"Kidnap Subhadra!" said Krishna ! | Adi Parva - Section 221 | Mahabharata In Tamil
(சுபத்திரா ஹரணப் பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : ரைவதக மலையில் பெரும் விழா நடப்பது; பலராமன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் மது உண்டு போதையுடன் அங்கே சுற்றித் திரிவது; கிருஷ்ணனும், அர்ஜுனனும் தனித்து உலவுவது; சுபத்திரையைக் கண்டு அர்ஜுனன் மோகிப்பது; சுபத்திரையைக் கடத்திச் சொல்லுமாறு கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு வழி சொல்வது; யுதிஷ்டிரனுக்குச் செய்தி அனுப்புவது...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சில நாட்களில் ரைவதக மலையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தவரின் பெரும் விழா ஒன்று வந்தது.(1) போஜர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அந்த மலைவிழாவில், அந்தக் குலங்களைச் சேர்ந்த வீரர்கள், பிராமணர்களுக்கு, ஆயிரக்கணக்கில் செல்வங்களைக் கொடுத்தனர்.(2) ஓ மன்னா {ஜனமேஜயா} அந்த மலைப்பகுதியில் இருந்த பல மாளிகைகள் ரத்தினங்களாலும், பகட்டான சாயல் கொண்ட செயற்கை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(3) பாடகர்கள் பாடவும், நடனக்கலைஞர்கள் ஆடவும், இசைக்கலைஞர்கள் தங்கள் கச்சேரியை ஆரம்பித்தனர்.(4) அனைத்து ஆபரணங்களையும் பூண்டவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், தங்கத் தேர்களில் பவனி வந்தவர்களுமான விருஷ்ணி குல இளைஞர்கள் பார்க்க மிகவும் அழகாக இருந்தனர்.(5)
குடிமக்களில் சிலர் கால்நடையாகவும், சிலர் அற்புதமான ரதங்களிலும், தங்கள் மனைவியருடனும், பணியாட்களுடனும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வந்தனர்.(6) அங்குப் பெருங்களிப்புடன் மது அருந்தி {மதுபானத்தினால் மயங்கிபடி}, தன் விருப்பப்படி உலவி கொண்டிருந்த தலைவன் ஹாலாதரன் (பலராமன்), தன்னுடன் இருந்த (தனது மனைவி) ரேவதியுடன் சேர்த்து, பல இசைக்கலைஞர்களாலும் மற்றும் பாடகர்களாலும் தொடரப்பட்டான்.(7) அங்கே விருஷ்ணி குலத்தின் பலம் பொருந்திய மன்னனான உக்ரசேனன், தனது ஆயிரம் மனைவியருடனும், பல இனிமையான பாடகர்களுடனும் வந்தான்.(8) போர்களத்தில் பயங்கரமான ருக்மினியனும் {பிரத்யும்னனும்}, சாம்பனும் மது உண்டு உற்சாக மிகுதியுடன் உலவிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூ வேலைப்பாடுகள் நிறைந்த விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தி மிகுந்த அழகுடன் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்குக் கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தேவர்களைப் போல இருந்தனர்.(9) அக்ரூரர், சாரணன், கதன், பப்ரு, நிசதன், சாருதேஷ்ணன், பிருது, விப்ருது,(10) சத்யகன், சாத்யகி, பங்ககாரன், மகாரவன், ஹார்த்திக்யன், உத்தவன் ஆகியோரும், பெயர் சொல்லப்படாத இன்னும் பலரும் தங்கள் மனைவியருடனும், பாடகர்கள் குழுவுடனும் தொடரப்பட்டு, அந்த மலைவிழாவைச் சிறப்பித்தனர்.(11,12) அந்த மகத்தான, ஆடம்பரமான, மகிழ்ச்சிகரமான திருவிழா தொடங்கியபோது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனும் {அர்ஜுனனும்}, இவை அனைத்தையும் கண்ணுற்றுபடியே ஒன்றாகச் சென்றனர்.(13) அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில், வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகிய அழகிய பத்திரை {கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை}, அனைத்து ஆபரணங்களும் பூண்டு மங்கையர் மத்தியில் இருப்பதைக் கண்டனர்.(14)
அர்ஜுனன் அவளைக் கண்டது முதல் காம தேவன் வசம் ஆனான். ஓ பாரதா {ஜனமேஜயா}, மனிதர்களில் புலியான கிருஷ்ணன், ஆழ்ந்த கவனத்துடன் அவளைக் {சுபத்திரையைக்} குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு புன்னகைத்து, "இஃது எப்படி இருக்கிறது? கானகத்தில் உலவித் திரியும் ஒருவனது இதயம் காமதேவனால் கலங்கலாமா?(15,16) இவள் என் தங்கை, ஓ பார்த்தா {அர்ஜுனா}, இவள் சாரணருடன் {பலராமருடன்} பிறந்த தங்கையாவாள். இவளது பெயர் பத்திரை {சுபத்திரை}. இவள் என் தந்தைக்குப் பிடித்தமான மகளாவாள். நீ அருளப்பட்டிருப்பாயாக. உனது இதயம் அவளிடம் நிலைத்திருந்தால், அஃதை என்னிடம் சொல். நான் இது குறித்து நேரடியாக என் தந்தையிடம் பேசுகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.(17)
