மஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 149ம் பகுதியின் 14ம் ஸ்லோகத்தில் தொடங்கி 120ம் ஸ்லோகம் வரை யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் சொன்ன விஷ்ணுசஹஸ்ரநாமம் மொத்தம் 107 ஸ்லோகங்களைக் கொண்டதாகும். இவற்றில் விஷ்ணுவின் 1000 பெயர்கள் அடங்கியிருக்கின்றன.
இந்த ஸம்ஸ்க்ருத மூலச் சொற்கள் https://sanskritdocuments.org/mirrors/mahabharata/mbhK/tamil/mahabharata-k-13-tamil.html என்ற இணையப் பக்கத்தில் 254ம் அத்தியாயத்தில் இருந்தும், கும்பகோணம் தமிழ் பதிப்பினோடும் ஒப்பிட்டுப் பார்த்துப் புனையப்பட்டது.
கங்குலிக்கும் இந்த வலைத்தளத்திற்கும் இடையில் எண்ணிக்கை கணக்கில் 2 ஸ்லோகம் வேறுபட்டிருக்கிறது. அதாவது, கங்குலியில் 14ல் தொடங்கி 120ம் ஸ்லோகத்தில் முடியும் விஷ்ணுஸகஸ்ரநாமம் மேற்கண்ட இணையத்தில் 16ல் தொடங்கி 122ல் முடிவடைகிறது.
கீழே ஸ்லோகங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் பதிமூன்றாம் பர்வம், அத்தியாய எண் மற்றும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்தின் எண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அதாவது 13-149-14 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அநுசாஸன பர்வம் பகுதி 149ல் 14வது ஸ்லோகம் என்று கொள்க.
இந்த ஸம்ஸ்க்ருத மூலச் சொற்கள் https://sanskritdocuments.org/mirrors/mahabharata/mbhK/tamil/mahabharata-k-13-tamil.html என்ற இணையப் பக்கத்தில் 254ம் அத்தியாயத்தில் இருந்தும், கும்பகோணம் தமிழ் பதிப்பினோடும் ஒப்பிட்டுப் பார்த்துப் புனையப்பட்டது.
கங்குலிக்கும் இந்த வலைத்தளத்திற்கும் இடையில் எண்ணிக்கை கணக்கில் 2 ஸ்லோகம் வேறுபட்டிருக்கிறது. அதாவது, கங்குலியில் 14ல் தொடங்கி 120ம் ஸ்லோகத்தில் முடியும் விஷ்ணுஸகஸ்ரநாமம் மேற்கண்ட இணையத்தில் 16ல் தொடங்கி 122ல் முடிவடைகிறது.
கீழே ஸ்லோகங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் பதிமூன்றாம் பர்வம், அத்தியாய எண் மற்றும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்தின் எண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அதாவது 13-149-14 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அநுசாஸன பர்வம் பகுதி 149ல் 14வது ஸ்லோகம் என்று கொள்க.
****
மூலத்துதி |
எளிய வடிவில் மூலத்துதி |
தமிழ்த்துதி |
அகராதி |
****
ஓம்!
எங்கும் நிறைந்தவன், முற்றும் மறைப்பவன், தன்வசப்படுத்துபவன், காலத்தலைவன்,
முற்றும்படைத்தவன், முற்றுமழிப்பவன், முற்றும்நிலைநிறுத்துபவன், அனைத்தான்மா, யாவுந்தோற்றுவித்தவன்<1-9>;(14)
தூயான்மா, பரமாத்மா, முக்தர்உயர்கதி,
மாற்றமற்றவன், உறைக்குள்ளுறைந்தவன், சான்றாளன், உடலுறையறிந்தவன், அழிவற்றவன்.<10-17>;(15)
யோகன், யோகியர்த்தலைவன், பிரகிருதிஜீவத்தலைவன்,
சிங்கத்தலையன், சிறப்பானவன், எழில்மயிரோன், முதன்மையானவன்<18-24>;(16)
யாவுமானவன், யாவுமழிப்பவன், முக்குணங்கடந்த தூயன், அசைவற்றவன், தொடக்கம், வற்றாச்செல்வந்தன்,
மாற்றமில்லாதவன், விருப்பில்பிறப்பவன், யாவுங்கனியன், யாவுந்தாங்கி, மூலன், கட்டறுந்தலைவன்<25-37>;(17)
தானேதோன்றியவன், மகிழ்ச்சியளிப்பவன், தலைமை மேதை, தாமரைக்கண்ணன், பேரொலியன்,
தொடக்கமுடிவற்றவன், அண்டந்தாங்குபவன், யாவும்விதிப்பவன், செங்கனிமம்<38-46>;(18)
அளவற்றவன், புலன்களின் தலைவன், உந்தித்தாமரை கொண்டவன், தேவர்த்தலைவன்,
அண்டத்தச்சன், மந்திரன், யாவையுங்குறைப்பவன், மிகப்பெரியவன், புராதனன், நிலைப்பவன்.<47-56>;(19)
சிந்தைக்கெட்டாதவன், நித்தியன், கிருஷ்ணன், செங்கண்ணன், யாவையுங்கொல்பவன்,
யாவிலும்பெரியவன், முப்பகுதிவாசன், தூய்மையாளன், மங்கலம்நிறைந்துயர்ந்தவன்<57-64>;(20)
யாவுந்தூண்டுபவன், உயிர்மூச்சை உண்டாக்குபவன், வாழச்செய்பவன், மூத்தவன், உயிரினத்தலைவன்,
பொன்வயிற்றோன், நிலவயிற்றோன், செல்வத்தலைவன், மதுவைக்கொன்றவன்.<65-73>;(21)
எல்லாம்வல்லவன், பேராற்றல் கொண்டவன், விற்தரித்தவன், பேரறிவாளன், கருடவாகனதாரி, தகுந்தவன்,
ஒப்பற்றவன், குழப்பமற்றவன், தகுந்தனவறிந்தவன், செயலானவன், தன்னையேசார்ந்தவன்<74-84>;(22)
தேவர்த்தலைவன், புகலிடமானவன், பேரின்பவடிவானன், அண்டவித்தானவன், யாவும்படைத்தானவன்,
பகலானவன், ஆண்டானவன், பாம்பானவன், தீர்ப்பானவன், யாவுங்காண்பானவன்<85-94>;(23)
பிறப்பற்றவன், அனைத்தின்தலைவன், வெற்றியடைந்தவன், வெற்றியேயானவன், அனைத்தின் தொடக்கமானவன், சிதைவைக்கடந்தவன்,
அறமானவன், அளவற்ற ஆன்மா, யோகம்யாவுங்கடந்தவன்<95-103>;(24)
வசு, தாராளமனத்தினன், வாய்மையாளன், தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன், ஒர்மையாளன், சமமானவன்,
விருப்பங்கள்யாவும் அருள்பவன், தாமரைக்கண்ணன், அறச் செயல்களைச் செய்பவன், அறவடிவம்<104-113>;(25)
துன்பமழிப்பவன், பல தலையன், அண்டந்தாங்குபவன், அண்டப்பிறப்பிடம், தூயபுகழ்,
அழிவற்றவன், நித்யமாக நிலைத்திருப்பவன், சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன், தவங்களின் அறிவைக் கொண்டவன்<114-122>;(26)
எங்கும் செல்பவன், அனைத்துமறிந்தவன், மாற்றமற்ற ஒளி, எங்கும் துருப்பு கொண்டவன், அனைவராலும் விரும்பப்படுபவன்,
வேதமானவன், வேதங்களையறிந்தவன், வேதங்களின் அங்கங்களையறிந்தவன், வேதங்களின் அங்கமானவன், வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன், ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன்<123-133>;(27)
உலகாள்பவன், தேவர்களையாள்பவன், அறமறமாள்பவன், காரணகாரியன்,
நாலாத்மன், நால்வடிவன், நாற்கொம்பன், நாற்கரத்தோன்<134-141>;(28)
ஒளிச்சுடரானவன், உணவுக்கொடையாளி, நல்லோரைப் பேணிவளர்ப்பவன், தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன், அண்டதிற்குமுன்தோன்றியவன்,
