Those who attained heavenly regions! | Anusasana-Parva-Section-137 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 137)
பதிவின் சுருக்கம் : : தவங்கள், கொடைகள், வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தையும், பிற மேன்மையான உலகங்களையும் அடைந்தவர்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, இவ்வுலகில் ஈகை {தானம்} மற்றும் அர்ப்பணிப்பு {தவம்} ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை எனக்குச் சொல்ல வேண்டும். இதன் மூலம் என் மனத்தில் உள்ள பெரும் ஐயத்தை நீர் நீக்க வேண்டும்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்திற்கு அர்ப்பணிப்புடன், தவங்களால் தங்கள் இதயங்களைத் தூய்மை செய்து கொண்டு, கொடைகளையும் பிற அறச் செயல்களையும் செய்து, வெவ்வேறு தெய்வீக உலகங்களை அடைந்த இளவரசர்களின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) ஓ! ஏகாதிபதி, அனைவராலும் கொண்டாடப்படும் முனிவர் ஆத்ரேயர், தமது சீடர்களுக்குத் தடையற்ற பரம்பொருளின் {நிர்க்குண பிரம்மத்தின்} அறிவைப் போதித்துச் சிறந்த தெய்வீக உலகங்களை அடைந்தார்.(3) உசீனரனின் மகனான மன்னன் சிபி, ஒரு பிராமணனின் நன்மைக்காகத் தன் அன்புக்குரிய மகனின் உயிரைக் காணிக்கையளித்து இவ்வுலகில் இருந்து மறுவுலகதிதற்குச் சென்றான்.(4) காசியின் மன்னனான பிரதர்த்தனன் ஒரு பிராமணருக்குத் தன் மகனைக் கொடுத்ததன் மூலம் இவ்வுலகிலும், மறுவுலகிலும் தனக்கெனத் தனிப்பட்ட இறவாப்புகழை அடைந்தான்.(5) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு முறையாகக் கொடைகளை அளித்து உயர்ந்த சொர்க்கத்தை அடைந்தான்.(6) தேவவிரதன், ஒரு வேள்வியில் நூறு விலாக்கள் கொண்ட சிறந்த தங்கக் குடை ஒன்றை ஒரு பிராமணனுக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(7) வழிபடத்தகுந்த அம்பரீஷனும், பெருஞ்சக்தியைக் கொண்ட ஒரு பிராமணனுக்குத் தன் நாடு முழுவதையும் கொடையாக அளித்துத் தேவர்களின் உலகை அடைந்தான்.(8)
சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் ஜனமேஜயன் பிராமணர்களுக்குக் காது குண்டலங்களையும், சிறந்த வாகனங்களையும், பசுக்களையும் கொடையளித்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(9) அரச முனியான விருஷாதர்ப்பி, பிராமணர்களுக்குப் பல்வேறு நகை ஆபரணங்களையும், அழகிய வீடுகளையும் கொடையளித்துச் சொர்க்கதிதற்குச் சென்றான்.(10) விதர்ப்பத்தைச் சேர்ந்த மன்னன் நிமி, உயர் ஆன்ம அகஸ்தியருக்குத் தன் மகளையும், நாட்டையும் கொடையாள அளித்துத் தன் மகன்கள், நண்பர்கள் மற்றும் பசுக்களுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(11) பெரும்புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனுமான ராமர், பிராமணர்களுக்கு நிலக்கொடைகளை அளித்து, எதிர்பார்ப்பைக் கடந்த நித்திய உலகங்களை அடைந்தார்.(12)
பிராமணர்களின் இளவரசரான வசிஷ்டர், பர்ஜன்ய தேவன் பூமியில் தன் அருள் மழையைப் பொழியாமல் இருந்த போது நேர்ந்த பெரும்பஞ்சத்தில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, அந்தச் செயலின் மூலம் நித்திய அருளை தாமே அடைந்தார்.(13) இவ்வுலகில் மிக உயர்ந்த புகழைக் கொண்டவனும், தசரதனின் மகனுமான ராமன், வேள்விகளில் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்து நித்திய உலகங்களை அடைந்தான்.(14) பெரும் புகழைக் கொண்டவனும், அரசமுனியுமான கக்ஷஸேனன், முறையாக உயர் ஆன்ம வசிஷ்டருக்குச் செல்வத்தைக் கொடுத்துச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15) அவிக்ஷித்தின் மகனும், கரந்தமனின் பேரனுமான மருத்தன், அங்கிரசுக்குத் தன் மகளைக் கொடுத்ததன் மூலம் உடனே சொர்க்கத்திற்குச் சென்றான்.(16)
