில் இருப்பது; அவர்கள் இருக்கும் இடத்திற்குத் திலோத்தமை சென்றது; அவள் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது; இருவரும் அழிவது; நாரதர் பாண்டவர்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்த வலியுறுத்துவது; அவர் முன்னிலையிலேயே அவர்களுக்குள் ஒரு விதி பிறப்பது...
நாரதர் தொடர்ந்தார், "அதே வேளையில் அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} முழு உலகத்தையும் அடக்கி எதிரிகள் அற்று இருந்தனர். மூன்று உலகங்களையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, தங்கள் முயற்சிகளால் ஏற்பட்ட களைப்பும் நீங்கிய பிறகு, அவர்களால் இனி செய்யப்பட வேண்டியது எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.(1) கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பூமியை ஆண்ட மன்னர்கள் ஆகியோரின் செல்வங்களையெல்லாம் அபகரித்து வந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.(2) அவர்கள் தங்களுக்கு (மூன்று உலகிலும்) எதிரிகளே இல்லை என்று கண்டபோது, இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தங்களை அர்ப்பணித்து, மற்ற முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டுத் தேவர்களைப் போல வாழ்ந்தனர்.(3) அவர்கள், பெண்கள், வாசனைப் பொருட்கள், பூ மாலைகள், இசை, குடி என அனைத்து வகை இன்பங்களையும், அனைத்து புலன் நுகர் பொருட்களையும் தாராளமாக அனுபவித்தனர்.(4) தேவர்களைப் போல அவர்கள் அபரிமிதமான இன்பங்களையும், கேளிக்கையையும் அனுபவித்துக் கொண்டு வீடுகளிலும், தோப்புகளிலும், நந்தவனங்களிலும், காடுகளிலும், மலைகளிலும் என அவர்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் திரிந்து கொண்டிருந்தனர்.(5)
ஒரு நாள் விந்திய மலைகளில் இருக்கும் கற்கள் நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் சால மரங்களும் நிறைந்த சமவெளிகளுக்கு இன்பம் அனுபவிப்பதற்காகச் சென்றனர்.(6) மிகவும் ஏற்புடையவையும், விரும்பத்தக்கவையுமான அனைத்து பொருட்களையும் அங்கே கொண்டு வந்த அந்தச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} அற்புதமான இருக்கைகளில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், அழகான பெண்கள் துணையுடனும் அமர்ந்தனர்.(7) அந்த மங்கையர், அந்தச் சகோதரர்களை மகிழ்விக்க எண்ணி, அங்கே இசையுடன் கூடிய நடனத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்தச் சகோதரர்களை வாழ்த்திப் பாடல்கள் பாடப்பட்டன.(8)
அதேவேளையில், சிவப்புப் பட்டாலான ஒற்றையாடையுடன் தனது அழகுகளை எல்லாம் வெளிப்படுத்திய திலோத்தமை, காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டே அந்த வழியில் வந்தாள்.(9) ஆற்றங்கரையில் வளர்ந்திருக்கும் கர்ணீகாரங்களில் மலர்களைச் சேகரித்தபடியே, அந்தப் பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் {சுந்தன், உபசுந்தன்} இருந்த இடத்திற்கு அவள் {திலோத்தமை} மெதுவாக வந்தாள்.(10) அந்த அசுரச் சகோதரர்கள் நிறையக் குடித்துப் போதையுடன் இருந்த போது, அந்தக் கற்பனைக்கெட்டாத அழகு கொண்ட மங்கையைக் {திலோத்தமையைக்} கண்டு அதனால் தாக்குண்டனர்.(11) அவர்கள் தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து அந்த மங்கையிருக்கும் இடத்திற்குச் சென்றனர். காமத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த இருவரும், தனக்கே அந்தப் பெண் வேண்டும் எனக் கேட்டனர்.(12)
சுந்தன் அந்த மங்கையின் வலது கையைப் பற்றி இழுத்தான். உபசுந்தன் இடது கையைப் பற்றினான்.(13) தாங்கள் பெற்ற வரங்களாலும், பெரும் பலத்தாலும், செல்வங்கள் மற்றும் ரத்தினங்களாலும், தாங்கள் குடித்த மதுவினாலும், மிகுந்த போதைக்குள்ளாகி,(14) அவைகளால் மதம் கொண்டு, விருப்பம் மற்றும் ஆசையினால் உந்தப்பட்டு, கோபத்தினால் புருவம் சுருக்கி அவர்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.(15) "அவள் எனது மனைவி, எனவே உனக்கு அவள் பெரியவள்" என்றான் சுந்தன். "அவள் எனது மனைவி, எனவே அவள் உனக்குக் கொழுந்தியாள்" என்ற மறுமொழி கூறினான் உபசுந்தன்.(16) பிறகும் அவர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} ஒருவருக்கு ஒருவர், "அவள் எனதே, உனதல்ல" என்றனர். விரைவில் மிகுந்த கோபத்துக்கு உள்ளாகினர். அந்த மங்கையின் அழகால் பைத்தியம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் தாங்கள் கொண்டிருந்த தங்கள் அன்பையும், பாசத்தையும்) மறந்து, ஆசையால் நினைவிழந்து, கடும் கதாயுதங்களைக் கையில் ஏந்தினர்.(17,18)
இருவரும், (அவள் {திலோத்தமை} கரம் பற்றுவதில்) "நானே முதல்வன், நானே முதல்வன்" என்று சொல்லி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அந்த முரட்டு அசுரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} தரையில் விழுந்து, ரத்தத்தில் குளித்து, வானத்தில் இருந்து விழுந்த இரு சூரியன்களைப் போலக் கிடந்தனர். அங்கே அவர்களுடன் வந்திருந்த பெண்களும் மற்ற அசுரர்களும் இதைக் கண்டு அச்சத்தாலும், துயரத்தாலும் ஓடிப் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்தனர்.(19,20)
தூய ஆன்மா கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்}, தேவர்களுடனும், பெரும் முனிவர்களுடனும் அங்கே வந்தார். அந்தச் சிறப்பு மிக்கப் பெருந்தகப்பன் திலோத்தமையைப் பாராட்டி, அவளுக்கு ஒரு வரம் தர விரும்புவதாகச் சொன்னார். அந்தத் தலைமைத் தெய்வம், வரம் கொடுக்க விரும்பி திலோத்தமையிடம்,(21,22) "ஓ அழகான மங்கையே, நீ ஆதித்யர்களின் உலகத்தில் சஞ்சரிக்கலாம். யாரும் நீண்ட நேரம் பார்க்க முடியாத வகையில் உனது பிரகாசம் பெரிதாக இருக்கும்!" என்றார்.(23) அனைத்து உயிர்களுக்கும் பெரும்பாட்டன் அவளுக்கு இந்த வரத்தைக் கொடுத்த பிறகு, மூன்று உலகங்களுக்கும் தலைவனாக இந்திரனை முன்பு போலவே நிறுவி, தனது இடத்திற்குத் திரும்பினார்".(24)
நாரதர் தொடர்ந்தார், "இப்படியே, எப்போதும் ஒற்றுமையாகவும், அதற்காகவே முன்னுதாரணமாகவும் கொள்ளப்பட்ட அந்த அசுரர்கள், திலோத்தமைக்காகக் கோபத்தில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர்.(25) எனவே அன்பினால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாரதக் குலத்தில் வந்த முதன்மையானவர்களே, எனக்கு ஏற்புடையது எதையும் செய்ய நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், திரௌபதி குறித்து உங்களுக்குள் வேற்றுமை வராதபடிக்கு உங்களுக்குள் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் {நாரதர்}.(26)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பெரும் முனிவர் நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சிறப்புமிகுந்த பாண்டவர்கள், தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆலோசித்து, அளவிட முடியாத சக்தி கொண்ட அந்தத் தெய்வீக முனிவரின் முன்னிலையில், தங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட விதி என்னவென்றால், அவர்களில் ஒருவர் திரௌபதியுடன் அமர்ந்திருக்கும்போது, மற்ற நால்வரில் எவரேனும் அவர்களைக் கண்டால், அவன் பனிரெண்டு வருடங்களுக்கு[1] பிரம்மச்சாரியாகக் கானகத்திற்குள் ஓய்ந்து போக வேண்டும். இப்படி ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட, அந்த அறம் சார்ந்த பாண்டவர்களைக் கண்ட பெரும் முனிவர் நாரதர், அவர்களிடம் பெரும் மனநிறைவு கொண்டு, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றார்.(27-29) இப்படியே, ஓ ஜனமேஜயா! நாரதரால் உந்தப்பட்ட பாண்டவர்கள், தங்களுக்குள் பொது மனைவியைக் குறித்து ஒரு விதியை அமைத்துக் கொண்டனர். மேலும், இதனால்தான், ஓ பாரதா {ஜனமேஜயா}, அவர்களுக்குள் இது விஷயத்தில் சச்சரவு ஏற்படவில்லை" {என்றார் வைசம்பாயனர்}.(30)

[1] வேறு பதிப்புகளில் 12 மாதம் என்றும் இருக்கிறது. ஆனால் அர்ஜுனன் அந்தத் தேசாந்தரத்தில் இந்தியாவின் பல பகுதிகளைக் கடக்கிறான். அவற்றை 12 மாதங்களில் கடக்க முடியுமா என்பதும், 12 வருடங்கள் தேவைப்படுமா என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதே!
ஆங்கிலத்தில் | In English |