Monday, December 31, 2018

முயற்சியின் சிறப்பு! - அநுசாஸனபர்வம் பகுதி – 06

The greatness of exertion! | Anusasana-Parva-Section-06 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 06)


பதிவின் சுருக்கம் : முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டுக்குமிடையில் எது சக்திமிக்கது என்பதை விளக்க பிரம்மனுக்கும் வசிஷ்டருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்ற ஐயா, முயற்சி மற்றும் விதி ஆகியவற்றில் எது சக்திமிக்கது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, வசிஷ்டருக்கும், பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை கருத்தில் கொள்ளத்தக்க விளக்கமாக இருக்கிறது.(3) புகழத்தக்கவரான வசிஷ்டர் பழங்காலத்தில் பிரம்மனிடம், இப்பிறவியில் ஓர் உயிரினத்தால் அடையப்பட்ட கர்மம், அல்லது முற்பிறவிகளில் அடையப்பட்டவை (விதி என்றழைக்கப்படுவது) ஆகிய இரண்டில் அதன் வாழ்வை வடிவமைப்பதில் எது அதிகச் சக்தி கொண்டது என்று கேட்டார்.(3) அப்போது, ஓ! மன்னா, ஆதி தாமரையில் இருந்து உதித்த பெருந்தேவனான பிரம்மன், அறிவுக்குப் பொருத்தமான பொருள் நிறைந்த சீரிய சொற்களால் அவருக்குப் பதிலளித்தான்.(4)

பிரம்மன் {வசிஷ்டரிடம்}, "வித்தில்லாமல் எதுவும் இருப்புக்கு வருவதில்லை. வித்தில்லாமல் கனிகள் வளர்வதில்லை. வித்தில் இருந்து வேறு வித்துகள் முளைக்கின்றன. எனவே, கனிகள் வித்திலிருந்து உண்டாகின்றன என அறியப்படுகிறது[1].(5) உழவன் வயலில் விதைக்கும் நல்ல அல்லது தீய வித்துகளைப் போலவே அவன் நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களை} அறுவடை செய்கிறான்.(6) உழுதாலும் வித்துகள் விதைக்கப்படாத மண் கனியற்றுப் போவதைப் போலவே, தனிப்பட்ட முயற்சி இல்லாமல் விதியால் எந்தப் பயனையும் அளிக்க முடியாது.(7) ஒருவன் செய்யும் முயற்சி மண் போன்றது, விதியோ (அல்லது முற்பிறவி செயல்களின் தொகையோ) வித்தாக ஒப்பிடப்படுகிறது. மண்ணும் வித்தும் கலப்பதில் இருந்தே அறுவடை விளைகிறது.(8) செயலைச் செய்பவன் தான் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் கனிகளை அறுவடை செய்வதும்; நற்செயல்களில் இருந்து மகிழ்ச்சி விளைவதும் மற்றும் தீச்செயல்களில் இருந்து துன்பம் விளைவதும்; செய்யப்படும் செயல்கள் எப்போதும் கனிவதும் {பலன் தருவதும்}; செய்யப்படாத செயல்களில் கனிகள் உண்டாகாததும் {பயனில்லாமல் போவதும்} இவ்வுலகில் தினந்தோறும் காணப்படுகிறது.(9,10)

[1] கும்பகோணம் பதிப்பில், "வித்திலிருந்து முளை முளைக்கிறது. முளையிலிருந்து இலையுண்டாகிறது. இலையிலிருந்து காம்பு உண்டாகிறது. காம்பிலிருந்து கிளை உண்டாகிறது. கிளையிலிருந்து மலர் உண்டாகிறது. மலரிலிருந்து கனியுண்டாகிறது. கனியினால் வித்து ஏற்படுகிறது. வித்திலிருந்து திரும்பவும் உற்பத்தி ஆகிறது. வித்தில்லாமல் ஒன்றும் உண்டாவதில்லை. வித்தின்றிப் பழமில்லை. வித்திலிருந்து வித்துண்டாகிறது. வித்தில்லலாவிடில் பலனில்லை" என்றிருக்கிறது.

நற்செயல்களைச் செய்யும் மனிதன் நற்பேற்றுடன் கூடிய தகுதிகளை {புண்ணியங்களை} ஈட்டுகிறான், அதே வேளையில், ஒரு சோம்பேறி தன் நிலையில் இருந்து வீழ்ந்து, புண்ணில் உப்புநீர் செலுத்தப்படுவது போன்ற தீமையை அறுவடை செய்கிறான்.(11) அர்ப்பணிப்புமிக்கச் செயல்பாட்டின் மூலம் ஒருவன் அழகு, நற்பேறு மற்றும் பல்வேறு வகை வளங்களை அடைகிறான். முயற்சியின் மூலம் அனைத்தையும் அடையலாம்; ஆனால் முயற்சியற்ற ஒரு மனிதனால் விதியால் மட்டுமே ஒன்றையும் அடைய முடியாது.(12) இவ்வாறே ஒருவன் சொர்க்கத்தையும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, தனிப்பட்ட வகையில் செய்யும் நல்ல முயற்சியின் மூலம் தன் இதய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறான்.(13) ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்கள் அனைத்தும் , தேவர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும், சூரியன், சந்திரன், காற்று ஆகிய அனைத்தும், தங்கள் சொந்த செயல்பாடு என்ற உழைப்பின் மூலமே மனித நிலையில் இருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சியில் அந்த உயர்ந்த நிலைகளை அடைந்தனர்.(14) வளங்கள், நண்பர்கள், பரம்பரையாக வழிவழியாகத் தொடரும் செழிப்பு, வாழ்வின் சிறப்புகள் ஆகியற்றை முயற்சியற்றவர்கள் அடைவது மிகக் கடினமாகும்.(15)

பிராமணன் புனித வாழ்வின் மூலமும், க்ஷத்திரியன் ஆற்றலின் மூலமும், வைசியன் உடல் உழைப்பின் மூலமும், சூத்திரன் தொண்டின் மூலமும் செழிப்பை அடைகின்றனர்.(16) வளங்களும், இன்பத்திற்குரிய பிற பொருட்களும், கஞ்சனையோ, திறனற்றவனையோ, சோம்பேறியையோ ஒருபோதும் அடையாது. மேலும், சுறுசுறுப்போ, ஆண்மையோ, அறம்சார்ந்த தவமோ இல்லாத மனிதனால் இவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(17) தைத்தியர்கள் மற்றும் தேவர்கள் அனைவருடன் கூடிய மூவுலகங்களையும் படைத்தவனும், துதிக்கப்பட வேண்டியவனுமான விஷ்ணுவே கூட, ஆழக்கடலில் தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.(18) ஒருவனுடைய கர்மம் எக்கனியையும் தரவில்லையெனில், செயல்பாடுகள் அனைத்தும் கனியற்றுப் போகும்; மனிதர்களும் விதியை நம்பி சோம்பேறிகளாக இருப்பார்கள்.(19) மனித செயல்முறைகளைப் பின்பற்றாமல் விதியை மட்டுமே நம்பும் ஒருவன், திறனற்ற கணவனைக் கொண்ட ஒரு பெண்ணைப் போல வீணாவான்.(20)

இம்மையில் முயற்சியில்லாமல் மறுமையின் இன்ப துன்பங்களை ஒருவன் உணர்வதைப் போலச் சாதகமில்லாத விதியுடன் இவ்வுலகில் நன்மை தீமையை உணர்வது பெரிதல்ல[2].(21) சரியாக முயற்சிக்கப்படும் மனித சக்தியை விதி பின்தொடருமே அன்றி முயற்சியில்லாத இடத்தில் விதியால் மட்டுமே எந்த நன்மையையும் செய்துவிட முடியாது.(22) தேவலோகங்களில் தேவர்களின் நிலைகளே நிலையில்லாதவையாகக் காணப்படும்போது, சரியான கர்மமில்லாமல் தேவர்களால் தங்கள் நிலைகளையோ, பிறரின் நிலைகளையோ எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும்?[3](23) இவ்வுலகில் பிறரின் நற்செயல்களைத் தேவர்கள் எப்போதும் அங்கீகரிப்பதில்லை. (அந்த நற்செயல்களால்) தாங்கள் வீழ்வோம் என்று உணர்வதால், அவர்கள் பிறரின் செயல்களைத் தடை செய்கின்றனர்.(24) தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையில் நிலையான பகை இருக்கிறது, அவர்கள் அனைவரும் தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டுமென்றாலும், அனைத்துக் கர்மங்களையும் விதியே தொடங்கி வைப்பதால், விதி என்ற ஏதும் இல்லை என்று ஒருபோதும் கூற முடியாது[4].(25)

[2] "விதி சாதமாக இல்லையென்றாலும், இவ்வுலகைப் பொறுத்தவரையில் பெரிய அச்சமேதும் கொள்ளும் அவசியமில்லை. ஆனால், முயற்சி இல்லாமல் இருப்பது, மறுமையைப் பொறுத்தவரையில் பேரச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என இங்கே பொருள் கொள்ளத் தோன்றுகிறது. ஏனெனில், இங்கே இருக்கும்போது ஒருவன் அறச்செயல்களைச் செய்யவில்லையெனில் மறுமையில் அவனால் மகிழ்ச்சியை ஒருபோதும் அடையமுடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புண்யபாவங்களுக்குத் தேவலோகத்தில் சீக்ரமாகப் பயனுண்டாவது போல மானிட லோகத்தில் உண்டாவதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இம்மானிடவுலகில் நல்ல மற்ற தீய செயல்களில் ஒருவன் பெரிதான அச்சமேதும் அடையக்கூடாது. தேவர்களின் உலகில் சிறு அச்சமும் இல்லாதிருப்பது அதைவிட முக்கியமானது" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "தேவர்களிலும் அவரவர் நிலைமைகள் நிலையற்றனவாகக் காணப்படுகின்றனவே. தெய்வத்தையே ஸாதிப்பவனுக்கு அது செய்கையில்லாமல் எப்படி நிற்கும்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்களின் நிலையும் தற்காலிகமானதாகவே தெரிகின்றன. செயல்கள் இல்லாமல் தேவர்களால் தாங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிலைகளில் எவ்வாறு நீடிக்க முடியும்?" என்றிருக்கிறது.

[4] கும்பகோணம் பதிப்பில், "ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் எப்போதும் விரோதமிருக்கிறது. தெய்வமும் காரணமாயிருப்பதனால் அது இல்லையென்று யார் சொல்லக்கூடும்? தெய்வாதீனமாக நடக்கும் காரியம் உண்டாவதெப்படி?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்கள் இவ்வுலகில் செய்யப்படும் நல்ல செயல்கள் எதுவும் தங்களைத் தங்கள் நிலைகளில் இருந்து விழச்செய்யும் என்ற காரணத்தால் அவற்றை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. இக்காரணத்தினாலேயே எப்போதும் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கு இடையில் மோதலேற்படுகிறது. எனவே, தேவர்களே இதைத் தீர்மானத்தில் விதியைக் குறித்து ஒருவன் எவ்வாறு பேச முடியும்?" என்றிருக்கிறது.

தொடக்கத்தில் இருந்தே மனித செயல்பாட்டின் மூலம் விதி உண்டாகிறதென்றால், கர்மம் எவ்வாறு உண்டாகிறது? இந்த வழிமுறைகளின் மூலம் தேவலோகங்களிலேயே பல அறங்கள் {நற்செயல்கள்} வளர்கின்றன என்பதே (இதற்கான பதிலாகும்).(26) ஒருவன் தானே தன் நண்பனாகவும், பகைவனாகவும், தன் நல்ல மற்றும் தீச்செயல்களின் சாட்சியாகவும் இருக்கிறான்.(27) நன்மையும் தீமையும் கர்மத்தின் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. நல்ல மற்றும் தீய செயல்கள் போதுமான விளைவுகளைத் தருவதில்லை.(28) அறமே தேவர்களின் புகலிடமாக இருக்கிறது, அறத்தின் மூலமே அனைத்தும் அடையப்படுகின்றன. நல்லொழுக்கம் மற்றும் அறத்தை அடைந்த மனிதனை விதி தடுப்பதில்லை[5].(29)

