Bhima defeated Karna! | Karna-Parva-Section-50 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பீமனை எதிர்த்து விரைந்த கௌரவர்கள்; பீமனை நோக்கிச் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைச் சாத்யகியிடமும், திருஷ்டத்யும்னனிடம் அடைக்கலமாய் விட்டுச் சென்ற பீமன்; கர்ணனை எதிர்த்த பீமன்; அர்ஜுனன் வரக்கூடும் என்பதால், பீமனைத் தாக்கப் போவதாகச் சொன்ன கர்ணன்; ஆமோதித்த சல்லியன்; கணைகளால் பீமனின் நடுமார்பைத் தாக்கி அவனது வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைக் கொல்ல விரும்பி பீமன் ஏவிய கடுங்கணை ஒன்றால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; போர்க்களத்தைவிட்டுக் கர்ணனைக் கொண்டு சென்ற சல்லியன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவ வீரர்கள் உமது படையை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, தன் படையின் போர்வீரர்களை {அவர்கள் புறமுதுகிடாதபடி} அனைத்துப் பக்கங்களிலும் தடுத்தான். எனினும், உமது மகன் {துரியோதனன்} தன் குரலின் உச்சியில் கதறினாலும், ஓ! மன்னா, தப்பி ஓடும் அவனது துருப்புகள், ஓடுவதை நிறுத்த மறுத்தன.(1,2) அப்போது அந்தப் படையின் ஒரு சிறகும், அந்தச் சிறகுகளின் எல்லைகளில் இருந்தோரும், சுபலனின் மகன் சகுனியும், கௌரவர்களும், நன்கு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) மன்னர்கள் அனைவருடன் கூடிய தார்தராஷ்டிரப் படையானது புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட கர்ணனும், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “பீமனை நோக்கித் தேரைச் செலுத்துவீராக” என்றான்.(4) இவ்வாறு கர்ணனால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அன்னங்களின் வண்ணத்தில் இருந்த அந்த முதன்மையான குதிரைகளை விருகோதரன் {பீமன்} இருக்கும் இடத்தை நோக்கித் தூண்டத் தொடங்கினான்.(5) இவ்வாறு போர்க்கள ரத்தினமான சல்லியனால் தூண்டப்பட்ட அந்தக் குதிரைகள், பீமசேனனின் தேரை அணுகிப் போரில் கலந்தது.(6)
அதேவேளையில் கர்ணன் அணுகுவதைக் கண்ட பீமன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, கர்ணனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(7) வீரச் சாத்யகி மற்றும் பிருஷதனின் {துருபதனின்} மகனான திருஷ்டத்யும்னன் ஆகியோரிடம் பேசிய அவன் {பீமன்}, நல்லான்மா கொண்ட மன்னர் யுதிஷ்டிரரை நீங்கள் இருவரும் பாதுகாப்பீராக. என் கண்களுக்கு முன்பாகவே பெரும் ஆபத்தான நிலையில் இருந்து அவர் {யுதிஷ்டிரர்} தப்பித்தது மிகக் கடினமாக இருந்தது.(8) துரியோதனின் மனநிறைவுக்காகத் தீய ஆன்மா கொண்ட ராதையின் மகனால் {கர்ணனால்}, மன்னரின் கவசமும், அவரது ஆடைகளும் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிளந்து கிழிக்கப்பட்டன.(9) ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நான் இன்று துயரின் முடிவை எட்டப் போகிறேன். நான் இன்று போரில் கர்ணனைக் கொல்வேன், அல்லது பயங்கரப் போரில் கர்ணன் என்னைக் கொல்வான். நான் இதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(10) இன்று மன்னரை {யுதிஷ்டிரரை} நான் ஒரு புனிதப் பற்றாக {அடைக்கலப் பொருளாக} உன்னிடம் அளிக்கிறேன். மன்னரைப் {யுதிஷ்டிரரைப்} பாதுகாப்பதற்காக உற்சாகம் நிறைந்த இதயங்களுடன், இன்று நீங்கள் முயல்வீராக” என்றான் {பீமன்}.(11)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், ஒரு சிங்க முழக்கத்தால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தபடி அதிரதன் மகனை {கர்ணனை} நோக்கிச் சென்றான்.(12) போரில் மகிழ்பவனான பீமன் வேகமாக முன்னேறுவதைக் கண்ட பலமிக்க மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(13) சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, சினத்தில் நிறைந்திருக்கும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டு மகனை {பீமனைப்} பார். பல ஆண்டுகளாகப் பேணப்பட்ட அவனது {பீமனது} கோபத்தை உன்மீது அவன் கக்க விரும்புகிறான் என்பதில் ஐயமில்லை.(14) இதற்கு முன்னர் இத்தகு வடிவத்தை அவன் {பீமன்} ஏற்றதில்லை. அபிமன்யுவும், ராட்சசன் கடோத்கசனும் கொல்லப்பட்ட போது கூட அவன் இத்தகு வடிவத்தை ஏற்றதில்லை.(15) கோபத்தால் நிறைந்து, யுகமுடிவில் தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் காந்தியோடு கூடிய வடிவை ஏற்று, மூன்று உலகங்களும் சேர்ந்து வந்தாலும் எதிர்க்கவல்லவனாகவே அவன் தெரிகிறான்” என்றான் {சல்லியன்}.(16)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, இவ்வார்த்தைகளை ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சொல்லிக் கொண்டிருந்தபோது, சினத்தால் தூண்டப்பட்ட பீமன் கர்ணனை நோக்கி வந்தான்.(17) போரில் மகிழ்பவனான பீமன் இவ்வாறு அவனை அணுகியதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(18)
{கர்ணன் சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, ஓ! தலைவா, பீமனைக் குறித்து நீர் இன்று என்னிடம் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே என்பதில் ஐயமில்லை.(19) இந்த விருகோதரன் {பீமன்} துணிச்சல்மிக்கவனும், கோபம் நிறைந்த வீரனுமாவான். தன் உடலைப் பாதுகாப்பதில் கவலையற்றவனாகவும், உடல் உறுப்புகளின் பலத்தில் அனைவருக்கும் மேம்பட்டவனாகவும் இருக்கிறான்.(20) விராட நகரத்தில் தலைமறைவு வாழ்வை வாழ்ந்த போது, திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, இவன் {பீமன்}, தனது வெறுங்கரங்களின் வலிமையை மட்டுமே நம்பி, கீசகனையும், அவனது உறவினர்களையும் கமுக்கமாகக் கொன்றான்.(21) கதாயுதத்தை உயர்த்திப் பிடித்த காலனுடன் {காலனான என்னுடன்} அவன் போரிடத் தயாராக இருக்கிறான்.(22) எனினும், அர்ஜுனனை நான் கொல்ல வேண்டும், அல்லது அர்ஜுனன் என்னைக் கொல்ல வேண்டும் என்ற இந்த ஆசையானது என் நாட்கள் {காலம்} முழுவதும் பேணிக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.(23) அந்த எனது ஆசையானது, பீமனுடன் நான் மோதுவதன் விளைவால் இன்று நிறைவேறக்கூடும். நான் பீமனைக் கொன்றாலோ, அவனைத் தேரற்றவனாகச் செய்தாலோ,(24) பார்த்தன் {அர்ஜுனன்} என்னை எதிர்த்து வரக்கூடும். அஃது எனக்கு நன்மையே. இந்த நேரத்தில் ஏற்றதென நீர் நினைப்பதைத் தாமதமில்லாமல் தீர்மானிப்பீராக” என்றான் {கர்ணன்}.(25)
{கர்ணன் சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, ஓ! தலைவா, பீமனைக் குறித்து நீர் இன்று என்னிடம் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே என்பதில் ஐயமில்லை.(19) இந்த விருகோதரன் {பீமன்} துணிச்சல்மிக்கவனும், கோபம் நிறைந்த வீரனுமாவான். தன் உடலைப் பாதுகாப்பதில் கவலையற்றவனாகவும், உடல் உறுப்புகளின் பலத்தில் அனைவருக்கும் மேம்பட்டவனாகவும் இருக்கிறான்.(20) விராட நகரத்தில் தலைமறைவு வாழ்வை வாழ்ந்த போது, திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, இவன் {பீமன்}, தனது வெறுங்கரங்களின் வலிமையை மட்டுமே நம்பி, கீசகனையும், அவனது உறவினர்களையும் கமுக்கமாகக் கொன்றான்.(21) கதாயுதத்தை உயர்த்திப் பிடித்த காலனுடன் {காலனான என்னுடன்} அவன் போரிடத் தயாராக இருக்கிறான்.(22) எனினும், அர்ஜுனனை நான் கொல்ல வேண்டும், அல்லது அர்ஜுனன் என்னைக் கொல்ல வேண்டும் என்ற இந்த ஆசையானது என் நாட்கள் {காலம்} முழுவதும் பேணிக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.(23) அந்த எனது ஆசையானது, பீமனுடன் நான் மோதுவதன் விளைவால் இன்று நிறைவேறக்கூடும். நான் பீமனைக் கொன்றாலோ, அவனைத் தேரற்றவனாகச் செய்தாலோ,(24) பார்த்தன் {அர்ஜுனன்} என்னை எதிர்த்து வரக்கூடும். அஃது எனக்கு நன்மையே. இந்த நேரத்தில் ஏற்றதென நீர் நினைப்பதைத் தாமதமில்லாமல் தீர்மானிப்பீராக” என்றான் {கர்ணன்}.(25)
அளவிலா சக்தி கொண்ட ராதை மகனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் {கர்ணனிடம்},(26) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பெரும் வலிமையைக் கொண்ட பீமசேனனை எதிர்த்துச் செல்வாயாக. பீமசேனனைத் தடுத்த பிறகு நீ பல்குனனை {அர்ஜுனனை} அடையக்கூடும்.(27) ஓ! கர்ணா, உனது நோக்கம் எதுவோ, நீண்ட ஆண்டுகளாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாத்துவரும் ஆசை எதுவோ, அஃது இன்று நிறைவேறும். நான் உனக்கு உண்மையே சொல்கிறேன்” என்று மறுமொழிகூறினான் {சல்லியன்}.(28)
இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், மீண்டும் சல்லியனிடம், “போரில் நான் அர்ஜுனனைக் கொல்வேன், அல்லது அவன் என்னைக் கொல்வான். போரில் உமது இதயத்தை நிலைநிறுத்தி, விருகோதரன் இருக்கும் இடத்திற்குச் செல்வீராக” என்றான் {கர்ணன்}.(29)
இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், மீண்டும் சல்லியனிடம், “போரில் நான் அர்ஜுனனைக் கொல்வேன், அல்லது அவன் என்னைக் கொல்வான். போரில் உமது இதயத்தை நிலைநிறுத்தி, விருகோதரன் இருக்கும் இடத்திற்குச் செல்வீராக” என்றான் {கர்ணன்}.(29)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியன், உமது படையை முறியடித்துக் கொண்டிருந்த அந்தப் பெரும் வில்லாளியான பீமன் இருந்த இடத்திற்கு அந்தத் தேரை வேகமாகச் செலுத்தினான்.(30) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே பீமனும், கர்ணனும் சந்தித்தபோது, எக்காளங்களின் முழக்கமும், பேரிகைகளின் முழக்கமும் எழுந்தன.(31) சினத்தால் நிறைந்த வலிமைமிக்கப் பீமசேனன், வீழ்த்தக்கடினமான உமது துருப்புகளைப் அனைத்துப் பக்கங்களுக்கும், பளபளப்பாக்கப்பட்ட தன் கூரிய கணைகளால் சிதறடிக்கத் தொடங்கினான்.(32) போரில் கர்ணனுக்கும், பாண்டு மகனுக்கும் {பீமனுக்கு} இடையில் நடந்த அம்மோதல், கடுமையையும், அச்சந்தரும் நிலையையும் அடைந்த போது எழுந்த அவ்வொலி பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(33)
தன்னை நோக்கி வரும் பீமனைக் கண்டவனும், வைகர்த்தனன், அல்லது விருஷன் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்டவனுமான கர்ணன், சினத்தால் நிறைந்து, கணைகளால் அவனது {பீமனின்} நடுமார்பைத் தாக்கினான்.(34) அளவிலா ஆன்மா கொண்ட அந்தக் கர்ணன், மீண்டும் கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான். இவ்வாறு சூதன் மகனால் துளைக்கப்பட்ட பீமன், முன்னவனை {கர்ணனை} சிறகு படைத கணைகளால் மறைத்தான்.(35) மேலும் அவன் நேரான ஒன்பது கூரிய கணைகளால் கர்ணனை மீண்டும் துளைத்தான். பிறகு கர்ணன், எண்ணற்ற கணைகளால், பீமனின் வில்லை அதன் கைப்பிடியில் இரண்டாக வெட்டினான்.(36) அவனது {பீமனது} வில்லை வெட்டிய பிறகு, அவன் {கர்ணன்}, பெரும் கூர்மை கொண்டதும், அனைத்து வகைக் கவசங்களையும் ஊடுருவவல்லதுமான கணையொன்றால் மீண்டும் அவனது {பீமனது} நடுமார்பைத் துளைத்தான்.(37) அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட விருகோதரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உடலின் முக்கியப் பகுதிகள் எவை என்பதை முழுமையாக நன்கறிந்தவனாகக் கூரிய கணைகள் பலவற்றால் சூதன் மகனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(38)
வேடனொருவன் சுடர்மிக்கப் பந்தங்கள் பலவற்றால் காட்டில் செருக்குமிக்க மதங்கொண்ட யானை ஒன்றைத் தாக்குவதைப் போலக் கர்ணன் இருபத்தைந்து கணைகளால் அவனை {பீமனைத்} துளைத்தான்.(39) அக்கணைகளால் அங்கங்கள் சிதைக்கப்பட்டுச் சினத்தால் கண்கள் சிவந்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பழிவாங்கும் ஆசையாலும், கோபத்தாலும் உணர்வற்றவனாகி, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, (40) பெரும் வேகம் கொண்டதும், பெரும் கடினத்தைத் தாங்க வல்லதும், மலைகளையே துளைக்கத் தகுந்ததுமான ஒரு சிறந்த கணையைத் தன் வில்லில் பொருத்தினான்.(41) வில்லின் நாண்கயிற்றைத் தன் காதுவரை இழுத்தவனும், காற்றுதேவனின் மகனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, கோபத்தால் நிறைந்து, கர்ணனுக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அந்தக் கணையை ஏவினான்.(42)
வலிமைமிக்கப் பீமனால் இவ்வாறு ஏவப்பட்ட அந்தக் கணை, இடியைப் போன்ற ஒலியை உண்டாக்கி, மலைகளையே துளைத்துச் செல்லும் வஜ்ரத்தைப் போல அந்தப் போரில் கர்ணனைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் தாக்கப்பட்டவனும், (உமது படைகளின்) தலைவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உணர்வற்றவனாகக் கீழே தன் தேர்தட்டில் அமர்ந்தான். (44) அப்போது தன் உணர்வுகளை இழந்து விட்ட சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தை {கர்ணனைத்} அந்தப் போரில் இருந்து தன் தேரில் வெளியே கொண்டு சென்றான்.(45) கர்ணனின் தோல்விக்குப் பிறகு, பீமசேனன், தானவர்களை முறியடிக்கும் இந்திரனைப் போல அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையை முறியடிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(46)
---------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -50ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |