Mandapala - Jarita and Labita! | Adi Parva - Section 231 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : மந்தபாலர் எனும் முனிவர் கடும் தவம் இருந்து, மேலுலகம் செல்வது; அவருக்கு சந்ததி இல்லாததால், சில இடங்களில் அவருக்கு அனுமதி இல்லாதிருப்பது; சந்ததியைப் பெருக்க அவர் சாரங்கப் பறவையாக மாறி ஜரிதையுடன் கூடுவது; பிறகு லபிதை என்பவளுடன் ஊர்சுற்றுவது; அக்னி காண்டவ வனத்தை எரிக்கப்போகிறான் என்பதை அறிந்து, தனது பிள்ளைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று வேண்டுவது...
ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அப்படி அந்தக் கானகம் எரிக்கப்பட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட பறவைகளை ஏன் அக்னி உட்கொள்ளவில்லை?(1) இது கானகத்தில் எப்போது நடந்தது? ஓ பிராமணரே! மய தானவனும், அசுவசேனனும் கொல்லப்படாதது எதற்காக என்று நீர் சொல்லிவிட்டீர். ஆனால், சாரங்கங்கள் தப்புவதற்கு என்ன காரணம் என்பதை நீர் சொல்லவில்லை.(2) ஓ பிராமணரே, அந்தப் பறவைகள் தப்பியது எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது. அந்தக் கொடுமையான காட்டுத்தீயில் அவை ஏன் அழியவில்லை என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(3)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ எதிரிகளைக் கொல்பவனே {ஜனமேஜயா}, அந்தக் காட்டுத்தீயின் போது அக்னி ஏன் அந்தப் பறவைகள் எரிக்கவில்லை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.(4) ஓ மன்னா {ஜனமேஜயா}, மந்தபாலர் என்ற பெயரில் ஒரு பெரும் முனிவர் இருந்தார். அவர் சாத்திரங்களை அறிந்தவராகவும், கடும் தவம் மேற்கொள்பவராகவும், தவத்திற்குத் தம்மை அர்ப்பணித்தவராகவும், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவராகவும் இருந்தார்.(5) தங்கள் உயிர்நீரை மேல்நோக்கி எழ வைத்த முனிவர்களின் வழியைப் பின்பற்றிய அந்தத் துறவி, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, தனது அனைத்துப் புலன்களையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கல்விக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.(6) தவத்தின் கரையை அடைந்த பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அவர் தனது மனித வடிவத்தை விட்டு, பித்ருக்களின் உலகத்தை அடைந்தார். ஆனால், அங்கே தமது ஆன்மச் செயல்களுக்கான கனியை {பலனை} அடைவதில் அவர் தோல்வி கண்டார்.(7)
கால தேவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்களிடம் இதற்கான காரணத்தை அறிவதற்காக,(8) "எனது தவத்தகுதிகளால் அடைந்துவிட்டதாக நான் கருதிய இந்தப் பகுதிகள் அனைத்தும் ஏன் என்னால் அடைய முடியாதனவாக இருக்கின்றன. நான் இந்தப் பகுதிகளை அடையக்கூடிய அளவிற்கு அறச் செயல்கள் செய்யவில்லையா?(9) ஓ விண்ணுலகவாசிகளே, ஏன் இந்தப் பகுதிகள் எனக்கு எதிராக மூடப்பட்டிருக்கின்றன! எனது ஆன்ம தவத்தின் கனிகளைப் பெறுவதற்காக நீங்கள் சொன்னதை நான் செய்வேன்" என்று கேட்டார் {மந்தபாலர்}.(10)
அதற்குத் தேவர்கள், "ஓ பிராமணரே {மந்தபாலரே}, மனிதர்கள் பிறக்கும் போதே எந்தச் செயலுக்காக, எந்தப் பொருளுக்காகக் கடன்காரர்களாகப் பிறக்கிறார்கள் என்பதைச் சொல்கிறோம், கேட்பீராக. அறச்சடங்குகளும், விதிப்படியான கல்வியும், மக்கட்பேறினாலும் மனிதர்கள் பிறவிக் கடனுடன் பிறக்கிறார்கள். அதில் ஐயமில்லை.(11) வேள்விகளாலும், தவத்துறவாலும், சந்ததியாலும் {மக்கட்செல்வம்} அந்தக் கடன்கள் அடைபடும். நீரோ ஒரு தவத் துறவி, வேள்விகளும் செய்திருக்கிறீர். ஆனால், உமக்குச் சந்ததி கிடையாதே.(12) உமக்குச் சந்ததி இல்லாததாலேயே உமக்கு எதிராக இப்பகுதிகள் மூடப்பட்டிருக்கின்றன. எனவே, பிள்ளைகளைப் பெறுவீராக. அப்படிச் செய்தால், நீர் பல்வேறு இன்பநிலைகளைக் கொண்ட பகுதிகளை அனுபவிப்பீர்.(13) ஒரு மகனே தனது தந்தையைப் புத் எனும் நரகத்தில் இருந்து மீட்கிறான் என்று வேதங்கள் சொல்கின்றன. எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே {மந்தபாலரே}, சந்ததியைப் பெற முயற்சி செய்வீராக" என்றனர்".(14)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "விண்ணுலகவாசிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மந்தபாலர், குறுகிய காலத்தில் எப்படி நிறைந்த மக்கள் செல்வத்தைப் பெறுவது என்பது குறித்துச் சிந்தித்தார்.(15) சிறிது நேரம் சிந்தித்த அந்த முனிவர், படைப்புகளில் பறவைகளே விரைவாக இனவிருத்தி செய்பவை என்பதைக் கண்டார். உடனே அவர் ஒரு சாரங்கப் பறவையாக மாறி, அதே இனத்தில் ஜரிதை என்ற பெயர் கொண்ட ஒரு பெண் பறவையையுடன் உறவு வைத்துக் கொண்டார்.(16) அவளிடம் அவர் நான்கு மகன்களைப் பெற்றார். அவர்கள் நால்வரும் வேதம் உரைப்பவர்களாக ஆனார்கள். அவர்கள் முட்டைகளில் இருக்கும்போதே, அந்த நான்கு மகன்களையும் அவர்களின் தாயையும் கானகத்தில் விட்டுவிட்டு லபிதையிடம் (லபிதை என்ற பெயரில் அழைக்கப்பட்ட மற்றொரு மனைவியிடம்) சென்றுவிட்டார்.(17,18) ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த மேன்மை மிகுந்த முனிவர் லபிதையின் துணை நாடிச் சென்று விட்டபிறகு, தனது சந்ததிகளின் மீது அன்பு கொண்ட ஜரிதை மிகவும் சிந்திக்கலானாள். தந்தையால் அந்தக் கானகத்தில் அவர்கள் கைவிடப்பட்டாலும், ஜரிதையின் முட்டையிலிருந்த அந்த முனிவரின் {மந்தபாலரின்} குழந்தைகளைக் கைவிடாமல் அன்புடன் காத்துவந்தாள். தனது இனத்துக்கே உரிய தாய்ப்பாசத்துன் அவள் {ஜரிதை}, அந்தப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வந்தாள்.(19,20)
சில காலம் கழித்து, லபிதையுடன் உலவிக் கொண்டிருந்த அந்த முனிவர் {மந்தபாலர்} காண்டவ வனத்தை எரிக்க அதை நோக்கி வரும் அக்னியைக் கண்டார்.(21) அந்த பிராமணர் மந்தபாலர், அக்னியின் நோக்கத்தை அறிந்து, குழந்தைகளாய் இருந்த தனது பிள்ளைகளையும் நினைத்துப் பார்த்து, பெரும் சக்தி கொண்ட அண்டத்தின் பிரதிநிதியான, அந்த நெருப்பு தெய்வத்தை மனநிறைவு கொள்ளச் செய்தார்.(22) இறகு முளைக்காத தனது பிள்ளைகளுக்கு வார்த்தை சொல்ல விரும்பிய அவர் {மந்தபாலர்} அக்னியிடம், "ஓ அக்னியே, நீயே இந்த உலகங்களின் வாயாவாய்! நீயே வேள்வியில் ஊற்றப்படும் புனித நெய்யைச் சுமந்து செல்பவன்! ஓ (பாவங்களை} சுத்தப்படுத்துபவனே, நீயே அனைத்து உயிர்களின் கூட்டுக்குள்ளும் வடிவமற்றவனாக {அரூபமாக} இருக்கிறாய்.(23) கல்விமான்கள் மூன்று தன்மைகள் படைத்த ஒருவனாக உன்னைச் சொல்கிறார்கள். ஞானமுள்ளவர்கள் உன்னை எட்டு (வாய்கள்) நிலைகள் கொண்டவனாக நினைத்து உனது முன்பிலேயே வேள்விகளைச் செய்கிறார்கள்.(24) பெரும் முனிவர்கள், இந்த அண்டமே உன்னால் படைக்கப்பட்டது என்று தீர்மானிக்கிறார்கள். ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீ இன்றி இந்த மொத்த அண்டமும் ஒரே நாளில் அழிந்துவிடும்.(25) தங்கள் மனைவியருடனும், பிள்ளைகளுடனும் உன்னை வணங்கும் பிராமணர்கள் தங்கள் நற்செயல்களின் மூலம் நித்தியமான நிலைத்த பகுதிகளை வென்றடைகிறார்கள்.(26) ஓ அக்னியே, கல்விமான்கள் உன்னை விண்ணில் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் எனச் சொல்கிறார்கள். ஓ அக்னியே, உன்னால் உமிழப்படும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் உட்கொள்கின்றன {எரிக்கின்றன}.(27) ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே, இந்த அண்டமே உன்னால் படைக்கப்பட்டது. வேதங்கள் உனது வார்த்தையே. அனைத்து உயிர்களும், அசைவனவும், அசையாதனவும், நம்பி இருப்பது உன்னையே.(28) நீரானது முதன்மையாக நம்பி இருப்பது உன்னையே. அண்டம் நம்பியிருப்பதும் உன்னையே. காணிக்கைகளாகக் கொடுக்கப்படும் தூய்மையாக்கப்பட்ட நெய்யும், உணவுப் படையலையும் பித்ருகளுக்குக் கொடுப்பவன் நீயே.(29) ஓ தேவா, உட்கொள்பவன் நீயே, படைப்பவன் நீயே, பிருஹஸ்பதி நீயே, அசுவினி இரட்டையர்கள் நீயே; சூரியன் நீயே, சோமன் {சந்திரன்} நீயே, வாயுவும் நீயே" என்று வேண்டினார்".(30)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஏகாதிபதி! இப்படி மந்தபாலரால் துதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அக்னி அந்த அளக்கமுடியாத சக்தி கொண்ட முனிவரிடம் மனநிறைவு கொண்டு,(31) மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவரிடம், "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அப்போது குவிந்த கரங்களுடன் கூடிய மந்தபாலர் அந்தத் தூய்மையாக்கப்பட்ட நெய்யைச் சுமப்பவனிடம் {அக்னியிடம்}, "நீ காண்டவ வனத்தை எரிக்கும்போது, எனது பிள்ளைகளை தப்பவிடுவாயாக" என்று கேட்டார்.(32) அதற்கு அந்தச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைச் சுமப்பவன் {அக்னி}, "அப்படியே ஆகட்டும்" என்றான். எனவே, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் காண்டவ வனத்தை எரித்த போது மந்தபாலரின் பிள்ளைகளை எரிக்கவில்லை".(33)

ஆங்கிலத்தில் | In English |