Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Thursday, March 01, 2018

இனி மறைகுறியாக்கப்பட்ட இணைய தொடர்பில் "முழுமஹாபாரதம்"



அதாவது, http://mahabharatham.arasan.info என்ற தொடர்பில் இருந்து https://mahabharatham.arasan.info இணையத் தொடர்புக்கு (encrypted connection என்று சொல்லப்படும் தொடர்ப்புக்கு) மாறியிருக்கிறோம். பழைய லிங்குகள் அனைத்தும் தானாக ரீடைரக்ட் ஆகிவிடும். எனவே பழைய லிங்குகளும் செயல்படும்.

இவ்வாறு மாறுவதால் விளையும் பயன்கள்

1. இது பார்வையாளர்கள் நம் தளத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் வேறு தளங்களுக்குத் தவறாக வழிநடத்தப்படாமல் காக்கிறது.

2. வலைத்தளத்தில் இருக்கும் தகவல்களை வேறு யாராலும் திருத்த முடியாதபடி செய்கிறது.

3. பாதுகாப்பான வலைத்தளம் (Secured Connection) என்ற அங்கீகாரம் கிடைக்கிறது.

மொத்தத்தில் இது வலைத்தள பாதுகாப்பை அதிகரிக்கிறது. எனவே இத்தொடர்புக்கு மாறியிருக்கிறோம்.

இதில் சில பாதகங்களும் உண்டு.

இப்போதைக்கு நமது தளத்தில் உள்ள விவாத மேடை செயல்பட வில்லை. அதை சரிய செய்ய முயற்சித்தேன். இருப்பினும் அதற்கு ஏதும் தீர்வு இருப்பது போலத் தெரியவில்லை. இருப்பினும், விவாத மேடையில் உள்ள செய்திகள் அனைத்தும் என் மின்னஞ்சலில் இருக்கின்றன.

வேறு பிரச்சனைகள் எழுந்தாலும், அதையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

வாசகர்களுக்கு வேறேதேனும் குறிப்பிட்ட சிரமங்கள் ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டுகிறேன். முடிந்தவரை சரி செய்ய முயல்வேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
01.03.2018

Thursday, May 01, 2014

ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு பிடிஎஃப் மற்றும் ஒரு டாக்குமென்ட் கோப்பு

நண்பர்களே,

இனி {அதாவது வனபர்வத்தின் 151வது பகுதியில் இருந்து} ஒவ்வொரு பதிவின் அடியிலும்,  ஒரு பிடிஎஃப் கோப்பும், ஒரு டாக்குமென்ட் கோப்பும் தர முயற்சிக்கப் போகிறேன். திரு.Salwin Selvaraj கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்முயற்சியை மேற்கொள்கிறேன். நிற்க....

வலைப்பூவில் {பிளாக்கில்} ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன் அப்பதிவு ப்ரூஃப் பார்க்கப்பட்டு வெளியிடப்படுவதில்லை. ஒரு பதிவை மொழிபெயர்த்து முடிந்ததும், அந்தப்பதிவிற்கென ஒரு படத்தை மட்டும் தேடிப்பிடித்து அப்பதிவில் இணைத்து வெளியிட்டுவிடுகிறேன்.

பிறகு, பதிவு வெளிவந்ததும், நண்பர் திரு.மாணிக்கவேல் அவர்கள், இதுநாள் வரை, அவர் காணும் பிழைகளைச் சுட்டிக் காட்டி மின்னஞ்சல் அனுப்புகிறார். அவர் சொல்லும் திருத்தங்களை பதிவில் திருத்துகிறேன்.

அதற்கும் மீறிய திருத்தங்களை, நண்பர் திரு.ஜெயவேல் அவர்கள் நேரடியாக எனது வலைப்பூ {பிளாகர்} அக்கௌண்டில் இருந்து செய்தும், மேலும் அவர் விரும்பும் வார்த்தைகளை போல்ட் செய்தும், வண்ணம் மாற்றியும், அடிக்கோடிட்டும் மாற்றுகிறார். நீங்கள் காணும் பதிவுகளில் எழுத்துருக்கள் வண்ணம் மாற்றப்பட்டு, போல்டாக, அடிக்கோடிட்டிருப்பின் அது அவர் செய்த திருத்தம் தான்.

மேலும், இதுவரை வந்த பதிவுகளைச் சேர்த்து அச்சு {பிரிண்ட்} செய்த கோப்பை, எனது தந்தை திருத்தித் தருகிறார். அப்படி அவர் தந்த பிறகு, மூன்றாவதாக ஒரு திருத்தத்தையும் செய்கிறேன். {எனது தந்தை நிறைய திருத்தங்களைத் தந்திருக்கிறார். அவை இன்னும் பல பதிவுகளில் திருத்தப்படவில்லை}

இப்படி மூன்று முறை திருத்தப்பட்ட பதிவிலேயே கூட பிழைகள் இருக்கின்றன.  ஒவ்வொரு முறை பிழைகள் {அவை சொற்பிழையாக இருப்பினும், பொருட்பிழையாக இருப்பினும்} சுட்டிக்காட்டப்படும்போதும், அவை எனக்கு நியாயமாகப் படும்பட்சத்தில் திருத்தி வருகிறேன். 

இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால்....

பதிவிறக்கத்திற்கு நான் தரும் எந்த பிடிஎஃப்- கோப்பும் அல்லது MS Word டாக்குமென்ட் கோப்பும் இறுதியானது அல்ல.

இறுதியான பதிப்பை வலைத்தளத்திலேயே காணுங்கள். உங்களுக்கு ஏதாவது பிழைகள் தென்பட்டால், தயங்காமல் எனக்கு arulselvaperarasan@gmail.com மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்


Friday, March 07, 2014

ஹைப்பர்லிங்க் முயற்சியைக் கைவிடுகிறேன்.

கடந்த இரு பதிவுகளில் {113, 114} வந்த பெயர்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி பக்கத்தை உருவாக்கி, அந்தப் பதிவுகளில் வரும் பெயர்களுக்கு ஹைப்பர்லிங்க் கொடுக்க முயன்றேன். இரு பதிவுகளில் வரும் பெயர்ச்சொற்களுக்காக மட்டும் 44 பக்கங்களை உருவாக்க வேண்டியிருந்தது. அதைச் செய்ய மூன்று நாட்களும் பிடித்தது. படிப்பதற்கு இது வசதியைக் கொடுத்தாலும், மொழிபெயர்ப்புப் பணி தாமதமடைகிறது.

முழு மஹாபாரதமும் முடிவு பெற்ற பின்னர்தான் இம்முயற்சியைத் தொடர முடியும் என்று நினைக்கிறேன். ஆகையால் இப்போதைக்கு இம்முயற்சியைக் கைவிடுகிறேன்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top