"Kill Dhundhu!" said Utanka! | Vana Parva - Section 201 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
பிருகதஸ்வான் குவலாஸ்வனுக்கு முடிசூட்டி வனத்துக்குப் புறப்பட்ட போது, அதைத் தடுத்து துந்து என்ற அசுரனைக் கொல்ல உதங்கர் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இக்ஷவாகுவின் {Ikshvaku} மரணத்திற்குப் பிறகு, சசாதன் {Sasada} என்ற பெயர் கொண்ட உயர்ந்த அறம் சார்ந்த மன்னன் அயோத்தியாவின் அரியணை ஏறி இந்தப் பூமியை ஆண்டான். அந்தச் சசாதனின் வழியில் {பரம்பரையில்} பெரும் சக்தி படைத்த ககுதஸ்தன் {Kakutshta} வந்தான். அந்தக் ககுதஸ்தனுக்கு அனேனஸ் {Anenas} என்ற பெயரில் மகன் இருந்தான். அந்த அனேனசுக்கு பிருது {Prithu} என்ற பெயர் கொண்ட மகன் இருந்தான். பிருதுவுக்கு விஷ்வகஸ்வன் {Viswagaswa} என்ற பெயரில் மகன் இருந்தான். விஷ்வகஸ்வனில் இருந்து ஆதிரி {Adri} பிறந்தான். ஆதிரியில் இருந்து யுவனாஸ்வன் {Yuvanaswa} பிறந்தான். யுவனாஸ்வனில் இருந்து சிராவஸ்தன் {Sravastha} பிறந்தான். இந்தச் சிராவஸ்தனே சிராவஸ்தி என்ற நகரத்தைக் கட்டினான். சிராவஸ்தனின் வழியில் பிருகதஸ்வன் {Vrihadaswa} வந்தான். பிருகதஸ்வனில் இருந்து குவலாஸ்வன் {Kuvalaswa} பிறந்தான். இந்தக் குவலாஸ்வனுக்கு இருபத்து ஓராயிரம் {21,000} மகன்கள் இருந்தனர். இந்த மகன்கள் அனைவரும் கடுமையானவர்களாகவும், பலம் வாய்ந்தவர்களாகவும், கற்றலில் நிபுணர்களாகவும் இருந்தனர். அந்தக் குவலாஸ்வன் அனைத்து குணங்களிலும் தனது தந்தையை {பிருகதஸ்வனை} விஞ்சி இருந்தான். நேரம் வந்த போது அவனது தந்தையான பிருகதஸ்வன், வீரமிக்க உயர் அறம் கொண்ட குவலாஸ்வனை அரியணையில் ஏற்றினான். அரசை மகனிடம் {குவலாஸ்வனிடம்} கொடுத்த அந்த எதிரிகளைக் கொல்பவனும், பெரு புத்திகூர்மையுடையவனுமான மன்னன் பிருகதஸ்வன் தவம் பயில்வதற்காகக் கானகம் புறப்பட்டான்"
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அரச முனியான பிருகதஸ்வன் கானகத்திற்குப் புறப்பட்ட போதும், அந்தணர்களில் சிறந்தவரான உதங்கர் அதைக் கேள்விப்பட்டார். பெரும் சக்தியும், அளவிடமுடியாத ஆன்மாவும் கொண்ட உதங்கர், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும் மனிதர்களில் சிறந்தவனுமான அவனை {பிருகதஸ்வனை} அணுகினார். அவனை {பிருகதஸ்வனை} அணுகிய அம்முனிவர் {உதங்கர்}, துறவை கைவிடும்படி வற்புறுத்தினார். உதங்கர், "ஓ! மன்னா {பிருகதஸ்வா}, (மக்களைக்} காப்பதே உனது கடமை. நீ உனது கடமையைச் செய்வதே உனக்குத் தகும். உனது அருளால் நாங்கள் துயரங்களில் இருந்து விடுபட்டிருக்கச் செய். பெரும் ஆன்மா கொண்ட உன்னால் {மகாத்மாவான உன்னால்} காக்கப்பட்டு, இந்தப் பூமி அனைத்து ஆபத்துகளில் இருந்தும் விடுபடட்டும். எனவே, நீ கானகம் புகுவது உனக்குத் தகாது. இவ்வுலகில் மக்களைக் காப்பதே பெரும் தகுதியாகும் {பெரும் பலனைத் தரவல்லது ஆகும்}. அது போன்ற தகுதியைக் கானகத்தில் பெற முடியாது. எனவே, உனது இதயம் அவ்வழியில் செல்லாதிருக்கட்டும்.
பெரும் மன்னா {பிருகதஸ்வா}, பழங்காலத்தில் பெரும் அரசமுனிகள் தங்கள் குடிமக்களைக் காத்து பெற்ற தகுதிக்குச் {பலனுக்குச்} சமமாக எதுவும் காணப்படாது. ஒரு மன்னன் எப்போதும் தனது குடிகளைக் காக்க வேண்டும். எனவே, உனது மக்களை நீ காப்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {பிருகதஸ்வா}, {தற்போது} என்னால் எந்த தவ அர்ப்பணிப்புகளையும் அமைதியாகச் செய்ய முடியவில்லை. எனது ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜாலகம் என்ற பெயரில் அறியப்படும் மணற்கடல் இருக்கிறது. அது நீரற்ற சமதரை கொண்ட நாடாகும். அது பல யோஜனைகள் நீளமும் அகலமும் கொண்டிருக்கிறது. அந்தப் பாலைவனத்தில் துந்து என்ற பெயர் கொண்ட தானவர்களின் தலைவன் வசிக்கிறான்.
மதுவுக்கும், கைடபனுக்கும் மகனான துந்து {Dhundhu} கடுமையானவனும், பயங்கரமானவனும் பெரும் பராக்கிரமம் படைத்தவனும் ஆவான். அளவிடமுடியாத சக்தி படைத்த அந்தத் தானவன், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, பூமிக்கு அடியில் வசிக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, முதலில் அந்த அசுரனைக் கொன்றுவிட்டு, பிறகு நீ கானகத்திற்குச் செல்வதே உனக்குத் தகும். அந்த அசுரன் இப்போது பெரும் துறவை மேற்கொண்டு கடும் தவத்தில் அசையாமல் படுத்துக் கிடக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனது நோக்கம் மூவுலகங்களையும், தேவர்களையும் ஆள்வதேயாகும். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனாக இருப்பவனிடம் {பிரம்மனிடம்} வரத்தைப் பெற்ற அவ்வசுரன், தேவர்கள், தைத்தியர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் கொல்லப்பட இயலாதவனாகிவிட்டான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனைக் கொன்று அருள் பெற்றிரு. இவ்வழியில் {கானகம் செல்வதில்} உனது இதயத்தைத் திருப்பாதே.
அவனைக் கொல்வதால் சந்தேகமற நீ பெரியதை அடைவாய். அதுமட்டுமல்லாமல், நீ அழியாத நித்தியமான புகழை அடைவாய். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், மணலால் மூடப்பட்டுக்கிடக்கும் அந்தத் தீய அசுரன் {துந்து} எழும்பி, மூச்சு விட ஆரம்பிக்கிறான்.
அப்போது, மலைகள், கானகங்கள், காடுகளுடன் கூடிய இந்த முழு உலகமும் நடுங்கத் தொடங்குகிறது.
அவனின் {துந்துவின்} மூச்சு {அங்கிருக்கும்} மணலை மேகமென எழச் செந்து சூரியனையே மறைக்கிறது. தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு, எங்கும் நெருப்புப் பொறிகள் பறக்க, புகை சூழ பூமி நடுங்கிக் கொண்டே இருக்கிறது. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, இவை யாவற்றின் காரணமாக என்னால் எனது ஆசிரமத்தில் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, உலகத்தின் நன்மைக்காக, அவனைக் {துந்துவைக்} கொல். உண்மையில், அந்த அசுரன் கொல்லப்பட்டால், மூவுலகமும் அமைதியடைந்து மகிழ்ச்சியில் மூழ்கும்.
அப்போது, மலைகள், கானகங்கள், காடுகளுடன் கூடிய இந்த முழு உலகமும் நடுங்கத் தொடங்குகிறது.
அவனின் {துந்துவின்} மூச்சு {அங்கிருக்கும்} மணலை மேகமென எழச் செந்து சூரியனையே மறைக்கிறது. தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு, எங்கும் நெருப்புப் பொறிகள் பறக்க, புகை சூழ பூமி நடுங்கிக் கொண்டே இருக்கிறது. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, இவை யாவற்றின் காரணமாக என்னால் எனது ஆசிரமத்தில் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, உலகத்தின் நன்மைக்காக, அவனைக் {துந்துவைக்} கொல். உண்மையில், அந்த அசுரன் கொல்லப்பட்டால், மூவுலகமும் அமைதியடைந்து மகிழ்ச்சியில் மூழ்கும்.
ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அந்த அசுரனைக் கொல்லத் தகுந்தவன் நீ என நான் முழுமையாக நம்புகிறேன். உனது சக்தியுடன், விஷ்ணு தனது சக்தியை இணைத்து மேன்மையாக்குவான். பழங்காலத்தில், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, எவன் கடுமையான இந்தப் பெரும் அசுரனைக் கொல்கிறானோ அவனை விஷ்ணுவின் சக்தி ஆக்கிரமிக்கும் என்று பழங்காலத்தில் விஷ்ணு வரமளித்திருக்கிறான். அந்த ஒப்பற்ற வைஷ்ணவ சக்தியை உன்னுள் தாங்கி, ஓ! பெரும் மன்னா {பிருகதஸ்வா}, அந்தக் கடும்பராக்கிரமம் கொண்ட அசுரனைக் {துந்துவைக்} கொல். நூற்றுக்கணக்கான வருடங்கள் முயன்றாலும், பெரும் சக்தி படைத்த துந்துவை, சக்தி குறைந்தவனால் உட்கொள்ளவே {எரிக்க} முடியாது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.