The enmity between Jarasanda and Krishna! | Sabha Parva - Section 19 | Mahabharata In Tamil
(ராஜசூய ஆரம்ப பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : சந்தகௌசிகர் ஜராசந்தனின் வருநலமுரைத்தல்; அதே போல ஜராசந்தன் பெரும் பலத்துடன் வளர்தல்; கம்சன் மரணத்தால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பகை; யாதவர்கள் ஜராசந்தனுடன் மோதுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருந்தது…
கிருஷ்ணன் தொடர்ந்தான், "இது நடந்த சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் பெரும் துறவியான அந்த மேன்மைமிகு சண்டகௌசிகர் மகத நாட்டுக்கு வந்தார்.(1) அந்த முனிவரின் {சண்டகௌசிகரின்} வருகையால் மிகவும் மகிழ்ந்த மன்னன் பிருஹத்ரதன், தனது அமைச்சர்கள், புரோகிதர், மனைவியர், மகன் {ஜராசந்தன்} ஆகியோருடன் அவரை வரவேற்கச் சென்றான்.(2) ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்த முனிவருக்குக் கால் மற்றும் முகம் கழுவ நீர் கொடுத்து, அர்க்கியம் கொடுத்து, பிறகு அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அவருக்கு {சண்டகௌசிகருக்குத்} தனது மகனுடன் {ஜராசந்தனுடன்} சேர்ந்த நாட்டையே கொடுக்க முன் வந்தான்.(3)
அந்த முனிவர் {சண்டகௌசிகர்} மன்னன் வழங்கிய அந்த வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அந்த மகத நாட்டு ஆட்சியாளனிடம் {பிருஹத்ரதனிடம்} இதயத் திருப்தியுடன்,(4) "ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைத்தையும் என் ஞானப் பார்வையால் அறிவேன். ஆனால், ஓ மன்னர்களுக்கு மன்னா, இதையும் கேள்,(5) உனது மகன் {ஜராசந்தன்} எதிர்காலத்தில் மிகுந்த அழகுடனும், பலத்துடனும், அற்புதமான திறன்களுடனும் பராக்கிரமத்துடனும் இருப்பான். உனது மகன் {ஜராசந்தன்} சந்தேகமற, செழிப்பில் வளர்ந்து, பேராற்றலால் அனைத்தையும் அடைவான்.(6,7) எப்படி வினதையின் மகனுடைய (கருடனின்) வேகத்தை மற்ற பறவைகளால் அடைய முடியாதோ அப்படி உனது மகனுடைய {ஜராசந்தனுடைய} சக்தியை இந்த உலகத்தில் எந்த ஏகாதிபதியாலும் அடைய முடியாது. அவன் {ஜராசந்தன்} மிகுந்த பராக்கிரமத்துடன் இருப்பான். அவன் வழியில் தடையாக எதிர்படும் அனைத்தும் அழிவுக்குள்ளாகும்.(8)
நீரோட்டத்தின் சக்தியால் எவ்வாறு மலைகளின் சாரலில் உள்ள பாறைகளை ஒன்றும் செய்ய முடிவதில்லையோ அப்படி தேவர்கள் வீசும் ஆயுதங்களால் இவனுக்கு சிறு துன்பமும் உண்டாகாது.(9) மணிமுடி தரித்தவர்களின் தலைகளை விட இவன் {ஜராசந்தன்} அதிகம் பிரகாசிப்பான். சூரியன் எப்படி மற்ற ஒளிரும் பொருட்களின் பிரகாசத்தை மங்கச் செய்யுமோ அப்படி அனைத்து ஏகாதிபதிகளின் பிரகாசங்களையும் இவன் {ஜராசந்தன்} களவாடி விடுவான்.(10) பெரும் பலம் மிக்க படைகளும், எண்ணிலடங்கா தேர்களும், விலங்குகளும் கொண்ட மன்னனால் கூட உன் மகனை அணுக முடியாது. அப்படி அணுகினால் அவர்கள் நெருப்பில் விழும் பூச்சிகள் என மடிந்து போவர்.(11) உனது மகனான இவன் {ஜராசந்தன்}, அனைத்து மன்னர்களின் வளமைகளை, சமுத்திரம் எப்படி பல நதிகளின் வெள்ளத்தை உள் வாங்கிக் கொள்ளுமோ அப்படி உள்வாங்கிக் கொள்வான்.(12) அனைத்து உற்பத்திகளையும் தாங்கும் பெரும் உலகம் போல, நல்ல மற்றும் தீயவை அனைத்தையும் தாங்கி, பெரும் பலம் கொண்டு நால் வகை மக்களையும் ஆள்வான்.(13) உடல் கொண்ட அனைத்து உயிரும் வாயுவை நம்பி இருப்பது போல, பூமியில் உள்ள அனைத்து மன்னர்களும் உனது மகனுக்கு {ஜராசந்தனுக்கு} கீழ்ப்படிந்து இருப்பார்கள்.(14) இந்த மகத இளவரசன் {ஜராசந்தன்}, தனது ஊனக்கண்களாலேயே ருத்திரன் என்றும் ஹரன் என்றும் அழைக்கப்படும், திரிபுரத்தை அழித்த தேவாதி தேவனைக் {சிவனைக்} காண்பான்" என்றார் {சண்டகௌசிகர்}.(15)
ஓ எதிரிகளை அழிப்பவனே, இவை யாவும் சொன்ன அந்த முனிவர் {சண்டகௌசிகர்}, தமது சொந்த அலுவல்களை நினைத்துக் கொண்டு மன்னன் பிருஹத்ரதனுக்கு விடை கொடுத்தார்.(16) பிறகு அந்த மகதத்தின் தலைவன் {பிருஹத்ரதன்}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தலைநகருக்குள் நுழைந்து, ஜராசந்தனை அரியணையில் அமர்த்தினான்.(17) தனது மகன் ஜராசந்தனை அரியணையில் அமர்த்திய மன்னன் பிருஹத்ரதன் பிறகு உலக இன்பங்களை வெறுத்து, தனது மனைவியரையும் அழைத்துக் கொண்டு கானகத்திற்குச் சென்று ஒரு தவசியின் வாழ்வுமுறையை நோற்றான்.(18) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது தந்தையும் தாயும் கானகத்திற்கு ஓய்ந்து சென்ற பிறகு, பராக்கிரமமிக்க ஜராசந்தன் எண்ணிலடங்க மன்னர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்” {என்றான் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}.(19)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் பிருஹத்ரதன் சிறிது காலம் கானகத்தில் தங்கியிருந்து, தவம் பயின்று, தனது மனைவியருடன் சேர்ந்து விண்ணுலகம் ஏகினான்.(20) கௌசிகரால் சொல்லப்பட்டது போல மன்னன் ஜராசந்தன், எண்ணிலடங்கா வரங்களைப் பெற்று, தனது தந்தையைப் போலவே நாட்டை ஆண்டு வந்தான்.(21) சில காலம் கழித்து மன்னன் கம்சன் வாசுதவேனால் {கிருஷ்ணனால்} கொல்லப்பட்டான். அப்போது கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் {ஜராசந்தனுக்கும்} பகை வளரத் தொடங்கியது.(22) பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, மகதத்தின் பலம் வாய்ந்த மன்னன் தனது நகரான கிரிவ்ரஜத்திலிருந்து ஒரு கதாயுதத்தை தொண்ணூற்று ஒன்பது முறை சுழற்றி, மதுராவை நோக்கி எறிந்தான்.(23) அந்த நேரத்தில் அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணன் மதுராவில் தங்கியிருந்தான். ஜராசந்தனால் வீசப்பட்ட அழகிய கதாயுதம் மதுராவுக்கு அருகில், கிரிவ்ராஜாவில் இருந்து தொண்ணூற்று ஒன்பது யோஜனைகள் தொலைவில் விழுந்து கிடந்தது.(24)
சூழ்நிலையை நன்கு உணர்ந்த குடிமக்கள் கிருஷ்ணனிடம் சென்று கதாயுதம் விழுந்த செய்தியைச் சொன்னார்கள். கதாயுதம் விழுந்த இடம் மதுராவுக்கு அருகிலேயே இருந்தது. அந்த இடம் கதாவஸானம் என்று அழைக்கப்படுகிறது.(25) ஜராசந்தனுக்கு ஹம்சன் என்றும் டிம்பகன் என்று அழைக்கப்பட்ட இரு ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களை எந்த ஆயுதத்தாலும் வீழ்த்த {கொல்ல} முடியாது. அரசியலிலும் நீதி அறிவியலிலும் நன்கு தேர்ச்சி பெற்ற அவர்கள் ஆலோசனைகள் வழங்கும் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்தார்கள்.(26) இந்த அற்புதமான இருவரைப் பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். அந்த இருவரும் ஜராசந்தனும் சேர்ந்து மூவுலகங்களிலும் ஒப்பற்றவர்களாக இருந்தனர்.(27) ஓ வீர மன்னா {ஜனமேஜயா}, இந்தக் காரணத்தாலேயே குக்குர, அந்தக மற்றும் விருஷ்ணி குலத்தவர், கொள்கை நோக்கங்களுடன் செயல்பட்டு, அவனுடன் மோதுவது சரியல்ல என்று தீர்மானித்திருந்தனர்." என்றார் {வைசம்பாயனர்}.(28)

ஆங்கிலத்தில் | In English |