Mandapala went to his wife and children! | Adi Parva - Section 235 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : தனது பிள்ளைகளை நினைத்து மந்தபாலர் வருந்துவது; லபிதை பொறாமையால் அவரை ஒதுக்கிப் பேசுவது; நெருப்பு அடங்கியதும் ஜரிதை தனது பிள்ளைகளைக் காண விரைந்தது; பிள்ளைகள் பத்திரமாக இருப்பது; அதே நேரத்தில் மந்தபாலரும் அங்கே வருவது...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ குருகுலத்தைச் சேர்ந்தவனே {ஜனமேஜயா}, முனிவர் மந்தபாலர், தான் கொடுங்கதிர்கள் கொண்ட தேவனிடம் {அக்னியிடம்} பேசிவிட்டாலும், தனது பிள்ளைகள் குறித்து எண்ணி மிகுந்த பதற்றமடைந்தார். உண்மையில், அவர் மனமே அமைதியில் நிலைக்கவில்லை.(1)
தனது மகன்களைக் குறித்த துயருற்று, (தனது இரண்டாவது மனைவியான) லபிதையிடம், "ஓ லபிதா, எனது பிள்ளைகளுக்கு நகரும் சக்தி கிடையாது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ? காற்றுக் கடுமையாக வீசி, நெருப்புப் பலமாக வளரும்போது, எனது பிள்ளைகளால் தங்களைக் காத்துக் கொள்ள முடியாதே.(2,3) அவர்களது தாயால் {ஜரிதையால்} அவர்களை எப்படிக் காப்பாற்றி மீட்க முடியும்? அந்த அப்பாவிப் பெண், தன்னால் தனது சந்ததியைக் காக்க முடியவில்லை என்று அறியவரும் போது, துக்கம் தாளமாட்டாளே.(4) என் மகன்களால் பறக்கவோ, காற்றில் எழவோ முடியாது என்பதால் அவள் பல்வேறு வகையில் கதறிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பாள்.(5) ஐயோ, எனது மகன்கள், ஜரிதாரி, சாரிசிரிகன், ஸ்தம்பமித்ரன், மற்றும் துரோணன் ஆகியோர் எப்படி இருக்கிறார்களோ? அவர்களது ஆதரவற்ற தாய் {ஜரிதை} எப்படி இருக்கிறாளோ?" என்று துயரத்துடன் பேசினார் {மந்தபாலர்}.(6)
ஓ பாரதா {ஜனமேஜயா}, அப்படிச் சொல்லி அழுது கொண்டிருந்த முனிவர் மந்தபாலரிடம், சக்காளத்தியின் மேல் இருந்த பொறாமையால் லபிதை,(7) "உமது பிள்ளைகள் அனைவரும் பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்ட முனிவர்கள் என்று நீர் எனனிடம் உறுதியாகச் சொன்னீர். எனவே அவர்களைக் குறித்து நீர் வருந்தாதீர். அவர்களுக்கு நெருப்பிடமிருந்து அச்சமில்லை.(8) அக்னியிடம் அவர்கள் சார்பாக என் முன்னிலையில்தானே பேசினீர்? அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் அவர்களைக் காப்பதாகச் சொன்னாரல்லவா?(9) அண்டத்தின் பிரதிநிதிகளில் ஒருவனான {லோகபாலனான} அக்னி தனது பேச்சை பொய்த்துக்கொள்ள மாட்டான். உமக்குக் கவலையும் இல்லை, நண்பர்களின் நன்மை குறித்து உமது இதயம் நினைக்கவும் இல்லை.(10) எனது எதிரியை (ஜரிதையை) நினைத்து நீர் கவலைகொள்வதால் தான் இவ்வாறு தடுமாறுகிறீர். என் மீது நீர் வைத்திருக்கும் அன்பு, முதலில் நீர் அவளிடம் வைத்ததற்குச் சமமாக இல்லை என்பது நிச்சயம்.(11) தனது கவனத்தை இரு தரப்பிடம் சிதறவிடும் ஒருவன், அதில் ஒரு தரப்பு துன்பப்படுவதைக் காணலாம்; ஆனால் அவன் தனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மற்றொரு தரப்பை அலட்சியம் செய்யக் கூடாது.(12) நீர் யாருக்காக வருத்தப்படுகிறீரோ, அந்த ஜரிதையிடமே செல்வீராக. என்னைப் பொறுத்தவரை, உம்மைப் போன்ற தீய மனிதனுடன் நெருக்கமாக இருந்ததற்குப் பலனாக இனிமேல் தனிமையில் திரியப் போகிறேன்" என்றாள் {லபிதை}.(13)
இந்த வார்த்தைகளைக் கேட்ட மந்தபாலர், "நீ சொல்வது போல எண்ணம் கொண்டு நான் உலகில் திரியவில்லை. பிள்ளைப்பேற்றுக்காகவே நான் இங்கே இருக்கிறேன். அப்படி நான் பெற்ற பிள்ளைகளே கூட இப்போது ஆபத்தில் இருக்கின்றனர்.(14) தான் பெறப் போகும் ஒன்றிற்காக, தன்னிடம் உள்ள ஒன்றைக் கைவிடும் மனிதன் தீயவனாவான். இந்த உலகம் அவனைப் புறக்கணித்து அவமானப்படுத்தும் (எனவே, நான் இங்கிருந்து செல்ல வேண்டும்).(15) உன்னைப் பொறுத்தவரை நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அதைச் செய்து கொள்வாயாக.(16) மரங்களை நக்கிச் செல்லும் இந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு, துயர் கொண்ட எனது இதயத்தின் வேதனையை அதிகரிக்கிறது. அப்படி வேதனை அதிகரிப்பதால், தீய நிமித்தங்கள் எழுகின்றன" என்றார் {மந்தபாலர்}".(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதே வேளையில், அந்தச் சாரங்கப் பறவைகள் வசித்த இடத்தில் நெருப்பு அடங்கியது. தனது பிள்ளைகளிடம் அதிகப் பிணைப்புள்ள ஜரிதை, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் காண துயரத்துடன் விரைவாக வந்தாள்.(17) அவர்கள் அனைவரும் நெருப்பிலிருந்து தப்பிப் பிழைத்து நலமுடன் இருப்பதைக் கண்டாள். அந்தக் குஞ்சுகள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருந்தாலும் தங்கள் தாயைத் கண்டதும் கதறி அழத் தொடங்கின.(18) அவளும் அவர்களை உயிரோடு கண்டதால் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவள் {ஜரிதை}, அழுது கொண்டிருக்கும் தனது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவினாள்.(19) சரியாக அதே நேரத்தில், ஓ பாரதா {ஜனமேஜயா}, மந்தபால முனிவர் அங்கே வந்தார். ஆனால், அவரைக் கண்டு அவரது மகன்களில் ஒருவரும் மகிழவில்லை.(20) இருப்பினும், அந்த முனிவர் {மந்தபாலர்} அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒருவர் பின் ஒருவராகப் பேசினார். பிறகு ஜரிதையிடமும் பேசினார். திரும்பத் திரும்பப் பேசினார். ஆனால், ஒரு மகனோ, ஜரிதையோ அவரிடம் நல்லதாகவோ அல்லதாகவோ பதிலுக்கு ஏதும் பேசவில்லை.(21)
பிறகு மந்தபாலர், "இவர்களில் எவன் உனது மூத்த மகன்? எவன் அவனுக்கு அடுத்தவன்? எவன் மூன்றாமவன்? எவன் அனைவரிலும் இளையவன்?(22) நான் துயரத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ ஏன் எனக்குப் பதில் சொல்ல மறுக்கிறாய்? நான் உன்னை விட்டுச் சென்றது உண்மைதான், ஆனால், நான் இருந்த இடத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை" என்றார்.(23)
பிறகு ஜரிதை, "மூத்தவனிடமும், அடுத்தவனிடமும், மூன்றாமவனிடமும், இளையவனிடமும் உமக்கு என்ன வேலை இருக்கிறது?(24) இனிய புன்னகையும், இளமையும் கொண்டவளான லபிதையிடம் செல்வீராக. என்னை ஒன்றுமில்லாமல் விட்டுவிட்டு முன்பு நீர் அவளிடம் சென்றீர்!" என்றாள்.(25)
அதற்கு மந்தபாலர், "பெண்களைப் பொறுத்தவரை, சக்காளத்தியையோ, கமுக்கக் {இரகசியக்} காதலியையோ விடத் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைக்க இந்த உலகத்திலும் சரி, வேறு உலகத்திலும் சரி வேறு காரணம் தேவையில்லை.(26) இந்த இரண்டைத் தவிர வேறு எதுவும், நெருப்பைப் போன்று எரியும் பகையைக் கொள்ளச்செய்யாது. பெரும் வேதனையையும் உருவாக்காது. நன்கு அருளப்பட்டவளும், அனைத்து உயிரிலும் கொண்டாடப்பட்டவளுமான அருந்ததியும்கூட, தனது மனைவியின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்த சிறப்பு மிகுந்த வசிஷ்டரிடம் பொறாமையுடன் நடந்து கொண்டாள்.(27,28) மேலும் அருந்ததி எழுவரில் {சப்தரிஷிகளில்} ஒருவரான அந்த ஞானமுள்ள முனிவரை {வசிஷ்டரை} அவமதித்தாள். அந்த அவமதிக்கும் சிந்தனையாலேயே அவள் சிறிய நட்சத்திரமாக, நெருப்புடன் புகை கலந்தது போல, நல்லதைச் செய்யாத சகுனங்களாக, சில நேரங்களில் தெரிந்தும், சில நேரங்களில் மறைந்தும் இருக்கிறாள்.(29) நான் உன்னை உனது பிள்ளைகளுக்காகவே கருத்தில் கொள்கிறேன். வசிஷ்டர் எப்படித் தனது மனைவிக்குக் குற்றமிழைக்கவில்லையோ அப்படி நானும் உனக்குக் குற்றம் இழைக்கவில்லை. எனவே, பொறாமை கொண்டு அருந்ததி வசிஷ்டரிடம் நடந்து கொண்டதைப் போல நீ என்னிடம் நடந்து கொள்கிறாய்.(30) மனிதர்கள், பெண்களை அவர்கள் தங்கள் மனைவிகளாகவே இருப்பினும் நம்பக்கூடாது. பெண்கள், தாயாகிவிட்டால், தனது கணவனுக்குச் சேவை செய்யக் கருதுவதில்லை" என்றார் {மந்தபாலர்}".(31)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு, அவரது {மந்தபாலரது} பிள்ளைகள் அனைவரும் வந்து அவரை வழிபட்டனர். அவர் அவர்களிடம் அன்புடன் பேசி, அவர்களுக்கு அனைத்து உறுதிகளையும் கொடுத்தார்".(32)

ஆங்கிலத்தில் | In English |