Kacha refused Devayani! | Adi Parva - Section 77 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : கசனை விரும்பிய தேவயானி; தேவயானிக்கும் கசனுக்கும் நடந்த உரையாடல்; தேவயானி கசனுக்கு அளித்த சாபம்...
வைசம்பாயனர் சொன்னார், "கசன், தனது விரதத்தின் காலம் முடிந்தவுடன் தனது குருவிடம் அனுமதி பெற்றுத் தேவலோகத்திற்குத் திரும்ப முடிவு செய்தபோது, தேவயானி அவனிடம்,(1) "ஓ அங்கீரஸ முனிவரின் பேரனே, நடத்தையால், பிறப்பால், கல்வியால், தவத்தால், பணிவால், நீர் மிகவும் பிரகாசிக்கிறீர்.(2) எப்படி அங்கீரஸ முனிவர் மதிப்புடனும், மரியாதையுடனும் எனது தந்தையால் நினைக்கப்படுகிறாரோ, அப்படியே நானும் உமது தந்தையை மதித்து வழிபடுகிறேன்.(3) ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இதை அறிந்து, நான் சொல்வதைக் கேளும். உமது பிரம்மச்சர்ய விரதக் காலத்தில் நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை நினைத்துப் பாரும்.(4) இப்போது உமது விரதம் முடிந்து விட்டது. இனி உமது அன்பையும், பாசத்தையும் என்னுள் நிலைத்திருக்க வைப்பீராக. உரிய மந்திரங்களுடன் எனது கரத்தை ஏற்றுக் கொள்வீராக" என்றாள்.(5)
அதற்குக் கசன், "என் மரியாதைக்குரியவள் நீ. உனது தந்தையை வழிபடுவது போலவே உன்னையும் நான் வழிபடுகிறேன்.(6) ஓ களங்கமற்ற குணங்கள் கொண்டவளே! நீ என்னால் பெரிதும் மதிக்கப்படுபவள். நீ அந்த உயர் ஆன்ம பார்கவருக்கு (சுக்ரன்) அவரது உயிரைவிட அருமையானவள். ஓ இனிமையானவளே! நீ எனது குருவின் மகளாதலால், நீ எப்போதும் என்னால் வழிபடத்தகுந்தவள்.(7) ஓ தேவயானி! எனது குரு சுக்ரன் எப்படி எனது உயர்ந்த மரியாதைக்குரியவரோ, நீயும் அப்படியே. எனவே, நீ என்னிடம் இவ்வாறு சொல்லக்கூடாது" என்றான்.(8)
தேவயானி, "நீர் எனது தந்தையின் குருவுடைய மகனின் மகன் {பேரன்} ஆவீர். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நீர் எனது மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் தகுதி வாய்ந்தவர்.(9) ஓ கசரே, நீர் அசுரர்களால் கொல்லப்பட்ட போதெல்லாம், நான் உம்மிடம் எப்படி அன்புடன் நடந்து கொண்டேன் என்று நினைத்துப் பாரும்.(10) ஓ ஒழுக்கமானவரே! எனது நட்பையும், பாசத்தையும், எனது வழிபாட்டையும் மரியாதையையும் எண்ணிப்பாரும். என்னிடம் குறை இல்லாதபோது, நீர் என்னை நிராகரிக்கக்கூடாது. நான் உம்மை உண்மையான அர்ப்பணிப்புடன் நினைக்கிறேன்" என்றாள்.(11)
