ஆதிபர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: ஆஸ்தீகரின் தந்தை,
பிரஜாபதியை {தக்ஷனை} போன்ற சக்தி படைத்தவர். அவர் பக்தியில் உறுதிமிக்க
ஒரு பிரம்மச்சாரி. காமத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த மிகப்பெரிய
துறவியான அவர் எப்போதாவதுதான் சாப்பிடுவார். அவர் ஜரத்காரு {Jaratkaru}
என்ற பெயரால் அறியப்பட்டிருந்தார். யயவரர்களில் முதன்மையான அவர்
{ஜரத்காரு}, அறம்சார்ந்த கடுமையான விரதங்களில் (தர்மம் சார்ந்த கடுமையான
விரதங்களில்) உறுதிமிக்கவர். பெரும் ஆன்மசக்திகளைக் கொண்டு, பெரிய ஆசி
பெற்று, ஒரு முறை உலகம் முழுவதும் பயணம் செய்தார். வித்தியாசமான
இடங்களுக்குச் சென்றார், புனித ஆறுகளில் நீராடினார். பொழுது எங்கே
இருட்டுகிறதோ அங்கே இளைப்பாறினார். இயல்பான மனிதர்களால் செய்ய முடியாத
கடும் விரதங்களை பெரும் சக்தியோடு செய்தார். - See more at:
http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section13.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 14 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் அந்தணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் மனைவியைத் தேடி அலைந்தார். கிடைத்தாளில்லை. ஒருநாள், அடர்ந்த கானகத்திற்குள் சென்று தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து உரமில்லாக்குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார். அப்போது வாசுகி {ஆண் பாம்பு} எழுந்து, தனது தங்கையை அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் அந்தணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்க வேண்டுமே என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார். அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் 'எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்.' என நினைத்துக் கொண்டு வாசுகியிடம், "உமது தங்கையின் பெயர் என்ன என்று உண்மையைக் கூறு, ஓ பாம்பே" என்று கேட்டார் {ஜரத்காரு}. - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section14.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதிபர்வம் பகுதி 15 - அசல் பதிவுக்குச் செல்ல
பதிவிலிருந்து சில வரிகள்: பின்பு வெகு காலத்திற்குப் பிறகு, பாண்டவ வழியில் வந்த ஒரு மன்னன் {ஜனமேஜயன்} ஒரு பெரிய நாக வேள்வியை நடத்தினான். அந்த {நாக} வேள்வி பாம்புகளின் அழிவிற்காக நடத்தப்பட்டது. ஆஸ்தீகர், தனது சகோதரர்களும், தாய்வழி மாமன்களுமான அந்தப் பாம்புகளையும் மற்ற பாம்புகளையும் (நெருப்பு மரணத்திலிருந்து) காப்பாற்றினார். தான் பிள்ளைப் பேறு பெற்றதால் அவரது மூதாதையர்களையும் விடுவித்தார். ஓ அந்தணரே {சௌனகரே}, ஜரத்காரு, தனது கடுமையான விரதங்களாலும், தவத்தாலும், ஆழ்ந்த வேத கல்வியினாலும், தனது கடமைகள் அனைத்திலுமிருந்து விடுபட்டார். வேள்விகளால் தேவர்களைத் திருப்தி செய்து, பிரம்மச்சரியத்தால் முனிவர்களைத் திருப்தி செய்து, ஒரு மகனை {ஆஸ்தீகரை} பெற்றதால் தனது மூதாதையர்களையும் {யயவரர்களையும்} திருப்தி செய்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section15.html
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
எம.பி.3-ஆக பதிவிறக்க
ஆதி பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!