Thursday, November 14, 2019

அத்யாத்மம், அதிபூதம், தைவதம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 42

Presiding soul, object and deity! | Aswamedha-Parva-Section-42 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 27)


பதிவின் சுருக்கம் : பூதங்கள் முதலியவை அஹங்காரத்தில் இருந்து படைக்கப்பட்டன என்பதைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...


பிரம்மன், "உண்மையில் அகங்காரத்தில் இருந்தே ஐம்பெரும் பூதங்களும் பிறந்தன. அவை பூமி {பிருதிவி}, காற்று {வாயு}, ஆகாயம், நீர் {ஜலம்} மற்றும் ஐந்தாவதாக ஒளியாகும் {தேஜஸாகும்}.(1) இந்த ஐம்பெரும் பூதங்களில் ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் மயக்கமடைகின்றன.(2) ஞானிகளே, பெரும்பூதங்களுக்கு அழிவு ஏற்படப்போகும் நெருக்கத்தில், அண்டத்தின் அழிவுக்காலம் நெருங்கும் போது, அனைத்து உயிரினங்களும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகின்றன.(3) இருப்பிலுள்ள ஒவ்வொரு பொருளும் எதில் இருந்து உண்டானதோ அதிலேயே கறைந்து போகும். படைப்பு நடைபெற்ற வரிசைக்கு நேர்மாறான வகையில் அழிவு ஏற்படும். உண்மையில், பிறப்பைப் பொறுத்தவரையில் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து பிறக்கின்றன.(4) இருப்பிலுள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் கறையும்போதும் {முற்பிறவியின்} வலிமைமிக்க நினைவைக் கொண்டவர்களான ஞானிகள் ஒருபோதும் கறைவதில்லை {லயமடைவதில்லை}.(5)


ஒலி, தீண்டல், நிறம், சுவை, ஐந்தாவதாக மணம் என்பன அதன் விளைவுகளாகும். எனினும், நிலையற்றவையான அவை மாயை {அநித்யம்} என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.(6) பேராசை உண்டானதால் {பயன் கருதி செய்யப்பட்ட செயல்களால்} விளைந்தவையும், ஒன்றுக்கொன்று வேறுபடாதவையும், உண்மைத்தன்மை இல்லாதவையும், சதை மற்றும் குருதியுடன் இணைக்கப்பட்டு இருப்பவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையும்,(7) ஆன்மாவுக்கு வெளியே இருப்பவையுமான இவை அனைத்தும் ஆதரவற்றவையாகவும், சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. பிரானன், அபானன், உதானன், சமானன், வியானன் ஆகிய(8) ஐந்து காற்றுகளும் {வாயுக்களும்} எப்போதும் ஆன்மாவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவையாகும். வாக்கு, மனம், புத்தி ஆகியவற்றுடன் சேர்ந்திருக்கும் இவையே எட்டு உட்பொருட்களாலான அண்டமாக அமைகின்றன {இவை ஜீவனுக்கு மோக்ஷம் வரையில் நித்யமாக இருக்கும் ஸூக்ஷ்ம சரீரமாகும்}.(9) தோல், மூக்கு, காதுகள், கண்கள், நாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், மனம் தூய்மையடைந்தவனும், (சரியான பாதையில் இருந்து) புத்தி பிறழாதவனும்,(10) எட்டு நெருப்புகளால் ஒருபோதும் எரிக்கப்படாத மனம் கொண்டவனுமான ஒருவன், தனக்கு மேலேதுமற்ற மங்கல பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(11)

மறுபிறப்பாளர்களே, பதினோரு உறுப்புகள் என்று அழைக்கப்படுபவையும், அஹங்காரத்தில் எழுந்தவையும் பற்றி {புலன்களைப் பற்றி}நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(12) காதுகள் {செவி}, தோல் {த்வக்கு}, இரு கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {குறி}, இரு கைகள், பத்தாவதாக வாக்கு ஆகியனவே அவை.(13) பதினோராவதாக மனத்தைக் கொண்ட இவையே புலன்களின் கூட்டமாக {இந்திரிய ஸமூஹமாக} அமைகின்றன. ஒருவன் முதலில் இந்தக் கூட்டத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் (அவனில்) பிரம்ம ஒளி துலங்கும்.(14) இவற்றுள் ஐந்து அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அழைக்கப்படுகின்றன. காதுகள் முதலான ஐந்தும் உண்மையில் அறிவு தொடர்புடையனவாகச் சொல்லப்படுகின்றன.(15) எஞ்சியவை எந்த வேற்றுமையுமின்றிச் செயல்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மனமானது, இரண்டிற்கும் உரியவையாகக் கருதப்பட வேண்டும். உயர்ந்த நிலையில் இருக்கும் புத்தியானது பனிரெண்டாவதாக இருக்கிறது.(16) இவ்வாறு பதினோரு உறுப்புகளும் {புலன்களும்} முறையான வரிசையில் பட்டியலிடப்பட்டன. இவற்றைப் புரிந்து கொண்டே அனைத்தையும் தாங்கள் அடைந்துவிட்டதாகக் கல்விமான்கள் நினைக்கிறார்கள்.(17)

இதன் பிறகு, பல்வேறு வகையான உறுப்புகள் {புலன்கள்} அனைத்தையும் நான் பட்டியலிடப்போகிறேன். வெளியானது (அல்லது ஆகாயம் என்பது) முதல் அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது காதுகள் என்று அழைக்கப்படுகிறது.(18) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அஃது ஒலியாகிறது. (இதன்) தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} திசைகளாகும். காற்றானது {வாயு என்பது} இரண்டாவது அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது தோல் {த்வக்} என்று அறியப்படுகிறது.(19) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} தீண்டலுக்குரிய பொருட்கள் என்று அறியப்படுகிறது. இங்கே தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} தீண்டலாகும் {மின்னலாகும்}. ஒளி மூன்றாவதாகச் சொல்லப்படுகிறது. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது கண்கள் {நேத்திரம்} என்றறியப்படுகிறது.(20) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது நிறம் {ரூபம்} என்று அறியப்படுகிறது; சூரியனே அதன் தலைமைத்தேவனாவான் {அதிதைவதமாவான்}. நான்காவதாக (நான்காவது அமைப்பாக {பூதமாக}) நீர் {ஜலம்} அறியப்பட வேண்டும். ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது நாக்கு என்று சொல்லப்படுகிறது.(21) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது சுவை {ரஸம்} என்று சொல்லப்படுகிறது. இங்கே சோமன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐந்தாவது அமைப்பு {பூதம்} பூமியாகும் {பிருதிவியாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது மூக்கு {க்ராணம்} என்று சொல்லப்படுகிறது.(22) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது மணம் {கந்தம்} என்று சொல்லப்படுகிறது; அங்கே காற்று {வாயு} தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். இவ்வாறே ஐந்து அமைப்புகளும் {பூதங்களும்} எவ்வாறு மூன்று தொகுப்புகளாகப் பிரிந்திருக்கின்றன என்பது அறிவிக்கப்பட்டது.(23)

இனி, (வேறு) புலன்கள் பலவற்றைக் குறித்த அனைத்தையும் நான் அறிவிக்கப் போகிறேன். பாதங்கள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவாக {அத்யாத்மமென்று) குறிப்பிடப்படுகின்றன என வாய்மை அறிந்த பிராமணர்கள் சொல்கின்றனர்.(24) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது அசைவாக {நடையாக} இருக்கிறது. விஷ்ணு அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கீழ்நோக்கிப் பாயும் அபானக் காற்றானது {அபான வாயுவானது} {அத்யாத்மமாக} ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது குதம் { பாயு} என்றழைக்கப்படுகிறது.(25) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது கழிவாக {மலஜலமாக} வெளியேறுகிறது. மித்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். பிறப்புறுப்பானது ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.(26) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது உயிர்வித்தாக {சுக்ரம்-ஆக} இருக்கிறது. பிரஜாபதி {குறி} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கைகள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவென {அத்யாத்மமென்று) ஆன்ம உறவுகளை அறிந்த மனிதர்களால் குறிப்பிடப்படுகின்றன.(27) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது செயல்களாக {கிரியைகளாக} இருக்கிறது. இந்திரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

அடுத்ததாக, தேவர்கள் அனைவருடன் தொடர்புடைய வாக்கு ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(28) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது பேசுபொருளாக {பேசப்படுவதாக} இருக்கிறது. அக்னி அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐம்பூதங்களின் ஆன்மாவுக்குள் நகரும் மனமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாகக்} குறிப்பிடப்படுகிறது.(29) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது மன இயக்கமாக {ஸங்கல்பமாக} இருக்கிறது. சந்திரமாஸ் {சந்திரன்} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். உலகவாழ்வின் மொத்த இயக்கத்திற்கும் காரணமாக இருக்கும் அகங்காரமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(30) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது நனவாக {அபிமானமாக} இருக்கிறது. ருத்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். {மனத்தோடு சேர்த்து} ஆறு புலன்களையும் தூண்டும் புத்தியானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(31) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது புரிந்து கொள்ளப்படும் ஒன்றாக {அறிவதாக} இருக்கிறது. பிரம்மன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மூன்று இருக்கைகள் {ஸ்தானங்கள்} இருக்கின்றன. நான்காவது சாத்தியமற்றதாகும்.(32) அவை {அந்த இருக்கைகள்} நிலம், நீர் மற்றும் ஆகாயமாகும். பிறவிமுறை நான்கு வகைப்படும். முட்டைகளில் இருந்து சில பிறக்கின்றன {அண்டஜம்}; பூமியைப் பிளந்து மேல்நோக்கி எழும் புழுக்களில் இருந்து சில பிறக்கின்றன {உத்பிஜ்ஜம்}; கழிவுப்பொருட்களில் இருந்து சில பிறக்கின்றன {ஸ்வேதஜம்}; கருவறைகளின் சதைப்பந்துகளில் இருந்து சில பிறக்கின்றன {ஜராயுஜம்}.(33) இவ்வாறே உயிரினங்கள் அனைத்தும் நான்கு வகைப் பிறவிமுறைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. வானத்தில் பறப்பவையும் {பறவைகளும்}, தங்கள் மார்புகளைக் கொண்டு தவழ்பவையும் {பாம்புகளும்}, வேறு சில தாழ்ந்த பிறவிகளும் முட்டைகளில் இருந்து பிறப்பவையாக அண்டஜங்களாக அறியப்பட வேண்டும்.(34) பூச்சிகளும், அதுபோன்ற வேறு உயிரினங்களும் {கிருமிகளும்} கழிவுப்பொருட்களில் இருந்து பிறப்பவையாக {ஸ்வேதஜங்களென்று} சொல்லப்படுகின்றன.(35) இவை இரண்டாம் பிறவிமுறை கொண்டவை என்றும், இழிந்தவையென்றும் சொல்லப்படுகின்றன. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, சில காலம் கழித்து, பூமியைப் பிளந்து வெளிவரும் உயிரினங்கள்,(36) புழுக்களில் இருந்து பிறந்தவை என்று {உத்பிஜ்ஜங்களென்று} சொல்லப்படுகின்றன. இரு கால்களையோ, பல கால்களையோ கொண்டவையும், குறுக்கும்நெடுக்கமாக நடப்பவையுமான {திர்யக்கான கதியுள்ளவையுமான} உயிரினங்கள்,(37) கருவறைகளில் பிறந்தவையாக {ஜராயுஜங்களாக} இருக்கின்றன. அவற்றிலும் சில பழுதுள்ள வடிவம் கொண்டவையாக {வேறுபாடுள்ளவைகளாக} இருக்கின்றன.

பிரம்மத்தின் நித்திய கருவறையை {பிரம்மஸாக்ஷாத்காரத்தை, தவம் என்றும், புண்ணியச் செயல்கள் என்றும் இருவகையாக அறியப்பட வேண்டும்[1]. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். செயல்பாடு {கர்மம்} என்பது வேள்வி, வேள்வியில் அளிக்கப்படும் கொடைகள், பிறவி அடைந்த ஒவ்வொருவருக்கும் புனிதக் கடமையான கல்வி எனப் பலவகைப்படும் என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதுவே பழங்காலத்தவர்களின் போதனையாகும். மறுபிறப்பாளர்களின் தலைவர்களே, இதை முறையாகப் புரிந்து கொண்டவன் யோகத்தைக் கொண்டவன் {யோகி எனக்} கருதப்படுகிறான்.(38-40) அத்தகைய மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுவான் என்பதையும் அறிவீராக. இவ்வாறே நான் அத்யாத்மக் கோட்பாட்டை முறையாக உங்களுக்கு அறிவித்தேன்.(41) கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களே, ஞானம் கொண்ட மனிதர்கள் என்று கருதப்படுபவர்களால் இந்த ஞானம் {அத்யாத்மவிதி} அடையப்படுகிறது. புலன்கள் {இந்திரியங்கள்}, புலன்நுகர்பொருட்கள் {இந்திரியவிஷயங்கள்}, ஐம்பெரும்பூதங்கள் {ஐந்துமஹாபூதங்கள்}என்ற இவை அனைத்தையும் சேர்த்தே ஒருவன் தன் மனத்தில் கொள்ள வேண்டும்[2].(42) (ஈர்ப்பின் மூலம்) அனைத்தும் மனத்திற்குள் மட்டுப்படும்போது ஒருவன் அதற்கு மேலும் வாழ்வின் இன்பங்களை மதிப்பதில்லை. ஞானம் கொண்ட புத்தியுடன் கூடிய கல்விமான்கள் அதையே உண்மையான இன்பமாகக் கருதுகிறார்[3].(43)

[1] கும்பகோணம் பதிப்பில், "பிரம்மஸாக்ஷாத்காரத்தை அடைவதற்கு ஸநாதனமான கெஆரணம், தவம் புண்யகர்மம் என இரண்டுவிதமென்று தெரிந்து கொள்ள வேண்டும். இது வித்வான்களின் கருத்து" என்றிருக்கிறது.

