அன்பு அருட்செல்வப்பேரரசன்,
வணக்கம். நான் மணிமாறன். புதுச்சேரியில் அரசூழியனாக பணிபுரிந்து வருகிறேன். நடந்துமுடிந்த வண்ணதாசனுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழாவின் இரண்டாம்நாள் அமர்வில் தங்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டது உங்கள் நினைவிலிருக்க வாய்ப்பில்லை. சென்னையில் நடைபெறும் மாதாந்திர வெண்முரசு கலந்துரையாடல் நிகழ்வில் இம்முறை தாங்கள் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் என்னால்தான் வரவியலாத சூழல்.
தங்கள் வலைத்தளத்தில் நன்கொடை பற்றியச் செய்தியறிந்தே இம்மின்னஞ்சல். கோவையில் அச்சந்திப்பின்போதே தாங்கள் தெரிவித்த, தனியொரு ஆளாக ஒட்டுமொத்த மகாபாரதத்தின் தமிழ்மொழியாக்கத்தை மேற்கொள்வதில் இருக்கக்கூடிய, பிரம்மாண்ட பணிச்சுமையை உள்வாங்கமுடிந்தது. அதுவும் எந்தவிதமான பொருளாதார உதவியுமின்றி குறிப்பாக எவ்விதமான எதிர்பார்ப்பையும் அங்கீகாரத்தையும் கோரிநிற்காமல் தாங்கள் செய்துவரும் பணி மகத்துவம் வாய்ந்தது.

மகாபாரதம் குறித்தான எந்தவொரு உடனடித் தேடலுக்கும் தங்கள் வலைத்தளம் மிக முக்கியமான முதன்மையான வியாசபாரத உசாத்துணை மின்னூல் பெரும்பிரதியாக யாவர்க்கும் திகழ்கிறது என்பதை ஐயம்திரிபின்றி சொல்வேன்.
தங்களின் இப்பணி முழுமைபெற வாசகநண்பர்களின் ஆதரவு நாட்புறமிருந்தும் கிடைக்கப்பெற்று தாங்களும் குன்றாமனவூக்கத்தோடு செயல்பட அந்த வியாசனருள் துணை நிற்கட்டும். எப்போது எப்படி என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கட்டாயம் காலம் உங்களுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கும் என்பது மட்டும் என் அளவிலான உறுதி. தங்கள் பணி இலக்கெய்த என் உளமார்ந்த அன்பு வாழ்த்துகளோடு என்னாலான ஒரு சிறு காணிக்கையை உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளேன்.
மிக்க அன்புடன்
மணிமாறன், புதுச்சேரி.
***
அன்புள்ள மணிமாறன்,
இரண்டாம் அமர்வில் என் அருகே இடதுபுறத்தில் அமர்ந்திருந்தவர் நீங்கள் என்று ஊகிக்கிறேன்.
உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே.
நன்கொடைகள் கிடைக்கப்பெறும்போது அதை நான் முழுமஹாபாரத் வலைத்தளத்தில் குறிப்பிடுவது வழக்கம். எனவே, இந்த உங்கள் மின்னஞ்சலை என் வலைத்தளத்தில் பதிய உங்கள் அனுமதியைக் கோருகிறேன்.
நன்றி.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

அன்பிற்கினிய அருள்
என்னைப் பற்றிய தங்கள் யூகம் மிகச்சரி.
உங்கள் வலைத்தளத்தில் எனது கடிதம் இடம்பெறுவதில் யாதொரு ஆட்சேபனையும் எனக்கில்லை. பெருமிதமே.