Showing posts with label சாந்தி பர்வம். Show all posts
Showing posts with label சாந்தி பர்வம். Show all posts

Friday, March 23, 2018

வேங்கையான ஞமலி! - சாந்திபர்வம் பகுதி – 116

A dog transformed into a tiger! | Shanti-Parva-Section-116 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 116)


பதிவின் சுருக்கம் : அச்சத்தில் நடுங்கிய ஒரு நாயானது, ஒரு முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows_Shanti Parva-116
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லோருக்கும் ஞானிகளுக்கும் மத்தியில் அந்த வரலாறானது நல்ல முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.(1) அவ்வரலாறு தற்போதைய தலைப்புக்கு {உரையாடலுக்குத்} தொடர்புடையதாகும். ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} ஆசிரமத்தில், முனிவர்களில் முதன்மையானோர் பலரால் அஃது உரைக்கப்படும்போது நான் கேட்டிருக்கிறேன்.(2) மனிதர்கள் வசிக்காத ஒரு பெருங்காட்டில், கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன், கடுந்தவங்களை நோற்கும் ஒரு தவசி வாழ்ந்து வந்தார்.(3) அவர், கடும் விதிமுறைகள் மற்றும் தன்னடக்கத்தை நோற்பவராக, அமைதியான மற்றும் தூய்மையான ஆன்மா கொண்டவராக, வேதம் ஓதுவதில் எப்போதும் கவனம் உள்ளவராக, நோன்புகளால் இதயம் தூய்மை அடைந்தவராக, அனைத்து உயிரினங்களிடமும் நற்பண்புகளுடன் நடந்து கொள்ளும் ஒரு வாழ்வைப் பின்பற்றி வந்தார்.(4) பெரும் நுண்ணறிவுடன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவரது நல்லியல்பானது, காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களாலும் அறியப்பட்டதே என்பதால், அவை அவரை அன்புடன் அணுகி வந்தன.(5)

பணியாட்கள்! - சாந்திபர்வம் பகுதி – 115

Servants! | Shanti-Parva-Section-115 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 115)


பதிவின் சுருக்கம் : மன்னனால் பணியமற்றத்தப்படும் மனிதர்களின் தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra on his death bed of arrows_ Shanti Parva-115
Bhishma advises Yudhistra on his death bed of arrows_
Shanti Parva-115
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானத்தைக் கொண்டவரே, என்னைக் குழப்பத்தில் பெரும் ஐயம் ஒன்று எனக்கிருக்கிறது. ஓ! மன்னா, நீர் அக்குறை தீர்க்க வேண்டும். நீர் நமது குடும்பத்தை முன்னேற்றமடையச் செய்பவராவீர்.(1) தீய நடத்தையும், தீய ஆன்மாவும் கொண்ட இழிந்தவர்கள் பேசும் அவதூறுகளைக் குறித்து எங்களிடம் உரையாடினீர். எனினும், நாம் உம்மை மேலும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.(2) நாட்டுக்கு எது நன்மையோ, அரச குலத்திற்கு எது மகிழ்ச்சியை உண்டாக்குமோ, எதிர்காலத்திலும், நிகழ்காலத்திலும் எது நன்மையையும் முன்னேற்றத்தையும் உண்டாக்குமோ,(3) உணவு, பானம் மற்றும் இந்த உடல் தொடர்புடையவற்றில் எது நன்மையோ, அதைக்குறித்து நீர் உரையாட வேண்டுமென நான் விரும்புகிறேன்.(4) அரியணையில் அமர்த்தப்பட்டு, நண்பர்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் சூழ அதில் தொடர்ந்திருக்கும் {தொடர்ந்து அமர்ந்திருக்கும்} மன்னன், தன் மக்களை எவ்வாறு நிறைவுகொள்ளச் செய்ய வேண்டும்?(5)

Thursday, March 22, 2018

வசையும், அவதூறும்! - சாந்திபர்வம் பகுதி – 114

Reproaches and Slanders! | Shanti-Parva-Section-114 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 114)


பதிவின் சுருக்கம் : சபைகளில் அற்பர்களால் வசைமாரி பொழியப்படும்போதும், அவதூறு செய்யப்படும் போதும், அதைப் பொறுத்துக் கொள்ளும் நல்லோன் அடையும் பயனைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows_Shanti Parva-114
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இறுமாப்பில் பெருகியவனும், அறியாமை கொண்டவனுமான ஒரு மனிதனால், சபைகளுக்கு மத்தியில் வைத்து கடுஞ்சொற்களால் தாக்கப்படும்போது, அடக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல்விமான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)

பணிவு! - சாந்திபர்வம் பகுதி – 113

Docility! | Shanti-Parva-Section-113 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 113)


பதிவின் சுருக்கம் : பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் பலவீனமான மன்னன், பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows_Shanti Parva-113
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதிப்புமிக்க உடைமையான ஒரு நாட்டை அடைந்தும், வழக்கமான துணைகள் ஏதுமில்லாத ஒரு மன்னனானவன், ஒரு பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டான்.(1)

Wednesday, March 21, 2018

சோம்பேறி ஒட்டகம்! - சாந்திபர்வம் பகுதி – 112

An idle Camel! | Shanti-Parva-Section-112 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 112)


பதிவின் சுருக்கம் : சோம்பலால் உண்டாகும் தீங்கைக் குறித்து ஓர் ஒட்டகத்தின் கதை மூலம் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhisma, "An idle Camel!" | Shanti-Parva-Section-112 | Mahabharata
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மன்னனால் எச்செயல்கள் செய்யப்பட வேண்டும்? எச்செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவான்? ஓ கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே, இஃதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

நரியும், புலியும்! - சாந்திபர்வம் பகுதி – 111

The jackal and the tiger! | Shanti-Parva-Section-111 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 111)


பதிவின் சுருக்கம் : நல்லோரையும், தீயோரையும் வேறுபடுத்திப் பார்ப்பது எவ்வாறு? புலிக்கு அமைச்சராகச் செயல்பட்ட நல்ல நரியின் கதை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhisma, "The jackal and the tiger"_Shanti-Parva-Section-111 | Mahabharata In Tamil

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இங்கே பல மனிதர்கள் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோராக இல்லையெனினும், வெளிப்புறத்தோற்றத்தில் அமைதி நிறைந்த ஆன்மா கொண்டோராகத் தெரிகின்றனர். மேலும் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோர் வேறு வகையில் தெரிகின்றனர். ஓ! ஐயா, இம்மனிதர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?” எனக் கேட்டான்.(1)

Monday, March 19, 2018

கிருஷ்ணனே நாராயணன்! - சாந்திபர்வம் பகுதி – 110

This Krishna is that Narayana! | Shanti-Parva-Section-110 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 110)


பதிவின் சுருக்கம் : உயிரினங்களால் துன்பங்களை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும், நாராயணனே அனைத்தின் புகலிடம் என்பதையும், கிருஷ்ணனே அந்த நாராயணன் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கிட்டத்தட்ட தொடர்ச்சியாகவே பல்வேறு வழிகளில் உயிரினங்கள் பீடிக்கப்படுவது {துன்புறுவதும்} காணப்படுகிறது. ஓ பாட்டா, அந்தக் கடினமான துன்பங்கள் அனைத்தில் இருந்தும் ஒருவன் விடுபடக்கூடிய வழியென்ன?” என்று கேட்டான்.(1)

Sunday, March 18, 2018

ஸநாதன தர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 109

Eternal Virtue! | Shanti-Parva-Section-109 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 109)


பதிவின் சுருக்கம் : உண்மை மற்றும் பொய்ம்மையின் பண்புகளையும், அவையிரண்டும் பயன்படுத்தப்பட வேண்டிய நேரங்களையும், அழிவில்லா அறமான நித்திய கடமையையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, அறத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, கல்விமானான நீர் என்னால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பீராக.(1) உண்மை மற்றும் பொய்ம்மை ஆகியன உலகங்கள் அனைத்தையும் சூழ்ந்தபடியே இருக்கின்றன. ஓ! மன்னா, அறத்தில் உறுதியாக இருக்கும் மனிதன் இவை இரண்டில் எதைப் பின்பற்ற வேண்டும்?(2) மேலும், உண்மை என்றால் என்ன? பொய்ம்மை என்றால் என்ன? மேலும் அழிவில்லா அறம் {ஸநாதன தர்மம்} என்பது என்ன? எச்சமயத்தில் ஒரு மனிதன் உண்மையைச் சொல்ல வேண்டும், மேலும் எச்சமயத்தில் பொய்யைச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டான்.(3)

