Thursday, March 21, 2019

புண்ணியத்தீர்த்தங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 25

Sacred Waters! | Anusasana-Parva-Section-25 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 25)


பதிவின் சுருக்கம் : புனிதநீர்நிலைகளின் மகிமை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்வது பலன் நிறைந்தது {புண்ணியம் நிறைந்தது} என்றும்; அத்தகைய நீர்நிலைகளில் தூய்மைச்சடங்குகளைச் செய்வது பலன்மிக்கது என்றும்; அத்தகைய சிறப்புமிக்க நீர்நிலைகளைக் குறித்துக் கேட்பதும் பலன்மிக்கது என்றும் சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, இக்காரியத்தில் உமது விளக்கத்தை நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளை எனக்குக் குறிப்பிட்டுச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பெரும்பலம் கொண்டவரே, இக்காரியத்தில் உமது உரையைக் கேட்க நான் விரும்புகிறேன்" என்றான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெருங்காந்தி {பெரும்புகழ்} கொண்டவனே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளைக் குறித்த பின்வரும் பட்டியல் அங்கிரஸால் {அங்கிரஸ் முனிவரால்} செய்யப்பட்டதாகும். அருளப்பட்டிருப்பாயாக, நீ பெரும்பலனை அடையப் போகிறாய், அதைக் கேட்பதே உனக்குத் தகும்.(3)

ஒரு காலத்தில், கடும் நோன்புகளைக் கொண்டவரான கௌதமர், பெருமைமிக்கவரும், கல்விமானும், அமைதியான ஆன்மாவைக் கொண்ட முனிவருமான அங்கிரஸ் காட்டில் வசித்து வந்த போது அவரை அணுகி,(4) "ஓ! சிறப்புமிக்கவரே, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத்தலங்களோடு தொடர்புடைய பலன்கள் குறித்து எனக்குச் சில ஐயங்கள் உண்டு {எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை}. இக்காரியத்தில் உமது உரையை நான் கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ! தவசியே, எனக்கு அவற்றைக் குறித்துச சொல்வீராக.(5) ஓ! பெரும் ஞானியே, பூமியில் உள்ள புனித நீர்நிலைகளில் நீராடுவதன் மூலம் ஒரு மனிதனால் மறுமையில் அடையப்படும் பலன்கள் என்னென்ன? இதுகுறித்து உண்மையாகவும், விதிப்படியும் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்றார்.(6)

அங்கிரஸ், "எப்போதும் அலைகள் நடனமிடும் நீரைக் கொண்டவையான சந்திரபாகையிலோ {செனாபிலோ}, விதஸ்தையிலோ {ஜீலத்திலோ}[1] ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து நீராடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திதையும் முற்றிலும் கழுவிக்கொண்டு, ஒரு தவசியின் {தவசி ஒருவர் பெறுவதைப் போன்ற} பலனை அடைவான்.(7) காஷ்மீரம் என்றழைக்கப்படும் நாட்டில் பல ஆறுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சிந்து (இண்டஸ்) என்றழைக்கப்படும் பேராற்றில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் நீராடுவதன் மூலம் ஒருவன் நிச்சயம் நற்குணத்தை அடைந்து, இவ்வுலகத்தில் இருந்து சென்ற பிறகு சொர்க்கத்திற்கு உயர்வான்.(8)

[1] "பஞ்சாபிலுள்ள செனாப் என்ற ஆறு பழங்காலத்தில் சந்திரபாகை என்று அழைக்கப்பட்டது. அதே போல ஜீலம் என்ற ஆறு விதஸ்தை என்ற பெயரில் அறியப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய நிலையில் இருந்து சொல்கிறார். அப்போது அவை பஞ்சாபில் இருந்தன. இப்போது உள்ள மாநில எல்லைகளின் படி அவை ஜம்முகாஷ்மீரில் உள்ளன. 8ம் ஸ்லோகத்தில் காஷ்மீர நாடு பற்றிய குறிப்பு வருகிறது.

புஷ்கரை, பிரபாஸம், நைமிசம் {நைமிசாரண்யத்தில் உள்ள தீர்த்தம்}, பெருங்கடல் {சமுத்திர தீர்த்தம்}, தேவிகை, இந்திரமார்க்கம், ஸ்வர்ணபிந்து ஆகிய ஆறுகளில் நீராடும் ஒருவன், தெய்வீகத் தேரில் அமர்ந்து கொண்டு, அப்ஸரஸ்கள் புகழ நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வான்[2].(9)

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "புஷ்கரை ராஜஸ்தானிலும், பிரபாஸம் குஜராத்திலும் இருக்கின்றன. இங்கே நைமிசம் என்று குறிப்பிடப்படுவது கோமதி ஆறாக இருக்க வேண்டும். தேவிகை உதம்பூரில் இருக்கிறது. இந்திரமார்க்கம் மற்றும் ஸ்வர்ணபிந்து ஆகியவை காஷ்மீரத்து ஆறுகளாகும். இவற்றைச் சரியாக அடையாளம் காண்பது கடினமாகும்" என்றிருக்கிறது.

ஹிரண்யபிந்துவின் நீரில் மூழ்கி குவிந்த மனத்துடன் அந்தப் புனித ஆற்றைத் துதிப்பதன் மூலமும், அடுத்ததாகக் குசேசயம் தேவாந்தம் ஆகியவற்றில் நீராடுவதன் மூலமும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் கழுவப் பெறுகிறான்[3].(10)

[3] கும்பகோணம் பதிப்பில், "குசேசயமென்னும் க்ஷேத்திரத்தில் ஹிரண்யபிந்து என்னும் தீர்த்தத்தைக் கண்டு பக்தியோடு நமஸ்காரம் செய்பவனுக்குப் பாவம் விலகித் தேவத்வம் உண்டாகும்" என்றிருக்கிறது.

கந்தமாதனத்தின் அருகில் இந்திரதோயைக்கும், அடுத்ததாகக் குரங்கம் என்றழைக்கப்படும் நாட்டில் உள்ள கரதோயைக்கும் செல்லும் ஒருவன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, குவிந்த இதயத்துடனும், தூய உடலுடனும் அந்தப் புனித நீர்நிலைகளில் நீராட வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் குதிரை வேள்வியொன்றைச் செய்த பலனை நிச்சயம் ஈட்டுவான்[4].(11)

[4] கும்பகோணம் பதிப்பில், "கந்தமாதன மலையிலுள்ள இந்திதோயை என்னும் நதியையும், கெஉரமென்னும் மலையிலுள்ள கரதோயை என்னும் நதியையும் அடைந்து மூன்று இரவுகள் உபவாஸமிருந்து பக்தியோடு ஸ்நானம் செய்து பரிசுத்தனான மனிதன் அசுவமேத பலனை அடைவான்" என்றிருக்கிறது.

நீல மலைகளில் உள்ள கங்காத்வாரம், குசத்வாரம் {குசாவர்த்தம்}, வில்வகம் ஆகியவற்றிலும், கனகலத்திலும் நீராடும் ஒருவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்வான்[5].(12)

[5] கும்பகோணம் பதிப்பில் அடிக்குறிப்பில், "இவை கோதாவரிநதியைச் சேர்ந்தவை என்பது பழைய உரை" என்றிருக்கிறது. பிபேக் திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவ்விடங்கள் அனைத்தும் உத்தராகண்டில் உள்ள ஹரித்வாரின் அருகில் உள்ளன" என்றிருக்கிறது.

ஒருவன் பிரம்மசாரியாக, தன் கோபத்தை அடக்கி, வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்து, நீர்நிலைகளின் தடாகத்தில் {அபாம்ஹ்ரதம் எனும் தீர்த்தத்தில்} நீராடினால், அவன் நிச்சயம் ஒரு குதிரைவேள்வி செய்த பலனை அடைவான்.(13)

பாகீரதி-கங்கை வடதிசை நோக்கிப் பாயும் பகுதியானது, சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகியவை சேருமிடம் என்று அழியப்படுகிறது. ஒரு மாத காலம் நோன்பிருந்து, மஹேஸ்வரனுக்கு ஏற்புடையதாக அறியப்படும் அந்தப் புனிதத் தீர்த்ததில் {ஈஸ்வரஸ்தானத்தில்} நீராடும் ஒருவன் தேவர்களைக் காணத்தகுந்தவனாகிறான்.(14)

சப்தகங்கம், திரிகங்கம், இந்திரமார்க்கம் ஆகிவற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன், மறுபிறவியடைய நேர்ந்தால் அமுதத்தையே உணவாக அடைகிறான்[6].(15)

[6] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவேரி, நர்மதை, சிந்து ஆகிய ஆறுகள் சப்தகங்கை என்றும், பாகீரதி, ஜானவி, அளகானந்தை ஆகியவை திரி கங்கை என்றும் அறியப்படுகின்றன" என்றிருக்கிறது.

உடலையும் மனத்தையும் தூய நிலையில் வைத்துக் கொண்டு, நாள்தவறாமல் அக்னிஹோத்ரம் செய்து, ஒரு மாத காலம் உண்ணா நோன்பிருந்து மஹாஸ்ரமத்தில் நீராடும் மனிதன் நிச்சயம் ஒரே மாதத்தில் வெற்றியை அடைவான் {அம்மாதத்திலேயே தவசித்தி பெறுவான்}.(16)

மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, தீய ஆசைகள் அனைத்தில் இருந்தும் மனத்தூய்மையடைந்து, {மலைச்சிகரமான} பிருகுதுங்கத்தில் அமைந்திருக்கும் பெருந்தடாகத்தில் {மஹாஹ்ரதமெனும் தீர்த்தத்தில்} நீராடுவதன் மூலம் ஒருவன் பிராமணக் கொலை செய்த பாவத்தில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்தும் கழுவப்படுவான்[7].(17)

[7] பிபேக் திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இஃது ஒருவேளை ஹிமாச்சல பிரதேசத்தில் குளு மாவட்டத்தில் உள்ள பிருகு தடாகமாக இருக்கலாம்" என்றிருக்கிது.

கன்யாகூபத்தில் நீராடி, பலாகையில் {பலாகை ஆற்றில்} தூய்மைச்சடங்குகளை {தர்ப்பணங்களைச்} செய்யும் ஒருவன், அதன் மூலம் தேவர்களுக்கு மத்தியில் பெரும்புகழை அடைந்து மகிமையில் ஒளிர்வான்.(18)

தேவிகையிலும், சுந்தரிகை என்ற பெயரில் அறியப்படும் தடாகத்திலும், அஸ்வினி என்றழைக்கப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், தனது மறுபிறவியில் பேரழகுடன் கூடிய வடிவத்தைப் பெறுவான்.(19)

ஒரு பிறைபக்க காலம் {பக்ஷம்} உண்ணா நோன்பிருந்து, மஹாகங்கையிலும், கிருத்திகாங்காரகையிலும் நீராடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான்[8].(20)

[8] கும்பகோணம் பதிப்பில், "அங்காரகன் கிருத்திகையிலிருக்கும் போது ஒரு பக்ஷம் ஆகாரமில்லாமல் மகாகங்கையில் ஸ்நானம் செய்பவன் பாவங்களற்று ஸ்வர்க்கம் சேருவான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஒருவன் ஒரு பிறைபக்க காலம் உண்ணாநோன்பிருந்து, மஹாகங்கையிலும், கிருத்திகாங்காரகையிலும் நீராடினால் சொர்க்கத்தில் ஒளிர்வான்" என்றிருக்கிறது.

வைமானிகை, கிங்கிணிகை ஆகியவற்றில் நீராடும் ஒருவன் விரும்பிய எங்கும் செல்லும் சக்தியை அடைந்து, அப்சரஸ்களின் தேவலோகத்தில் பெரிதும் மதிப்பிற்குரிய பொருளாவான்[9].(21)

[9] "ஒருவன் அப்சரஸ்களின் உலகத்திற்குச் சென்று அங்கே மதிப்பிற்குரியவனாக இருப்பான் என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஒரு மனிதன் தன் கோபத்தை அடக்கி, மூன்று நாட்கள் பிரம்மச்சரிய நோன்பிருந்து, காளிகை என்றழைக்கப்படும் ஆசிரமத்தில் {காளிகாஸ்ரமம் எனும் இடத்தில்} உள்ள விபாசை {பியாஸ்} ஆற்றில்[10] நீராடினால், அவன் மறுபிறவி எனும் கடப்பாட்டைக் கடப்பதில் நிச்சயம் வெல்வான்.(22)

[10] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது பியாஸ் ஆறு" என்றிருக்கிறது. பியாஸ் ஆறு இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து பஞ்சாப் சென்று சத்லஜ் ஆற்றுடன் கலக்கிறது. சத்லஜ் சிந்து ஆற்றில் கலக்கிறது.

கிருத்திகைகளுக்குப் புனிதமான ஆசிரமத்தில் {கிருத்திகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள நீர்நிலையில்} நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்தி, மஹாதேவனை நிறைவடையச் செய்யும் ஒருவன், தன் உடலும், மனமும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்கு உயர்வான்.(23)

ஒருவன், தூய்மையடைந்த உடல் மற்றும் மனத்துடன் மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து மஹாபுத்தில் {மஹாகூபத்தில்} நீராடினால், அசையாதனவற்றிடும், அசையும் விலங்குகள் அனைத்திடமும், இரு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திடமும் {மனிதர்களிடமும்} கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(24)

தேவதாருக்காட்டில் நீராடி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தூய உடலுடனும், மனத்துடனும் ஏழு நாட்கள் அங்கேயே வசிப்பதன் மூலம் ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றதும் தேவர்களின் உலகை அடைவான் {தேவதை என்ற பெயர் பெறுவான்}.(25)

சரஸ்தம்பம், குசஸ்தம்பம், துரோணசர்மபதம் ஆகியவற்றில் உள்ள அருவிகளில் நீராடும் ஒருவன், நிச்சயம் அப்சரஸ்களின் உலகை அடைந்து, மனிதர்களைவிட அதிக ஆற்றல்களைக் கொண்ட அவர்களின் {அந்த அப்சரஸ்களின்} கடமையுணர்வுமிக்கப் பணிவிடைகளைப் பெறுவான்.(26)

ஒருவன் உண்ணா நோன்பிருந்து சித்திரகூடம், ஜனஸ்தானம்[11] மற்றும் மந்தாகினியின் நீரில் நீராடினால், அவன் நிச்சயம் அரச செழிப்பில் கலப்பான் {அரசுரிமை அடைவான்}.(27)

[11] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சித்திரகூடம் மத்திய பிரதேசத்தில் இருக்கிறது. ஜனஸ்தானம் என்பது மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் என்று அடையாளங்காணப்படுகிறது" என்றிருக்கிறது.

சியாமை என்ற பெயரில் அறியப்படும் ஆசிரமத்திற்குச் சென்று, ஒருபிறைபக்க {பக்ஷ} தாகாலம் அங்கேயே வசித்து, அங்கே இருக்கும் புனித நீர்நிலையில் நீராடுவதன் மூலம் ஒருவன் விரும்பியபோது மறையும் சக்தியை அடைகிறான் (அந்தச் சக்தியை அடைந்து கந்தர்வர்களுக்காக விதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவிப்பான்).(28)

கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்று, மூன்று நாட்கள் உணவும், பானமும் தவிர்த்து தூய இதயத்துடன் அங்கே வசித்திருப்பவன், (மறுமையில்) கந்தர்வர்களின் இன்பலோகத்தில் வசிக்கும் சக்தியைப் பெறுவான்[12].(29)

[12] கும்பகோணம் பதிப்பில், "கௌசிகிநதியையடைந்து இருப்பத்தொருநாள் வாயுபக்ஷணம் செய்து விருப்பமற்றிருக்கும் மனிதன் ஸ்வர்க்கமேறுவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு மனிதன் கௌசிகி துவாரத்திற்குச் சென்று பேராசைகள் அனைத்தையும் கைவிட்டு, இருபத்தோரு நாள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தால் சொர்க்கத்திற்கு உயர்வான்" என்றிருக்கிறது. இருபத்தோரு நாட்கள் என்பது கங்குலியின் பதிப்பில் அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது. பதிப்புகளுக்கிடையில் தோன்றும் வேறுபாடானது, இரு ஸ்லோகங்களையும் சேர்த்துப் பொருள் கொள்வதில் நேரும் குழப்பத்தாலானதாக இருக்க வேண்டும்.

