யயாதி ₹.127.00/- |
யயாதியின் கதை மிகப் புராதனமான கதையாகும். யயாதி கருடனின் நண்பன் எனும் போது, இவனது கதை எவ்வளவு பழைமையானது என்பதை நாம் உணரலாம். யயாதி குரு குலத்திற்கும், யாதவக் குலத்திற்கும் பொது மூதாதையாவான். மஹாபாரதம் தவிர்த்து, பாகவத புராணம், வாயு புராணம், பிரமாண்ட புராணம், சிவ புராணம், ஹரிவம்ச புராணம் ஆகியவற்றிலும் இந்த யயாதி பேசப்படுகிறான்.
மஹாபாரதத்தில் இவனது கதை ஆதிபர்வம் பகுதி 75 முதல் 93 வரையும், மீண்டும் உத்யோக பர்வம் பகுதி பகுதி 106 முதல் 122 வரை சொல்லப்படுகிறது.
ஆதிபர்வத்தில் யயாதியையும், அவனது மகன்களையும், பேரர்களையும் பற்றிச் சொல்லப்படுகிறது, உத்யோக பர்வத்தில் அவனது மகளைக் குறித்துச் சொல்லப்படுகிறது. இந்த மின்புத்தகத்தில் இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து முழுமையான கதையாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.
இந்த யயாதியின் கதையில், பல நீதிகள் உரைக்கப்படுவதை நாம் காணலாம், சுக்ராச்சாரியருக்கும், தேவையானிக்கும் இடையில் நடக்கும் உரையாடல், கசனுக்கும், தேவயானிக்கும் இடையில் நடக்கும் உரையாடல், யயாதிக்கும் அவனது பேரர்களுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் ஆகியவை பல நீதிகளைக் குறித்துப் பேசுகின்றன.
சுக்கிராச்சாரியரின் பெண்ணான தேவயானியின் கதை, அக்காலத்தில் பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தில் எவ்வளவு சுதந்திரமாக இருந்தனர் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. யயாதியின் மகளான மாதவியின் கதை சற்றே நெருடலை ஏற்படுத்தினாலும், அங்கேயும் அவளே அனைத்துக் காரியங்களையும் முடிவெடுக்கும் வல்லமையைப் பெற்றிருந்ததையும் காட்டுகிறது. சாண்டிலினி என்ற ஒரு பெண் முனிவர் அக்காலத்தில் எவ்வளவு வல்லமையுடன் இருந்திருக்கிறார் என்பதையும், அசுர குலமகளான சர்மிஷ்டையின் ஆளுமையையும் இக்கதை அருமையாக எடுத்துரைக்கிறது.
பழங்காலத்தில் மதுவைப் புசித்து வந்த பிராமணர்களுக்கு, அது தகாதது என்ற விதி இந்தக் கதையில்தான் ஏற்படுகிறது. யயாதியும் அவனது பேரர்களும் உரையாடும் பகுதி மறுமையைக் குறித்து அதிகம் பேசுகிறது. காலவரும் கருடனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலில், நாற்றிசையிலும் என்னென்ன இருக்கின்றன என்ற தொன்மக் களஞ்சயம் நம் கண் முன்னே விரிகிறது. வர்ணக் கலப்பு மணம் அந்தக் காலத்தில் எவ்வளவு எளிதாக நடந்திருக்கிறது என்பதையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
மஹாபாரதத்தில் வரும் கிளைக்கதைகளில், இந்த யயாதியின் கதை மிக முக்கியமானதாகும். இனி மஹாபாரத மூலத்தில் உள்ளவாறே யயாதியைத் தரிசிப்போம் வாருங்கள்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
https://www.amazon.in/dp/B0756Q5GHL
Product details
- Format: Kindle Edition
- File Size: 1831 KB
- Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
- Language: Tamil
- ASIN: B0756Q5GHL
- Word Wise: Not Enabled
விலை: ₹ 127/-
***************************
மஹாபாரதத்தில் வரும் உபகதைகளில் இது ஐந்தாம் புத்தகமாகும்.
வேறு சில கிண்டில் புத்தகங்களை https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியிலும் http://mahabharatham.arasan.info/p/mahabharata-tamil-short-stories-sidebar.html என்ற சுட்டியிலும் காணலாம்.
***************************
மஹாபாரதத்தில் வரும் உபகதைகளில் இது ஐந்தாம் புத்தகமாகும்.
வேறு சில கிண்டில் புத்தகங்களை https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டியிலும் http://mahabharatham.arasan.info/p/mahabharata-tamil-short-stories-sidebar.html என்ற சுட்டியிலும் காணலாம்.