எப்போதும் வெற்றியாளன், தேவர்களையே வெற்றி கொள்பவன், அண்டத்தின் பொருட்காரணன், பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் வசிப்பவன்<142-150>;(29)
இந்திரனின் தம்பி, குள்ளன், நெடியன், பேரண்ட வடிவன், பயனற்றவை செய்யாதவன், தூய்மை செய்பவன், புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன்,
இந்திரனைக் கடந்தவன், அனைவரையும் ஏற்பவன், படைப்பானவன், ஒரே வடிவன், நிறுவுனன், யமன்<151-162>;(30)
அறியத்தகுந்தவன், மருத்துவன், எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன், பேரசுரர்களைக் கொல்பவன், லக்ஷ்மியின் தலைவன், தேனவன்,
புலன்களைக் கடந்தவன், பெரும் மாயன், பேராற்றல் கொண்டோன், பெரும்பலத்தோன்<163-172>;(31)
பெரும்புத்திமான், பெரும்வலிமை கொண்டவன், பெருஞ்சக்திமான், பேரொளியால் அண்டங்காண்பவன்,
கண்களுக்குப் புலப்படாத உடலைக் கொண்டவன், முற்றழகன், புலப்படா ஆத்மா, பெருஞ்சுமை சுமப்பவன்<173-180>;(32)
தடைகளைத் துளைப்பவன், பூமியை உயர்த்தியவன், லட்சுமிக்குள் வசிப்பவன், அறவோரின் புகலிடம்,
வெல்லப்பட முடியாதவன், தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன், பூமியை மீட்டவன், துன்பங்களையும் போக்குபவன்<181-188>;(33)
ஒளி நிறைந்தவன், துன்பங்களை அடக்குபவன், தன்மையானவன், இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசன், பாம்புகளில் முதன்மையானவவன்,
பொன்னுந்தியைக் கொண்டவன், கடுந்தவங்களைப் பயின்றவன், தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன், உயிரினங்களின் தலைவன்<189-197>;(34)
மரணத்தை விலக்குபவன், கருணைக் கண்ணன், அமுதால் நனைப்பவன், விதியாக இருப்பவன், இன்புறவும், பொறுக்கவும் செய்பவன், ஒரே வடிவில் இருப்பவன்,
எப்போதும் இயங்குபவன், தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன், தீயோரைத் தண்டிபவன், உண்மை ஞானாத்மா, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன்<198-208);(35)
கற்பிப்பவன், பிரம்மனுக்குக் கற்பிப்பவன், இடமாகவோ இருப்பவன், நல்லவர்களுக்கு நன்மை செய்பவன், கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன்,
சாத்திரங்களினால் அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும் செலுத்தாதவன், சாத்திரங்களால் அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன், மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன், வாக்கின் தலைவன், தயாளன்<209-218>;(36)
வழிநடத்துபவன், அனைத்து உயிரினங்களின் தலைவன், வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன், வேதங்களை மீட்டவன், அண்டத்தை இயக்குபவன், வாயுவானவன்,
ஆயிரந்தலையன், நீக்கமற நிறைந்திருக்கும் ஆத்மா, ஆயிரங்கண்ணன்<219-226>;(37)
ஆயிரங்காலன், சுழற்றுபவன், ஆசைகடந்தவன், மறைந்திருப்பவன், விலகியவர்களைக் கலங்கடிப்பவன்,
காலனையே அழிப்பவன், தொடக்கமில்லாதவன், ஆகுதிகளைக் கொண்டு சேர்ப்பவன், பூமியைத் தாங்கிப் பிடிப்பவன்<227-235>;(38)
மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன், தூய நிலையில் இருப்பவன், அண்டத்தை ஆதரிப்பவன், அண்டத்திற்கு உணவளிப்பவன்,
எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன், நல்லோரைக் கௌரவிப்பவன், அழகிய செயல்களைக் கொண்டவன், நன்மை செய்பவன், அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன், அறியாமையை அழிப்பவன்<236-246>;(39)
வேறுபாடுகளைக் களைந்தவன், உள்ளும்புறமும் நிறைந்தவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன், அனைத்தையும் தூய்மையாக்குபவன்,
நிறைவடையச்செய்பவன், நிறைவடைந்தவன், வெற்றியாளன், வெற்றியை அளிப்பவன்<247-256>;(40)
புனிதநாட்களின் தலைவன், அனைத்தையும் பொழிபவன், அண்டம் முழுவதும் நடப்பவன், அறப்படிநிலைகள் அளிப்பவன், வயிற்றில் அறத்தைக் கொண்டவன்,
யாவும்பெருக்குபவன், தன்னைப் பெருக்கிக் கொள்பவன், தனித்து இருப்பவன், ஸ்ருதிகளெனும் பெருங்கடலானவன்<257-264>;(41)
நற்கரத்தான், சுமக்கப்பட முடியாதவன், ஒலியானவன், அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன், செல்வத்தைக் கொடுப்பவன், தன் பலத்தில் தானே வசிப்பவன்,
பல்வேறு வடிவங்களைக் கொண்டவன், பெரும் வடிவம் படைத்தவன், விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன், அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன்<265-274>;(42)
பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன், காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன், எரியும் சக்தியால் எரிப்பவன்,
ஆறு குணங்களின் வளம் கொண்டவன், பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன், வேத வடிவானவன், சந்திரனைப் போலக் குளிர்விப்பவன், சூரியனைப்போல ஒளிர்பவன்<275-282>;(43)
சந்திரனின் பிறப்பிடம், தன்னொளியில் சுடர்விடுபவன், உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன், தேவர்களில் திறம் பெற்றவன்,
பெரும் மருந்தானவன், அண்டத்தின் பெரும் பாலமானவன், வீண்போகாத அற ஆற்றல்கொண்டவன்<283-289>;(44)
எப்போதும் வேண்டப்படுபவன், மீட்பவன், புனிதப்படுத்துபவன், ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன்,
காமனைத் தடுப்பவன், காமனின் தந்தை, இனிமையானவன், விரும்பப்படுபவன், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன், அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன்<290-299>;(45)
யுகங்களைத் தொடங்கச் செய்பவன், யுகச் சக்கரத்தைச் சுழலச் செய்பவன், பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன், உண்பவர்களில் பெரியவன்,
பிடிபட இயலாதவன், மிகப்பெரிய வடிவத்தில் வெளிப்படுபவன், ஆயிரம் பகைவர்களை அடக்கியவன், எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன்<300-308>;(46)
விரும்பித் துதிக்கப்படுபவன், மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன், மயில் இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன், அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன், அருளைப் பொழிபவன்,
அறவோரின் கோபத்தைக் கொல்பவன், அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன், அனைத்தையும் நிறைவேற்றுபவன், அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன், பூமியை நிலைநிறுத்துபவன்<309-318>;(47)
ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன், பெரும் புகழைக் கொண்டவன், அனைத்தையும் வாழச் செய்பவன், உயிரைக் கொடுப்பவன், வாசவனின் தம்பி,
நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம், அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன், எப்போதும் விழிப்புடன் இருப்பவன், மகிமையில் நிறுவப்பட்டவன்<319-327>;(48)
அனைத்தையும் வற்றச் செய்பவன், அறப்பாதையை நிலைநிறுத்துபவன், சுமையைச் சுமப்பவன், வரங்களைக் கொடுப்பவன், காற்றை வாகனமாகக் கொண்டவன்,
வசுதேவரின் மகன், இயல்புக்குமீறி ஒளிர்பவன், தேவர்கள் தோன்றக் காரணமானாவன், பகைவரின் நகரங்களைத் துளைப்பவன்<328-336>;(49)
கவலைகளைக் கடந்தவன், வழிநடத்துபவன், அச்சத்தை விலக்குபவன், எல்லையற்ற துணிவாற்றலைக் கொண்டவன், சூர குலத்தில் பிறந்தவன், மக்களை ஆள்பவன்,
அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன், பூமிக்கு நூறு முறை வருபவன், தாமரையைக் கொண்டவன் , தாமரைக்கண்ணன்<337-346>;(50)
தொடக்ககாலத் தாமரையை உந்தியில் கொண்டவன், மலர்க்கண்ணன், இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவன், உடல்வடிவத்தை ஏற்பவன்,
பலங்களனைத்தையும் கொண்டவன், பூதங்களின் வடிவில் வளர்பவன், புராதன ஆன்மா, அகன்றவிழியோன், கருடக்கொடியோன்<347-355>;(51)
ஒப்பற்றவன், சரபன், பயங்கரமாகத் தாக்குபவன், அனைத்தையும் அறிந்தவன், வேள்வி நெய்யானவன், வேள்விநெய்யை ஏற்பவன்,
அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன், லட்சுமியைக்கொண்டவன், போர்கள் அனைத்திலும் வெல்பவன்<356-364>;(52)
அழிவைக் கடந்தவன், செவ்வண்ணம் ஏற்பவன், தேடும் பொருளாக இருப்பவன், அனைத்துக்கும் வேராக இருப்பவன், வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன், தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன்,
மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன், வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன், பெரும் வேகம் கொண்டவன், பெரும் அளவிலான உணவை விழுங்குபவன்<365-374>;(53)
இயங்கச் செய்தவன், எப்போதும் கலங்கடிப்பவன், பிரகாசமாக ஒளிர்பவன், வயிற்றில் பலம் கொண்டவன், அனைத்தையுமாளும் பரமன்,
அண்டப் பொருளானவன், காரணப்பொருளானவன், எந்தப் பொருளையும் சாராதவன், பன்முகத்தன்மையை விதிப்பவன், புரிந்து கொள்ளப்பட முடியாதவன், மாயத்திரையில் மறைந்திருப்பவன்<375-385>;(54)
குணங்களற்றவன், அனைத்தையும் தாங்கும் இடமானவன், அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமானவன், முதன்மையான இடத்தை ஒதுக்குபவன், நிலைத்துநீடிப்பவன்,
உயர்ந்த பலத்தைக் கொண்டவன், மகிமைப்படுத்தப்படுபவன், நிறைவுடன் இருப்பவன், முழுமையாக இருப்பவன், மங்கலப் பார்வை கொண்டவன்<386-395>;(55)
மகிழ்ச்சியில் நிறைப்பவன், அனைத்தின் கதியாக இருப்பவன், விரதன், குறையற்ற பாதையானவன், முக்திக்கு வழிநடத்துபவன், வழிநடத்துபவன், வழிநடத்த எவனும் இல்லாதவன்,
பெரும் வலிமை கொண்டவன், வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன், நிலைநிறுத்துபவன், கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன்<396-404>;(56)
பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன், அனைத்து உடல்களிலும் வசிப்பவன், அனைத்து உயிரினங்களையும் இயக்குபவன், உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன், மதிப்புடன் வணங்கப்படுபவன், மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன்,
அனைத்தையும் உண்டாக்கும் ஆதிபொன்முட்டையை வயிற்றில் கொண்டவன், பகைவர்களை அழிப்பவன், அனைத்திலும் படர்ந்திருப்பவன், பரவச் செய்பவன், புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன்<405-415>;(57)
பருவ காலங்களானவன், விரும்பியதை அடையச் செய்பவன், அனைத்தையும் பலவீனப்படுத்துபவன், தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன், எங்கும் அறியப்படவல்லவன்,
அச்சங்கொள்ளச் செய்பவன், அனைத்தும் வசிக்கும் இடமாக இருப்பவன், தக்ஷன், அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன், அதிகத் திறன் கொண்டவன்<416-425>;(58)
மொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன், அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன், சான்றுப் பொருளாக இருப்பவன், அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன்,
அனைவராலும் வேண்டப்படுபவன், ஆசையற்றவன், அண்டத்தை மறைக்கும் பெரும் உறையாக இருப்பவன், அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன், பெருஞ்செல்வம் கொண்டவன்<426-434>;(59)
மனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன், துறவின் வடிவில் இருப்பவன், பிறப்பற்றவன், அறத்தூணாக இருப்பவன், வேள்வியின் பெரும் உடல்வடிவம்,
ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக இருப்பவன், நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன், அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன், அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன், படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன்<435-444>;(60)
அனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன், வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன், வேள்விகளில் துதிக்கப்படத்தகுந்தவன், வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன், எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன், முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன்,
அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன், குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன், அனைத்தையும் அறிந்தவன், சிறந்த ஞானத்திற்கு ஒப்பானவன்<445-454>;(61)
சிறந்த நோன்புகளை நோற்பவன், எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன், நுட்பமிக்கவன், இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன், மகிழ்ச்சியைக் கொடுப்பவன், பிறருக்கு நன்மை செய்பவன்,
மனங்களை மகிழ்ச்சியில் நிறைப்பவன், கோபத்தை வென்றவன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன், அறமற்றோரைக் கிழித்தெறிபவன்<455-464>;(62)
ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன், தன்னைத்தானே சார்ந்திருப்பவன், முற்றாகப் பரவியிருப்பவன், முடிவிலா வடிவங்களில் இருப்பவன், முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன்,
அனைத்திலும் வாழ்பவன், முழு அன்பைக் கொண்டவன், அண்டத்தின் தந்தையாக இருப்பவன், வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன், கருவூலங்கள் அனைத்தின் தலைவன்<465-474>;(63)
அறத்தைப் பாதுகாப்பவன், அறத்தின் ஆதாரமானவன், எப்போதும் இருப்பவன், இல்லாதவன், அழியத்தக்கவன்,
அழிவற்றவன், உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன், ஆயிரங்கதிரோன், விதி விதிப்பவன், சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன்<475-485>;(64)
எண்ணற்ற ஒளிக்கதிர்களில் இருப்பவன், அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன், பேராற்றலானவன், யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன்,
தேவர்களில் பழைமையானவன், தன் மகிமையில் தானே இருப்பவன், தேவர்கள் அனைவரின் தலைவன், தேவர்களை நிலைநிறுத்தபவனையும் ஆள்பவன்<486-493>;(65)
பிறப்பையும், அழிவையும் கடந்தவன், பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன், அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன், அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன், பழைமையானவன்,
உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன், அனுபவிப்பவன், பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன், அபரிமிதமான கொடைகளை வழங்கியவன் <494-502>;(66)
சோமத்தைப் பருகுபவன், அமுதம் பருகுபவன், மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன், ஒரு கணப்பொழுதில் பகைவரை வெல்பவன், இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன்,
தண்டிப்பவன், அனைவரையும் வெல்பவன், கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன், கொடைகளுக்குத் தகுந்தவன், உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன்<503-512>;(67)
உயிர்மூச்சைத் தாங்குபவன், உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன், சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன், முக்தியை அளிப்பவன், சொர்க்கம், பூமி, பாதாளம் என்ற மூன்றைத் தன் காலடிகளால் மறைத்தவன்,
நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம், அனைத்திலும் நிறைந்திருப்பவன், பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன், அனைத்தையும் அழிப்பவன்<513-521>;(68)
பிறப்பற்றவன், அதிகம் துதிக்கப்படுபவன், தன் இயல்பில் தோன்றுபவன், பகைவர்கள் அனைவரையும் வெல்பவன், தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன்,
இன்ப வடிவன், பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன், மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன், வாய்மையையும், பிற அறங்களையும் தன் குறியீடுகளாகக் கொண்டவன், மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன்<522-530>;(69)
முனிவர்களில் முதல்வன், கபிலராக இருப்பவன், அண்டத்தை அறிந்தவன், பூமியை ஆள்பவன்,
மூன்று பாதங்களைக் கொண்டவன், தேவர்களைப் பாதுகாப்பவன், பெரும் கொம்புகளைக் கொண்டவன், செயல்களைத் தீர்ப்பவன்<531-538>;(70)
பெரும்பன்றியானவன், வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன், அழகிய துருப்புகளைக் கொண்டவன், பொற்கங்கணங்கள் கொண்டவன்,
மறைந்திருப்பவன், ஆழம் நிறைந்தவன், அடைதற்கரியவன், சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன், சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன்<539-547>;(71)
விதி விதிப்பவன், அண்டத்தின் காரணன், ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன், கிருஷ்ணன், நீடித்திருப்பவன், அனைத்தையும் செதுக்குபவன்,
சிதைவுக்கு அப்பாற்பட்டவன், வருணன், வருணனின் மகன், மரமானவன், இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன், மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன்<548-558>;(72)
ஆறு குணங்களைக் கொண்டவன், ஆறு குணங்களையும் அழிப்பவன், இன்பநிலையாக இருப்பவன், வெற்றிமாலையால் அலங்கரிக்கப்படுபவன், கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன்,
அதிதியின் கருவறையில் பிறந்தவன், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன், முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன், அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன்<559-567>;(73)
முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன், தன் கோடரியை இழந்தவன், கடுமைமிக்கவன், விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன்,
சொர்க்கத்தையே தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன், அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன், வேதங்களைப் பகுத்தவன், வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன், பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன்<568-576>;(74)
மூன்று சாமங்களில் பாடப்படுபவன், சாமங்களைப் பாடுபவன், சாமங்களானவன், உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன், மருந்தாக இருப்பவன், மருத்துவன்,
துறவறம் விதித்தவன், ஆசைகளைத் தணிவடையச் செய்பவன், நிறைவாய் இருப்பவன், பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்ககான புகலிடமாக இருப்பவன்<577-585>;(75)
அழகிய அங்கங்களைப் பெற்றவன், ஆன்ம அமைதியைத் தருபவன், படைத்தவன், பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன், அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் யோக உறக்கத்தில் கிடப்பவன்,
பசுக்களுக்கு நன்மை செய்பவன், அண்டத்தை ஆள்பவன், அண்டத்தைப் பாதுகாப்பவன், காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன், அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன்<586-595>;(76)
புறமுதுகிடாத வீரன், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன், அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன், நன்மை செய்பவன், கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன்,
மங்கலச் சுழிமார்பன், செழிப்பின் வசிப்பிடம், லட்சுமியின் தலைவன், செல்வந்தர்களில் முதன்மையானவன்<596-604>;(77)
செழிப்பைத் தருபவன், செழிப்பை ஆள்பவன், செழிப்புடன் எப்போதுமிருப்பவன், அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம், அறவோருக்குச் செழிப்பைக் கொடுப்பவன்,
செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன், தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன், அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன், அனைத்து வகை அழகையும் கொண்டவன், மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன்<605-614>;(78)
அழகிய கண்களைக் கொண்டவன், அழகிய அங்கங்களைக் கொண்டவன், மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் , உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் , ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் ,
ஆன்மாவை வென்றவன் , மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் , எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் , ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் <615-623>;(79)
அனைத்து உயிரினங்களையும் கடந்தவன் , திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் , தலைவனற்றவன் , எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் ,
வெறுந்தரையில் கிடந்தவன் , பூமியை அலங்கரிப்பவன் , பலத்தின் சுயமாக இருப்பவன் , துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் , தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் <624-632>;(80)
பிரகாசம் கொண்டவன் , அனைவராலும் வழிபடப்படுபவன் , நீர்க்குடமாக இருப்பவன் , தூய ஆன்மா கொண்டவன் , தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் ,
கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் , போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் , பெருஞ்செல்வம் கொண்டவன் , அளவற்ற ஆற்றல் கொண்டவன் <633-641>;(81)
காலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் , சூரன் குலத்தில் பிறந்தவன் , வீரன் , தேவர்கள் அனைவரின் தலைவன் ,
மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் , மூவுலகங்களையும் ஆள்பவன் , சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் , கேசியைக் கொன்றவன் , அனைத்தையும் அழிப்பவன் <642-650>;(82)
வேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் , அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் , விரும்புபவன் , அழகிய வடிவம் கொண்டவன் , ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் ,
குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் , பிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் , , எல்லையற்றவன் , படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் <651-660>;(83)
மந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் , தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் , பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் , தவங்களைப் பெருகச் செய்பவன் ,
பிரம்மத்தை அறிந்தவன் , பிராமண வடிவத்தில் இருப்பவன் , பிரம்மம் என்றழைக்கப்படுபவன் , வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் , பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் <661-670>;(84)
பெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் , பெருஞ்செயல்களைச் செய்பவன் , பெருஞ்சக்தி கொண்டவன் , பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் ,
வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் , வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் , வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன், வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் <671-678>;(85)
அனைவராலும் பாடப்படுபவன் , பாடப்பட விரும்புபவன் , தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் , துதிக்கும் செயலே ஆனவன், துதிகளைப் பாடுபவன் , போரிட விரும்புபவன் ,
அனைத்து வகையிலும் முழுமையானவன் , அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் , நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் , செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் , அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் <679-689>;(86)
மனோ வேகம் கொண்டவன் , அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் , பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் , செல்வத்தை வழங்குபவன் , அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் ,
வசுதேவரின் மகன் , அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் , அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் , தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் <690-698>;(87)
அறவோரால் அடையப்படுபவன் , எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் , அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் , பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் , உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் ,
பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் , யாதவர்களில் முதன்மையானவன் , அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் , யமுனையின் கரைகளில் இன்பமாக விளையாடுபவன் <699-707>;(88)
படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் , அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் , முதன்மையானவை அனைத்தும் கலந்திருப்பவன் , ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் ,
அனைவரின் செருக்கையும் அடக்குபவன் , நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் , மகிழ்ச்சியில் பெருகுபவன் , பிடிக்கப்பட முடியாதவன் , ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் <708-716>;(89)
அண்டவடிவம் கொண்டவன் , பெருவடிவம் கொண்டவன் , சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொடண்டவன் , வடிவமற்றவன் ,
பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் , வெளிப்படாதவன் , நூறு வடிவங்கள் கொண்டவன் , நூறு முகங்களைக் கொண்டவன் <717-724>;(90)
தனியொருவன் , பலராகத் தெரிபவன் , அனைத்தையும் தன்னுள் கொண்டவன் , இன்பம் நிறைந்தவன் , விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் , இவை அனைத்துமானவன் , அஃது என்றழைக்கப்படுபவன் , உயர்ந்த புகலிடம் ,
பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் , அனைவராலும் விரும்பப்படுபவன் , மது குலத்தில் பிறந்தவன் , தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் <725-735>;(91)
பொன்வண்ணன் , பொன் போன்ற அங்கங்கள் கொண்டவன் , அழகிய அங்கங்களைக் கொண்டவன் , சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் ,
வீரர்களைக் கொல்பவன் , இணையற்றவன் , சுழியத்தைப் போன்றவன் , எந்த அருளும் தேவைப்படாதவன் , சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் , காற்றின் வடிவில் அசைபவன் <736-745>;(92)
ஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் , தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் , அனைவராலும் மதிக்கப்படுபவன் , மூவுலகங்களின் தலைவன் , மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் ,
உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மாத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் , வேள்வியில் பிறந்தவன் , பெரும்புகழுக்குத் தகுந்தவன் , புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் , பூமியை நிறைநிறுத்துபவன் <746-755>;(93)
சூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் , அழகிய அங்கங்களைச் சுமப்பவன் , ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் ,
தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் , ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் , தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் , நான்கு கொம்புகளைக் கொண்டவன் , கதனின் அண்ணன் <756-764>;(94)
நான்கு வடிவங்களைக் கொண்டவன் , நான்கு கரங்களைக் கொண்டவன் , தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் , நான்கு வாழ்வுமுறைகளையும் , நான்கு வகைகளையும் சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் ,
நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் , அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் , நான்கு வேதங்களை அறிந்தவன் , தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் <765-772>;(95)
உலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் , உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் , வெல்லப்பட இயலாதவன் , கடக்கப்பட இயலாதவன் ,
அடைதற்கு மிக அரியவன் , அணுகுதற்கரியவன் , நுழைவதற்கு அரிதானவன் , இதயத்திற்குள் கொண்டவரப்படுவதற்கு அரியவன் , பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் <773-781>;(96)
அழகிய அங்கங்களைக் கொண்டவன் , அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் , மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் , எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் ,
இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் , பெருஞ்செயல் புரிபவன் , செய்யத்தவறிய செயல்களற்றவன் , வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் <782-789>;(97)
உயர்ந்த பிறப்பைக் கொண்டவன் , பேரழகன் , இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் , உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் , சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் ,
பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் , உணவுக் கொடையாளி , அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் , தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் , அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றருடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் <790-799>;(98)
பொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் , கலங்கடிக்கப்பட முடியாதவன் , வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் ,
ஆழமான தடாகமாக இருப்பவன் , ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் , காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் , அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் <800-806>;(99)
பூமியை மகிழச் செய்பவன் , குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் , கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் , பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் , அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் , தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் ,
அமுதம் பருகியவன் , சாகாவுடல் படைத்தவன் , அனைத்தையும் அறிந்தவன் , ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் <807-816>;(100)
எளிதில் வெல்லபடக்கூடியவன் , சிறந்த நோன்புகளைச் செய்தவன் , வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் , பகைவர் அனைவரையும் வெல்பவன் , பகைவர் அனைவரையும் எரிப்பவன் ,
பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் , புனிதமான அத்திமரமாக இருப்பவன் , அரச மரமாக இருப்பவன் , ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் <817-825>;(101)
ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் , ஏழு நாவுகளைக் கொண்டவன் , ஏழு தழல்களைக் கொண்டவன் , தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் ,
வடிவமற்றவன் , பாவமற்றவன் , நினைத்தற்கரியவன் , அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் , அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் <826-834>;(102)
மிகச் சிறியவன் , மிகப் பெரியவன் , மெலிந்தவன் , பருத்தவன் , குணங்களுடன் கூடியவன் , குணங்களைக் கடந்தவன் , மிகச்சிறந்தவன் ,
கைப்பற்றப்பட முடியாதவன் , எளிதில் கைப்பற்றப்படுபவன் , சிறந்த முகத்தைக் கொண்டவன் , தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் , ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் <835-846>;(103)
கனமான சுமைகளைச் சுமப்பவன் , வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் , யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் , யோகியர் அனைவரின் தலைவன் , அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் ,
நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் , சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் , யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் , நல்ல இலைகளாக இருப்பவன் , காற்றை வீசச் செய்பவன் <847-856>;(104)
வில் தரித்தவன் , ஆயுத அறிவியல் அறிந்தவன் , தண்டக் கோலாக இருப்பவன் , தண்டிப்பவன் , தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்},
வெல்லப்பட முடியாதவன் , அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் , மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் , தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் , தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் <857-866>;(105)
வீரமும் ஆற்றலும் கொண்டவன் , நல்லியல்பின் குணம் கொண்டவன் , வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் , வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் ,
முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன், தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் , துதிக்கத்தகுந்தவன் , அனைவருக்கும் நல்லது செய்பவன் , அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் <867-875>;(106)
ஆகாயப்பாதை கொண்டவன் , சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் , பேரழகுடன் கூடியவன் , வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் ,
எங்கும் வசிப்பவன் , பெரும்பலம் கொண்டவன் , சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் , பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் , சூரியனை கண்ணாகக் கொண்டவன் <876-885>;(107)
எல்லையற்றவன் , வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் , மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் , இன்பத்தை அளிப்பவன் , மீண்டும் மீண்டும் பிறப்பவன் , இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் ,
மனத்தளர்வைக் கடந்தவன் , அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் , அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் , மிக அற்புதமானவன் <886-895>;(108)
தொடக்கக் காலம் முதல் இருப்பவன் , பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் , பழுப்பு நிறம் கொண்டவன் , பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் ,
அனைத்து அருள்களையும் வழங்குபவன் , அருள்களைப் படைப்பவன் , அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் , அருள்களை அனுபவிப்பவன் , அருள்களைப் பொழிபவன் <896-905>;(109)
கோபமற்றவன் , பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் , சக்கரந்தரித்தவன் , பேராற்றல் கொண்டவன் , ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் ,
வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் , வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் , மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் , இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் <906-914>;(110)
கோபமற்றவன் , எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் , குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் , தீயோரை அழிப்பவன் , மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் ,
ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் , அச்சமனைத்தையும் கடந்தவன் , எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் <915-922>;(111)
மயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் , தீயோரை அழிப்பவன் , அறமே ஆனவன் , தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் ,
தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் , சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் , நற்பாதையில் நடப்பவன் , வாழ்வே ஆனவன் , அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் <923-931>;(112)
எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் , எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் , கோபத்தை அடக்கியவன் , அறவோரின் அச்சங்களை அழிப்பவன் ,
எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் , அளவிலா ஆன்மா கொண்டவன் , பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் , பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் , சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் <932-940>;(113)
தொடக்கமற்றவன் , பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் , செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில் கொண்டவன் , வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் , அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் ,
உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் , உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் , தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் , பயங்கர ஆற்றலைக் கொண்டவன் <941-949>;(114)
அடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் , அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் , மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் , எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் ,
உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் , அறவோர் செய்யும் செயல்களுடன்கூடிய ஒழுக்கம் கொண்டவன் , [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன், தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் , அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் <950-958>;(115)
பரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் , ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் , உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் , பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் ,
தத்துவ அமைப்புகள் அனைத்தின் சிறந்த காரியமாக இருப்பவன் , அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் , பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் <959-965>;(116)
பூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் , பெரும்பாதுகாவலன் , அனைவரின் தந்தையாக இருப்பவன் , பிரம்மனுக்கே தந்தையாக இருப்பவன் ,
வேள்வியின் வடிவில் இருப்பவன் , வேள்விகள் அனைத்தின் தலைவன் , வேள்வி செய்பவன் , வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவன் , வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் <966-975>;(117)
வேள்விகளைப் பாதுகாப்பவன் , வேள்விகளைப் படைத்தவன் , வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் , வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் , வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் ,
வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் , பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் , அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் , அந்த உணவை உண்பவன் <976-984>;(118)
இருப்பின் காரணன் , தானாகத் தோன்றியவன் , திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் , சாமங்கள் பாடுபவன் ,
தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் , அனைத்தையும் படைப்பவன் , பூமியின் தலைவன் , தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் <985-992>;(119)
சங்கைத் தன் கையில் சுமப்பவன் , ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் , இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் , நனவுநிலை மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் , மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் ,
தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் , கலங்கடிக்கப்பட முடியாதவன் , அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் <993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].
****
மூலத்துதி |
எளிய வடிவில் மூலத்துதி |
தமிழ்த்துதி |
அகராதி |
****