காந்ததாரகை என்ற பெயரில் உள்ள இனிய தீர்த்தத்தில் நீராடி, உணவும், பானமும் துறந்து ஒரு மாத காலம் அங்கே வசித்திருக்கும் ஒருவன் விரும்பிய போது மறையும் சக்தியை அடைந்து இருபத்தோரு நாட்களில் சொர்க்கத்திற்கு உயர்வான்.(30)

மதங்கம் என்ற பெயரில் அறியப்படும் தடாகத்தில் {மதங்கவாபியென்னும் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன் நிச்சயம் ஒரே இரவில் {அதே இரவில்} வெற்றியை அடைவான். நித்ய அந்தகை, அல்லது அநாலம்பத்திலோ,(31) நைமிசத்திலோ, ஸ்வர்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, தன் புலன்களை அடக்கி, பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் மனித வேள்வி {புருஷமேத யாகம்} செய்த பலனை அடைகிறான்[13].(32)

[13] "31ம் ஸ்லோகத்தில் உள்ள இரண்டாம் வரியின் தொடர்பைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. ’ஏதுமற்றதைச் சார்ந்திருக்கும் அந்தகம் என்றழைக்கப்படும் நித்தியலோகத்திற்குள் நுழைகிறான்’ என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. பழங்காலத்தில் சில வேளைகளில் மனித வேள்விகளும் {மனிதனை பலி கொடுக்கும் வேள்விகளும்} செய்யப்பட்டன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியில் 31 மற்றும் 32ம் ஸ்லோகங்களாக வரும் பகுதியானது கும்பகோணம் பதிப்பில், "மதங்கவாபியென்னும் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்பவன் ஒரு ராத்திரியில் பலனடைந்து ஓர் ஆதாரத்தையும் பற்றாதவரும், நித்யருமான ஈஸ்வரரை அடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மதங்கத்தில் நீராடும் ஒருவன் ஒரே இரவில் வெற்றியை அடைவான். புலன்களை வென்று, அநலாம்பம், அந்தகம், நைமிசம், அல்லது ஸ்வர்க்கத்தீர்த்தத்தில் ஒருவன் நீராடினால், அவன் ஒரே மாதத்தில் புருஷமேதம் செய்த பலன்களை அடைவான்" என்றிருக்கிறது.

கங்காஹ்ரதத்திலும், உத்பலாவனம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(33)

கங்கையும், யமுனையும் சேருமிடத்திலும், காலஞ்சர மலைகளின் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி, ஒரு மாதகாலத்தில் நாள்தோறும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் பத்து குதிரை வேள்விகளைச் செய்த பலனை அடைவான்[14].(34)

[14] கும்பகோணம் பதிப்பில், "காலஞ்சரமலையிலும், கங்கை யமுனைகளின் தீர்த்தத்திலும் ஒரு மாஸ் ஸ்நானதர்ப்பணம் செய்பவன் பத்து அசுவமேத யாகங்களின் பலனையடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கங்கை மற்றும் யமுனையின் போக்கில் உள்ள தீர்த்தங்களிலும், காலஞ்சர மலையிலுள்ள அறுபது தடாகங்களிலும் ஒருவன் நீராடினால் அது அனைத்து வகைத் தானங்களுக்கும் மேம்பட்ட பலனைத் தரும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், காலஞ்சர மலை என்பது, "உத்தரப் பிரதேச மாநிலம் பந்தல்கண்ட் பகுதியிலுள்ளது" என்றிருக்கிறது.

சஷ்டி தடாகத்தில் {யஷ்டிஹ்ரதத் தீர்த்தத்தில்} நீராடும் ஒருவன், அன்னதானத்தின் பலனைவிடப் பெரிய பலனை அடைகிறான். ஓ! பாரதக் குலத் தலைவா, மக {மாசி} மாதத்தில், பத்தாயிரம் தீர்த்தங்களும், வேறு மூன்று கோடி தீர்த்தங்களும் (கங்கையும், யமுனையும் சேருமிடமான) பிரயாகைக்கு {இன்றைய அலாகாபாத், உத்திரபிரதேசம்} வருகின்றன. ஓ! பாரதக் குலத் தலைவா, கட்டுப்படுத்திய ஆன்மாவுடன் கூடிய ஒருவன், மக {மாசி} மாதத்தில் கடும் நோன்புகள் நோற்றுப் பிரயாகையில் நீராடினால் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்தை அடைவான்[15].(35,36)

[15] கும்பகோணம் பதிப்பில், "மாசிமாஸத்ததுப் பூர்ணிமையில் ப்ரயாகையில் மூன்று கோடியே பதினோராயிரம் புண்யதீர்த்தங்கள் சேர்கின்றன. பரதசிரேஷ்டனே, மாகமாஸ முழுதும் உறுதியான நியமத்தோடு ப்ரயாகையில் நித்யஸ்நானம் செய்பவன் பாவம் தொலைந்த ஸ்வர்க்கமடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மக மாதத்தில் பத்தாயிரம் தீர்த்தங்களும், மேலும் முப்பது கோடி தீர்த்தங்களும் பிரயாகையில் ஒன்று சேர்கின்றன. கட்டுப்பாட்டுடனும், கடும் நோன்புகளுடன் கூடிய ஒருவன் மகமாதத்தில் பிரயாகையில் நீடாடினால் சொர்க்கத்தில் ஒளிரும் நிலையை அடைவான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "பிரயாகை {அல்லாஹாபாத்} என்பது உத்தரப் பிரதேசத்திலுள்ள கங்காயமுனை சங்கமமாகும். மகம் என்பது ஜனவரி, பிப்ரவரி மாதங்களைக் குறிப்பதாகும். மக மாதத்தின் முதல் பாதியில் பிரயாகையில் நீராடுவது புண்ணியம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது" என்றிருக்கிறது.

மருத்துக்களுக்குப் புனிதமான தீர்த்தத்திலும், பித்ருக்களின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும், வைவஸ்வதம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், ஒரு தீர்த்தத்தைப் போலவே புனிதமும், தூய்மையும் அடைந்து, தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(37)

பாகீரதியில் {கங்கையில்} பிரம்மஸரஸுக்குச் சென்று, நீராடி, ஒருமாதம் உணவனைத்தையும் துறந்து நாள்தோறும் பித்ருக்களுக்குக் காணிக்கை அளிக்கும் ஒருவன் நிச்சயம் சோமலோகத்தை அடைவான்.(38)

உத்பாதகத்திலும், அஷ்டாவக்ரத்திலும் நீராடி, அடுத்தடுத்து பனிரெண்டு நாட்கள் உணவைத் தவிர்த்து ஒவ்வொரு நாளும் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை அளிக்கும் ஒருவன் குதிரை வேள்விக்கான பலன்களை அடைவான்.(39)

கயையில் இருக்கும் அஸ்மப்ருஷ்டம், நிரவிந்த மலைகள், கிரௌஞ்சபதி ஆகிய மூன்றிலும் நீராடும் ஒருவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} என்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்[16].(40) முதலிடத்தில் நீராடுவது ஒற்றைப் பிராமணக் கொலை என்ற பாவத்தில் இருந்து தூய்மையாக்கும்; இரண்டாமிடத்தில் நீராடுவது அத்தன்மையிலுள்ள இரு குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்; மூன்றாமிடத்தில் நீராடுவது அத்தகைய மூன்று குற்றங்களில் ஒன்றைத் தூய்மையாக்கும்.(40)

[16] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கயை பீஹாரில் இருக்கிறது. கயையைச் சுற்றியுள்ள மலைகள் கயாசுரன் என்ற பெயர்கொண்ட ராட்சசனின் உடலில் இருந்து அமைந்தவையாகும்.

கலவிங்கத்தில் நீராடும் ஒருவன் (மறுமையில் பயன்படுத்த) பேரளவு நீரை அடைகிறான். அக்னியின் நகரத்தில் {அக்னிபுரத்தில்} நீராடும் ஒரு மனிதன், அக்னி மகளின் நகரத்தில் மறுபிறவியை அடைந்து வாழும் பலனைப் பெறுவான்.(41)

கரவீரபுரத்தின் விசாலை ஆற்றில் நீராடி, தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து, தேவஹ்ரதத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்யும் ஒருவன் பிரம்மனைப் போன்றவனாகி அத்தகைய மகிமையில் ஒளிர்கிறான்.(42)

புனராவர்த்த-நந்தை மற்றும் மஹாநந்தையில் நீராடும் ஒரு மனிதன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய கருணை கொண்டு இந்திரனுக்குச் சொந்தமான நந்தனம் என்றழைக்கப்படும் தெய்வீகத் தோட்டத்திற்குச் சென்று பல்வேறு அப்சரஸ்களால் பணிவிடை செய்யப்படுகிறான்.(43)

லோஹிதை ஆற்றில் அமைந்திருப்பதும், ஊர்வசி என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தின் முழுநிலவு {பௌர்ணமி} நாளில் குவிந்த ஆன்மாவுடன் நீராடும் ஒருவன், புண்டரீகம் என்றழைக்கப்படும் வேள்வியோடு தொடர்புடைய பலன்களை அடைவான்[17].(44)

[17] கும்பகோணம் பதிப்பில், "கிருத்திகை நக்ஷத்திரத்தில் லௌஹித்யமென்னும் நதியில் உர்வசி தீர்த்தத்தில் சிரத்தையோடு சாஸ்திரப் படி ஸ்நானம் செய்பவன் பௌண்டரீக யாகப் பலனையடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில், "லோஹிதன் என்பவன் பிரம்மனின் மகன் ஆவான். கிருத்திகை என்பது நட்சத்திரமாகும். ஆனால் ஊர்வசியும், கிருத்திகையும் சேர்ந்து வருவது என்ன பொருளைத் தருகிறது? இதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், ஊர்வசி என்பதற்குப் பரந்த, விரிந்த என்ற பொருட்கள் இருப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது" என்றிருக்கிறது.

பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து ராமஹ்ரதத்தில் நீராடி, விபாசை {பியாஸ்} ஆற்றில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கையளிக்கும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(45)

ஒரு மாதகாலம் உண்ணாநோன்பிருந்து தூய இதயத்துடன் மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் நீராடும் ஒருவன் நிச்சயம் தவசி ஜமதக்னியின் கதியை அடைவான்.(46)

விந்தியம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் வெப்பத்திற்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு மனிதன், வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டு, பணிவால் இயக்கப்படும் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் ஒரே மாத காலத்தில் நிச்சயம் தவ வெற்றியை அடைவான்.(47)

நர்மதையிலும், சுபாரகம் {சூர்ப்பாரகோதகம்} என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, ஒரு முழுப் பிறைபக்க {பக்ஷ} காலம் உண்ணா நோன்பிருக்கும் ஒருவன் நிச்சயம் அடுத்தப் பிறவியில் அரசகுடியில் இளவரசனாகப் பிறப்பான்.(48)

ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடனும், குவிந்த ஆன்மாவுடனும், ஜம்புமார்க்கம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திற்குச் சென்றால், ஒரே பகல் மற்றும் இரவு அடங்கிய காலத்திற்குள் நிச்சயம் அவன் வெற்றியை அடைவான்.(49)

சாந்தாலிகாஸ்ரமம் சென்று, கோகாமுகம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடி, இலைகளை மட்டுமே உண்டு, மரவுரிகளை உடுத்தி வாழ்பவன் தன் மனைவிகளாகப் பேரழகுடன் கூடிய பத்து கன்னிகைகளை நிச்சயம் அடைவான்.(50)

கன்யாஹ்ரதம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தின் அருகில் வாழ்வபவன் ஒருபோதும் யமலோகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அத்தகைய மனிதன் நிச்சயம் தேவர்களுக்குச் சொந்தமான இன்பலோகங்களுக்கு உயர்வான்.(51)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஒரு புதுநிலவு {அமாவாசை} நாளில் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் பிரபாஸை என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், உடனே வெற்றியையும், இறவாத்தன்மையும் நிச்சயம் அடைவான்.(52)

ஆர்ஷ்டிசேணரின் மகனுடைய ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜானகம் என்ற பெயரில் அறியப்படும் தீர்த்தத்திலும், அடுத்ததாகப் பிங்கையின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் தீர்த்தத்திலும் நீராடும் ஒருவன், நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவனாவான்.(53)

மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, குல்யை {ரிஷிகுல்யை} என்று அறியப்படும் தீர்த்தத்தில் நீராடி, அகமர்ஷணம் என்ற பெயரைக் கொண்ட புனித மந்திரங்களை உரைக்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைவான்.(54)

ஓரிரவு உண்ணாநோன்பிருந்து, பிண்டாரகையில் நீராடும் ஒருவன், அடுத்த நாளுக்குள் தூய்மையடைந்து, அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைவான்.(55)

தர்மாரண்யம் என்றழைக்கப்படும் காடுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மசரத்திற்குச் செல்லும் ஒருவன், தன் பாவங்களை அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து புண்டரீக வேள்வி செய்த பலனை அடைவான்.(56)

மைநாக மலையின் நீரில் நீராடி, காலையும், மாலையும் துதிகளைச் செய்து, ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு மாத காலம் அங்கே வசிக்கும் ஒருவன் அனைத்து வேள்விகளையும் செய்த பலனை அடைவான்.(57)

