Pointed out by Sanjaya! | Asramavasika-Parva-Section-25 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் முதலியோரைக் காட்டி அவர்களுடைய பெயர்களையும் சொல்லி அவர்களைத் தவசிகளுக்கு அறிமுகம் செய்த சஞ்சயன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான தன் தம்பிகள் அனைவருடன் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்} தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்தில் அமர்ந்தான்.(1) அங்கே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களும், உயர்ந்த அருளைக் கொண்டவர்களுமான தவசிகள் பலர் பரந்த மார்பைக் கொண்டவர்களும், குருகுலத் தலைவர்களுமான பாண்டவர்களைக் காணும் விருப்பத்தில் அவனைச் சுற்றி அமர்ந்தனர்.(2)
அவர்கள், "இவர்களில் யுதிஷ்டிரன் யார்? பீமனும், அர்ஜுனனும் யார் யார்? இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} யார்? பெரும்புகழைக் கொண்ட திரௌபதி யார்?" என்று கேட்டனர்.(3)
அப்போது சூதன் சஞ்சயன், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலாகப் பாண்டவர்கள், திரௌபதி, குரு குடும்பத்துப் பெண்கள் பிறர் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.(4)
சஞ்சயன், "பசும்பொன்னைப் போன்ற நல்ல நிறம் கொண்டவனும், முழுதும் வளர்ந்த ஒரு சிங்கத்தைப் போலத் தெரியும் உடலைக் கொண்டவனும், மீன் போன்ற நீண்ட மூக்கைக் கொண்டவனும், அகலமான பெரிய தாமிர நிறக் கண்களைக் கொண்டவனுமான இவனே குரு மன்னனாவான் {யுதிஷ்டிரனாவான்}.(5) மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடை கொண்டவனும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறம் கொண்டவனும், அகன்ற பெரிய உடல்வடிவம் கொண்டவனும், நீண்டு பருத்திருக்கும் கைகளைக் கொண்டவனுமான இவன் விருகோதரனாவான் {பீமனாவான்}. இவனை நன்றாகப் பாருங்கள்.(6) இவனுக்கு அருகில் அமர்ந்திருப்பவனும், கரிய நிறம் மற்றும் இளமை வடிவத்துடன் கூடியவனும், யானை மந்தையின் தலைவனுக்கு ஒப்பானவனும், சிங்கத்தைப் போன்ற உயர்ந்த தோள்களுடையவனும், விளையாடிக் கொண்டிருக்கும் யானையைப் போல நடப்பவனும், தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான இவன் அர்ஜுனன் என்று அழைக்கப்படும் வீரனாவான்.(7) குந்தியின் அருகில் அமர்ந்திருக்கும் முதன்மையான மனிதர்களான இவர்கள் இருவரும் விஷ்ணுவுக்கும், மஹேந்திரனுக்கும் ஒப்பான இரட்டையர்களாவர்.(8)
கருங்குவளை_மலர் நீலோத்பலம்Monochoria Vaginalis_ |
[1] கும்பகோணம் பதிப்பில், "இவளுக்குப் பக்கத்தில் நிற்பவளும், ஸுவர்ணத்திற்கொப்பான மேனியுள்ளவளும், வடிவத்துடன் கூடின பார்வதி போன்றவளும், ஸத்யம் தவறாதவளுமான இவள், சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவரும், ஒப்பற்றவருமான வாசுதேவருடைய ஸஹோதரி. ஸுவர்ணம் போலச் சுத்தமான மஞ்சள் நிறமுள்ளவளான இவள் நாகராஜனுடைய புத்திரியும், அர்ஜுனனுடைய மனைவியுமான உலூபிகை. புதிய இலுப்பைப் புஷ்பங்களுக்கொப்பான நிறமுள்ள இவள் ராஜகுமாரியான சித்ராங்கதை” என்றிருக்கிறது. புதிய இலுப்பை புஷ்பம் என்பதன் அடிக்குறிப்பில், "'ஸமமான ஜாதியில் பிறந்தவளும், புதிய இலுப்பைப் புஷ்பங்களை அணிந்தவளும்' என்பது பழைய உரை" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "செழுமையான நீலோத்பல மாலைக்கொப்பான நிறமுள்ள இவள் மன்னர்களுடைய படைகளுக்குத் தலைவனும், எப்பொழுதும் அர்ஜுனடனுக்கு மேற்போக முயல்பவனும், அரசனுமான திருதஷ்டத்யும்னனுடைய தங்க; பீமசேனனுடைய முக்ய மனைவி" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், ""பஸ்பர்த்த க்ருஷ்ணேந ஸதா ந்ருபோ ய:" என்பது மூலம். 'கிருஷ்ணனோடு எப்போதும் ஸ்பர்த்தையுள்ள சல்யன்' என்று நீலகண்ட வ்யாக்யானம் கூறுகிறது. 'கிருஷ்ணேந' என்பறத்கு 'அர்ஜுனனோடு' என்று பொருள் கொண்டு, 'அர்ஜுனனோடு எப்போதும் ஸ்பர்த்தையுள்ள திருஷ்டத்யும்னன்' என்று லக்ஷாபரண வ்யாக்யானம் கூறுகிறது. இங்கே லக்ஷாபரண வ்யாக்யானத்தின் கருத்தே கொள்ளப்பட்டது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு படைக்குத் தலைவனாக ஒரு செழிப்புமிக்க மன்னன் இருந்தான். அந்த மன்னன் எப்போதும் கிருஷ்ணனை அறைகூவி அழைத்துக் கொண்டிருப்பான். நீலோத்பலம் போன்ற நிறம் கொண்ட இவள் அவனுடைய சகோதரியாவாள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கிருஷ்ணனை அறைகூவியழைக்கும் மன்னன் சிசுபாலனாவான். பீமன் சிசுபாலனின் தங்கையை மணந்தான் என்று சொல்லும் மிக அரிதான இடம் இஃது. ஒருவன் திரௌபதியை {முக்ய மனைவியாகப்} புறக்கணித்தாலும் இவள் நிச்சயம் பீமனின் முக்கிய மனைவியல்ல" என்றிருக்கிறது. சிசுபாலனின் மகளான கரேணுமதியை நகுலன் மணந்திருக்கிறான் என்பதைக் கருத்தில் கொண்டால், பீமன் சிசுபாலனின் தங்கையை மணந்திருக்க மாட்டான் என்று ஊகிக்கலாம். இவள், அர்ஜுனனைப் பகைப்பதற்காகவே யாகத்தீயில் பெறப்பட்டவனான திருஷ்டத்யும்னனின் மகளாகவோ, கிருஷ்ணனை எப்போதும் பகைத்தவனான சல்லியனின் மகளாகவோ இருக்க வேண்டும்.