அர்ஜுனன், "இவ்வளவு அழகுடையவள், வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகவும், வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கையாகவும் இருப்பதால், அவளால் யாரைத்தான் வசீகரிக்க முடியாது?(18) விருஷ்ணி குல மங்கையான உனது தங்கை {சுபத்திரை} எனக்கு மனைவியானால், நான் அனைத்திலும் வளமையடைவேன் என்பது உண்மையாகும்.(19) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எந்த வழியில் நான் இவளை {சுபத்திரையை} அடைய முடியும் என்பதைச் சொல்வாயாக. இவளைப் பெறுவதற்காக, மனிதனால் சாதிக்க முடிந்த அனைத்தையும் நான் சாதிப்பேன்" என்று பதிலுரைத்தான் {அர்ஜுனன}.(20)
அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ மனிதர்களில் காளையே, சுயம்வரம் என்பதே க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்ட முறை. ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, இந்த மங்கையின் உணர்வு மற்றும் மனநிலையை நாம் அறியாததால், {சுயம்வரத்தில்} என்ன நடக்கும் என்பது ஐயத்திற்கிடமானதுதான்.(21) ஆற்றல் நிறைந்த க்ஷத்திரியர்களுக்கு, விரும்பிய பெண்ணை அபகரித்துச் செல்லும் செயலும் மெச்சப்படுகிறது என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.(22) எனவே, ஓ அர்ஜுனா, அவள் சுயம்வரத்தில் என்ன செய்வாள் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாததால், அழகான என் தங்கையைப் {சுபத்திரையைப்} பலவந்தமாக அபகரித்துச் செல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(23)
பிறகு கிருஷ்ணனும், அர்ஜுனனும், என்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயித்துக் கொண்டனர். வேகமான தூதுவர்களை இந்திரப்பிரஸ்தத்தில் இருக்கும் யுதிஷ்டிரனிடம் அனுப்பி அனைத்தையும் தெரிவித்தனர். வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன் அதைக் கேட்டவுடன், அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்" {என்றார் வைசம்பாயனர்}[1].(24)

[1] கும்பகோணம் பதிப்பில், "அதன்பிறகு, அர்ஜுனனும், கிருஷ்ணனும் செய்ய வேண்டிய உபாயத்தை நிச்சயம் செய்து கொண்டு சீக்கிரம் செல்பவர்களாகிய சில தூதர்களை இந்திரப் பிரஸ்தத்தில் வஸிக்கும் தர்மராஜருக்கு அதையெல்லாம் தெரிவிப்பதற்காக அப்போது அனுப்பினர். மஹாவீரரான தர்மபுத்திரர் அதைக் கேட்டதும் குந்தியோடு கூட அனுமதி கொடுத்தார். பீமஸேனனும, அதைக்கேட்டுத் தங்கள் காரியம் நிறைவேறினதாக நினைத்தான். இவற்றையெல்லாம் தூதர் வந்து சொல்லக்கேட்டு, சிறந்த புத்தியுள்ள கிருஷ்ணபகவான், அர்ஜுனனுக்கு அனுமதி கொடுத்துவிட்டுக் காரியம் இவ்விதம் செய்ய வேண்டுமென்று மனத்திற்குள் வைத்துக் கொண்டு தூதர்களுடன் கூடவே துவாரகைக்குச் சென்றார்" என்றிருக்கிறது.
மேலும், கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பிறகு வரும் அடுத்தடுத்த மூன்று அத்யாயங்களில்: துவாரகையின் வெளித்தோட்டத்தில் வசித்த அர்ஜுன ஸந்யாஸியை யாதவர்கள் கண்டதும், அவனை ஸுபத்ரையின் கன்யாந்தப்புரத்தில் வஸிக்கும்படி பலராமர் சொன்னதும், தான் முன்கேட்டிருந்த லக்ஷணங்களினால் அர்ஜுனனென்று சந்தேகித்த ஸுபத்ரை பாண்டவர்களுடைய க்ஷேமத்தை விசாரித்ததும், அர்ஜுனன் உண்மை சொன்னதால் காதல் கொண்ட அவளைப் பற்றி, ருக்மிணி தேவகிக்குத் தெரிவித்த்தும், ஸுபத்ரா விவாஹத்தை நடத்துவதற்காகச் சிவோத்ஸவம் என்ற காரணத்தைக் கொண்டு கிருஷ்ணன் யாதவர்களோடு கடலிலுள்ள தீவிற்குச் சென்றதும்; காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளலாம் என ஸுபத்ரையிடம் அர்ஜுனன் சொன்னதும்; இந்திரனை நினைத்து அர்ஜுனன் தியானம் செய்ததும்; குசஸ்தலி நகரை இந்திரனும் பரிவாரங்களும் அடைந்தது; இரவில் கிருஷ்ணன் துவாரகை வந்தடைந்தது; இந்திரன் தலைமையில் அர்ஜுனன், சுபத்ரை திருமணம் நடந்தது; இருபத்திரண்டு தினங்கள் ருக்மிணியின் இல்லத்திலேயே அர்ஜுனன் வசித்திருந்தது; அர்ஜுனன் ஸுபத்ரையுடன் கிருஷ்ணனுடைய தேரிலேறிக் காண்டவப் பிரஸ்தம் செல்ல ஆரம்பித்தது; விப்ருதுவுடன் ஏற்பட்ட போர்; அர்ஜுனனுக்குச் சாரதியாக ஸுபத்திரை செயல்பட்டது ஆகிய நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.
எனினும் கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் மேற்கண்ட சம்பவங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஆங்கிலத்தில் | In English |