கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சார்ந்து தமிழாக்கப்பட்டிருக்கும் இந்த அநுசாஸன பர்வத்தில் அநுசாஸனிகம் மற்றும் ஸ்வர்க்கரோஹனிகம் என்ற இரு உபபர்வங்களும், அவற்றில் 168 பகுதிகளும், 7670 ஸ்லோங்களும் இருக்கின்றன.
மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் துதிகளான சிவஸஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணுஸஹஸ்ரநாமம் ஆகிய இரண்டும் இந்தப் பர்வத்திலேயே இருக்கின்றன.
முழுமஹாபாரதத்தின் தொடக்க பர்வமான ஆதிபர்வத்தில், "பாகீரதியின் மைந்தனான பீஷ்மரால் விளக்கப்பட்டுக் கடமைகளை கேட்டு குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன் எவ்வாறு தன்னைச் சீர்படுத்திக் கொண்டான் என்பது இந்த அநுசாஸன பர்வத்தில் விளக்கப்படுகிறது. தர்மம் மற்றும் அர்த்தம் ஆகியவற்றின் விதிகளும்; கொடை மற்றும் தகுதிகளின் விதிகளும்; தானம் பெறுபவர்களின் தகுதிகளும், தானம் செய்வதற்கான முக்கியமான விதிமுறைகளும் இப்பர்வத்தில் விவரமாக விளக்கப்படுகின்றன. மேலும் இந்தப் பர்வத்தில், சடங்குகளில் ஒரு தனி மனிதனின் கடமை, நடத்தை விதிகள் மற்றும் ஒப்பற்ற உண்மையின் தகுதி ஆகியனவும் விளக்கப்படுகின்றன. மேலும் இந்தப் பர்வம், பிராமணர்கள் மற்றும் பசுக்களின் பெரும் தகுதியை வெளிப்படுத்தி, காலம் மற்றும் இடம் தொடர்பான கடமைகளின் புதிர்களைக் கட்டவிழ்க்கிறது. இவையே, பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட அனுசாசனம் என்றழைக்கப்படும் இந்த அற்புத பர்வத்தின் உள்ளடக்கங்களாகும். பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்வதும் இந்தப் பர்வத்தில்தான் விளக்கப்படுகிறது. நூற்று நாற்பத்தாறு பகுதிகளில் எட்டாயிரம் பாடல்களில் இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது." என சூத முனிவர் தன் பர்வத்திரட்டில் குறிப்பிடுகிறார்.
அநுசாஸன பர்வம் :
அநுசாஸனிகம் {தானதர்மம்} மற்றும் ஸ்வர்க்கரோஹணிகம் என்ற இரு உபபர்வங்களும்,
அவற்றில் 168 பகுதிகளும், 7670 ஸ்லோங்களும் இருக்கின்றன.
- மஹாபாரதம் தொடர்புடைய மேலும் சில கிண்டில் புத்தகங்களுக்கு:
https://mahabharatham.arasan.info/p/kindle-ebooks.htmlநன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
201908090517
திருவொற்றியூர்