இவையனைத்தையும் கேட்ட கசன், "ஓ ஒழுக்கமான விரதங்களுக்குச் சொந்தக்காரியே! இந்தப் பாவகாரியத்தைச் செய்ய என்னைத் தூண்டாதே. ஓ அழகான புருவம் கொண்டவளே! என்னிடம் கருணை கொள்வாயாக. அழகானவளே, நீ எனக்கு எனது குருவை விட மரியாதையில் உயர்ந்தவள்.(12) ஓ பெரிய கண்களுடன் நிலவைப்போல அழகாய் இருப்பவளே! நீ ஒழுக்கம் நிறைந்தவள். நீ வசித்திருந்த காவியரின் உடல் {இப்போது} எனது வசிப்பிடமாகவும் இருக்கிறது.(13) எனவே, உண்மையில் நீ எனது தங்கை முறையாவாய். இனிமையானவளே, நாம் ஒன்றாக, மகிழ்ச்சிகரமாக நமது பொழுதைக் கழித்திருக்கிறோம். நமக்குள் நல்ல புரிந்துணர்வு உண்டு.(14) நாம் பல காரியங்கள் சம்பந்தமாக உரையாடியிருக்கிறோம். அப்போதெல்லாம் எவ்வகையிலேனும் உன்னிடம் ஒழுக்கம் தவறி நடந்திருக்கிறேனா என்று நீ நினைத்துப் பார்க்க வேண்டும். தேவலோகத்திற்குச் செல்ல நான் உன்னிடம் அனுமதி கேட்டு நிற்கிறேன். எனவே, எனது பயணம் பாதுகாப்பாக அமைய என்னை வாழ்த்துவாயாக. என் குருவை கவனித்துக் கொள்ள எப்போதும் தயார் நிலையிலும், இதயத்தால் ஒருமைப்பட்டும் இருப்பாயாக" என்றான்.(15)
தேவயானி, "ஓ கசரே! உம்மிடம் வேண்டிக் கேட்ட பின்பும் என்னை நீர் மனைவியாக்கிக் கொள்ள மறுத்தால், உண்மையில், உமது இந்த ஞானம், உமக்குக் கனி கொடுக்காது போகட்டும்" என்றாள்.(16)
இதைக்கேட்ட கசன், "உன்னிடம் குறைகண்டு நான் உன்னை மறுக்கவில்லை. நீ எனது குருவின் மகளானதாலேயே மறுத்தேன். இது குறித்து எனது குருவின் கட்டளையும் எனக்கில்லை. உனக்கு மனநிறைவுண்டாகுமானால் என்னைச் சபித்துக் கொள்வாயாக.(17) ஒரு முனியின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ தேவயானி! உனது சாபத்திற்கு நான் தகுதியானவன் அல்லன். ஆனாலும், என்னைச் சபித்துவிட்டாய். கடமையாலன்றி உணர்ச்சிகளால் உந்தப்பட்டு நீ இந்தச் செயலைச் செய்தாய்.(18) எனவே, இந்த உனது விருப்பம் நிறைவேறாது. எந்த முனிவரின் மகனும் திருமணத்திற்காக உனது கரத்தை ஏற்க மாட்டான்.(19) இந்த ஞானம் எனக்குக் கனி கொடுக்காது என்று சொன்னாய். அப்படியே ஆகட்டும். ஆனால், நான் யாருக்கு இந்த ஞானத்தை உபதேசிக்கிறேனோ, அவனுக்கு அதன் கனி கிடைக்கட்டும்" என்றான்.(20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தேவயானியிடம் இப்படிச் சொன்ன அந்த பிராமணர்களில் முதன்மையான கசன், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்குச் சென்றான்.(21) அவன் வரவை அறிந்த தேவர்கள், இந்திரனை முன் கொண்டு வந்து அவனை வழிபட்டு, அவனிடம்,(22) "நிச்சயமாக நீ எங்களுக்கு மிகுந்த பலன் தரும் காரியத்தைச் செய்திருக்கிறாய். உனது சாதனை அற்புதமானது. உனது புகழ் எப்போதும் சாகாது. வேள்விகளில் அளிக்கப்படும் கொடையை அடைவதில் நீயும் ஒரு பங்குதாரராக இருப்பாய்" என்றனர்.(23)

ஆங்கிலத்தில் | In English |