The Sabha of Kuvera! | Sabha Parva - Section 10 | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : குபேரனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…
நாரதர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வைஸ்ராவணனின் {குபேரனின்} சபாமண்டபம், நூறு யோஜனை நீளத்துடனும், எழுபது யோஜனை அகலத்துடனும் பிரகாசத்துடன் இருக்கிறது.(1) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அது வைஸ்ரவணனின் ஆன்ம சக்தியாலேயே கட்டப்பட்டது. கைலாய மலைச் சிகரங்களின் பிராகாசத்துடன் இருக்கும் அந்த மாளிகை, தனது சுய கிரகணங்களினால் சந்திரனின் பிராகசத்துடன் இருக்கிறது.(2) குஹ்யர்களால் தாங்கப்படும் அந்த மாளிகை வானமண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தெய்வீகத் தயாரிப்பான அது, தங்கத்தாலான உயர்ந்த அறைகளுடன் அழகாக இருக்கிறது.(3) எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தெய்வீக வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ, வண்ணமயமான விலையுயர்ந்த நகைகளுடன் இருக்கிறது. காற்றில் மிதந்து வரும் மலைக்குன்றுகள் போல இருக்கும் வெண்ணிற மேகங்களுக்கு ஒப்பானதாக அஃது இருக்கிறது.(4) தெய்வீகத் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு, அது மின்னல் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகைக்குள், மேலே தெய்வீக விரிப்புகள் விரிக்கப்பட்டு, கால் வைக்க அழகான கால்மனையுடன் கூடிய, சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் ஆசனம் ஒன்று இருந்தது. ஏற்றுக்கொள்ளும் உருவத்துடன் இருந்த வைஸ்ராவணன் {குபேரன்}, அருமையான உடுப்புகள் உடுத்தி, விலையுயர்ந்த ஆபரணங்கள் பூண்டு, பிரகாசிக்கும் காது குண்டலங்களுடன், தனது ஆயிரம் {1000} மனைவியரால் சூழப்பட்டு அந்த ஆசனத்தில், அமர்ந்திருக்கிறான்.(5,6)
மந்தர மலையில் இருந்து காடுகள் வழியாக முணுமுணுத்துக் கொண்டு அங்கு வரும் அருமையான குளிர்ந்த தென்றல், கூடவே தோட்டங்களில் இருந்த மல்லிகை மணத்தையும், அலகை நதியில் மார்பில் வீற்றிருக்கும் தாமரைகளின் மணத்தையும், யக்ஷர்களின் மன்னனின் நந்தனத் தோட்டத்தின் மணத்தையும் தாங்கிக் கொண்டு வருகிறது.(7,8) அங்கே கந்தர்வர்களுடன், தேவர்களும், பல இனங்களில் இருந்த வந்த அப்சரஸ்களும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தெய்வீக இனிமை கொண்ட பாடல்களைக் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(9) மிச்ரகேசி, ரம்பை, சித்ரசேனை, சுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிரிடச்சி {கிருதாசி}, மேனகை, புஞ்சிகஸ்தலை, விச்வாசி, சஹஜன்யை, பிரம்லோசை, ஊர்வசி, இரை, வர்க்கை, சௌரபேயி, சமீசி, புத்புதை, லதை போன்றோரும்,(10,11) இசையிலும் ஆடல்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான அப்சரஸ்களும் கந்தர்வர்களும் அங்கே கருவூலத் தலைவன் {பொக்கிஷத் தலைவன்} குபேரனுக்கு பணி செய்கின்றனர்.(12) பல்வேறு கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ் இனங்களின் கருவிகள் {இசைக் கருவிகள்} மற்றும் இனிமையான குரலால் அந்த மாளிகை எப்போதும் நிறைந்து இருக்கிறது.(13)
கின்னரர்கள் என்று அழைக்கப்பட்ட கந்தர்வர்களும், நரர்கள் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களும், மாணிபத்ரன், தனதன், ஸ்வேதபத்ரன், குஹ்யகன், கசேரகன், கண்டகண்டு, பெரும் பலம் வாய்ந்த பிரத்யோதன், குஸ்தும்புரு, பிசாசன், கஜகர்ணன், விசாலகன், வராஹகர்ணன், தாம்ரோஷ்டகன், பல்கக்ஷன், பலோதகன், ஹம்ஸசூடன், சிக்ஷவர்த்தன் {சிகாவர்த்தன்}, {ஹேமநேத்ரன்}, விபீஷணன், புஷ்பானனன், பிங்களகன், சோணிதோதன், பிரபாலகன், விருக்ஷவாஸி நிகேதன், சீரவாசஸ் {சீரவாஸன்} ஆகியோரும், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும் குபேரனுக்காகக் காத்திருக்கின்றனர்.(14-18) தெய்வீகமான லட்சுமி தேவி அங்கேயே தங்கியிருக்கிறாள். குபேரனின் மகன் நளகுபேரனும் அங்கேயே தங்கியிருக்கிறான். நானும் {நாரதர்}, என்னைப் போன்றோரும் அங்கே அடிக்கடி சென்று வருவோம்.(19)
என்னால் பெயர் சொல்லப்படாத பல ராட்சசர்களும், பல கந்தர்வர்களும் அந்த மாளிகையில் காத்திருந்து அந்த கருவூலத் தலைவனை {குபேரனை} வழிபடுகின்றனர். மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும், படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூதலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.(20-24)
மேலும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வத் தலைவர்களும், தங்களுக்குரிய ஆடைகளுடன் விசுவாவசு, ஹாஹா, ஹூஹூ,(25) தும்புரு, பர்வதன், சைலூஷன், இசையில் நிபுணனான சித்திரசேனன், சித்திரரதன் ஆகியோரும், எண்ணிலடங்கா கந்தர்வர்களும் அங்கே கருவூலத் தலைவனை {குபேரனை} வணங்கி நிற்கின்றனர். வித்யாதரர்களின் தலைவனான சக்ரதாமன், தன்னைத் தொடர்பவர்களுடன் சேர்ந்து(26,27) அந்த மாளிகையில் கருவூலத் தலைவனுக்காகக் {குபேரனுக்காகக்} காத்திருக்கிறான்.(28) மேலும், நூற்றுக்கணக்கான கின்னரர்களும், பகதத்தனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட எண்ணிலடங்கா மன்னர்களும், கிம்புருஷர்களின் தலைவனான துருமனும், ராட்சசர்களின் தலைவனான மகேந்திரனும், யக்ஷர்களுடனும் கந்தர்வர்களுடனும் கூடிய கந்தமாதனனும், பல ராட்சசர்களும் அங்கே கருவூலத் தலைவனுக்காகக் {குபேரனுக்காகக்} காத்திருக்கின்றனர்.(29,30) அறம் சார்ந்த விபீஷணனும் அங்கே தனது மூத்த தமையனான தலைவன் குபேரனை (Croesus[1] என்கிறார் கங்குலி) வழிபட்டு நிற்கிறான். இமயத்தில் இருக்கும் மலைகளும் {ஹிமாலயம்}, பாரிபாத்திரம் {பாரியத்ரம்}, விந்தியம், கைலாஸம், மந்தரம்,(31) மலயம், துர்துரம், மஹேந்திரம், கந்தமாதனம், இந்திரகீலம், சுனாபம் ஆகிய மலைகளும், மேலும் கிழக்கு மற்றும் மேற்கிலிருக்கும் {கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி} மலைகளும்,(32) இன்னும் பல மலைகளும் உருவம் கொண்டு, மேருவைத் தங்கள் அனைவரின் முன்பும் நிறுத்தி, சிறப்புமிகுந்த கருவூலத் தலைவனுக்காகக் காத்திருந்து வழிபட்டு வருகின்றன.(33)