காலோதகம், நந்திகுண்டம், உத்தரமானஸம் ஆகியவற்றுக்குப் புறப்பட்டு அவற்றிலிருந்து நூறு யோஜனை தொலைவில் உள்ள இடத்தை அடைந்தாலே ஒருவன் கருவைக் கொன்ற பாவத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(58) அவன் நந்தீஸ்வரனின் தோற்றத்தைக் காண்பதில் வென்று, பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான். ஸ்வர்க்கமார்க்கம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நிச்சயம் பிரம்மலோகத்திற்குச் செல்வான்.(59)

கொண்டாடப்படும் இமயம் புனிதமானதாகும். அந்த மலைகளின் இளவரசனே சங்கரனின் மாமனாவான். அவன் ரத்தினங்கள் அனைத்தின் சுரங்கமாகவும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் வந்து போகும் இடமாகவும் இருக்கிறான்.(60) வேதங்களை முழுமையாக அறிந்தவனும், இவ்வாழ்வை மிக நிலையற்றதெனக் கருதுபவனுமான ஒரு மறுபிறப்பாளன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணக்கமாக உணவு மற்றும் பானங்கள் அனைத்தையும் தவிர்த்து, தேவர்களைத் துதித்து, தவசிகளுக்குத் தலைவணங்கி இந்த மலைகளில் தன் உடலைக் கைவிட்டால் நிச்சயம் வெற்றியை அடைந்து, நித்தியமான பிரம்ம லோகத்தை அடைவான்.(61,62)

கோபத்தை அடக்கி, காமத்தைக் கட்டுப்படுத்தித் தீர்த்தத்தில் வசித்து வருபவன், அத்தகைய வாசத்தின் விளைவால் அவனுக்கு அடையப்பட முடியாத {பலன்} எதுவும் இல்லை.(63) உலகில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் செல்லும் நோக்கில் ஒருவன் அவற்றில் அடைதற்கரிதான, பயணிக்க மிகக் கடுமையான வழிகளைக் கொண்டவற்றையும் மனத்தால் நினைக்க வேண்டும் {அவற்றிற்கும் செல்ல நினைக்க வேண்டும்}.(64) தீர்த்தங்களுக்குப் பயணம் செய்வது வேள்விகள் செய்த பலனை உண்டாக்கவல்லதாகும். அனைவரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்பவை அவை. பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அவற்றால் சொர்க்கத்திற்கே வழிவகுக்க இயலும். இக்காரியம் உண்மையில் பெரும்புதிராகும் {பெரும் ரகசியமாகும்}. தேவர்களே கூடத் தீர்த்தங்களில் நீராடுகின்றனர். அவை அவர்களையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்கின்றன.(65) பிராமணர்களுக்கும், தனக்கான நன்மையை அடையும் நோக்கம் கொண்ட அறம் சார்ந்த நேர்மையாளர்களுக்கும் தீர்த்தங்கள் குறித்த இந்த உரை சொல்லப்பட வேண்டும். மேலும் அவனது நலன்விரும்பிகள், நண்பர்கள், அவனுக்குக் கீழ்ப்படிந்து அர்ப்பணிப்புடன் இருக்கும் சீடர்கள் ஆகியோரும் கேட்கும் வகையில் இது சொல்லப்பட வேண்டும்" {என்றார் அங்கிரஸ்}.(66)

பெரும் தவத்தகுதியைக் கொண்ட அங்கிரஸ் இந்த உரையைக் கௌதமருக்குச் சொன்னார். அங்கிரஸ், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கசியபரிடம் இருந்து இதைப் பெற்றார்.(67) இவ்வுரையானது பெரும் முனிவர்களாலும் சொல்லத்தகுந்ததாகக் கருதப்படுகிறது. {ஒருவனைத்} தூய்மையடையச் செய்யும் யாவற்றிலும் இது முதன்மையானதாகும். இதை விடாமல் நாள்தோறும் சொல்லும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, இவ்வாழ்வை விட்டுச் சொர்க்கத்தை அடைவான்.(68) "அங்கிரஸின் இவ்வுரை, புதிராகக் கருதப்படுகிறது" என்று இந்த உரை குறித்துக் கேட்கும் ஒருவன், அடுத்தப் பிறவியில் நற்குடியில் பிறந்தும் தன் முற்பிறவியின் நினைவுகளுடன் கூடியவனாக இருப்பான்" என்றார் {பீஷ்மர்}".(69)

அநுசாஸனபர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 69

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்