Saturday, March 17, 2018

தாய், தந்தை, ஆசான்! - சாந்திபர்வம் பகுதி – 108

Mother, Father and Preceptor! | Shanti-Parva-Section-108 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 108)


பதிவின் சுருக்கம் : கடமைகள் அனைத்திலும் முக்கியமானவை எவை என யுதிஷ்டிரன் கேட்பது; தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே முக்கியக் கடமை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷமரிடம்}, "கடமையின் பாதை நீண்டதாகும். ஓ! பாரதரே, மேலும் அது பல கிளைகளைக் கொண்டதாக இருக்கிறது. எனினும், உம்மைப் பொறுத்தவரையில், நடைமுறையில் பின்பற்ற மிகத் தகுந்தவை எவை?(1) உம்மைப் பொறுத்தவரையில், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தகுதியை எனக்கு ஈட்டித் தருபவையும், கடமைகள் அனைத்திலும் மிக முக்கியமானவையுமான செயல்கள் எவை?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “என்னைப் பொறுத்தவரையில் தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே மிக முக்கியமானது. இம்மையில் அக்கடமையைச் செய்யும் மனிதன், பெரும் புகழையும், புகழுலகங்கள் பலவற்றையும் ஈட்டுவதில் வெல்கிறான்.(3) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, அறத்திற்கு இசைவாகவோ, இல்லாமலோ அவர்களால் ஆணையிடப்படும் எதுவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(4) அவர்கள் தடை செய்ததை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவர்கள் எதை ஆணையிடுவார்களோ, அஃது எப்போதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.(5) மூவுலகங்கள் அவர்களே. மூன்று வாழ்வுமுறைகளும் அவர்களே. மூன்று வேதங்களும் அவர்களே. மூன்று புனித நெருப்புகளும் அவர்களே.(6) கார்ஹபத்ய நெருப்பாகத் தந்தை சொல்லப்படுகிறார்; தக்ஷிண நெருப்பாகத் தாய் சொல்லப்படுகிறார்; ஆகுதி ஊற்றப்படும் {ஆஹவநீ} நெருப்பாக ஆசான் சொல்லப்படுகிறார். உண்மையில் இந்த மூன்று நெருப்புகளும் மிக உயர்ந்தவையாகும். இந்த மூன்று நெருப்புகளிலும் நீ கவனத்தோடு இருந்தால், மூவுலகங்களையும் நீ வெல்வாய்.(7)

Friday, March 16, 2018

உயர்குடியினர்! - சாந்திபர்வம் பகுதி – 107

Aristocrats! | Shanti-Parva-Section-107 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 107)


பதிவின் சுருக்கம் : உயர்குடியினருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமை உண்டாகும் காரணங்கள்; உயர்குடியினர் ஒற்றுமையுடன் இருந்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள்; பெருந்திரள் மக்களைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காக்கக்கூடிய உயர் குடியினர் யாவர்; உயர்குடியினர் மன்னனிடம் இருந்து விலக வழிவகுக்கும் காரணங்கள்; உயர்குடியினரால் நாட்டுக்கு ஏற்படும் அச்சம்; உயர்குடியினருக்கு மத்தியில் உண்டாகக்கூடிய வேற்றுமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விரிவாகச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! எதிரிகளை எரிப்பவரே, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களுக்குரிய கடமைகளின் வழி, பொது நடத்தை {ஒழுக்கம்}, வாழ்வாதார வழிமுறைகள் ஆகியவற்றையும், அவற்றின் விளைவுகளையும் நீர் விளக்கிச் சொல்லியிருக்கிறீர்.(1) மன்னர்களின் கடமைகள், அவர்களின் கருவூலங்கள், அவற்றை நிரப்பும் வழிமுறைகள், படையெடுப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறித்தும் சொன்னீர். அமைச்சர்களின் சிறப்பியல்புகள், குடிமக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள்,(2) ஒரு நாட்டினுடைய ஆறு அங்கங்களின் சிறப்பியல்புகள், படைகளின் தரம், தீயோரை அடையாளங்காணும் வழிமுறைகள், நல்லோரின் அறிகுறிகள்,(3) நடுநிலையுடன் இருப்போர், தாழ்ந்தோர், மேன்மையானோர் ஆகியோரின் பண்புகள், முன்னேற்றத்தை விரும்பும் மன்னன் பெருந்திரள் மக்களிடம் பின்பற்ற வேண்டிய நடத்தை,(4) பலவீனர்கள் பாதுகாக்கப்பட்டுப் பேணி வளர்க்கப்பட வேண்டிய பாங்கு ஆகியவற்றைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! பாரதரே, இந்தக் காரியங்கள் அனைத்தையும் குறித்து, புனித உடன்படிக்கைகளில் ஆழப் பதியப்பட்டிருக்கும் அறிவுரைகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்.(5)

Thursday, March 15, 2018

அமைதி நிறுவலே உயர்கடமை! - சாந்திபர்வம் பகுதி – 106

Establishment of peace is the highest duty! | Shanti-Parva-Section-106 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 106)


பதிவின் சுருக்கம் : க்ஷேமதர்சினுக்கும், ஜனகனுக்கும் இடையில் நட்பை ஏற்படுத்திய காலகவிருக்ஷீயர்; க்ஷேமதர்சினை மரியாதையுடன் நண்பனாய் ஏற்று அவனுடன் உரையாடிய ஜனகன்; அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும் என்பதை விளக்க இந்தக் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Janaka and Kshemadarcin - Mahabharata  ஜனகன் _ 
க்ஷேமதர்சின்_மகாபாரதம்

மன்னன் {க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, "ஓ! பிராமணரே, வஞ்சகம், அல்லது மோசடியின் மூலம் வாழ்வைத் தாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. செல்வமானது எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும், நியாயமற்ற வழிமுறைகளில் ஈட்டப்படும் செல்வத்தை நான் விரும்பவில்லை.(1) நமது உரையாடலின் தொடக்கத்திலேயே நான் இந்த வழிமுறைகளைத் தவிர்த்தேன். நிந்தனைக்கு வழிவகுக்காதவையும், அனைத்து வகையிலும் எனக்கு நன்மையே செய்பவையும், விளைவுகளில் தீங்கில்லாதவையுமான செயல்களை மட்டுமே செய்து இந்த உலகில் நான் வாழ விரும்புகிறேன். நீர் சுட்டிக்காட்டும் வழிகளைப் பின்பற்ற இயலாதவனாக நான் இருக்கிறேன். உண்மையில், இந்தப் போதனைகள் எனக்குத் தகாது" என்றான்.(2,3)

Wednesday, March 14, 2018

நன்கு தீட்டப்பட்ட வஞ்சகத் திட்டங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 105

Fraud Schemes well-devised! | Shanti-Parva-Section-105 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 105)


பதிவின் சுருக்கம் : பகைவர்களை வெல்வதற்குப் பின்பற்றக்கூடிய வஞ்சகத் திட்டங்களைக் குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Kshemadarcin and Kalakavrikshiya - Mahabharata  க்ஷேமதர்சின் _ காலவிருக்ஷீயர் -மகாபாரதம்

தவசி {காலகவிருக்ஷீயர் கோசல நாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்} சொன்னார், "ஓ! க்ஷத்திரியா, மறுபுறம், உன் நாட்டை மீட்பதற்கு உனக்கு இன்னும் ஆற்றல் இருப்பதாக நினைத்தால், நீ   பின்பற்ற வேண்டிய கொள்கை வழியைக் குறித்து உன்னோடு உரையாடுவேன்.(1) அந்தக் கொள்கை வழியை நீ பின்பற்றி, முயற்சி செய்ய முனைந்தால், உன்னால் உன் செழிப்பை மீட்க முடியும். விபரமாக நான் உனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் கவனமாகக் கேட்பாயாக. அந்த ஆலோசனைகளின்படி உன்னால் செயல்பட முடிந்தால், அபரிமிதமான செல்வத்தையும், உண்மையில், உனது நாட்டையும், அரசு அதிகாரத்தையும், பெருஞ்செழிப்பையும் நீ அடைவாய்.(3) ஓ! மன்னா, நீ அதை விரும்பினால் எனக்குச் சொல்வாயாக, அப்போது நான் உனக்கு அந்தக் கொள்கையைக் குறித்துச் சொல்வேன்" {என்றார் காலகவிருக்ஷீயர்}.(4)