[5] கும்பகோணம் பதிப்பில், "செய்கருமம் ஒன்று கெடுமாயின் பெருமுயற்சியால் கூடி வரும். நல்வினையும் தீவினையும் புண்யமும் பாவமும் முயற்சியில்லாதவனுக்கு வருமா? தேவலோகமும் புண்ய பலனே. எவையும் புண்யங்களாலேயே அடையப்படுகின்றன. புண்யமில்லாத மனிதனையடைந்து, தெய்வம் என்ன என்ன செய்யக்கூடும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தெய்வீகம் மங்கலத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அனைத்தும் மங்கலத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மங்கலச் செயல்களைச் செய்யும் மனிதன் அனைத்தையும் அடைகிறான். தேவர்களால் என்ன செய்ய முடியும்?" என்றிருக்கிறது.

பழங்காலத்தில் யயாதி, சொர்க்கத்தின் உயர்ந்த நிலையில் இருந்து பூமியில் விழுந்தாலும், அறம்சார்ந்த தன் பேரப்பிள்ளைகளின் {தௌஹித்ரர்களால் / மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளின்} நற்செயல்களால் மீண்டும் தேவலோகத்தை அடைந்தான்.(30) ஐலனின் வழித்தோன்றலாகக் கொண்டாடப்படும் அரச முனியான புரூரவஸ், பிராமணர்களின் பரிந்துரையால் சொர்க்கத்தை அடைந்தான்.(31) அஸ்வத்தாமன் மற்றும் ராமர் {பரசுராமர்} ஆகியோர் இருவரும் போர்வீரர்களாகவும், முனிவர்களின் மகன்களாவும் இருந்தாலும், இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்களின் காரணமாகச் சொர்க்கத்தை அடையத் தவறினர்.(32) கோசல மன்னன் சௌதாசன், அஸ்வமேதம் மற்றும் பிற வேள்விகளைச் செய்த மதிப்பை அடைந்தவனாக இருந்தாலும், ஒரு பெரும் முனிவரின் சாபத்தின் மூலம் மனிதர்களை உண்ணும் ராட்சச நிலையை அடைந்தான்.(33) வசுவானவன், இரண்டாவது வாசவனை {இந்திரனைப்} போல நூறு வேள்விகளைச் செய்திருந்தாலும், ஒரே ஒரு பொய் சொன்னதால் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டான்.(34) விரோசனன் மகனான பலி, அவனுடைய உறுதிமொழியின் மூலம் விஷ்ணுவின் ஆற்றலால் அறமெனும் கட்டுகளால் கட்டப்பட்டு, பூமிக்கு அடியில் அனுப்பப்பட்டான்.(35)

சக்ரனின் {இந்திரனின்} பாதச்சுவடுகளைப் பின்பற்றியவனான ஜனமேஜயன், ஒரு பிராமணப் பெண்ணைக் கொன்றதற்காகத் தேவர்களால் தடுக்கப்பட்டுக் கைவிடப்படவில்லையா?[6](36) அறியாமையினால் ஒரு பிராமணரைக் கொன்று, ஒரு குழந்தையையும் கொன்றதால் களங்கமடைந்திருந்த மறுபிறப்பாள முனிவர் வைசம்பாயனர் தேவர்களால் கைவிடப்படவில்லையா?[7](37) பழங்காலத்தில் அரச முனியான நிருகன் ஓணானாக மாற்றப்பட்டான். அவன் தனது பெரும் வேள்வியில் பசுக்களைக் கொடையளித்திருந்தாலும் அஃது அவனுக்குப் பயனளிக்கவில்லை[8].(38) அரசமுனியான துந்துமாரன், வேள்விகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே முதுமை அடைந்து, தன் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் துறந்து கிரிவ்ரஜத்தில் உறங்கிக் கிடந்தான்.(39) பாண்டவர்களும், திருதராஷ்டிரனுடைய பலமிக்க மகன்களால் இழந்த தங்கள் நாட்டை விதியின் பரிந்துரைமூலமல்லாமல் தங்கள் சொந்த வீரத்தின் மூலமே மீண்டும் அடைந்தனர்.(40)

[6] பிபேக் திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இஃது எந்த ஜனமேஜயன்? இந்த ஜனமேஜயன் பரிக்ஷித்தின் மகனா? இந்த ஜனமேஜயன் குறித்து ஒரு கதை இருக்கிறது. அவன் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பியபோது, அவனது ராணி ஒளி ஊடுருவும் ஆடையை அணிந்து வந்தாள். இதைக் கண்டு பிராமணர்கள் சிரித்ததால் அவர்களை அவன் கொன்றான். இதனால் சபிக்கப்பட்டு அவன் தொழுநோயாளியானான். எனினும் இந்தக் கதையின் படி அவன் பிராமணர்களைக் கொல்லவில்லையே, பிராமணப் பெண்ணைக் கொல்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பீஷ்மரே இதை யுதிஷ்டிரனிடம் சொல்வதால் இவன் சரியான ஜனமேஜயன்தான் என்றால், கதை தவறாக இருக்கிறது. ஊகம் மற்றும் குறியீடு அடிப்படையிலான வாதம் இங்கே பயன்படுத்தப்படுகிறது. பரிக்ஷித்திற்கு ஒரு பிராமண மனைவி உண்டு, அவள் தவிர்க்கப்பட்டாள். இங்கே குறியீட்டுப் பொருள், ஜனமேஜயன் தன் மாற்றாந்தாயைக் கொன்றான் என்றிருக்கலாம்" என்றிருக்கிறது.

[7] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "உண்மையில் வைசம்பாயனர் எந்தப் பிராமணரையும் கொல்லவில்லை. தவசிகள் மேரு மலையில் கூடத் தீர்மானித்திருந்தனர். எந்த முனிவர் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லையோ அவர் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தை அடைவார் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. வைசம்பாயனர் தன் தந்தையின் ஈமச்சடங்கில் இருந்ததால் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர் பிராமணனைக் கொன்ற பாவம் இழைத்தவரானார்" என்றிருக்கிறது.

[8] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தயாளனான மன்னன் நிருகன், ஒரு பிராமணருக்கு ஒரு பசு மந்தையைத் தருவதாக உறுதியளித்திருந்தான். ஆனால் ஒரு பிச்சைக்காரன் வந்ததும் அந்தக் கால்நடைகளை அவனுக்கே அளித்தான். அதனால் அந்தப் பிராமணரின் சாபத்தால் ஓணானான். பிறகு அந்த ஓணானைக் கிருஷ்ணன் காத்தான்" என்றிருக்கிறது.

கடும் நோன்புகளைக் கொண்டவர்களும், கடுந்தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவர்களுமான முனிவர்கள், சாபம் கொடுப்பது இயல்புக்கு மீறிய எந்தச் சக்தியின் உதவியினாலா? தனிப்பட்ட தங்கள் செயல்களால் அடைந்த பலத்தைப் பயன்படுத்துவதாலா?(41) இவ்வுலகில் பெருங்கடினத்துடன் அடையப்படும் நன்மைகள் அனைத்தையும், தீயோர் அடைந்தாலும் விரைவில் அவற்றைத் தொலைத்துவிடுவார்கள். ஆன்ம அறியாமை மற்றும் பேராசையில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு விதி ஒருபோதும் உதவி செய்வதில்லை.(42) சிறு அளவிலான நெருப்பும், காற்று வீசப்பட்டால் வலிமையடைவதைப் போலவே விதியும் தனிப்பட்ட முயற்சியுடன் கூடும்போது, (திறனளவில்) பெரிதாக அதிகரிக்கிறது.(43) எண்ணெய் குறைவதால் விளக்கின் ஒளி மங்குவதைப் போலவே விதியின் ஆதிக்கமும் ஒருவனுடைய செயல்களால் தணிவடைகிறது.(44) பெருஞ்செல்வத்தையும், மகளிரையும், இவ்வுலகின் இன்பங்கள் அனைத்தையும் அடைந்தாலும், செயலில் விடாமுயற்சியில்லாதிருக்கும் மனிதனால் அவற்றை நீண்டு அனுபவிக்க முடியாது, ஆனால், விடாமுயற்சியுள்ள மனிதன், விதியால் காக்கப்பட்டு, பூமியில் புதைந்திருக்கும் வளங்களையும் கண்டடைபவனாக இருக்கிறான்.(45)