உயர்ந்த பக்தியைக் கொண்ட பாஞ்சால மன்னன் பிரம்மதத்தன், விலைமதிப்புமிக்கச் சங்கு ஒன்றைக் கொடையளித்ததன் மூலம் அருள்வழியை அடைந்தான்.(17) மன்னன் மித்ரஸஹன், தனக்குப் பிடித்த மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(18)
மனுவின் மகனான ஸுத்யும்னன், உயர் ஆன்ம லிகிதருக்கு உரிய தண்டையைக் கொடுத்ததன் மூலம் பேரருள் நிறைந்த உலகங்களை அடைந்தான்.(19) கொண்டாடப்பட்ட அரசமுனியான சஹஸ்ரசித்தன், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே தியாகம் செய்ததன் மூலம் அருள் உலகங்களுக்குச் சென்றான்.(20)
மனுவின் மகனான ஸுத்யும்னன், உயர் ஆன்ம லிகிதருக்கு உரிய தண்டையைக் கொடுத்ததன் மூலம் பேரருள் நிறைந்த உலகங்களை அடைந்தான்.(19) கொண்டாடப்பட்ட அரசமுனியான சஹஸ்ரசித்தன், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே தியாகம் செய்ததன் மூலம் அருள் உலகங்களுக்குச் சென்றான்.(20)
மன்னன் சதத்யும்னன், பெரும் அளவிலான இன்பப் பொருட்கள் அனைத்துடன் கூடிய ஒரு பொன்மாளிகையை மௌத்கலருக்கு {மொத்கல்யருக்குக்} கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) பழங்காலத்தில் மன்னன் சுமன்யு, மலை போல் தெரிந்த உணவுக் குவியல்களைச் சாண்டில்யருக்குக் கொடுத்ததன் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றான்.(22) பெருங்காந்தியைக் கொண்ட சால்வ இளவரசன் தியுமத் {தியுமான்} தன் நாட்டை ரிசீகருக்குக் கொடுத்து உயர்ந்த உலகங்களை அடைந்தான்.(23)
அரச முனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்ததன் மூலம் தேவர்களின் உலகத்திற்குச் சென்றார்.(24)
தலைமைத்துவம் கொண்ட லோமபாதன், தன் மகளான சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, தன் ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் பெருமளவில் பெற்றான்.(25)
அரச முனியான பகீரதன், ஹம்ஸி என்ற தன் புகழ்பெற்ற மகளைக் கௌஸ்தருக்குக் கொடுத்து நித்திய உலகங்களுக்குச் சென்றான்.(26) மன்னன் பகீரதன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பசுக்களைக் கன்றுகளுடன் சேர்த்துக் கோகலருக்குக் கொடுத்து அருள்மிகுந்த உலகங்களை அடைந்தான்.(27)
அரச முனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்ததன் மூலம் தேவர்களின் உலகத்திற்குச் சென்றார்.(24)
தலைமைத்துவம் கொண்ட லோமபாதன், தன் மகளான சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, தன் ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் பெருமளவில் பெற்றான்.(25)
அரச முனியான பகீரதன், ஹம்ஸி என்ற தன் புகழ்பெற்ற மகளைக் கௌஸ்தருக்குக் கொடுத்து நித்திய உலகங்களுக்குச் சென்றான்.(26) மன்னன் பகீரதன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பசுக்களைக் கன்றுகளுடன் சேர்த்துக் கோகலருக்குக் கொடுத்து அருள்மிகுந்த உலகங்களை அடைந்தான்.(27)
ஓ! யுதிஷ்டிரா, இவர்களும், இன்னும் பல மனிதர்களும் தாங்கள் செய்த ஈகை, தவங்கள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைந்து, அங்கிருந்து மீண்டும் மீண்டும் திரும்புகின்றனர்.(28) அவர்களுடைய புகழ் இந்த உலகங்கள் உள்ளளவும் நீடித்திருக்கும். ஓ! யுதிஷ்டிரா, ஈகை மற்று தவங்களின் மூலம் நித்திய உலகங்களை அடைந்த நல்ல இல்லறத்தோரின் கதையை நான் உனக்குச் சொன்னேன்.(29) தங்கள் ஈகையின் மூலமும், தாங்கள் செய்த வேள்விகளின் மூலமும், சந்ததியை உண்டாக்கியதன் மூலமும் இந்த மக்கள் சொர்க்கலோகங்களை அடைந்தனர்.(30) ஓ! குரு குலக்கொழுந்துகளில் முதன்மையானவனே, ஈகைச்செயல்களை எப்போதும் செய்வதன் மூலம் இம்மனிதர்கள் தங்கள் அறம் சார்ந்த புத்தியை வேள்விகள் செய்வதிலும், கொடையளிப்பதிலும் செலுத்தினர்.(31) ஓ வலிமைமிக்க இளவரசே, இரவு வருகிறது, உன் மனத்தில் எழும் எந்த ஐயத்திற்கும் காலையில் நான் விளக்கமளிப்பேன்" என்றார் {பீஷ்மர்}.(32)
அநுசாஸனபர்வம் பகுதி – 137ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |