Monday, August 10, 2015

மஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு!


நமது விவாதமேடையில் நண்பர் திரு.தாமரை அவர்கள் செய்த ஆய்வின் தொகுப்பே கீழ்க்கண்டவை...மகாபாரதத்தின் காலத்தைக் கணிப்பதில் மிக உதவியாக இருப்பதாகக் கருதப்படுவது மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள கிரகங்களின் நிலையே ஆகும்.
வானியலிலும் ஜோதிடத்திலும் வல்லவர்கள் சிலர் மகாபாரதக்கால கோள் நிலைகளை இதைக் கொண்டு ஆராய்ந்துள்ளனர்.

மகாபாரதம் படிப்பதால் நாமும் இதை ஆராய்வோமே என்று தோன்றிற்று.

முதலில் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றிற்குரிய இராசிகளை அறிந்து கொள்வோம். கூடவே ராசியின் ஆட்சிக் கிரகம் மற்றும் உச்ச – நீச்ச விவரங்களும்.


ஆக 12 ராசிகளுக்கு ராசிக்கு 2-1/4 நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரங்கள். எந்த நட்சத்திரம் எந்த இராசியில் விழுகிறது என இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அடுத்து அறிந்து கொள்ள வேண்டியது காலண்டர்.
இன்று நாம் பயன்படுத்துவது சக அம்ச அடிப்படையிலான சூரியக் காலண்டர்.

இதில் உள்ள 12 மாதங்கள் சூரியனின் இடத்தைப் பொறுத்து அமைகின்றன.

அதாவது சூரியன் மேஷ இராசியில் இருக்கும் மாதம் சித்திரை. சித்திரை நட்சத்திரத்திற்கு அருகில் சந்திரன் இருக்கும் பொழுது பௌர்ணமி வருவதால் சித்திரை மாதம் என்று பெயர்.

சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் பொழுது வரும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அது போல ஆனி மூலம், ஆடி மூலம், ஆவணி திருவோணம், புரட்டாசி பூரட்டாதி ஐப்பசி அசுவினி, கார்த்திகை – கார்த்திகை, மார்கழி – மிருகசீரிஷம், தை – பூசம், மாசி – மகம், பங்குனி – உத்திரம் ஆகியவையும் ஆகும். சூரிய காலண்டர் 365.25 நாட்கள் கொண்டது.

சந்திர காலண்டர் சந்திரனின் இருப்பைக் கொண்டு கணக்கிடப்படுவது. சந்திரன் 29.45 நாட்களுக்கு ஒரு முறை இராசி மண்டலத்தை சுற்றி வருவதாகத் தோன்றும். சில சமயம் 28 நாட்கள், சில சமயம் 29 நாட்கள் ஆகும். சாதரணமாக சந்திர காலண்டரில் 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள். மாதங்களின் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்தப் பெயரில் வரும்.

சந்திரக் காலண்டரில் இருவகை உண்டு

1. அமாவாசை தொடங்கி சதுர்த்தசி வரை கொண்ட காலண்டர் – இது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இந்த காலண்டர் மூலமே  நட்சத்திரங்கள் அடிப்படையிலான அனைத்து பண்டிகைகளும் நிர்ணயிக்கப்படும். இதனால்தான் சில பண்டிகைகள் சில சமயம் ஆடி மாதம், சில சமயம் ஆவணி மாதம் என மாறிவரும்.

2. பௌர்ணமியில் தொடங்கி கணக்கிடப்படும் மாதம்.

இந்த சந்திர மாதக்கணக்கில் வருடத்துக்கு 354 நாட்களே வரும். எனவே ஐந்து வருடங்களுக்கு இரு மாதங்கள் கூடுதலாக வரும்.

மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்டது அமாவாசையில் தொடங்கும் சந்திரக் காலண்டர். இதை சில இடங்களின் வாயிலாக அறியலாம்.

1. விராட பர்வத்தில் துரியோதனன் விராட நாட்டின் பசுக்களை கவர்ந்த போது அர்ச்சுனன் கண்டறியப் படுகிறான். அதனால் ஆண்டுக் கணக்கை பீஷ்மர் விளக்குகிறார்.

பீஷ்மர் 13 ஆண்டு கணக்கைச் சொல்லும் பொழுது  .

பீஷ்மர் சொன்னார், “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டுமாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகியபிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் சுழன்று வருகிறது. அதில் வரும்கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும்மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டுமாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்குஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால்சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றேமுடிந்துவிட்டது}. - See more at: http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section52.html

இரண்டாவதாக

kaumudemāsirevatyāṃśarad ante himāgame|
sphītasasyasukhekālekalpaḥ
sattvavatāṃvaraḥ||

MB 5.83/7(Cr Ed 5.81/7)

கௌமுட மாதம் என்பது கார்த்திகை மாதம் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று கிருஷ்ணர் உபப்பல்யத்திலிருந்து தூது கிளம்புகிறார்.

கார்த்திகை மாதம் பௌர்ணமியில் தொடங்குவதாக இருந்தால் கார்த்திகை இறுதியில்தான் கிருஷ்ணர் பயணம் தொடங்கி இருக்க முடியும்.

பீஷ்மர் மாசி மாதம் (மக மாதம்) 9 ஆம்  நாள் சொல்கிறார். நான் 8 மற்றும் 50 இரவுகளாகப் அம்புப் படுக்கையில் கிடக்கிறேன் என்று.

பின்னோக்கி கணக்கிடுவோம். 9 நாட்கள் மாசி, 30 நாட்கள் தை, 19 நாட்கள் மார்கழி ஆகியவை போயிருக்கின்றன 58 இரவுகளுக்கு. பீஷ்மர் அம்புப்படுக்கையில் விழுந்தது 10 ஆம் நாள் போரில். ஆக மார்கழி மாதம் 11 ஆம் நாள் பீஷ்மர் அம்புப்படுக்கையில் விழுந்திருக்க வேண்டும். அப்படியானால் மார்கழி 2 ஆம்  நாள் போர் ஆரம்பித்திருக்க வேண்டும்.

கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஆரம்பித்திருந்தால் ரேவதி நட்சத்திரம் 27 ஆம் நாள் வரும். கண்ணன் ஹஸ்தினாபுரம் செல்லவே இரு நாட்கள். அத்தினாபுரத்தில் சில நாட்கள். அப்பொழுதே மார்கழி பிறந்திருக்கும். எனவே மார்கழி ஒன்றாம் நாள் போர் ஆரம்பித்திருக்க வாய்ப்பில்லை. எனவே அமாவாசையே மாத முதல் நாளாகக் கொள்ளப்பட்டது என அறியலாம். இப்பொழுது எந்த காலண்டர் உபயோகப்படுத்துவது எனத் தெளிவாக தெரிகிறது.

இனி கிரக நிலைகளைப் பார்க்கலாம்.

ராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரைநட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையேமுன்னறிவிக்கின்றன.

வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும்அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மகநட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும்கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியைநோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒருசந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப்புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகைகலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச்சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச்சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப்பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதிநட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2]. நெருப்பின்பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச்சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதைஅடித்துக் கொண்டு} நிற்கிறான்.


இப்படி போரின் முன்பான அமாவாசை தினத்தன்று கிரகங்கள் இருந்ததாக விளக்கம் பீஷ்ம பர்வத்தில் வருகிறது.

 1. ராகு சூரியனை அணுகுகிறது.
 2. வெண்கோள் சித்திரைநட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது
 3. வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது
 4. செவ்வாய் மகத்தை {மகநட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது
 5. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான்
 6. சனி பக நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான்
 7. பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியைநோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒருசந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான்.
 8. வெண்கோள் இந்திரனுக்குப்புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகைகலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது.
 9. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப்பீடிக்கிறது.
 10. கடுங்கோள்சித்திரை மற்றும் சுவாதிநட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது
 11. செவ்வாய்வக்கிரமாகி, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் நிற்கிறான்.
இதில் தனித்தனியாகப் பார்த்தால் ஒரு அர்த்தம் கிடைத்தாலும் சில கிரகங்கள் எவையென அறிதல் வேண்டும்..

இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஜோதிடத்தில் கிரக பார்வைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

 • சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன்,ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள்.
 • ஆனால் குரு, சனி,செவ்வாய் ஆகியகிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு.
 • செவ்வாய்:- தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7, 8-ம்வீடுகளைப் பார்ப்பார்.
 • குரு:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பார்.
 • சனி:- தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம், 7-ம், 10-ம் வீடுகளைப் பார்ப்பார்.
 • இது போக - சூரியனுக்கு - 4 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு 4 , 8 - ஆம் பார்வைகளும் உண்டு. ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.

9. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப்பீடிக்கிறது.

சூரியனும் சந்திரனும் ரோகிணி  நட்சத்திரத்தில் இருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள் என்றும் கொள்ளலாம். இது கார்த்திகை மாதம் என்பதால் சூரியன் விருச்சிக ராசியில் இருக்க வேண்டும். எனவே விருச்சிக ராசியில் கேட்டை  நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள் எனக் கொள்ள வேண்டும்.

ராகுவை எடுத்துக் கொள்வோம்.

ராகு சூரியனை அணுகுகிறது. ராகு ஒன்று கேட்டை நட்சத்திரத்தில் இருக்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். கேது கேட்டையில் இருக்கிறது. அப்படியானால் ராகு ரோகிணி நட்சத்திரத்தை அணுகுகிறது. ராகு ரிஷப ராசியில் இருக்கிறது.

ராகுவுக்கு 180 டிகிரி நிலையிலேயே எப்பொழுதும் கேது இருக்கும். அதனால் கேது அனுஷம் அல்லது கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக இராசியில்இருக்க வாய்ப்புண்டு. இங்கே வெண்கோள் (கேது), இந்திரனுக்குப்புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகைகலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது என எட்டாவது பாய்ண்ட் சொன்னாலும், 2 ஆவது கருத்து வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரைநட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது என்று சொல்கிறது. சித்திரை நட்சத்திரம் என்பது கன்னி-துலாம் ராசியாகும். கேதுவுக்கு 11 ஆம் பார்வை உண்டென்பதால் கேது கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது 11 ஆம் பார்வையாக சித்திரை நட்சத்திரத்தைப் பார்க்கிறது எனக் கொள்ளலாம்.

ஆக இராகு ரோகிணி நட்சத்திரத்திலும், சூரியன், சந்திரன், கேது கேட்டை நட்சத்திரத்திலும் இருக்கின்றன. இன்னும் 5 கிரகங்கள் இருக்கின்றன.

செவ்வாய் பற்றிச் சொல்லும் பொழுது

4. செவ்வாய் மகத்தை {மகநட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது
11. செவ்வாய்வக்கிரமாகி, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் நிற்கிறான்.

ஆக மகம், திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்கள் சொல்லப்படுகின்றன.

அதற்கும் மேலாக கர்ணன் கண்ணனை வழியனுப்பும் பொழுது சொல்கிறான்..

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக்குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html

அதாவது ஏழு நாட்களுக்கு முன் செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தில் வக்ரகதியில் இருந்தது. இந்த ஏழு நாட்களில் அது மகம் வரை செல்ல முடியாது. வக்ர நிவர்த்தியாகி மூலம், பூராடம்,உத்திராடம் தாண்டி திருவோணம் வர வாய்ப்புண்டு. செவ்வாய்க்கு எட்டாம் பார்வை உண்டு. மகரத்திற்கு சிம்மம் எட்டாமிடம் என்பதால் திருவோணம் நட்சத்திரத்தில் மகர ராசியில் இருந்து கொண்டு மகம் நட்சத்திரத்தையும் அதில் உள்ள சனியையும் நேரடியாகப் பார்க்கிறது எனக் கொள்ள வேண்டும்.

அடுத்து

5. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான் எனச் சொல்லி வியாழன் திருவோண நட்சத்திரம் மகர ராசியில் இருப்பதாகச் சொல்கிறார்.

அடுத்து சனி, சனி மக நட்சத்திரத்தில் இருப்பதாக வியாசர் நேரடியாகச் சொல்கிறார்.

6. சனி பக நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான்...

அதே சமயம் கர்ணன் ஏழு நாட்களுக்கு முன்பு சொன்னது

பெரும்பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ளஉயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது.- See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html
ஆக சனி ரோகிணியில் இருந்து மகத்தைப் பார்க்க வேண்டும். அல்லது மகத்திலிருந்து ரோகிணியைப் பார்க்க வேண்டும். ரோகிணியில் இருந்து மகம் நாலாம் இடம். மகத்திலிருந்து ரோகிணி 10 ஆம் இடம். சனியின் பார்வை 3,7 மற்றும் 10. எனவே மகம் என்று சொல்வதே சரி.

அடுத்து வெள்ளி.

7. பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியைநோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒருசந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான்.

வெள்ளி பூரட்டாதி-உத்திரட்டாதி சந்திப்பில் இருக்கிறது. அதாவது மீன ராசியில் இருக்கிறது. ஆனால் இது சாத்தியமில்லை. ஏனெனில் சுக்கிரன் சூரியனை விட்டு 48 டிகிரிக்கு மேல் விலகுவதில்லை.

2. வெண்கோள் சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது

என்பதில் வெண்கோள் என்பதை சுக்கிரன் எனக்கொள்ள (சுக்கிரனின் நிறம் வெண்மை) சுக்கிரன் கன்னி-துலா ராசியில் இருக்கிறது எனக் கொள்ளலாம். கன்னி ராசியில் சுக்கிரன் இருக்குமாயின் பூரட்டாதி உத்திரட்டாதி ஆகியவை சுக்கிரன் பார்வை பெறும். எனவே சுக்கிரன் கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் உள்ளதாகக் கொள்ளலாம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகியவற்றின் இடம் தெரிந்து விட்டது. புதன் எங்கே இருக்கும்?

புதன் சூரியனிடமிருந்து 30 டிகிரிக்குள்தான் இருக்கும். புதன் தனியே சொல்லப்படவில்லை என்பதால் அது சூரியனுடன் இருக்கிறது எனக் கொள்ளலாம்.

இதனுடன் பூச நட்சத்திரத்தில் ஒரு தூமகேது, அதாவது வால் நட்சத்திரம் தெரிவதாக சொல்லி இருக்கிறார்


இப்படி ஒரு கிரக அமைப்பே போருக்கு முந்தைய அமாவாசையின்போது இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த அமைப்பில் வானியல் ரீதியாக பிழைகள் உள்ளன.

1. சுக்கிரனின் அதிக பட்ச கோணம் சூரியனிலிருந்து 48 டிகிரிகள் அதாவது 4  நட்சத்திரங்கள் என வைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே 100 டிகிரிக்கு மேல் வருகிறது

2. செவ்வாய், சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும் பொழுது மட்டுமே வக்கிரகதி அதாவது பின்னோக்கிய நகர்வைக் கொள்ளும்.

இரண்டையும் சரி செய்யவேண்டுமெனில் சூரிய சந்திர கோள்கள் கார்த்திகை நட்சத்திரத்தின் கடைசி பாதத்தில் இருப்பதாக கொள்ளலாம். இது சூரிய சந்திரர்கள் ரோகிணியைப் பீடிக்கிறார்கள் என்பதையும் இராகு சூரியனை அணுகுகிறான் என்பதையும் சொல்லும். சுக்கிரன் 48 டிகிரிக்குள் வரும். செவ்வாயின் வக்ரகதியும் சரியாகும். அதுவுமின்றி இன்னுமொரு குறிப்பும் உண்டு

நட்சத்திரங்கள் அனைத்தும் பகையாயிருக்கின்றன. விலங்குகள் மற்றும்பறவைகள் அனைத்தும் அச்சத்திற்குரிய அம்சங்களை ஏற்கின்றன. ஓ! வீரா {துரியோதனா} பல்வேறுவிதமான தீய சகுனங்கள், க்ஷத்திரியர்களின் படுகொலைகளைமுன்னறிவிக்கின்றன. இந்தச் சகுனங்கள் அனைத்தும் குறிப்பாக நமது இல்லங்களில்மட்டுமே மீண்டும் மீண்டும் தெரிகின்றன. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section138.html

 • சூரியனுக்கு ரிஷபம் பகை வீடு
 • ராகு ரிஷபத்தில் நீசமடைகிறது
 • புத்திரகாரனாகிய குரு மகரத்தில்  நீசமடைகிறது.
 • சுக்கிரன் பகைவன் குருவின் வீட்டில் இருக்கிறது
 • ஆயுள் காரகனாகிய சனி சூரியனுக்குரிய சிம்மத்தில் இருப்பதால் பகையாய் இருக்கிறது
 • போருக்கு காரணியான செவ்வாய் மகரத்தில் உச்சமடைகிறது.
 • ஞானத்திற்கு காரகனான கேது உச்சத்தில் இருக்கிறது.
 • சந்திரக்குலத்தலைவன் சந்திரனும் உச்சமாய் இருக்கும்
 • இத்தனையும் வைகாசி மாதத்தில் மட்டுமே.


     
அடுத்து தூமகேது..

தூமகேது என்பது வால் நட்சத்திரமாகும். இந்த வால் நட்சத்திரம் பூச நட்சத்திரத்தில் தெரிந்தது என்கிறார் பீஷ்மர்.

கார்த்திகை மாதம் எனில் பூச நட்சத்திரம் இரவு பத்து மணி சுமாருக்கு வானில் உதிக்கும்.
வைகாசி மாதமெனில் பூச நட்சத்திரம் காலை பத்து மணிக்கு உதித்து இரவு பத்து மணிக்கு மறையும். எனவே இரண்டு மாதங்களிலும் பூசநட்சத்திரம் தெரியும். ஆனால் தூமகேது தெரியுமா?

வால் நட்சத்திரம் எப்பொழுது தெரியுமென்றால் அது பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் இருக்கும் பொழுது சூரியனின் கதிர்களில் அதன் வால் ஒளிரும். அதாவது வால் நட்சத்திரம் சூரியனில் இருந்து தொண்ணூறு டிகிரிக்குள் இருக்க வேண்டும்.

அடுத்து வால் நட்சத்திரம் சூரியனை நோக்கிச் செல்கிறதா அல்லது சூரியனில் இருந்து திரும்புகிறதா எனவும் பார்க்க வேண்டும்.

சந்திரனின் ஒரு முகம் மட்டுமே பூமியை நோக்கி இருக்கும். அதே கறைகள் அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் சந்திரன் பூமியைச் சுற்றி வர ஆகும் காலமும், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலமும் ஒன்றேயாகும்.

சந்திரவட்டில் உள்ள கறை {களங்கம்}, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html

அதாவது கர்ணன் சொல்கிறான், ஏழு நாட்களுக்கு முன் சந்திரன் தன் கறைகளை மாற்றிக் கொண்டு விட்டதென.அதன் பின் உண்டாவது இது

ஒவ்வொருவகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண்ட ஒரு கிரகம்தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளைமுன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக)பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பதினாறு நாட்களையோகொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்றுநாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும்என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன்ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்துபதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன" என்றார் {வியாசர்}.

{வியாசர்திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "எனவே, வழக்கத்திற்கு மாறான நாட்களில்கிரகணங்களுக்கு உட்படும் [1] சூரியனும் சந்திரனும், பூமியில் உள்ளஉயிரினங்களின் பேரழிவுக்குக் காரணம் ஆவார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html
இந்திரனின்வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்க விண்கற்கள் {கொள்ளிகள்} உரத்த சீற்றத்துடன்கீழே விழுகின்றன - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html

கைலாசம், மந்தரம், இமயம் ஆகிய மலைகளில் ஆயிரக்கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்கின்றன; ஆயிரக்கணக்கான சிகரங்களும் பெயர்ந்து விழுகின்றன. பூமி நடுங்குவதன்விளைவால் பெரிதும் பொங்கும் நான்கு கடல்களும், பூமியைத் துன்புறத்த அதன்கண்டங்களைத் {கரைகளைத்} தாண்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003b.html
அதாவது சந்திரனின் சுழலும் வேகம் சற்று மாறி இருக்கிறது. சந்திரன் பூமியைச் சுற்றும் வேகம் திடீரென அதிகரித்தது. பூமியின் மீது எரிகற்கள் விழுகின்றன. அவற்றில் சில மிகப் பெரியவை.

இவையெல்லாம் குறிப்பது என்னவென்றால் சந்திரனுக்கு மிகச் சமீபமாக வால் நட்சத்திரம் கடந்து போனது. அதன் தூசிகள் சந்திரனிலும் சூரியனிலும் விழுந்தன.

ஆக பௌர்ணமிக்கு முன்பே தூமகேது சந்திரனைக் கடந்து சென்றது. அது சூரியனைத் தாண்டி திரும்ப வரும்பொழுது கண்ணிற்கு தெரியும்.

அதாவது இந்த தூமகேது சந்திரனைத் தாண்டி வருகிறது.

இதை ஒரு அறிவியல் ஆதாரமாகக் கொண்டால் வால் நட்சத்திரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்க வேண்டும். அதாவது சூரியனில் இருந்து 90 டிகிரிக்குள் இருக்க வேண்டும். 

இது கார்த்திகை மாதம் என்றால் தூமகேது பூசத்தில் இருப்பதால் தூமகேது சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என ஆகும். அப்படியானால் பெரிய பெரிய விண்கற்கள் விழ வாய்ப்பில்லை. இதுவே வைகாசி மாதம் என்றால் தூமகேதுவின் நிலைப்படி தூமகேது சூரியனைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது என்று பொருளாகும்.

இந்த ஆய்வின்படி பார்க்கும் பொழுது,

1. தூமகேதுவின் நிலை
2. சுக்கிரனின் நிலை
3. செவ்வாயின் சஞ்சாரம் ஆகியவை

களப்பலி கொடுத்த நாள் வைகாசி மாதம் இரண்டாவதாக வந்த அமாவாசையில் நடந்தது என எண்ணத் தோன்றுகிறது. தூமகேதுவால் திடீரென வேகம் பெற்ற சந்திரன் காரணமாக 13 ஆம் நாளே அமாவாசையும் கிரஹணமும் உண்டாகின. அதை கௌரவ பண்டிதர்கள் சரியாய் கவனித்து கணிக்காமல் போனதால் அவர்கள் திதி தவறி களப்பலி கொடுத்தனர். தூமகேதுவின் இடறலை அறிந்த கண்ணன் முதல் நாளே அமாவாசை வந்ததை அறிந்து கொண்டான் என அறிவியல் ரீதியாகச் சொல்லலாம்.

அது மட்டுமின்றி தமிழ் நாட்டில் ஆடி 1 முதல் 18 வரை மஹாபாரதப் போர்களம் என்ற ஒரு செவிவழிச் செய்தியும் நம்பிக்கையும் உண்டு. 18 ஆம் பெருக்கு அன்று பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கழுவினார்கள் எனப் பாட்டிகள் கதை சொல்வதுண்டு.

கார்த்திகை அமாவாசை களப்பலி இட்டு மார்கழியில் போர் நடந்ததா? அல்லது கர்ண பரம்பரைக் கதைப்படி வைகாசி அமாவாசை களப்பலி இட்டு, ஆடி மாதம் போர் நடந்ததா என்பது ஆராயத் தக்க கருத்து.

காரணம் உண்டு. போர் நடந்து முடிந்த உடன் தர்மன் பதவி ஏற்கவில்லை. எல்லோருக்கும் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு கங்கை நதிக்கரையில் தங்கி ஓய்வெடுக்கிறான்.

கணக்குப்படி மார்கழி 19 நாள் யுத்தம். துக்கம் அனுஷ்டித்தது 16 நாள். கங்கைக்கரையில் தங்கி இருந்தது குறைந்த பட்சம் 1 மாதம் எனில் தை மாதம் கடந்து விடுகிறது. ஆனால் தைப்பூசத்தன்று தர்மன் முடிசூட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தை 15 ஆம் தேதிதான் தைப்பூசம். (சந்திர காலண்டரின்படி) எனவே இது சாத்தியமல்ல.

இதில் சில வேறுபாடுகளும் உண்டு. தர்மன் 1 மாதம் அல்ல.. மூன்று மாதங்களுக்கு மேல் கங்கைக் கரையில் ஓய்வெடுத்ததாக சில நூல்கள் சொல்கின்றன.

அதே போல் பீஷ்மர் சொன்னது ஐந்து பத்தும் மேலும் எட்டு இரவுகளும் அம்புப்படுக்கையில் படுத்திருக்கிறேன் என்பதை சில நூல்களில் 5 மாதங்களும் 8 நாட்களும் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறேன் எனச் சொல்கின்றன. அதாவது ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஐந்து மாதங்கள் 8 நாட்கள் அதாவது அஷ்டமி திதி... என்று சொல்கின்றன.

ஆக மார்கழி இரண்டாம் தேதி போர் ஆரம்பித்த்து என உறுதியாகவும் சொல்ல முடியாது. அதே போல் ஆடி முதல் நாள் போர் ஆரம்பித்தது எனச் சொல்லவும் காரணங்கள் இருக்கிறது.

கிரக நிலைகளில் உள்ள குழப்பங்கள் இதை தெளிவாக்கும் என்ற எண்ணத்தோடு கிரக நிலைகளை அலசியதில் கண்டிப்பாக சில இடங்களில் தவறு உட்புகுந்திருக்கிறது எனத் தெளிவாக தெரிகிறது.

எது உண்மை? பாட்டி சொன்னதா? பண்டிதர்களின் சொன்னதா?

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்