Purity of heart! | Anusasana-Parva-Section-127 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 127)
பதிவின் சுருக்கம் : சூரியன், ஸ்ரீதேவி, கார்க்யர், தௌம்யர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் வெளியிட்ட பரமரகசியங்கள்...
{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்},
"விபாவசு (சூரியன் என்றும் அழைக்கப்படுபவன்), "இரு காணிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கைநிறைய நீரையும், மற்றொன்று நெய் கலந்த அரிசி தானியங்கள் அடங்கிய அக்ஷதையையும் கொண்டவையாகும். ஒருவன் ஒரு முழு நிலவு {பௌர்ணமி} நாளில், அந்தப் பிரகாசமான கோளத்தை {சந்திரனை} நோக்கி நின்று கொண்டு கை நிறைய நீர் மற்றும் அக்ஷதை என்றழைக்கக்கூடிய நெய்கலந்த அரசிதானியங்கள் என்ற குறிப்பிட்ட இரு காணிக்கைகளையும் அளிக்க வேண்டும். இந்தக் காணிக்கைகளை அளிக்கும் மனிதன் தன்னுடைய புனித நெருப்பைத் துதிப்பவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், அவன் (அடிப்படையான) மூன்று நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றியவனாகக் கருதப்படுகிறான்.(1,2) ஒரு புது நிலவு {அமாவாசை} நாளில் பெரும் மரத்தை வெட்டும் அற்ப புத்தி கொண்டவன், பிராமணக் கொலை செய்த பாவத்தால் {பிரம்மஹத்தி தோஷத்தால்} களங்கப்படுகிறான்.(3) புது நிலவு {அமாவாசை} நாளில் பற்குச்சியை மெல்லும் மூட மனிதன் அத்தகைய செயலின் மூலம் சந்திர தேவனுக்குத் தீங்கிழைத்தவனாகக் கருதப்படுகிறான்.(4) முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அத்தகைய மனிதனால் ஊற்றப்படும் ஆகுதிகளைத் தேவர்கள் ஏற்பதில்லை. அவனது பித்ருக்கள் அவனிடம் சினம் கொள்கின்றனர், அவனது குலமும், குடும்பமும் ஒழிந்து போகின்றன" என்றான் {சூரியன்}.(5)

ஸ்ரீ {லட்சுமி}, "எந்த வீட்டில் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய பாத்திரங்கள், இருக்கைகள், படுக்கைகள் ஆகியன சிதறிக் கிடக்கின்றனவோ, எங்கே பெண் அடிக்கப்படுகிறாளோ,(6) அந்த வீட்டில் இருந்து தேவர்களும், பித்ருக்களும் அருவருப்புடன் வெளியேறுகின்றனர். உண்மையில், அத்தகை வீடுகளின் உரிமையாளர்களால் அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் தேவர்களும், பித்ருக்களும் அத்தகைய பாவம் நிறைந்த வசிப்பிடத்தில் இருந்து விலகி ஓடுகின்றனர்" என்றாள்.(7)
அங்கிரஸ், "ஓர் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு இரவிலும் ஏற்றுவதற்கு ஒரு விளக்குடன் கரஞ்சக {புங்கை} மரத்தின் அடியில் நின்று கொண்டும், தன் கைகளில் ஸுவர்ச்சலைக் கொடியின் வேரை வைத்துக் கொண்டும் இருப்பவனுடைய சந்ததி பெருகும்" என்றார்[1].(8)
[1] "கரஞ்சக மரம் மற்றும் சுவர்ச்சலை கொடி ஆகியவை எவை என அடையாளம் காண்பது கடினம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கரஞ்சகம் என்பது புங்கை மரமாகவும், ஸுவர்ச்சலைக் கொடி என்பது பிரம்ம கமலம் மலரும் கொடியாக இருக்க வேண்டும்.
கார்க்யர், "ஒருவன் தன் விருந்தினர்களுக்கான விருந்தோம்பல் கடமைகளை எப்போதும் செய்ய வேண்டும். வேள்வி நடைபெறும் கூடம், அல்லது கொட்டகையில் அவன் விளக்குகளை அளிக்க வேண்டும். பகலில் உறங்குவதை அவன் தவிர்க்க வேண்டும். அனைத்து வகை இறைச்சியை, அல்லது இறைச்சியுணவைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் ஒருபோதும் தீங்கைச் செய்யக்கூடாது. அவன் எப்போதும் புஷ்கரை தடாகங்கள் மற்றும் பிற புனித நீர்நிலைகளின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தகைய கடமை நடைமுறையே முதன்மையானதாகும். இதுவே புதிர்களுடன் கூடிய உயர்ந்த அறமாகும். நடைமுறையில் பின்பற்றப்பட்டால் அது நிச்சயம் பெரும் விளைவுகளை உண்டாக்கும்.(10) ஒருவன் நூறு வேள்விகளைச் செய்தாலும், அவற்றில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் உண்டான பலன் தீர்ந்து போவதை காணும் நிலையை அடைகிறான். எனினும் நான் சொன்ன கடமைகளை நம்பிக்கையுடன் செய்வதால் அவற்றின் பலன் வற்றாதனவாகின்றன.(11)
பலரின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் மற்றொருமொரு உயர்ந்த புதிரை {பெரும் ரகசியத்தைக்} கேட்பீராக. சிராத்தங்கள், தேவர்களைக் கௌரவிக்கும் சடங்குகள், சாதாரண நாடகளில் செய்யப்படும் சடங்குகள், குறிப்பாகப் புனிதமான முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} நாட்களில் செய்யப்படும் சடங்குகள் ஆகியவற்றின் போது, மாதவிலக்கான பெண்ணையோ, தொழுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளையோ தேவர்கள் பார்த்துவிட்டால் அச்சந்தர்ப்பங்களில் (நெருப்பில் ஊற்றப்படும்) ஆகுதிகளை அவர்கள் உண்பதில்லை.(12,13) தன்னால் செய்யப்பட்ட சிராத்தம் நடைபெறும் இடத்தின் அருகில் இத்தகைய பெண்ணை அனுமதித்த மனிதனுடைய பித்ருக்கள், பதிமூன்று வருடங்கள் அவனிடம் நிறைவடையாமல் இருப்பார்கள்.(14) ஒருவன், வெள்ளுடை உடுத்தி, மனமும், உடலும் தூய்மையடைந்து, பிராமணர்களை அழைத்து, (தான் செய்யும் சிராத்தத்தின் போது) அவர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அத்தகைய தருணங்களில் ஒருவன் பாரதத்தைப் படிக்க வேண்டும். சிராத்தங்களில் இவை அனைத்தையும் பின்பற்றினால் அங்கே அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றாதனவாகின்றன" என்றார் {கார்க்யர்}.(15)
தௌம்யர், "உடைந்த பாத்திரங்கள், உடைந்த கட்டில்கள், சேவல்கள், நாய்கள், வசிக்கும் வீட்டிற்குள் வளரும் மரங்கள் ஆகியவை அனைத்தும் மங்கலமற்ற பொருட்களாகும். உடைந்த பாத்திரத்தில் கலியே இருக்கிறான் {எனவே, கலகம் உண்டாகும்}, அதே வேளையில், உடைந்த கட்டிலால் செல்வத்தின் இழப்பு ஏற்படும். சேவலோ, நாயோ காணப்படும்போது, தேவர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உண்ணமாட்டர்கள். மரத்தின் வேருக்கடியில் தேள்களும், பாம்புகளும் நிச்சயம் உறைவிடத்தைக் காண்கின்றன. எனவே, ஒருவன் தன் வசிப்பிடத்திற்குள் மரத்தை ஒருபோதும் நடக்கூடாது" என்றார்.(17)
ஜனதக்னி, "தூய்மையற்ற இதயத்தைக் கொண்ட மனிதன், குதிரை வேள்வியிலோ, நூறு வாஜபேய வேள்விகளிலோ, தலைவணங்கிக் கடுந்தவம் இருந்தோ தேவர்களைத் துதித்திருந்தாலும் நிச்சயம் நரகத்திற்குச் செல்வான். இதயத் தூய்மை வேள்விகளுக்கும், வாய்மைக்கும் இணையானதாகக் கருதப்படுகிறது.(18,19) ஓர் ஏழை பிராமணன், மற்றொரு பிராமணனுக்கு மாவாலான பிரசாதத்தை {ஒரு படி மாவை} மட்டுமே கொடுப்பதன் மூலம் பிரம்ம லோகத்தை அடைகிறான். (இதயத் தூய்மையின் முக்கியத்துவத்திற்கு) இது போதுமான சான்றாகும்" என்றார்.(20)
அநுசாஸனபர்வம் பகுதி – 127ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |