Grahadevi created by the Self create! | Sabha Parva - Section 18 | Mahabharata In Tamil
(ராஜசூய ஆரம்ப பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பிருஹத்ரதனிடம் ஜரை தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்; தான் கிரகதேவி என்று சொல்லல்; பிருஹத்ரதன் அந்த ராட்சசிக்கு மரியாதை செலுத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்து; தனது பிள்ளைக்கு ஜரையின் பெயரையும் சேர்த்து ஜராசந்தன் என்ற பெயரைச் சூட்டல்...
கிருஷ்ணன் தொடர்ந்தான், "மன்னனின் {பிருஹத்ரதனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த ராட்சசப் பெண் {ஜரை}, "நீ அருளப்பட்டிரு. ஓ மன்னர்களுக்கு மன்னா, நினைத்த வடிவை அடையக்கூடிய ராட்சசப் பெண்ணான நான் ஜரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியுடன் உனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறேன்.(1) ஒவ்வொரு நாளும் நான் ஒரு மனிதனின் இல்லத்தில் இருந்து மற்றொரு மனிதனின் இல்லத்திற்கு சென்று வருகிறேன். உண்மையில் நான் பழங்காலத்தில் சுயம்புவால் படைக்கப்பட்ட போது, கிருகதேவி (வீட்டில் குடியிருக்கும் பெண் தெய்வம்) என்று பெயரிடப்பட்டேன்.(2)
தெய்வீக அழகுடைய நான் தானவர்களின் அழிவுக்காக இங்கு (இந்த உலகத்தில்) நிறுத்தப்பட்டேன். எவன் தனது சுவற்றில் குழந்தைகளுக்கு மத்தியில் நான் இளமையுடன் இருப்பதைப் போல வரைந்து வைக்கிறானோ, அவனது இல்லம் செழிப்பில் வளரும்; இல்லையெனில், அந்த இல்லம் தேய்ந்து அழிவை நோக்கிச் செல்லும். ஓ தலைவா {பிருஹத்ரதா}, உனது சுவற்றில் எண்ணற்ற குழந்தைகளுடன் என்னைப் போலவே வரைந்து வைத்திருக்கிறாய். நான் அங்கேயே இருந்து, தினமும் நறுமணப்பொருட்களாலும், மலர்களாலும், நறுமணப் புகையாலும் உண்ணத்தக்க பல பொருட்களை வைத்து வணங்கப்படுகிறேன்.(3-5)
இப்படி உனது வீட்டில் வழிபடப்படும் நான், தினமும் பிரதிபலனாக ஏதாவது நன்மை செய்ய வேண்டுமே என்று நினைப்பேன். ஓ அறம்சார்ந்த மன்னா {பிருஹத்ரதா}, விதிவசத்தால், இருகூறான உனது பிள்ளையின் உடல் துண்டுகளை நான் கண்டேன்.(6) அவை என்னால் ஒன்றாகச் சேர்க்கப்பட்ட போது, உயிருள்ள குழந்தை வடிவானது. ஓ பெரும் மன்னா, இவையெல்லாம் உனது நற்பேற்றாலேயே விளைந்தன. நான் இதில் ஒரு கருவியாக மட்டுமே பயன்பட்டிருக்கிறேன்.(7) நான் மேரு மலையை விழுங்கக்கூடியவள். அப்படியிருக்கும்போது உனது பிள்ளையைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? இருப்பினும், நான் உனது இல்லத்தில் எனக்குக் கிடைக்கும் வழிபாட்டால் பெரும் மனநிறைவடைந்தேன். எனவே, ஓ மன்னா, நான் இந்தக் குழந்தையை உனக்கு அளிக்கிறேன்" என்றாள் {ராட்சசி ஜரை}.(8)
கிருஷ்ணன் தொடர்ந்தான், "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைப் பேசிய ஜரை அப்படியே மறைந்து போனாள். குழந்தையைப் பெற்றுக்கொண்ட மன்னன் {பிருஹத்ரதன்} அரண்மனைக்குள் நுழைந்தான்.(9) பிறகு அம்மன்னன் குழந்தைக்கான சடங்குகள் அனைத்தையும் செய்து, அந்த ராட்சசப் பெண்ணுக்கு {ஜரைக்கு} மதிப்பளிக்கும் வகையில் ஒரு பண்டிகையை ஏற்பாடு செய்து கட்டளையிட்டான்.(10) பிறகு அவன் {பிருஹத்ரதன்}, இந்தக் குழந்தை ஜரையால் சேர்க்கப்பட்டதால், இவன் ஜராசந்தன் (ஜரையால் இணைக்கப்பட்டவன்) என்று அழைக்கப்படுவான்.(11) மகத மன்னனின் {பிருஹத்ரதனின்} மகன் பெரும் சக்தியுடனும், பெரும் வடிவத்துடனும், பெரும் பலத்துடனும், தெளிந்த நெய் ஊற்றப்படும்போது வளரும் நெருப்பு போல வேகமாக வளர்ந்தான். வளர்பிறைச் சந்திரனைப் போல நாளுக்கு நாள் வளர்ந்த அவன் {ஜராசந்தன்}, தனது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரித்தான்" {என்றான் கிருஷ்ணன்}.(12,13)

ஆங்கிலத்தில் | In English |