மானிட லோகத்தைவிடத் தேவலோகம் சிறந்ததாக இருப்பினும், (அறக்கொடைகள் மற்றும் வேள்விகளில்) பெரும் செலவு செய்யும் நல்ல மனிதன், அவனது நல்லொழுக்கத்திற்காகத் தேவர்களால் வேண்டப்படுகிறான், ஆனால் கஞ்சனின் வீடு செல்வத்தால் நிறைந்திருந்தாலும், இறந்தவனின் வீடாகவே தேவர்களால் காணப்படுகிறது[9].(46) முயற்சி செய்யாத மனிதன் இவ்வுலகில் ஒருபோதும் நிறைவடைவதுமில்லை, விதியும் தவறாகச் சென்ற மனிதனின் பாதையை மாற்றுவதுமில்லை. விதிக்கு உள்ளார்ந்த சக்தி ஏதும் கிடையாது. ஆசானைப் பின்தொடரும் சீடனைப் போலவே, விதியால் வழிநடத்தப்படும் ஒருவனுடைய செயல்பாடும், அவனது முயற்சியைப் பின்தொடர்ந்து வருகிறது. எங்கே ஒருவன் முயற்சி செய்கிறானோ அங்கே மட்டுமே விதி தன் கரத்தை {செயலைக்} காட்டுகிறது.(47) ஓ! முனிவர்களில் சிறந்தவனே {வசிஷ்டரே}, தனிப்பட்ட முயற்சியை, உண்மையான முக்கியத்துவத்துடன் எப்போதும் அறிந்திருக்கும் நான் அதன் தகுதிகள் அனைத்தையும் விளக்கிச் சொன்னேன்.(48) விதியின் ஆதிக்கத்தின் மூலமும், தனிப்பட்ட முறையில் முயற்சி செய்வதன் மூலமும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைகின்றனர். விதி மற்றும் முயற்சியின் ஒன்று சேர்ந்த துணை நன்மையைச் செய்கிறது" என்றான் {பிரம்மன்}[10].(49)

[9] கும்பகோணம் பதிப்பில், "மானிடலோகத்தைவிடத் தெய்வோலகம் சிறந்ததன்று. மனிதர்களின் வீடுகளும் மிக்க அதிகச் செல்வம் நிரம்பினவையாகக் காணப்படுகின்றன. தேவர்களின் வீடுகளும் ஸ்மசானத்து வீடுகளுக்கு ஒப்பாகக் காணப்படுகின்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மானுட உலகம் தேவர்களின் உலகத்தைவிட மேம்பட்ட இருக்கிறது. ஏனெனில், மனிதர்களின் வீடுகள் பல செல்வங்களால் நிறைந்திருக்கின்றன. மறுபுறம், இறவாதவர்களின் வீடுகளோ இறந்தவர்களின் வீடுகளைப் போல இருக்கின்றன" என்றிருக்கிறது. இங்கே கங்குலியின் மொழிபெயர்ப்பே அறிவுக்குப் பெருத்தமானதாகத் தெரிகிறது.

[10] பிரம்மனுக்கும், பழங்காலத்து முனிவரான வசிஷ்டருக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் அஸ்வத்தாமன், திருதராஷ்டிரன், பாண்டவர்கள், ஜனமேஜயன், வைசம்பாயனர் ஆகியோர் குறிப்பிடப்படுவது, இஃது இடைசெருகல் என்பதைக் காட்டுகிறது. அதுவும் இவ்வுரையாடலை பீஷ்மர் பாண்டவனான யுதிஷ்டிரனிடமே சொல்கிறார். 6, 7, மற்றும் 8ம் அடிக்குறிப்புகளில் பிபேக்திப்ராயும் அவ்வாறே கருதுவதாகத் தெரிகிறது. கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் இது சம்பந்தமான அடிக்குறிப்புகள் இல்லை. இவ்வுரையாடல் வசிஷ்டருக்கும், பிரம்மனுக்கும் இடையில் நடைபெறுவதாக பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் சொல்லாமல், நைமிசாரண்ய முனிவர்களுக்குச் சௌதி சொன்னதாக இருந்தால் பொருத்தமானதாக இருக்கலாம்.

அநுசாஸனபர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 49

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்