Truth is my weapon! | Adi Parva - Section 215 | Mahabharata In Tamil
(அர்ஜுன வனவாச பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : ஒரு பிராமணனிடம் பசுக்களைத் திருடியவர்களிடம் இருந்து அதை மீட்டுக் கொடுக்க எண்ணி, தனது ஆயுதத்தை எடுக்க அறைக்குச் சென்ற அர்ஜுனன், யுதிஷ்டிரனும் திரௌபதியும் தனித்திருப்பதைக் காண்பது; அவர்களுக்குள் ஏற்பட்ட விதி மீறப்பட்டதால் அவன் பனிரெண்டு வருட வனவாசம் மேற்கொள்வது...
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிப்பட்ட ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட பாண்டவர்கள், தொடர்ந்து அங்கே {காண்டவ பிரஸ்தத்தில்} வசித்தனர். தங்கள் வீரத்தால் அவர்கள் பலநாட்டு மன்னர்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.(1) பிருதையின் {குந்தியின்} ஐந்து மகன்களான அளவிடமுடியா சக்தி கொண்டவர்கள் அவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணை {திரௌபதி} கீழ்ப்படிந்து நடந்தாள்.(2) யானைகளால் நிறைந்த சரஸ்வதி நதி, ஐந்து நீரோட்டங்களாகப் பிரிந்து இன்பமடைந்ததைப் போல, திரௌபதி தனது ஐந்து வீரக் கணவர்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தாள். அவர்களும் அவளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.(3) அந்தச் சிறப்புவாய்ந்த பாண்டவர்கள் தங்கள் செயல்களில் அறத்தன்மையுடன் இருந்ததால், மொத்த குரு குலமும், பாவங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாக வளமையில் வளர்ந்தனர்.(4)
ஓ மன்னா {ஜனமேஜயா}, சில காலம் கழித்து, ஒரு சம்பவம் நடந்தது. குறிப்பிட்ட சில கள்வர்கள் தங்கள் கொள்ளையைச் சுமந்து செல்கையில், ஒரு பிராமணனின் கால்நடைகளையும் திருடிச் சென்றுவிட்டனர்.(5) கோபத்தால் தனது உணர்வை இழந்த அந்த பிராமணன், காண்டவப் பிரஸ்தத்துக்கு வந்து, துன்ப மிகுதியால் பாண்டவர்களைக் கடிந்து கொண்டான்.(6)
அந்த பிராமணன், "பாண்டவர்களே, உங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து, வெறுக்கத்தக்க தீய பாவிகளால் எனது பசுக்கள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கள்வர்களைத் துரத்திச் செல்லுங்கள்.(7) ஐயோ, ஓர் அமைதியான பிராமணனிடம் இருந்த புனிதமான நெய், காகங்களால் கொண்டு செல்லப்பட்டதே. ஐயோ, காலியான சிங்கத்தின் குகைக்குள் தீய நரி படையெடுக்கிறதே!(8) நிலத்தின் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு எடுத்துக் கொள்ளும் மன்னன், அவனது குடிகளைக் காக்கவில்லையென்றால், அவனை உலகத்திலேயே அதிகப் பாவங்களைச் செய்த பாவி என ஞானமுள்ளோர் அழைக்கின்றனர்.(9) ஒரு பிராமணனின் செல்வம் கள்வர்களால் கொண்டு செல்லப்படுகிறது. அறமே சிறுமையைத் தாங்குகிறதே! துயரத்தில் மூழ்கியிருக்கும் எனது கரங்களைப் பற்றித் தூக்குங்கள் பாண்டவர்களே!" என்றான் {பிராமணன்}.(10)
வைசம்பாயணர் தொடர்ந்தார், "குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கசப்பான துயரத்தில் அழுது கொண்டு சொன்ன பிராமணர்களின் வார்த்தைகளைக் கேட்டு "அஞ்சாதே!" என்று உரத்த குரலில் அந்த பிராமணனுக்கு உறுதியளித்தான்.(11) ஆனால், அப்பொழுது அந்தச் சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வைக்கும் அறையில் நீதிமானான யுதிஷ்டிரனும், கிருஷ்ணையும் {திரௌபதியும்} இருந்தார்கள். அழுது கொண்டே இருந்த பிராமணனின் வார்த்தைகள் அவனை {அர்ஜுனனை} உந்தினாலும், அர்ஜுனனால் அந்த அறைக்குள்ளும் நுழைய முடியவில்லை. ஆயுதங்கள் இல்லாமல் பிராமணனுடன் செல்லவும் முடியவில்லை.(12,13)
பிராமணனால் அழைக்கப்பட்ட அந்த அர்ஜுனன் சோகம் நிறைந்த இதயத்துடன் சிறிது நேரம் சிந்தித்தான்.(14) "ஐயோ, இந்த பிராமணனின் செல்வம் களவாடப்பட்டிருக்கிறதே! நான் அவனது கண்ணீரை வற்றச் செய்ய வேண்டும்.(15) இப்போதும் அழுது கொண்டே இருக்கும் அவன், துயரத்துடன் நமது வாசலுக்கு வந்திருக்கிறான். இப்போது நான் இவனைக் காக்கவில்லை என்றால், இந்த அலட்சியத்தால் மன்னனுக்குப் {யுதிஷ்டிரனுக்குப்} பாவம் ஏற்படும்.(16) நமது இந்த அறமற்ற தன்மை {அதர்மம்} நாடு முழுவதும் அறியப்படும். அதனால் நமக்குப் பெரும் பாவம் ஏற்படும்.(17) மன்னனை {யுதிஷ்டிரனை} மதிக்காமலே அறைக்குள் சென்றாலோ, எதிரிகளற்ற அந்த மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} உண்மையற்று நான் நடந்து கொண்டதாக ஆகும்.(18) அந்த அறைக்குள் நுழைவதன் மூலம், நான் வனவாசத் தண்டனை பெற்று அங்கேயே சாகக்கூட நேரிடும். உடலை விட அறமே மேலானாது. எனவேதான் உடல் அழிந்த பிறகும் அது நீடிக்கிறது" என்று நினைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு தீர்மானத்திற்கு வந்து, அந்த அறைக்குள் நுழைந்து யுதிஷ்டிரனிடம் பேசினான்.(19,21)
வில்லுடன் வெளியே வந்த அவன், அந்த பிராமணனிடம் மகிழ்ச்சியுடன், "ஓ பிராமணரே! அந்தப் பாவித் திருடர்கள் நம்மை விட்டு வெகுதூரத்திற்குச் செல்லாதவாறு விரைந்து செல்வோம். நான் உம்முடன் வந்து, உமது செல்வத்தைத் திருடர்கள் கையில் இருந்து மீட்டுத் தருகிறேன்" என்றான் {அர்ஜுனன்}.(22,23)
பிறகு இருகரங்களையும் சம நிபுணத்துவத்துடன் பயன்படுத்தும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கையில் வில்லேந்தி, கவசம் பூண்டு, மேற்கூடு கொண்ட தேரில் ஏறி கள்வர்களைத் தொடர்ந்தான். அத்திருடர்களைத் தனது கணைகளின் மூலம் துளைத்து, தங்கள் கொள்ளையைத் திரும்பத் தர நிர்ப்பந்தித்தான்.(24) அந்த பிராமணனுக்குப் பசுக்களை மீட்டுக் கொடுத்து, பெரும் புகழை வென்று, தலைநகருக்குத் திரும்பினான். மூத்தவர்களை வணங்கி, அனைவராலும் பாராட்டப்பட்ட அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} கடைசியாக யுதிஷ்டிரனை அணுகி,(25,26) "ஓ தலைவா, எனக்கு விடை கொடுப்பீராக. நான் எனது சபதத்தை நிறைவேற்ற வேண்டும். நீர் திரௌபதியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டதால், நமக்குள் விதிக்கப்பட்ட விதியை மீறியவன் ஆகிறேன். எனவே, நான் கானகத்திற்குச் செல்கிறேன். இதுவே நமக்குள் நாம் தீர்மானித்துக் கொண்டது" என்றான்.(26,27)
அந்த வலிநிறைந்த சொற்களைத் திடீரெனக் கேட்ட யுதிஷ்டிரன் மிகுந்த துன்பம் கொண்டு கலக்கமடைந்த குரலில் "ஏன்!" என்று கேட்டான்.(28) பிறகு சிறிது நேரம் கழித்து, மன்னன் யுதிஷ்டிரன், சபதங்களைத் துறக்காத, சுருண்ட முடி கொண்ட தனது தம்பி தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} துயரத்துடன்,(29) "ஓ பாவம் அற்றவனே, நான் உனக்கு மரியாதைக்குரியவன் என்றால், நான் சொல்வதைக் கேட்பாயாக.(30) ஓ வீரனே, நன்மைக்காகவே நீ அந்த அறைக்குள் நுழைந்தாய் என்பது எனக்குத் தெரியும். நீ எனக்குப் பிடிக்காதது எதையும் செய்தாயா? ஆனால் எனது மனம் நிறைவு கொள்ளவில்லையே.(31) ஒரு தம்பி, தனது அண்ணனும் அண்ணனின் மனைவியும் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் நுழைவது குற்றமாகாது. ஓர் அண்ணன், தம்பியும் தம்பியின் மனைவியும் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் நுழைவதே குற்றமாகும்.(32) எனவே, ஓ பலம் பொருந்திய கரம் கொண்டவனே, நீ சொல்லும் காரணத்திலிருந்து விலகு. நான் சொல்வதைச் செய்வாயாக. உனது அறம் தாழவில்லை. நீ என்னை அவமானப்படுத்தவில்லை" என்றான் {யுதிஷ்டிரன்}.(33)
இதைக் கேட்ட அர்ஜுனன், "ஒருவன் தனது கடமையைச் செய்யும்போது இரட்டுற மொழிதல் {உண்மையை மழுப்பிச் சிலேடையாகப் பேசுதல் - quiblling} அனுமதிக்கப்படுவதில்லை என்று நீர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். நான் உண்மையிலிருந்து நழுவ முடியாது. உண்மையே எனது ஆயுதம்" என்றான் {அர்ஜுனன்}.(34)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னனின் அனுமதியைப் பெற்று, அர்ஜுனன் தன்னைக் கானக வாழ்வுக்குத் தயார் செய்து கொண்டான்; பிறகு அவன் பனிரெண்டு {12} வருடங்கள் கானகத்தில் வாழச் சென்றான் {அர்ஜுனன்}.(35)

ஆங்கிலத்தில் | In English |