இத்தருணத்தில் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு
அடியேனால் முடிந்த ஒரு வாழ்த்துப்பா
*****************************
மூப்பில் சிறியவனே - நான்
வாக்கில் சிறியவனே
வாழ்த்தலாமா நானென்று
நாணெய்தும் என் மனத்தை
வலிய அடக்கிவிட்டு
எளிய வார்த்தைகளில்
வாழ்த்தினைப் படைத்திடவே
வானத்தைப் பார்க்கின்றேன்
வெண்முரசைக் கொட்டிவந்து
மண்மணத்தைப் பரப்பிவரும்
உம் தொண்டை நானுரைக்க
தண் கருணை பொழிகின்ற
விண்ணகத்துக் கலைமகளை
வாயாரப் புகழந்துவிட்டு
வானளாவ உயர்ந்தவும்மை
வாழ்த்திடுவேன் ஜெயமோகன்!
ஜெயமென்ற காவியத்தை
ஜகமெல்லாம் முரசிடவே
மோகனமாய்ப் பகர்ந்ததெல்லாம்
போதகமாய் அமைந்திடவே
வெண்முரசாய் வடித்தளித்து
பண்பட்ட உரைநடையை
கண்ணயரக் கொடுத்துவரும்
நும்பெயரே ஜெயமோகன்!
கற்றுணர்ந்த பண்டிதரும்
பெற்றுணரா இன்பமதை
இச்சகத்து மாந்தரெல்லாம்
இக்கெனவே புரிந்துகொள்ள
குற்றமற்ற வார்த்தைகளைப்
பற்றிவரும் வெண்முரசை
தடைகளற்ற அருவிபோல
படைக்கின்றீர் ஜெயமோகன்!!
தத்துபித்து பேசிக்கொண்டு
தத்துவம் என்றுரைத்துவிட்டு
பகுத்தறிவு இஃது வென்று
வகுத்தறியாப் பேதையர்க்கு
தத்துவம் அஃதல்லவென்று
சித்தத்தில் உரைப்பதுபோல்
மண்மணத்தைப் பகருகின்ற
நும் பெயரே ஜெயமோகன்!
ஜெயம் ஜெயம் எனவே
ஜெயமாக வாழ்ந்துகொண்டு
மோகனமாய் வெண்முரசை
காவியமாய் வடித்துவைத்து
பற்றற்ற மனநிலையில்
கற்றதெல்லாம் படைத்துவிட்டு
விண்ணதிர ஜெயம் கொள்வீர்
கண்மணியே ஜெயமோகன்!
வாழிய நீர் பல்லாண்டு
வாழிய வாழியவே