The Sabha of Varuna! | Sabha Parva - Section 9 | Mahabharata In Tamil
(லோகபால சபாகயானா பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : வருணனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…
நாரதர் சொன்னார், "ஓ யுதிஷ்டிரா, வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன.(1) அது (தேவ தச்சன்) விஸ்வகர்மனால் நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும், மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது.(2) நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருக்கின்றன.(3) அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.(4) அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும் நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் {வாருணியுடன்} அமர்ந்திருக்கிறான். நீர்த்தேவனான வருணனுக்காகக் காத்திருந்து, ஆதித்தியர்கள் அவனை வழிபடுகிறார்கள்.(5-7)
வாசுகி, தக்ஷகன், ஐராவதன் என்று அழைக்கப்படும் நாகன், கிருஷ்ணனும் லோகிதனும், பத்மனும், பெரும் சக்தி கொண்ட சித்ரனும், கம்பலன் மற்றும் அசுவதரன் என்று அழைக்கப்படும் நாகர்களும், திருதராஷ்டிரன், வலாஹகன், மதிமான் {மணிமான்}, குண்டதாரன், கார்க்கோடகன், தனஞ்சயன், பாணிமத் {பாணிமான்}, பெரும் பலம் வாய்ந்த குண்டகன், ஓ பூமியின் தலைவனே {யுதிஷ்டிரா}, பிரஹ்லாதன், மூஷிகதன், ஜனமேஜயன் மற்றும் அனைத்து நற்குறிகளும், மண்டலங்களும் நீண்ட தலைகளும் கொண்ட பல பாம்புகளும் அங்கு இருந்தன. ஓ யுதிஷ்டிரா, இவர்கள் அனைவரும் எந்தத் துயரமும் இல்லாமல் சிறப்பு வாய்ந்த வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபடுகிறார்கள். ஓ மன்னா, விரோசனனின் மகன் பலி, முழு உலகத்தையும் அடக்கிய நரகன்,(8-12) சங்கிரகன் {ஸமஹ்ராதன்}, விப்ரசித்தி மற்றும் தானவர்களான காலகஞ்சன், சுஹனு, துர்முகன், சங்கன், சுமணன் {ஸுமனஸ்}, சுமதி, கடோதரன், மஹாபார்ஸ்வன், கர்த்தனன், பிடரன், விஸ்வரூபன், ஸ்வரூபன், விரூபன், மஹாசிரஸ் {மஹாசிரன்}, தசக்ரீவன், வாலி, மேகவாசஸ் {மேகவாஸன்}, தசாவரன், டிட்டிபன், விடபூதன், சங்கிரதன் {ஸமஹ்லாதன்}, இந்திரதாபனன் ஆகிய தைத்தியர்களும் தானவர்களும் காது குண்டலங்களுடனும்(13-15) மலர் அலங்காரங்களுடனும், மணிமுடிகளுடனும் {கிரீடங்களுடனும்} தெய்வீக ஆடைகள் பூண்டு, தங்கள் வீரத்தால் பல வரங்களைப் பெற்று, சாகாத வரத்தை அனுபவித்து {மேலுலகில்}, நன்னடத்தை கொண்டு, நல்ல சபதங்களை மேற்கொண்டு, அந்த அறைகளில் சுருக்குக் கயிறைத் தனது ஆயுதமாகக் கொண்ட சிறப்பு மிகுந்த வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபட்டார்கள்.
ஓ மன்னா, பெருங்கடல்கள் நான்கும், பாகீரதி {கங்கை} ஆறும், கலிந்தி {யமுனை}, விதிசை, வேணை, வேகமான நீரோட்டம் கொண்ட {வேகவாஹினி} நர்மதை, விபாசை, சதத்ரு, சந்திரபாகை, சரஸ்வதி, இராவதி, விதஸ்தை, சிந்து, தேவநதி, கோதாவரி, கிருஷ்ணவேன்வா {கிருஷ்ணவேணி}, நதிகளின் ராணி காவேரி, கிம்புனை, விசல்யை, வைதரணி ஆறு, திருதீயை, ஜ்யேஷ்டிலை, பெரும் சோணை {சோணமெனும் பெரும் நதம்}, சர்மண்வதி, பெரும் நதியான பர்ணாசை, சரயு, வாரவத்யை, நதிகளின் ராணி லாங்கலி, கரதோயை, ஆத்ரேயி, சிவுப்பு மஹாநதம் {லௌஹித்யம்}, லகன்தி {லங்கதி}, கோமதி, சந்தியை, திரிஸ்ரோதசி ஆகிய புனிதமான நதிகளும், புனிதப் பயணம் செல்லக்கூடிய உலகப்புகழ்பெற்ற இடங்கள்,(16-23) மேலும் பல நதிகள், புனித நீர்நிலைகள், ஏரிகள், கிணறுகள், நீரூற்றுகள், பெரியதும் சிறியதுமான குளங்கள் அனைத்து உருவமெடுத்து அங்கே வந்து, ஓ பாரதா {யுதிஷ்டிரா} தலைவன் வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபட்டன.
விண்ணுலகின் {சொர்க்கத்தின்} புள்ளிகளும் {திசைகளும்}, அனைத்து மலைகளும், அனைத்து நீர் வாழ் உயிரினங்களும் வருணனை வணங்கி அங்கே நிற்கின்றன. கருவி {இசை கருவி} மற்றும் குரல் இசைக்கு தங்களை அர்ப்பணித்திருந்த கந்தர்வ, அப்சரஸ்களின் பல்வேறு இனங்களும், புகழ்ச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருணனுக்காகக் காத்திருக்கின்றனர். தான் கொண்டிருக்கும் ரத்தினங்களால் வளமான குறிப்பிட்ட அனைத்து மலைகளும் உருவம் கொண்டு அந்த சபைக்கு வந்து ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்தனர்.(24-27) சுனபன் என்ற பெயர் கொண்ட வருணனின், முதல் அமைச்சர் {தலைமை அமைச்சர்}, தனது மகன்கள், பேரர்கள் மற்றும் தெய்வீக நீர்நிலைகளுடனும் தனது தலைவனுக்குப் பணி செய்ய காத்திருந்தான். இப்படி உருவம் கொண்டு வந்த அனைவரும் அந்த தெய்வத்தை {வருணனை} வணங்கினர்.(28,29) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, எனது உலக சுற்றலின் போது கண்ட வருணனின் சபா மண்டபம் இப்படித்தான் இருக்கும். இனி குபேரனின் சபா மண்டபத்தைக் குறித்து கேள்". {என்றார் நாரதர்}.(30)

ஆங்கிலத்தில் | In English |