Fire surrounded the infant birds! | Adi Parva - Section 232 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : ஜரிதையின் ஒப்பாரி; குஞ்சுகள் தங்கள் தாயைத் தப்பிக்கச் சொன்னது; ஜரிதை குஞ்சுகளை பொந்துக்குள் நுழையச் சொன்னது; பொந்துக்குள் நுழைய மறுத்த குஞ்சுகள்...
வைசம்பாயனர் சொன்னார், "காண்டவ வனத்தில் நெருப்புச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த போது, அந்தப் பறவை குஞ்சுகள் மிகவும் கலங்கிப் போய்த் துயரத்தில் இருந்தன. கவலை நிறைந்த அவர்கள் {பறவைகள்} தப்பிக்க எந்த வழியும் காணவில்லை.(1) தப்ப இயலாத குஞ்சுகள் அவை என்பதை அறிந்த அவற்றின் தாயான ஆதரவற்ற ஜரிதை, மிகுந்த துயர் கொண்டு பேரொலியுடன் கதறி அழுதாள்.(2)
அவள் {ஜரிதை}, "ஓ கொடூரமான இந்தத் தீ அண்டத்தைப் பிரகாசிக்கச் செய்து, கானகத்தை எரித்துத் தள்ளி, எனது துன்பத்தை அதிகரிக்க, இதோ எங்களை நோக்கி வருகிறதே.(3) அழிந்து போன எங்கள் மூதாதையர்களின் ஒரே ஆதரவான, கால்களும் சிறகுகளும் முளைக்காத இந்தப் பிஞ்சுக் குஞ்சுகளால் எனக்குத் துயர் அதிகரிக்கிறதே.(4) அனைத்துப் புறமும் பீதியைக் கிளப்பிக் கொண்டு இந்த நெருப்பு, தனது நீண்ட நாவால் உயரமான மரங்களை நக்கிக் கொண்டு எங்களை நோக்கி வருகிறதே.(5) இவர்களைச் {குஞ்சுகளைச்} சுமந்து கொண்டு என்னால் தப்பித்துச் செல்ல முடியவில்லையே. இவர்களைக் குறித்து எனது இதயம் துயர்கொண்டுள்ளதால், இவர்களைக் கைவிடவும் முடியவில்லையே.(6) எனது மகன்களில் யாரை நான் விடுவேன்? யாரை நான் சுமந்து செல்வேன்? எனது கடமைக்கு உகந்த செயல்தான் என்ன? ஓ பிள்ளைகளே நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் என்ன சிந்தித்தாலும் நாம் தப்புவதற்கு வழி தெரியவில்லை. எனது இறக்கைகளால் உங்களை மூடியபடி நானும் உங்களுடன் சாகப்போகிறேன்.(7,8)
கொடூரரான உங்கள் தந்தை {மந்தபாலர்} சில காலத்திற்கு முன்பு என்னைவிட்டு அகலும் போது, "ஜரிதாரி என்ற இவன் மூத்தவனாதலால், உனது குலமே இவனை நம்பி இருப்பதலால் இவனே {ஜரிதாரியே} அதற்கு ஆதாரமாக இருப்பான். இரண்டாவது மகனான சாரிஸ்ரிக்குவன் எனது மூதாதையரின் குலத்தை விருத்தி செய்வான். எனது மூன்றாவது மகனான ஸ்தம்பமித்ரன் தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவியாவான். எனது இளைய மகன் துரோணன், வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவன் ஆவான்" என்று சொல்லிவிட்டுச் சென்றாரே.(9,10) ஆனால் நம்மை இப்படிப்ப்பட்ட பேராபத்து சூழ்ந்துள்ளதே. நான் யாரை எடுத்துச் செல்வேன்? எதைச் செய்தால் செய்ய வேண்டியதைச் செய்ததாகும்? நான் தீர்மானிக்கும் சக்தியை இழந்துவிட்டேனே. எப்படி எனது பிள்ளைகளை நெருப்பில் இருந்து காப்பது என்று எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையே!" என்று அழுது கொண்டிருந்தாள்".(11)
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி ஒப்பாரி வைத்த தனது தாயிடம் அந்தக் பிஞ்சுக் குஞ்சுகள், "ஓ தாயே, உனது பாசத்தைக் கைவிட்டு, நெருப்பில்லாத இடத்திற்கு உடனே செல்வாயாக.(12) நாங்கள் இங்கே கொல்லப்பட்டாலும், பின்பு உனக்கு வேறு பிள்ளைகள் பிறப்பர். ஓ தாயே நீயே கொல்லப்பட்டால், நமது குலத்தில் வேறு பிள்ளைகள் இருக்க மாட்டார்கள்.(13) இந்த இடரைச் சிந்தித்துப் பார், ஓ தாயே, நமது குலத்திற்கு நன்மையான காரியத்தைச் செய்ய நேரம் வந்தவிட்டது. நீ காக்கப்பட்டால், உயர்ந்த உலகங்களை அடைய இன்னும் எங்கள் தந்தை {மந்தபாலகர்} உனது விருப்பங்களை ஈடேற்ற வழி இருக்கிறது" என்றன.(14,15)
அந்தப் பிஞ்சுகள் சொன்னதைக் கேட்ட ஜரிதை, "இந்த மரத்தின் அருகே தரையில் ஒரு பொந்து இருக்கிறது. அஃது ஓர் எலிக்குச் சொந்தமானது. அந்தப் பொந்துக்குள் நேரங்கடத்தாமல் நுழையுங்கள். அப்போது உங்களுக்கு நெருப்பிடம் எந்தப் பயமும் இருக்காது.(16) நீங்கள் அனைவரும் நுழைந்ததும், நான் அந்தப் பொந்தின் வாயிலை புழுதியால் அடைத்துவிடுவேன். சுடர்விட்டு எரியும் இந்த நெருப்பில் இருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி.(17) பிறகு, நெருப்பு அணைந்ததும், நான் இங்கே திரும்பிவந்து புழுதியை அகற்றுவேன். நெருப்பில் இருந்து தப்ப வேண்டும் என்றால் எனது ஆலோசனைப்படி செய்வீரா" என்றாள் {சாரங்கப் பறவையான ஜரிதை}.(18)
அதற்கு அந்தப் பறவைக் குஞ்சுகள், "இறகுகள் அற்று, சதைப்பிண்டம் போல் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், இறைச்சி உண்ணும் எலி எங்கள் அனைவரையும் அழித்துவிடும் என்பது நிச்சயம். எங்கள் முன் இருக்கும் ஆபத்தை நாங்கள் காண்பதால், அந்தப் பொந்துக்குள் நுழைய முடியாது.(19) நெருப்பில் இருந்து தப்பிக்கவோ, அந்த எலியிடம் இருந்து தப்பிக்கவோ எங்களுக்கு எந்த வழியும் தெரியவில்லை. எங்கள் தந்தையின் {மந்தபாலரின்} இனப்பெருக்கம் பலன்றறுப் போவது எவ்வாறு? எங்கள் தாய் {ஜரிதை} காக்கப்படுவது எவ்வாறு? என்பது எங்களுக்குத் தெரியவில்லை.(20) நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், எலி எங்களை அழித்துவிடும்; நாங்கள் இங்கேயே இருந்தால், விண்ணை முட்டும் இந்த நெருப்பு எங்களை அழித்துவிடும்; இந்தப் பேராபத்தைச் சிந்தித்துப் பார்த்தால், கடித்து உண்ணப்பட்டு இறப்பதைவிட, நெருப்பினால் இறப்பதே சிறந்தது.(21) பொந்துக்குள் எலி விழுங்கிச் சாகும் நிலை தாழ்ந்தது; அதே வேளையில் நெருப்பினால் அழிவது ஞானமுள்ளோரால் ஏற்கப்பட்டுள்ளது" என்றன {அந்தக் குஞ்சுகள்}".(22)

ஆங்கிலத்தில் | In English |