The merits attached to gifting of a cow! | Anusasana-Parva-Section-79 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 79)
பதிவின் சுருக்கம் : பல்வேறு வகைப் பசுக்களைக் கொடையளிப்பதால் கிட்டும் பல்வேறு வகையான பலன்கள் குறித்து ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...
வசிஷ்டர் {மன்னன் சௌதாசன் (அ) கல்மாஷபாதனிடம்}, "முற்காலத்தில் படைக்கப்பட்ட பசுக்கள், பெரும் முன்சிறப்புகளுடன் கூடிய நிலையை அடையும் விருப்பத்தில் நூறாயிரம் வருடங்கள் கடுந்தவங்களைப் பயின்றன.(1) உண்மையில், ஓ! பகைவரை எரிப்பவனே, அவை தமக்குள்ளேயே, "இவ்வுலகின் வேள்விகளில் அனைத்து வகையிலும் சிறந்த தக்ஷிணையாக மாறுவோம், எக்குற்றமும் இல்லாதவராவோம்.(2) நமது சாணம் கலந்த நீரில் நீராடுவதன் மூலம் மக்கள் புனிதமடையட்டும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேவர்களும், மனிதர்களும் நமது சாணத்தைப் பயன்படுத்தட்டும். நம்மைக் கொடையளிப்பவர்களும் நமக்கான இன்பலோகங்களை அடையட்டும்" என்று {தங்களுக்குள்ளேயே} சொல்லிக் கொண்டன[1].(3,4)
[1] கும்பகோணம் பதிப்பில், "நம்முடைய சாணத்தைக் கொண்டு ஸ்நாநம் செய்வதனால் ஜனங்கள் எப்போதும் பரிசுத்தராகக் கடவர். தேவர்களும், மனிதர்களும் ஜங்கமங்களும், தாவரங்களுமாகிய பிராணிகளெல்லாம் நமது சாணத்தினாலேயே சுத்தியைச் செய்து கொள்ளக் கடவன. நம்மைத் தானம் செய்பவர் நமது உலகங்களை அடையக்கடவர்" என்றிருக்கிறது.
அவற்றின் தவங்கள் நிறைவடையும் தருணத்தில் அவற்றின் முன் தோன்றிய பலமிக்கப் பிரம்மன், அவை வேண்டிய வரங்களைக் கொடுத்து, "நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும். நீங்கள் உலகங்கள் அனைத்தையும் (இவ்வாறு) காப்பீராக" என்றான்.(5)
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அன்னையரான அவை அனைத்தும், தங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு எழுந்தன. ஒவ்வொரு காலை வேளையிலும் மக்கள் மதிப்புடன் பசுக்களை வணங்க வேண்டும். இதன் விளைவாக அவர்கள் நிச்சயம் செழிப்பை வெல்வார்கள்.(6) ஓ! ஏகாதிபதி, பசுக்களின் தவங்கள் நிறைவடைந்தபோது அவை உலகின் புகலிடங்களாகின. இதன் காரணமாகவே பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்திலும் முதன்மையானவையாகவும் சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவே பசுக்கள் அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(7)
தனக்கு ஒப்பான கன்றுகளுடன் கூடியதும், அபரிமிதமான அளவில் பாலைக் கொடுப்பதும், தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி பிரம்மலோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(8)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு சிவப்பு நிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சூரிய லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(9)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு பலவண்ணப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சோம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(10)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு வெண்ணிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் இந்திர லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(11)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கருநிறப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அக்னி லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(12)

தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பால் தருவதும், அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும், புகைவண்ணத்துடன் கூடியதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் யம லோகத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(13)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், நீர் நுரையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வருணலோகத்தை அடைகிறான்.(14)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், காற்றில் பறக்கும் தூசியின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் காற்றுதேவனின் உலகத்தில் {வாயுலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(15)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், பழுப்புநிறக் கண்களுடன் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், பொன் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் குபேரலோகத்தில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(16)

கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வைக்கோல் புகையின் நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் பித்ருக்களின் உலகத்தில் {பிதிருலோகத்தில்} பெரும் கௌரவங்களை அடைகிறான்.(17)
கன்றுடன் கூடியதும், தொண்டைச் சதை தொங்கும் ஒரு பருத்த பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எளிதாக விஸ்வேதேவர்களின் உயர்ந்த உலகத்தை அடைகிறான்.(18)
தனக்கு ஒப்பான கன்றுடன் கூடியதும், பாலைத் தருவதும், அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டதும், துணியால் மறைக்கப்பட்டதும்மான ஒரு கௌரி பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வசுக்களின் உலகத்தை அடைகிறான்.(19)
கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதும், வெண்கம்பளி நிறத்தாலானதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் சாத்தியர்களின் உலகை அடைகிறான்.(20)

ஓ! மன்னா {சௌதாசா}, உயர்ந்த திமிலைக்கொண்டதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(21)
வயதால் முழுமையாக வளர்ந்ததும், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் நீல நிறமாக இருப்பதுமான ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களை அடைகிறான்.(22)
தொண்டைச் சதை தொங்குவதும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி அனைத்துத் துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிரஜாபதிக்கே சொந்தமான உலகங்களை அடைகிறான்.(23)
ஓ! மன்னா, பசுக்கொடை அளிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், சூரியப் பிரகாசம் கொண்ட ஒரு தேரில் மேகங்களின் ஊடாகத் துளைத்துச் சென்று சொர்க்கத்தை அடைந்து அங்கே காந்தியுடன் ஒளிர்கிறான்.(24)

பசுக்கொடையளிப்பதை வழக்கமாகக் கொண்ட மனிதன் மனிதர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்லும்போது, அழகிய இடைகளைக் கொண்டவர்களும், அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் தெய்வீகக் காரிகையரால் அவன் வரவேற்கப்படுகிறான். இப்பெண்கள் அங்கே அவனுக்குப் பணிவிடை செய்து, அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.(25) அமைதியாக அங்கே உறங்கும் அவன், அந்த மான்விழி மங்கையரின் வீணை இசையாலும், அவர்களுடைய வல்லகிகளின் மென்மையான சுரத்தாலும், நுபரங்களின் {காற்சிலம்புகளின்} இனிய கிண்கிணி ஒலியாலும், அவர்களுடைய சிரிப்பிசையாலும் விழிப்படைகிறான்[2].(26) பசுக்கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தில் வசிக்கிறான்; தான் கொடுக்கும் பசுக்களின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் அங்கே கௌரவிக்கப்படுகிறான். (புண்ணியம் தீர்ந்து) சொர்க்கத்தில் வீழ நேரும் அத்தகைய மனிதன் மனித வகையிலேயே பிறப்பெடுக்கிறான்; உண்மையில் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மேம்பட்ட குடும்பத்திலேயே பிறப்பெடுக்கிறான்" என்றார் {வசிஷ்டர்}.(27)
[2] "வல்லகி என்பது இந்திய யாழாகும். நுபுரம் என்பது கணுக்காலில் அணியும் ஆபரணமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 79ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |