The Pandavas pursued! | Vana Parva - Section 267 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் தீய சகுனங்களைக் காண்பது; தங்கள் இருப்பிடம் விரைவது; திரௌபதியின் பணிப்பெண் அழுது கொண்டிருப்பதைக் காண்பது; திரௌபதி கடத்தப்பட்டதைச் சொன்ன பணிப்பெண்; பாண்டவர்கள் திரௌபதியைத் தேடி பின்தொடர்ந்து செல்வது; ஜெயத்ரதன் படையைக் கண்டடைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பூமியின் மேல் இருக்கும் வில்லாளிகளில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்} தனித்தனியாக எல்லாப்புறங்களிலும் சென்று, பல மான்களையும், எருமைகளையும் கொன்று நீண்ட நேரம் கழித்துச் சந்தித்துக் கொண்டனர். மான்கூட்டங்களாலும், வனவிலங்குகளாலும் நிறைந்திருக்கும் அப்பெரும் கானகத்தில், உரத்த குரலில் பறவைகள் அழுவதையும், வன விலங்குகளின் அலறல் மற்றும் கதறல்களையும் அவர்கள் கேட்டனர். யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், "சூரியனால் ஒளியூட்டப்பட்ட அத்திசையில் ஓடும் இந்த விலங்குகளும் பறவைகளும் பொருந்தாமல் கதறி, தீவிர பதட்டத்தைக் காட்டுகின்றன. இப்பெரும் கானகம் விரோதிகளால் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பதை இவையனைத்தும் இயம்புகின்றன. ஒரு நொடியும் தாமதியாமல் நமது {வேட்டைக்கான} துரத்தலைக் கைவிடுவோம். நமக்கு இந்த விளையாட்டு {வேட்டை} இன்னும் தேவையில்லை. என் இதயம் வலிக்கிறது. அது {இதயம்} எரிவது போலவும் தெரிகிறது. எனது உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அறிவை அடக்கி, வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கருடனற்ற தடாகத்தில் பெரும்பாம்பு வசிப்பதைப் போல, தாகம் மிகுந்த மனிதர்களால் குடத்தின் உள்ளடக்கம் {குடத்தில் உள்ள நீர்} காலியாவதைப் போல, மன்னனையும், செழிப்பையும் இழந்த நாட்டைப் போல, இந்தக் காம்யக வனம் எனக்குத் தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, மிக வேகமாகச் செல்லும் சைந்தர்வ {Saindharva} வகைக் குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட அழகிய பெரும் தேர்களை, சூறாவளியைப் போன்ற வேகத்துடன் தங்கள் வசிப்பிடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அப்படித் தாங்கள் {வீடு} திரும்பிக் கொண்டிருந்த வழியில், சாலையோரத்தில் தங்கள் இடதுபக்கமாகப் பயங்கரமாக ஊளையிடும் ஒரு குள்ளநரியைக் கண்டனர். மன்னன் அதைக் கவனமாகக் கருதிப் பார்த்து, பீமனிடமும், தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, “விலங்கு வகைகளில் மிகவும் தாழ்வான இனத்தைச் சார்ந்த இந்தக் குள்ளநரியின் மொழி, நம்மை அவமதிக்க எண்ணும் பாவிகளான குருக்கள், வன்முறையில் ஈடுபட்டு நம்மை ஒடுக்குவதற்காக இங்கே வந்திருப்பதையே தெளிவாகக் குறிக்கிறது" என்றான். வேட்டையைக் கைவிட்ட பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டே, தங்கள் ஆசிரமம் இருந்த தோப்புக்குள் நுழைந்தனர். அங்கே தங்கள் அன்புக்குரியவளின் {திரௌபதியின்} பணிப்பெண்ணான தாத்ரேயிகை புலம்பி அழுது கொண்டிருப்பதைக் கண்டனர்.
தேரைவிட்ட விரைவாக இறங்கிய இந்திரசேனன், வேகமாக நடந்து அவளை அடைந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் துயரத்தில் இருந்த அவளிடம் {தாத்ரேயிகையிடம்}, "தரையில் கிடக்கிறாயே, எது உன்னை இப்படி அழ வைக்கிறது? ஏன் உனது முகம் நிறமற்று போய் வறட்சியுடன் இருக்கிறது? ஒப்பற்ற அழகும், நீண்ட கண்களும், அந்தக் குரு குலக் காளைகளின் {பாண்டவர்களின்} இரண்டாம் உருவமுமான இளவரசி திரௌபதிக்கு எந்தக் கொடூர பாவியாலும் தீங்கு நேர்ந்ததா?
அந்த இளவரசி பூமியின் குடலுக்குள் நுழைந்தாலும், சொர்க்கத்திற்குப் பறந்தாலும், ஆழ்கடலுக்குள் பாய்ந்தாலும், கவலையில் இருக்கும் தர்மனின் மகனும் {யுதிஷ்டிரரும்}, அவரது தம்பிகளும் அவளைத் தொடர்ந்து செல்வார்கள். எதிரிகளைக் கொன்று எப்போதும் வெற்றிபெறக்கூடிய பலம் பொருந்திய பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமானவளும், அவர்களது உயிர்களுக்கு ஒப்பாகக் கருதியிருந்தவளுமான ரத்தினம் போன்ற இளவரசியை {திரௌபதியைக்} கடத்திச் செல்லத்தக்க மூடன் யார்?
இத்தகு வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} இதயங்களின் வெளி உருவமாக நடந்து கொண்டிருந்த அந்த இளவரசியைக் கடத்திச் செல்ல நினைத்த மனிதன் எவன் என்பதை நான் அறியவில்லையே? அவனது இதயத்தைத் துளைக்கும் கடும் கணைகள், பூமியில் இன்று விழப்போகின்றன? ஓ! மருட்சியுடைய மங்கையே, கிருஷ்ணை {திரௌபதி} இன்றே திரும்பிவிடுவாள். அவளுக்காக அழாதே. பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் எதிரிகளைக் கொன்று, மீண்டும் யக்ஞசேனியுடன் {திரௌபதியுடன்} இணைவார்கள்" என்றான்.
இப்படி அவனால் {இந்திரசேனனால்} சொல்லப்பட்ட தாத்ரேயிகை, தனது அழகிய முகத்தைத் துடைத்துக் கொண்டு, தேரோட்டியான இந்திரசேனனிடம், "ஐந்து இந்திரர்களைப் போன்ற பாண்டுவின் மகன்களை அலட்சியம் செய்து, கிருஷ்ணையை {திரௌபதியை} ஜயத்ரதன் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றான். அவன் சென்ற பாதை இன்னும் மறையவில்லை; இதோ மரங்களின் உடைந்த கிளைகள் இன்னமும் வாடவில்லை பாருங்கள். எனவே, உங்கள் தேர்களைத் திருப்பி அவளைப் பின் தொடருங்கள். இந்நேரத்திற்குள் அந்த இளவரசி வெகுதூரம் சென்றிருக்க முடியாது!
இந்திரனின் பராக்கிரமம் கொண்ட வீரர்களே {பாண்டவர்களே}, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் அடங்கி, தன் உணர்வையும், கன்னங்களின் நிறத்தையும் அவள் {திரௌபதி} இழந்தாள். வேள்விக் கரண்டி மூலம், சாம்பற்குவியலின் மேல் ஊற்றப்படும் புனிதமான காணிக்கையைப் போல, தகுதியற்ற மனிதனுக்குத் அடங்கி அவள் {திரௌபதி} சென்றாள். அழகாகச் செய்யப்பட்ட உங்கள் ஆடம்பர விற்களைத் {கவசங்களை என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்} தரித்துக் கொண்டு, விற்களையும், அம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, அவளை {திரௌபதியை} விரைவாகப் பின்தொடருங்கள்.
ஓ!, தெளிந்த நெய், எரியாத நெல் உமியின் மேல் ஊற்றப்படாமலும்; மலர்களாலான மாலை இடுகாட்டில் வீசப்படாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். ஓ!, வேள்வியைச் செய்யும் புரோகிதர்களின் கவனக்குறைவால், வேள்விக்கான சோமச்சாற்றை நாய் நக்கி விடாமல் {நாவினால் தொட்டுவிடாமல்} கவனமாக இருங்கள். ஓ!, நுழைய முடியாத காட்டில் இரை தேடிய அலையும் குள்ள நரியால் அல்லிமலர் முரட்டத்தனமாகக் கிழிக்கப்படாதிருக்கட்டும். ஓ!, தெளிந்த நெய் இருக்கும் வேள்விக்கான குடத்தை நாய் நக்குவதைப் {நாவினால் தொடுவதைப்} போல, அழகிய கண்களும், நேர்த்தியான மூக்கும் {நாசியும்}, சந்திரனின் கதிர்களைப் போன்ற நிறமும், அழகிய முகமும் கொண்ட உங்கள் மனைவியை {திரௌபதியை}, அந்த இழிந்த மனிதன் {ஜெயத்ரதன்} தனது நாவால் தொடாதிருக்கட்டும். இவ்வழியில் விரைவாகச் செல்லுங்கள். நேரம் உங்களைக் கடக்காதிருக்கட்டும் {நேரம் கடந்துவிடப்போகிறது}" என்றாள் {தாத்ரேயிகை}.

யுதிஷ்டிரன், "நன்மங்கையே {கல்யாணி}, இருப்பிடம் செல், உனது நாவை அடக்கு. எங்கள் முன்னிலையில் இது போன்று பேசாதே. யாராக இருப்பினும், அதிகாரத்தால் போதையுண்ட மன்னர்களும் இளவரசர்களும் துக்கம் வருவது நிச்சயம்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவர்கள் {பாண்டவர்கள்}, பாம்புகளின் இரைப்பைப் போல அடிக்கடி ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியும், தங்கள் பெரிய விற்களின் நாணைச் சுண்டியபடியும், தங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் தொடர்ந்து சென்றனர். ஜெயத்ரதன் படைக்குச் சொந்தமான குதிரைகளின் குளம்படிகள் ஏற்படுத்திய தூசிப்படலத்தை அவர்கள் கண்டார்கள். குடிகெடுத்தவனின் {ஜெயத்ரதனின்} காலாட்படைக்கு {ravisher's infantry} மத்தியில் இருந்து கொண்டு, பீமனை விரைந்து செயல்படும்படி அறிவுறுத்திய தௌமியரைக் கண்டார்கள். பிறகு தாழாத மனம் கொண்ட அந்த இளவரசர்கள் (பாண்டுவின் மகன்கள்), அவருக்கு {தௌமியருக்கு} உற்சாகம் கொடுத்து, "மகிழ்ச்சியுடன் திரும்பி வாரும்" என்றனர்.
அதன் பின்னர்ப் பருந்துகள் தங்கள் இரையை நோக்கி கீழே பாய்வதைப் போல, பெருஞ்சீற்றத்துடன், அவர்கள் {பாண்டவர்கள்} அப்படையை நோக்கி விரைந்தனர். இந்திரனின் பராக்கிரமத்தைக் கொண்ட அவர்கள், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தால் பெரும் கோபம் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜெயத்ரதனையும், அவனது தேரில் அமர்ந்திருந்த தங்கள் அன்புக்குரிய மனைவியையும் {திரௌபதியையும்} கண்ட பிறகு அவர்களது கோபம் எல்லையைக் கடந்தது. அந்தப் பெரும் வில்லாளிகளான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன்} மற்றும் மன்னன் {யுதிஷ்டிரன்} ஆகியோர் உரத்தவொலியுடன் ஜெயத்ரதனை நிற்கச் சொன்னார்கள். இதனால் அந்த எதிரி {ஜெயத்ரதன்} மனக்குழப்பமடைந்து, திசைகளின் அறிவை இழந்தான்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.