Tuesday, March 13, 2018

க்ஷேமதர்சினும், காலகவிருக்ஷீயரும்! - சாந்திபர்வம் பகுதி – 104

Kshemadarcin and Kalakavrikshiya! | Shanti-Parva-Section-104 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 104)


பதிவின் சுருக்கம் : நாட்டை இழந்தவனும், அறவோனுமான மன்னனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Kshemadarcin and Kalakavrikshiya - Mahabharata

க்ஷேமதர்சின் _ காலவிருக்ஷீயர் -மகாபாரதம் 
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தன் சொந்த அதிகாரிகளாலேயே எதிர்க்கப்படுபவனும், கருவூலமும், படையும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதவனும், செல்வமில்லாதவனும், அறவோனுமான ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவதற்காகத் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)

Monday, March 12, 2018

எவன் தீயவன்! - சாந்திபர்வம் பகுதி – 103

Who is a wicked man! | Shanti-Parva-Section-103 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 103)


பதிவின் சுருக்கம் : எதிரியை வெற்றி கொள்வது குறித்தும், தீயவர்களின் அறிகுறிகளைக் குறித்தும் இந்திரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Vrihaspati and Indra, Mahabharata (பிருஹஸ்பதியும் இந்திரனும் மகாபாரதம்)
யுதிஷ்டிரன் {பீமரிடம்}, "ஓ! பாட்டா, மென்மையான எதிரியிடமும், கடுமையான எதிரியிடமும், பல கூட்டாளிகளையும், பெரிய படையையும் கொண்ட ஒருவனிடமும் ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)

Sunday, March 11, 2018

இணக்கக்கலை! - சாந்திபர்வம் பகுதி – 102

The art of conciliation! | Shanti-Parva-Section-102 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 102)


பதிவின் சுருக்கம் : வெற்றிபெறத்தக்க அறிகுறிகள் மற்றும் சகுனங்களையும், போர் தொடுக்கும் முன்பும், போரிடும்போதும், வெற்றியடைந்த பிறகும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும், சமரசக் கலையைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படை அடையப் போகும் (எதிர்கால) வெற்றியின் நன்கறியப்பட்ட அறிகுறிகள் என்னென்ன? நான் அவற்றை அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1)

Thursday, March 08, 2018

போர்வீரர்களின் அங்கலக்கணம்! - சாந்திபர்வம் பகுதி – 101

The indications of warriors! | Shanti-Parva-Section-101 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 101)


பதிவின் சுருக்கம் : எந்தெந்த நாடுகளைச் சார்ந்தோர், எந்தெந்தப் போர்முறைகளில் வல்லவர்கள் என்பதையும், போர்வீரர்களின் அங்க அடையாளங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "போருக்குத் தகுந்தவர்களாகத் தங்களை வகைப்படுத்திக் கொள்ளப் போராளிகள் என்ன மனநிலையை மற்றும் என்ன நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும்? எவ்வாறு ஆயுதந்தரித்திருக்க வேண்டும்?" என்று கேட்டான்.(1)

போர்த்திட்டப் பயன்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 100

Application of means and contrivances! | Shanti-Parva-Section-100 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 100)


பதிவின் சுருக்கம் : உண்மை, அறிவு, நன்னடத்தை மற்றும் திட்டத்துடன்கூடிய வழிமுறைகளால் அறம் உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்றும் அவற்றில் திட்டத்துடன் கூடிய வழிமுறைகளே உடனடி பலன்களை உண்டாக்கவல்லைவை என்றும் சொல்லும் பீஷ்மர், அவற்றைக் குறித்து மேலும் விரிவாகச் சொல்வது...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, வெற்றியை விரும்பும் மன்னர்கள், அறவிதிகளுக்குச் சற்றே எதிராகச் செயல்பட்டாவது போரில் தங்கள் துருப்புகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்?"(1)

