The penances of Matanga! | Anusasana-Parva-Section-28 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 28)
பதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைவதற்குக் கடுந்தவம் இருந்த மதங்கன்; அவனைத் தடுத்த இந்திரனென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மங்கா மகிமை கொண்டோனே, இந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கட்டுப்பாடுடைய நோன்புகள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்மாவுடன் கூடிய மதங்கன், (தேவர்களின் தலைவனுடைய ஆலோசனைகளைக் கவனித்துக் கேட்காமல்), நூறு வருட காலம் ஒற்றைக் காலில் நின்றான்.(1)
பெரும்புகழைக் கொண்ட சக்ரன் மீண்டும் அவன் முன்பு தோன்றி, அவனிடம், "ஓ! குழந்தாய், பிராமண நிலை அடையத்தக்கதன்று. நீ அதில் நாட்டங்கொண்டாலும், அதை அடைவது உனக்குச் சாத்தியமில்லை.(2) ஓ! மதங்கா, அந்த உயர்ந்த நிலையில் ஆசை கொள்வதன் மூலம் நீ நிச்சயம் அழிவடையப் போகிறாய். ஓ! மகனே, இத்தகைய மூர்க்கத்தை வெளிப்படுத்தாதே. இஃது உன்னால் பின்பற்றத்தக்க அறப்பாதையல்ல.(3) ஓ! மூடப்புத்தி கொண்டோனே, இவ்வுலகில் நீ அதை அடைவது சாத்தியமில்லை. உண்மையில், அடையப்பட முடியாததில்ஆசை கொண்டுள்ள நீ எப்போதும் அழிவை அடையலாம்.(4) நான் மீண்டும் மீண்டும் உன்னைத் தடுத்து வருகிறேன். எனினும், தொடர்ந்து என் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் உன் தவங்களின் துணையுடன் உயர்ந்த நிலையை அடைய முனைவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடையப் போகிறாய்.(5)
விலங்கு வாழ்வில் இருந்து ஒருவன் மனித நிலையை அடைகிறான். மனிதனாகப் பிறக்கும்போது, நிச்சயம் அவன் புல்காஸ, அல்லது சண்டாள வகையிலேயே பிறப்பான்.(6) ஓ! மதங்கா, உண்மையில் ஒருவன் புல்காஸம் எனும் பாவம் நிறைந்த இருப்பு வகையில் {புல்காஸனாகப்}[1] பிறந்து நீண்ட காலம் திரிய வேண்டும்.(7) ஓராயிரம் {1000} வருடகாலம் அவ்வகையில் {சண்டாளனாகக்} கடத்திய ஒருவன் அடுத்ததாகச் சூத்திர நிலையை அடைவான்.(8) அதன் பிறகு அந்தச் சூத்திர வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். முப்பதாயிரம் {30,000} ஆண்டுகளுக்குப் பிறகு அவன் வைசிய நிலையை அடைவான். அந்த வகையிலும் அவன் நெருங்காலத்தைக் கடத்த வேண்டும்.(9) சூத்திர இருப்புக்குக் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில் அறுபது மடங்கு காலம் {18 லட்சம் வருடங்கள் (30,000 X 60 =18,00,000)} இருந்த பிறகு அவன் அரச {க்ஷத்திரிய} வகையை அடைவான். க்ஷத்திரிய வகையிலும் அவன் நீண்ட காலத்தைக் கடத்த வேண்டும்.(10)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "மாகஜாதிப் பெண்ணினிடம் சண்டாளனுக்குப் பிறந்தவன்" என்றிருக்கிறது.
இறுதியாகக் குறிப்பிட்ட காலத்தில் அறுபது {60} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்.
{அதாவது 18,00,000X60 =10,80,00,000 பத்து கோடியே எண்பது லட்சம் வருடங்களுக்குப் பிறகு அவன் சத்திரிய வகையிலிருந்து, வீழ்ந்த பிராமணனாகப் பிறக்கிறான்}
இவ்வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(11) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் இருநூறு {200} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்து வாழும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.
{அதாவது 10,80,00,000X200 =2,160,00,00,000 இரண்டாயிரத்து நூற்று அறுபது கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் ஆயுதந்தரித்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}
அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(12) இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் முன்னூறு {300) மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் காயத்ரி மற்றும் பிற மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.(13)
{அதாவது 2,160,00,00,000X300 =6,48,000,00,00,000 ஆறு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி வருடங்களுக்குப் பிறகு அவன் மந்திரங்களை உரைக்கும் பிராமணக் குலத்தில் பிறக்கிறான்.}

அந்த வகையிலேயே அவன் நீண்ட காலம் திரிய வேண்டும். இறுதியாகச் சொல்லப்பட்ட காலத்தில் நானூறு {400} மடங்கு காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான். அந்த வகையிலும் அவன் நீண்ட காலம் திரிய வேண்டும்.(14)
{அதாவது 6,48,000,00,00,000X400 =259200000,00,00,000 வருட காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்}
{அதாவது 6,48,000,00,00,000X400 =259200000,00,00,000 வருட காலத்திற்குப் பிறகு அவன் மொத்த வேதங்களையும், சாத்திரங்களையும் அறிந்த பிராமணக் குலத்தில் பிறக்கிறான்}
அந்த இருப்புநிலையில் அவன் திரிந்து கொண்டிருக்கும்போது இன்பதுன்பம், விருப்புவெறுப்பு, போலியான மற்றும் தீய பேச்சு ஆகியவை அவனுக்குள் நுழைந்து அவனை இழிந்தவனாக்க முனையும்.(15) அந்த எதிரிகளை அடக்குவதில் வென்றால், அவன் உயர்ந்த கதியை அடைகிறான். மறுபுறம், அவனை அடக்குவதில் அந்த எதிரிகள் வென்றால், பனைமர உச்சியில் இருந்து தரையில் விழும் மனிதனைப் போல அவன் உயர்ந்த நிலையில் இருந்து கீழே வீழ்கிறான்.(16) ஓ! மதங்கா, நான் உனக்குச் சொல்வதை உறுதியாகத் தெரிந்து கொண்டு, வேறேதேனும் வரத்தைக் கேட்பாயாக. (நீ ஒரு சண்டாளனாகப் பிறந்திருப்பதால்) பிராமண நிலையானது உன்னால் அடையப்பட முடியாததாகும்" {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}.(17)
அநுசாஸனபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |