Father rebuked the son! | Adi Parva - Section 41 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 29)
பதிவின் சுருக்கம் : சிருங்கியின் கோபம்; பரீக்ஷித்தைச் சபித்த சிருங்கி; தன் சாபத்தைக் குறித்துத் தனது தந்தையிடம் தெரிவித்த சிருங்கி; தன் மகனைக் கண்டித்த சமீகர்...
சௌதி சொன்னார், "இப்படிச் {கிருசனால்} சொல்லப்பட்டதையும், தன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்த சிருங்கி கோபத்தால் எரிந்தான்.(1) கிருசனைப் பார்த்து, மென்மையாக, "வேண்டிக் கேட்கிறேன், இன்று ஏன் எனது தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமக்கிறார்?" என்று கேட்டான்.(2) அதற்குக் கிருசன், "ஓ அன்புக்குரியவனே, மன்னன் பரீக்ஷித்வேட்டைக்காகத் திரிந்து கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் இறந்த பாம்பை உனது தந்தையின் {சமீகரின்} தோளில் போட்டுச் சென்றான்" என்றான்.(3) சிருங்கி, "அந்தத் தீய ஏகாதிபதிக்கு {பரீக்ஷித்} எனது தந்தை {சமீகர்} என்ன தீங்கு செய்தார்? ஓ கி்ருசா, இதைச் சொல்லி, எனது ஆன்ம பலத்தைக் காண்பாயாக" என்றான்.(4)
கிருசன், "அபிமன்யுவின் மைந்தனான மன்னன் பரீக்ஷித் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு வேகமான மானைத் தனது கணையால் துளைத்து, அதைத் தனியாகத் துரத்திக் கொண்டு வந்தான்.(5) கானகம் அடர்ந்திருந்ததால் மன்னன் {பரீக்ஷித்தின்} பார்வை அந்த மானில் மேல் இருந்து தப்பியது. அப்போது அவன் உன் தந்தையைக் {சமீகரைக்} கண்டதும், அது குறித்து உடனே வினவினான்.(6) உனது தந்தை அப்போது பேசா நோன்பில் இருந்தார். அசைவற்று அமர்ந்திருந்த உனது தந்தையிடம், பசியுடனும், தாகத்துடனும், மிகுந்த சோர்வுடனும் இருந்த மன்னன் {பரீக்ஷித்} காணாமல் போன மானைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டான்.(7) உனது தந்தை {சமீகர்} பேசா நோன்பு இருந்ததால், பதிலேதும் கூறவில்லை. அதன்பிறகு அந்த மன்னன் {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து, உனது தந்தையின் தோளில் போட்டான்.(8) ஓ சிருங்கி, வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் உனது தந்தை {சமீகர்} அப்படியே அசைவற்று அமர்ந்திருந்தார். அந்த மன்னன் {பரீக்ஷித்}, யானையின் பெயரைக் கொண்ட தனது தலைநகரத்திற்குச் {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றுவிட்டான்" என்றான் {கிருசன்}."(9)
சௌதி தொடர்ந்தார், "{தன் தந்தையின்} தோள்களில் இறந்த பாம்பைப் போட்டதைக் கேட்ட அந்த முனி மைந்தன் {சிருங்கின்}, ஆத்திரத்தால் கண்கள் சிவந்து, எரியும் தழலெனக் கோபம் கொண்டான்.(10) அந்த வலிமைவாய்ந்த முனிவன் {சிருங்கின்} கோபத்தால் பீடிக்கப்பட்டும் உந்தப்பட்டும், நீரைத் தொட்டு, மன்னனைச் {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(11)
சிருங்கின், "மெலிந்தவரும், வயதானவருமான என் தந்தையின் {சமீகரின்} தோளில் இறந்த பாம்பைக் கிடத்திய அந்தப் பாவியும், பிராமணர்களை அவமதிப்பவனும், குருப்பரம்பரையின் புகழை மங்கச் செய்பவனுமான அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, இன்றிலிருந்து ஏழு இரவுகளுக்குள், எனது வார்த்தைகளின் பலத்தால் தூண்டப்பட்டவனும், பாம்புகளின் வலிமையான மன்னனுமான தக்ஷகனால் {கடியுண்டு}, யமனின் உலகிற்குச் செல்வான்" என்றான் {சிருங்கி}."(12-14)
சௌதி தொடர்ந்தார், "இப்படி (மன்னனைச்) சபித்துவிட்டுச் சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்} சென்றான். அங்கே மாட்டு மந்தைக்கிடையில், அந்த முனிவர், இறந்த பாம்பைத் தனது தோளில் தாங்கி அமர்ந்திருப்பதைக் கண்டான்.(15) தன்னைப் பெற்றவரை {தந்தையை} அந்தக் கோலத்தில் கண்ட அவன் {சிருங்கி} மீண்டும் கோபத்தால் கொதித்தான்.(16) அந்தத் துயரால் ஏற்பட்ட கண்ணீருடன் தனது தந்தையிடம் {சமீகரிடம்}, "தந்தையே, உங்களுக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைக் கேள்விப்பட்டு, நான் அந்தத் தீய மன்னன் பரீக்ஷித்தைச் சபித்துவிட்டேன். குரு பரம்பரையில் வந்த அந்த இழிந்தவனுக்கு {பரீக்ஷித்துக்கு} எனது சக்தியுள்ள சாபம் நன்றாகத்தகும். இன்னும் ஏழு நாட்களில், பாம்புகளின் தலைவன் தக்ஷகன், அந்தப் பாவம் நிறைந்த மன்னனை {பரீக்ஷித்தை}, பயங்கரமான காலனின் இல்லத்திற்கு அனுப்புவான்" என்றான் {சிருங்கி}.(17-19)
கோபத்துடன் இருந்த தனது மகனிடம் {சிருங்கியிடம்} அந்தத் தந்தை {சமீகர்}, "குழந்தாய், உனது இந்தச் செயலை நான் விரும்பவில்லை. துறவிகள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. நாம் அந்தப் பேரரசனின் {பரீக்ஷித்தின்} ஆளுகைக்குட்பட்ட இடத்திலேயே வாழ்கிறோம்.(20) நாம் அவனால் நீதியுடன் பாதுகாக்கப்படுகிறோம். நம்மை ஆள்பவனான அவன் என்ன செய்திருந்தாலும், நம்மைப் போன்றவர்களால் மன்னிக்கப்பட வேண்டும்.(21) நீ அறத்தை {தர்மத்தை} அழித்தால், அந்த அறமே {தர்மமே} உன்னைக் கண்டிப்பாக அழிக்கும். மன்னன் {பரீக்ஷித்} நம்மைச் சரியாகப் பாதுகாக்கவில்லையென்றால், நமது நிலை மோசமாகும்.(22) நம்மால், நமது விருப்பத்தின்படி ஆன்மீகச் சடங்குகளைச் செய்ய இயலாது. ஆனால், நீதியுள்ள மன்னர்களால் நாம் பாதுகாக்கப்படும்போது,(23) மிக உயர்ந்த தகுதிகளை அடைகிறோம். அதில் {நற்பேறில்} அவர்களுக்கும் பங்கு உண்டு. எனவே, ஆதிக்கம் செலுத்தும் மன்னன் அனைத்து வகையிலும் மன்னிக்கப்பட வேண்டியவன்.(24) அதிலும் அந்தப் பரீக்ஷித் தனது முப்பாட்டனைப்போல ஒரு மன்னன் எப்படிப் பாதுகாக்க வேண்டுமோ, அப்படியே தனது குடிகளைப் பாதுகாக்கிறான்.(25) நோன்புகள் நோற்கும் அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, சோர்வாலும், பசியின் கொடுமையாலும், எனது (பேசா) நோன்பு குறித்த அறியாமையாலுமே அப்படிச் செய்தான்.(26)
மன்னனற்ற நாடு தீங்கையே எப்போதும் சந்திக்கும். அத்துமீறுபவர்களை மன்னன் தண்டிப்பதால்{மட்டுமே} மக்கள் தங்கள் சடங்குகளையும், கடமைகளையும் தடையின்றிச் செய்ய முடியும். தண்டனைகளின் நிமித்தம் அமைதியுண்டாகும்.(27,28) அறத்தை நிலைநிறுத்தும் மன்னன், அங்கே {அந்த இடத்தில்} சொர்க்கத்தையே நிலைநிறுத்துகிறான். மன்னன், வேள்விகளைத் தடைகளில் இருந்து பாதுகாக்கிறான். வேள்வி, தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்கிறது.(29) தேவர்கள் மழையைப் பொழிகின்றனர். மழையால், மனிதனுக்கு எப்போதும் பயன்படும் தானியங்களும், மூலிகைகளும் விளைகின்றன.(30) மனு, “மக்களின் விதியை ஆள்பவன், வேதம் படிக்கும் பத்து ஆசான்களுக்கு {சுரோத்தியர்களுக்கு} (மரியாதையில்) சமம்” என்று கூறுகிறார்.(31) அந்த நோன்புகளைக் கடைப்பிடிக்கும் இளவரசன் {பரீக்ஷித்}, சோர்வாலும், பசியின் கொடுமையாலும், எனது நோன்பைக் குறித்து அறியாததாலுமே இந்தக் காரியத்தைச் செய்தான்.(32) உனது குழந்தைத்தனத்தால் ஏன் இப்படி நீதியற்ற ஒரு காரியத்தைச் செய்தாய்? ஓ மகனே {சிருங்கியே}, எவ்வகையிலும் அந்த மன்னன் சாபத்திற்குத் தகுந்தவன் அல்லன்" என்றார் {சமீகர்}."(33)

ஆங்கிலத்தில் | In English |