சம்பக மலர்க்கூட்டத்தின் {சம்பக மலர்மாலையின் மஞ்சள்} நிறத்தைக் கொண்ட இவள் ஜராசந்தன் என்ற பெயரில் அறியப்பட்ட மகதமன்னனின் மகளாவாள். இவள் மத்ராவதியின் இளைய மகனுடைய {சகாதேவனின்} மனைவியாவாள்.(13)
நீலோத்பல மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவளும், இதோ பூமியில் அமர்ந்திருப்பவளும், தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட வழிகளைக் கொண்டவளுமான இவள் மத்ராவதியின் மூத்த மகனுடைய {நகுலனின்} மனைவியாவாள் {சிசுபாலனின் மகள் கரேணுமதியாவாள்}.(14) புடம்போட்ட தங்கத்தைப்போன்ற நல்ல நிறம் கொண்டவளும், மடியில் பிள்ளையுடன் அமர்ந்திருப்பவளுமான இந்தப் பெண்மணி மன்னன் விராடனின் மகளாவாள் {உத்தரையாவாள்}. இவள், தேரற்றவனாக இருந்தபோது தேரில் இருந்து போரிட்ட போர்வீரர்களாலும் துரோணராலும் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவியாவாள்[3].(15)
நீலோத்பல மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவளும், இதோ பூமியில் அமர்ந்திருப்பவளும், தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட வழிகளைக் கொண்டவளுமான இவள் மத்ராவதியின் மூத்த மகனுடைய {நகுலனின்} மனைவியாவாள் {சிசுபாலனின் மகள் கரேணுமதியாவாள்}.(14) புடம்போட்ட தங்கத்தைப்போன்ற நல்ல நிறம் கொண்டவளும், மடியில் பிள்ளையுடன் அமர்ந்திருப்பவளுமான இந்தப் பெண்மணி மன்னன் விராடனின் மகளாவாள் {உத்தரையாவாள்}. இவள், தேரற்றவனாக இருந்தபோது தேரில் இருந்து போரிட்ட போர்வீரர்களாலும் துரோணராலும் கொல்லப்பட்ட அபிமன்யுவின் மனைவியாவாள்[3].(15)
[3] "தேரில் இருக்கும்ஒருவன் பூமியில் நிற்பவனை ஒருபோதும் தாக்கக்கூடாது என்பதால் இது நியாயமற்ற போரின் தன்மையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வகிடற்ற தலைமுடி கொண்டவர்களும், வெள்ளுடை உடுத்தியவர்களுமான இவர்கள் கொல்லப்பட்ட திருதராஷ்டிர மகன்களின் {மனைவிகளான} விதவைகளாவர். இந்த முதிய மன்னனின் மருமகள்களும், இவருடைய நூறு மகன்களின் மனைவிமாருமான இவர்கள், தற்போது வீரப் பகைவர்களால் கொல்லப்பட்ட கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்தவர்களாக இருக்கிறார்கள்.(16) நான் இவர்களை முன்னுரிமை வரிசையின்படி சுட்டிக்காட்டினேன். பிராமணர்களிடம் இவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் விளைவால், இவர்களது புத்தியும், இதயமும் அனைத்து வகைக் கபடங்களும் அற்றவையாக இருக்கின்றன. தூய ஆன்மாவைக் கொண்ட இந்தக் கௌரவக் குடும்பத்து இளவரசிகள் அனைவரும் உங்கள் கேள்விக்கான பதிலாக என்னால் சுட்டிக்காட்டப்பட்டனர்" என்றான் {சஞ்சயன்}".(17)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறே குரு குலத்தைச் சேர்ந்தவனும், வயதால் முதிர்ந்தவனுமான அந்த மன்னன், மனிதர்களில் தேவர்களான தன் மகன்களைச் சந்தித்து, தவசிகள் அனைவரும் சென்ற பிறகு அவர்களுடைய நலத்தை விசாரித்தான்.(18) பாண்டவர்களுடன் வந்த போர்வீரர்கள், அந்த ஆசிரமத்தை விட்டகன்று, தங்கள் தேர்களில் இருந்தும், தாங்கள் செலுத்திய விலங்குகளில் இருந்தும் இறங்கி சற்றுத் தொலைவில் அமர்ந்தனர். உண்மையில், பெண்கள், முதியவர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட அந்தக் கூட்டமனைத்தும் அமர்ந்த பிறகு, அவர்களிடம் பேசிய முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, வழக்கமான மென் விசாரிப்புகளைச் செய்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(19)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |