The young ones not accepting the mother's speech! | Adi Parva - Section 233 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : ஜரிதை தனது மகன்களை எலி வளைக்குள் புகச் சொன்னது; குஞ்சுகள் அதை ஏற்க மறுத்தது; எலியை ஒரு பருந்து பிடித்து சென்றதாக ஜரிதை சொன்னது; அதை ஏற்காத குஞ்சுகள் தங்கள் தாயை வேறிடம் போகச் சொன்னது; எரியும் காட்டில் தனது குஞ்சுகளை விட்டுவிட்டு ஜரிதை நெருப்பில்லாத பாதுகாப்பான இடத்திற்கு சென்றது...
வைசம்பாயனர் சொன்னார், "தனது மகன்களின் வார்த்தைகளைக் கேட்ட ஜரிதை, "பொந்துக்குள் இருந்த அந்தச் சிறு எலியை ஒரு பருந்து தனது கூரிய நகத்தில் பற்றி எடுத்துச் சென்றது. எனவே, நீங்கள் அந்தப் பொந்துக்குள் சென்று அச்சமற்று இருக்கலாம்" என்றாள்.(1)
இதைக் கேட்ட அந்தப் பிஞ்சுகள், "பருந்து அந்த எலியைத் தூக்கிச் சென்றதைக் குறித்து நமக்கு எந்த உறுதியும் கிடையாது. அந்தப் பொந்துக்குள் வேறு எலிகளும் இருக்கலாம். அவற்றிடம் இருந்து நமக்கு எப்போதும் அச்சம் உண்டு.(2) ஆனால் இங்கோ இவ்வளவு தூரத்திற்கு நெருப்பு அணுக முடியுமா என்ற ஐயம் உள்ளது. ஏற்கனவே காற்றானது அந்நெருப்பை விலக்கிச் செல்வதைக் காண்கிறோம். நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், அந்தப் பொந்தில் வாழும் உயிரினத்தால் எங்களுக்குச் சாவு நிச்சயம்.(3) ஆனால், நாங்கள் இங்கேயே இருந்தால் சாவு என்பது ஐயத்திற்கிடமானதுதான். ஓ தாயே, உறுதியான மரணம் என்ற நிலையைவிட, உறுதியற்ற நிலையே சிறந்தது. எனவே, நீ இங்கிருந்து தப்புவது உனது கடமையாகிறது. நீ வாழ்ந்தால்தான் நல்ல குழந்தைகளைப் பெறும் வாய்ப்பிருக்கிறது" என்றன.(4)
பிறகு அவர்களின் தாய் {ஜரிதை}, "பிள்ளைகளே, பறவைகளில் சிறந்த பருந்து, தாழ இறங்கிப் பொந்துக்குள் இருந்து எலியைத் தூக்கிச் செல்வதை நானே கண்டேன். அவன் {பருந்து} அப்படி வேகமாகப் பறந்து செல்கையில், நான் அவனைப் {பருந்தைப்} பின் தொடர்ந்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.(5,6)
நான் அவனிடம், "ஓ பருந்துகளின் மன்னா! நீ எங்கள் எதிரியான எலியை உனது கூரிய நகங்களில் பற்றிச் செல்வதால், நீ எதிரிகள் இல்லாமல் வாழ்வாயாக. நீ சொர்க்கத்தில் தங்க மேனியுடன் வாழ்வாயாக" என்று வாழ்த்துகூறினேன்.(7)
பிறகு அந்தப் பருந்து அந்த எலியை விழுங்கினான். நானும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டேன். எனவே, பிள்ளைகளே, இந்தப் பொந்துக்குள் நம்பிக்கையுடன் நுழையுங்கள். நீங்கள் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. அந்தப் பொந்தில் வசித்த எலி பருந்தால் பிடித்துச் செல்லப்படுவதை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன்" என்றாள் {ஜரிதை}.(8,9)
அதற்கு அந்தப் பிஞ்சுகள், "ஓ தாயே, அந்த எலி பருந்தால் எடுத்துச் செல்லப்பட்டது என்பதை நாங்கள் எந்த வகையிலும் அறியவில்லை. அந்தக் காரியம் உறுதியானதா என்பது தெரியாமல் எங்களால் அந்தப் பொந்துக்குள் நுழைய முடியாது" என்றன.(10)
அதற்கு அவற்றின் தாய் {ஜரிதை}, "எலி பருந்தால் தூக்கிச் செல்லப்பட்டது எனக்கு உறுதியாகத் தெரியும். எனவே பிள்ளைகளே, நீங்கள் அஞ்சும் அவசியமில்லை. நான் சொல்வதைச் செய்யுங்கள்" என்றாள்.(11)
அதற்கு அந்தப் பிஞ்சுகள், "ஓ தாயே, நீ எங்களது அச்சத்தை விலக்கப் பொய்க்கதையைச் சொல்கிறாய் என்று நாங்கள் சொல்லவில்லை. புத்தி கலங்கியிருக்கும்போது ஒரு நபரால் செய்யப்பட்ட காரியங்களை, அந்த நபரின் திட்டமிட்ட செயல் என்று அரிதாகவே கூறலாம்.(12) எங்களால் உனக்கு எந்த ஆதாயமும் இல்லை. அதே போல நாங்கள் யார் என்பதையும் நீ அறியமாட்டாய். அப்படியிருக்கும்போது, நீ ஏன் உன் உயிரைப் பணயம் வைத்து எங்களைப் பாதுகாக்கமுனையவேண்டும்? நாங்கள் உனக்கு யார்? நீ இளமையும் அழகும் கொண்டிருக்கிறாய். உன்னால் உனது கணவரை {மந்தபாலரை} அடைய முடியும். நீ உன் கணவரிடம் செல்வாயாக. நீ மீண்டும் நல்ல குழந்தைகளைப் பெறுவாயாக. நாங்கள் இந்த நெருப்பில் புகுவதால், அருள் நிறைந்த உலகங்களை அடையவிடுவாயாக. இருப்பினும், நெருப்பு எங்களை உட்கொள்ளவில்லை என்றால், நீ மறுபடியும் இங்கு வந்து எங்களை அடையலாம்" என்றன {அந்தச் சாரங்கப் பறவைக் குஞ்சுகள்}".(15)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படித் தனது மகன்களால் சொல்லப்பட்ட அந்தத் தாய்ப்பறவை {ஜரிதை}, காண்டவ வனத்தை விட்டு, விரைவாக நெருப்பில்லாத பாதுகாப்பான இடத்திற்குச் சென்றாள்.(16) விரைவாக முன்னேறிய அக்னி, தன்னுடைய கொடும் சுடர்களைக் கொண்டு மந்தபாலர் மகன்கள் இருந்த இடத்தை அணுகியது.(17) அந்த இளம்பறவைகள் அந்தச் சுடர்விட்டு எரியும் நெருப்புத் தங்களை நோக்கி வருவதைக் கண்டனர். அந்த நான்கு பறவைக்குஞ்சுகளில் மூத்தவனான ஜரிதாரி, அக்னிக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பேசினான்".(18)

ஆங்கிலத்தில் | In English |