[2] "இவை உண்மையில் மனத்தில் இருந்து வேறுபட்டவை என்று ஒருவன் கருத வேண்டும் என்று நீலகண்டர் விளக்குகிறார். உண்மையில், இவை மனத்தால் உண்டாக்கப்பட்டாலும், மனத்தைக் கடந்த உண்மையான இருப்புநிலை இவற்றுக்குக் கிடையாது என்றே எப்போதும் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "’அது’ என்று இங்கே சொல்லப்படுவது மனத்திற்குள் அனைத்துப் பொருட்களும் ஈர்க்கப்பட்டு மட்டுப்படுதலைக் குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்திரியங்கள், இந்திரிய விஷயங்கள், ஐந்து மஹாபூதங்கள் இவைகளையெல்லாம் மனத்துடன் சேர்த்துத் தரிக்க வேண்டும். எல்லாமாக இருக்கும் மனமானது (பிரம்மத்தினிடத்தில்) லயித்தால் (புருஷர்களுக்குப்) பிறவியில் உண்டான ஸுகத்தில் விருப்பம் உண்டாகாது" என்றிருக்கிறது.

இனி, அனைத்து உட்பொருட்களையும் பொருத்தவரையில், மென்மையான மற்றும் கடுமையான வழிமுறைகளின் மூலம் நுண் தத்துவங்களில் பற்றுதலை உண்டாக்குவதும், மங்கலம் நிறைந்ததுமான துறவை {நிவ்ருத்தியைக்} குறித்துச் சொல்லப் போகிறேன்.(44) குணங்களைக் குணங்களற்றவையாகக் கொண்டதும், பற்றிலிருந்து விடுபட்டதும், தனிமையில் வாழ்வதும், வேறுபாடுகளைக் காணாததும், பிரம்மம் நிறைந்ததுமான ஒழுக்கமே இன்பங்கள் அனைத்தின் பிறப்பிடமாகும்.(45) உறுப்புகள் அனைத்தையும் உள்ளீர்த்துக் கொள்ளும் ஆமையைப் போல அனைத்துப்புறங்களில் இருந்தும் ஆசைகள் அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் கல்விமானும், ஆசைகளற்றவனும், அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான மனிதன் எப்போதும் இன்பமாக இருக்கிறான்.(46) ஆசைகள் அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் கட்டுப்படுத்தி, தாகத்தை அழித்து, தியானத்தில் குவிந்து, அனைத்து உயிரினங்களிடமும் நண்பனாகும் நல்லிதயம் கொண்டவன் பிரம்மத்துடன் ஒன்றிணைவதற்குத் தகுந்தவனாவதில் வெல்கிறான்.(47) தங்களுக்குரிய பொருட்களை {புலன்நுகர் பொருட்களை} எப்போதும் பின்தொடரும் புலன்களை அடக்குவதன் மூலமும், வசிப்பிடங்களைக் கைவிடுவதன் மூலமும், அத்யாத்ம நெருப்பானது {ஆத்மஜ்ஞானமென்கிற அக்னியானது}, தியானம் செய்யும் மனிதனிடம் சுடர்விட்டெரிகிறது.(48)

விறகுகளில் ஊட்டப்பட்ட நெருப்பானது, சுடர்மிக்கத் தழல்களை வெளிப்படுத்துவதன் மூலம் பிரகாசத்தை அடைவதை {ஒளியைத் தருவதைப்} போலவே பேராத்மாவானது, புலன்களை அடக்குவதன் விளைவால் பிரகாசிக்கிறது.(49) அமைதியான ஆன்மாவைக் கொண்ட ஒருவன் தன் இதயத்திற்குள்ளேயே அனைத்துப் பொருட்களையும் காணும்போது, தன்னொளியால் எரியும் அவன், நுட்பத்திலும் நுட்பமானதும், ஒப்பற்ற சிறப்பைக் கொண்டதும் எதுவோ அதை அடைகிறான்.(50) நெருப்பை நிறமாகவும், நீரையும், வேறு நீர்மங்களையும் குருதியாகவும், காற்றை {வாயுவைத்} தோலாகவும், பூமியை மனத்தைத் தாங்கும் அருவருக்கத்தக்கதாகவும் (சதை மற்றும் எலும்பு முதலியவையாகவும்), வெளியை (அல்லது வானத்தை) ஒலியாகவும் கொண்டதும்; நோய் மற்றும் கவலை பரவியதும்; ஐந்து ஓடைகளிலால் சுழப்பட்டதும்; ஐந்து பூதங்களால் ஆனதும்; ஒன்பது வாயில்களையும், இரண்டு தேவர்களையும் கொண்டதும்; (தூய்மையற்ற தன்மையின் காரணமாக) ஆசை நிறைந்ததும்; காணத்தகுதியற்றதும்; முக்குணங்களால் ஆனதும்; (காற்று {வாயு / வாதம்}, பித்தம், சளி {கபம்} என்ற) மூன்று கூறுகளைக் கொண்டதும்; அனைத்து வகைப் பற்றுகளிலும் இன்புற்றிருப்பதும், மாயை நிறைந்ததுமாக உடல் இருக்கிறது.(51-53)

இந்த மனித உலகில் அசைப்பதற்குக் கடினமானதாகவும், தன்னை ஆதரித்துக் கொள்ளப் புத்தியைச் சார்ந்திருப்பதுமாக அஃது இருக்கிறது. இவ்வுலகில் அவ்வுடலே தொடர்ந்து சுழலும் காலச்சக்கரமாக இருக்கிறது.(54) உண்மையில், பயங்கரமானதும், அடியற்ற பெருங்கடலுமான அது மோகம் என்றழைக்கப்படுகிறது. தேவர்களுடன் கூடிய (மொத்த) அண்டத்தையும் விழிப்படையச் செய்வதும் நீட்டுவதும், சுருக்குவதும் இவ்வுடலே ஆகும்.(55) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், நித்தியமானவையும், கைவிடுவதற்கு மிக அரியவையுமான காமம், கோபம், அச்சம், பேராசை, பகை, பொய்மை ஆகியவற்றைக் கைவிடுகிறான். உடலின் முக்குணங்களையும், ஐம்பூதங்களையும் இவ்வுலகில் அடக்கும் ஒருவன் சொர்க்கத்தில் உயர்ந்த இருக்கையை {ஸ்தானத்தைப்} பெறுகிறான். அவனாலேயே முடிவிலி {எல்லையற்ற பேரளவு} அடையப்படுகிறது.(57) ஐம்புலன்களெனும் பெரிய கரைகளைக் கொண்டதும், மனோவிருப்பங்களையே வெள்ளமாகவும், மோகத்தைத் தடாகமாகவும் கொண்ட அந்த ஆற்றைக் கடக்கும் ஒருவன் காமம் மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்க வேண்டும்.(58)

அத்தகைய மனிதன், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, மனத்திற்குள் மனத்தைக் குவித்து, தன்னைத் தனக்குள் கண்டு உயர்ந்ததை {பரப்பிரம்மத்தைக்} காண்பான்.(59) அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ளும் அவன், சில நேரங்களில் ஒன்றாகத் தோன்றுவதும், சில நேரங்களில் பலவாகவும் தோன்றுபவையும், காலாகாலத்திற்கு மாறிக் கொண்டே இருப்பவையுமான அனைத்து உயிரினங்களிலும் தன்னைத் தானே காண்கிறான்.(60) ஒரு விளக்கில் இருந்து நூறு விளக்குகள் உண்டாவதைப் போல அவனால் எண்ணற்ற உடல்களை உணர முடியும் என்பதில் ஐயமில்லை. உண்மையில், விஷ்ணு அவனே, மித்திரன், வருணன், அக்னி மற்றும் பிரஜாபதியும் அவனே.(61) படைப்பவனும், விதிப்பவனும் அவனே; அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவனும், பலம் கொண்டவனுமான தலைவன் அவனே. அனைத்து உயிரினங்களின் இதயமாக இருக்கும் அவனில் பேராத்மா {பரமாத்மா} ஒளிர்கிறான்.(62) கல்விமான்களான பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், ராட்சசக்கூட்டங்கள்; பூத கணங்கள் மற்றும் பெரும் முனிவர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் புகழ்கின்றன" என்றான் {பிரம்மன்}.(63)

அஸ்வமேதபர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 63

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்