Monday, March 05, 2018

வீரனும், கோழையும்! - சாந்திபர்வம் பகுதி – 99

Hero and coward! | Shanti-Parva-Section-99 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 99)


பதிவின் சுருக்கம் : மிதிலையின் மன்னன் ஜனகன் தன் படைகளை உற்சாகப்படுத்திப் போருக்கு அனுப்பிய வரலாற்றையும், அணிவகுத்தல், பகைவரைத் துரத்துதல், வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, பிரதர்த்தனனுக்கும், மிதிலையின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1) மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், போரெனும் வேள்வியில் தன்னை நிறுவிக் கொண்ட பிறகு, (அப்போரின் தொடக்கத்தில்) தன் துருப்புகள் அனைத்தையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான். ஓ! யுதிஷ்டிரா, நான் அக்கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) அனைத்தின் உண்மையை அறிந்தவனும், மிதிலையின் உயர் ஆன்ம மன்னனுமான ஜனகன், தன் போர்வீரர்களுக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் காட்டினான்.(3) அவன் {ஜனகன்} அவர்களிடம் {தன் படைவீரர்களிடம்}, "அச்சமில்லாமல் போரிடுபவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், பெரும் காந்தியைக் கொண்டவையுமான இவ்வுலகங்களைப் பார்ப்பாயாக. கந்தர்வப் பெண்கள் நிறைந்த அந்த உலகங்கள், விருப்பம் அனைத்தையும் அருள வல்லவையும், அழிவற்றவையுமாகும்.(4) மறுபுறம், போரில் இருந்து தப்பி ஓட நினைப்போருக்கான நரக உலகங்கள் அதோ இருக்கின்றன. அவர்கள் அங்கே அழிவில்லாமல் நீடிக்கும் மகிமையின்மையில் அழுகுவார்கள்.(5) உங்கள் உயிரைக் கைவிடத் தீர்மானித்து, உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீராக. மகிமையற்ற நரகத்தில் வீழ்ந்துவிடாதீர்கள். வீரர்களைப் பொறுத்தவரையில், (போரில்) உயிரை விடுவதே சொர்க்கத்திற்கான அவர்களின் இன்பக் கதவாகும்" என்றான் {ஜனகன்}.(6)

அம்பரீஷனும், இந்திரனும்! - சாந்திபர்வம் பகுதி – 98

Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 98)


பதிவின் சுருக்கம் : சுதேவனின் வரலாற்றையும், போர் எனும் வேள்வியில் ரித்விக்குகள், சத்யஸ்கள் முதலிய அங்கங்களையும், போரில் இறந்தவர்கள் அடையும் உலகங்களையும் இந்திரன் அம்பரீஷனுக்குச் சொன்னது...


Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, புறமுதுகிடாமல் போரில் மரணமெய்தும் வீரர்கள் ஈட்டும் உலகங்கள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Saturday, March 03, 2018

வீரம்! - சாந்திபர்வம் பகுதி – 97

Heroism! | Shanti-Parva-Section-97 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 97)


பதிவின் சுருக்கம் : மன்னர்கள் குற்றமற்றவர்களாக ஆகும் வழிமுறைகள்; மன்னன் ஏன் ஒரு வேள்வியின் தன்வடிவமாகச் சொல்லப்படுகிறான்? அச்சத்திலிருப்போரைப் போராதுகாத்தல் மற்றும் அச்சமின்மை ஆகிய வீரர்களின் பண்புகள்; நோய்ப்படுக்கையில் மரணம் மற்றும் வீரமரணம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, க்ஷத்திரியர்களின் நடைமுறைகளைவிடப் பாவம் நிறைந்தவை வேறெவையும் இல்லை. போருக்கு அணிவகுத்துச் செல்லும் போதோ, போரிலோ மன்னன் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொல்கிறான்[1].(1) எந்தச் செயல்பாடுகளின் மூலம் மன்னன் புகழ் உலகங்களை வெல்கிறான்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! கல்விமானே நான் அறிய விரும்பும் இவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top