சிறப்பு மிகுந்த நந்தீஸ்வரன் {நந்திகேசுவரர்}, மஹாகாலன் மற்றும் அம்பு போன்ற காதுகளும், கூரிய வாய்களும் கொண்டு பல ஆவிகளும், காக்ஷன் {காஷ்டன்}, குடீமுகன், தந்தி, பெரும் ஆன்மத்தகுதியுடைய விஜயன், சிவனின் வாகனமான ஆழ்ந்த கர்ஜனை செய்யும் பெரும்பலம் வாய்ந்த காளை, {தபோதிகன், சங்குகர்ணன்} ஆகிய அனைவரும் அந்த மாளிகையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தவிர்த்து, மற்ற பல ராட்சசர்களும், பிசாசங்களும் (பேய்களும்) அந்தச் சபாமண்டபத்தில் குபேரனை வழிபட்டு நிற்கின்றனர். முன்னதாக அந்த புலஸ்தியரின் மகன் (குபேரன்) தேவர்களுக்குத் தேவன், மூன்று உலகைப் படைத்தவனான, பணியாட்களால் சூழப்பட்ட அந்தத் தலைமைத் தேவனான சிவனைப் பல வகைகளில் வணங்கி, அவனது உத்தரவு பெற்ற பிறகு அமர்ந்து கொள்கிறான். மேன்மையான பவன் {சிவன்} ஒரு நாள் குபேரனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டான். அந்த நாளில் இருந்து, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது நண்பனான கருவூலத் தலைவனுடன் {குபேரனுடன்} எப்போதும் மகாதேவன் {சிவன்} அமர்ந்து வருகிறான்.(34-38) ரத்தினங்களில் சிறந்தவர்களும், மூவுலகங்களிலும் உள்ள அனைத்து ரத்தினங்களின் இளவரசர்களான சங்கனும் பத்மனும், உருவம் கொண்டு, பூமியிலுள்ள அனைத்து ரத்தினங்களுடன் அங்கே குபேரனை வழிபட்டு வருகின்றனர்.(39)
வான மண்டலத்தில் இணைக்கப்பட்டு, நினைத்த இடத்திற்கும் நகரும் தன்மையுள்ள, மகிழ்ச்சி நிறைந்த குபேரனின் சபாமண்டபத்தை, நான் இப்படியே பார்த்திருக்கிறேன். இனி பெருந்தகப்பனான பிரம்மனின் சபையைக் குறித்துச் சொல்கிறேன்" {என்றார் நாரதர்}.(40)

[1] கிரோயீசஸ் என்பவன் லிடியா {இன்றைய துருக்கி} என்ற நாட்டை ஆண்டவன் என்றும் கிரேக்க மற்றும் பாரசீக பண்பாட்டில் அவனது பெயர் வசதியான செல்வந்தனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்றும் விக்கிப்பீடியா சொல்கிறது.
சிறப்பு மிகுந்த நந்தீஸ்வரன் {நந்திகேசுவரர்}, மஹாகாலன் மற்றும் அம்பு போன்ற காதுகளும், கூரிய வாய்களும் கொண்டு பல ஆவிகளும், காக்ஷன் {காஷ்டன்}, குடீமுகன், தந்தி, பெரும் ஆன்மத்தகுதியுடைய விஜயன், சிவனின் வாகனமான ஆழ்ந்த கர்ஜனை செய்யும் பெரும்பலம் வாய்ந்த காளை, {தபோதிகன், சங்குகர்ணன்} ஆகிய அனைவரும் அந்த மாளிகையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தவிர்த்து, மற்ற பல ராட்சசர்களும், பிசாசங்களும் (பேய்களும்) அந்தச் சபாமண்டபத்தில் குபேரனை வழிபட்டு நிற்கின்றனர். முன்னதாக அந்த புலஸ்தியரின் மகன் (குபேரன்) தேவர்களுக்குத் தேவன், மூன்று உலகைப் படைத்தவனான, பணியாட்களால் சூழப்பட்ட அந்தத் தலைமைத் தேவனான சிவனைப் பல வகைகளில் வணங்கி, அவனது உத்தரவு பெற்ற பிறகு அமர்ந்து கொள்கிறான். மேன்மையான பவன் {சிவன்} ஒரு நாள் குபேரனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டான். அந்த நாளில் இருந்து, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது நண்பனான கருவூலத் தலைவனுடன் {குபேரனுடன்} எப்போதும் மகாதேவன் {சிவன்} அமர்ந்து வருகிறான்.(34-38) ரத்தினங்களில் சிறந்தவர்களும், மூவுலகங்களிலும் உள்ள அனைத்து ரத்தினங்களின் இளவரசர்களான சங்கனும் பத்மனும், உருவம் கொண்டு, பூமியிலுள்ள அனைத்து ரத்தினங்களுடன் அங்கே குபேரனை வழிபட்டு வருகின்றனர்.(39)
வான மண்டலத்தில் இணைக்கப்பட்டு, நினைத்த இடத்திற்கும் நகரும் தன்மையுள்ள, மகிழ்ச்சி நிறைந்த குபேரனின் சபாமண்டபத்தை, நான் இப்படியே பார்த்திருக்கிறேன். இனி பெருந்தகப்பனான பிரம்மனின் சபையைக் குறித்துச் சொல்கிறேன்" {என்றார் நாரதர்}.(40)
ஆங்கிலத்தில் | In English |