கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சார்ந்து தமிழாக்கப்பட்டிருக்கும் இந்த சபா பர்வத்தில் சபா கிரியா, லோகபால சபாகயானம், ராஜசூய ஆரம்பம், ஜராசந்த வதம், திக்விஜயம், ராஜசூயீகம், அர்க்கியாஹரணம், சிசுபால வதம், தியூதம், அனுத்யூதம் என்ற பத்து உபபர்வங்களும், அவற்றில் 80 பகுதிகளும், 2708 ஸ்லோங்களும் இருக்கின்றன.
முழுமஹாபாரதத்தின் தொடக்க பர்வமான ஆதிபர்வத்தில், "இரண்டாவதாக வரும் சபா பர்வத்தில் வரும் நிகழ்வுகளாவன: பாண்டவர்கள் நிறுவிய அரசவையும், அவர்களுடன் தொடர்புடையோரின் மதிப்புரைகளும்;(133) தேவலோகங்களை நன்கறிந்தவரான நாரதரின் லோகபாலகர்கள் குறித்த வர்ணனை; ராஜசூய வேள்விக்கான ஆயத்தம்; ஜராசந்த வதம்;(134) மகதத்தின் தலைநகரான கிரிவ்ரஜத்தின் மலையடிவாரத்தில் அடைபட்டுக் கிடந்த இளவரசர்களைக் கிருஷ்ணன் விடுதலை செய்வது; பாண்டவர்களின் உலகளாவிய படையெடுப்புகள்;(135) ராஜசூய வேள்விக்குக் காணிக்கையோடு பிற நாட்டு இளவரசர்களின் வருகை; வேள்வியின் போது அர்க்கியம் அளித்தல் தொடர்பாகச் சிசுபாலன் கொல்லப்படுவது;(136) சபையில் துரியோதனனைப் பீமன் கேலி செய்வது; பெருமளவில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமையும், கவலையும்; துரியோதனனின் உளக்கொதிப்பும்,(137) பகடையாட்டத்திற்கான ஆயத்தங்களும்; வஞ்சகன் சகுனியுடனான சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் தோல்வியுறுவதும்;(138) திருதராஷ்டிரன், புயலின் அலைகளால் கலங்கடிக்கப்பட்ட படகைப் போலச் சூதாட்டத்தால் விளைந்த துன்பக்கடலில் மூழ்கியிருந்த தன் மருமகள் திரௌபதியைத் துன்பத்தில் இருந்து விடுவித்தல்.(139) யுதிஷ்டிரனை மீண்டும் சூதாட வைக்கத் துரியோதனன் செய்த முயற்சி;(140) சூதாட்டத்தில் வீழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வனவாசம் புகுதல். பெரும் வியாசரால் தொகுக்கப்பட்ட சபா பர்வம் இந்தச் சம்பவங்களால் ஆனதே.(141) இந்தப் பர்வமானது எழுபத்தி எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரண்டாயிரத்தி ஐநூற்றி ஏழு சுலோகங்களுடன் உள்ளன" என்று இருக்கிறது
சபா பர்வம் :
சபா கிரியா, லோகபால சபாகயானம், ராஜசூய ஆரம்பம், ஜராசந்த வதம், திக்விஜயம்,
ராஜசூயீகம், அர்க்கியாஹரணம், சிசுபால வதம், தியூதம், அனுத்யூதம் என்ற பத்து
உபபர்வங்களும், அவற்றில் 80 பகுதிகளும், 2708 ஸ்லோங்களும் இருக்கின்றன
- மஹாபாரதம் தொடர்புடைய மேலும் சில கிண்டில் புத்தகங்களுக்கு:
https://mahabharatham.arasan.info/p/kindle-ebooks.htmlநன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
201910131823
திருவொற்றியூர்