Fish, freed from curse! | Adi Parva - Section 63b | Mahabharata In Tamil
(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)
பதிவின் சுருக்கம்: உபரிசரனின் உயிர்வித்தை விழுங்கிய மீன்; மீனுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது; ஆண் {சத்யவதியின் சகோதரன்} மத்ஸ்ய நாட்டு மன்னனாக வளர்ந்தது...
மன்னன் வசு {உபரிசரன்}, இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தனது தெய்வீக தேரில் அமர்ந்து வானத்தினூடே செல்லும்போது, கந்தர்வர்களும், அப்சரஸ்களும் (தேவலோக பாடகர்களும், ஆடல் கலைஞர்களும்) அவனை {உபரிசரனை} அணுகினர். அப்படி அவன் {உபரிசரன்} மேலுகங்களில் உலவியதால் {மேலே சஞ்சரிப்பவன் என்ற பொருள்பட} உபரிசரன் என்று அழைக்கப்பட்டான்.(33,34)
அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, ஒரு காலத்தில், காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கப்பட்டது.(35) மலையின் தவறான முயற்சியைக் கண்ட வசு {உபரிசரன்}, தனது காலால் அந்த {கோலாஹல} மலையை ஓங்கி உதைத்தான். வசு உதைத்ததனால் கோலாஹல மலையிலிருந்து (அந்த மலையின் அணைப்பிலிருந்து) ஆறு வெளியே வந்தது.(36) ஆனால் அந்த {கோலாஹல} மலை, அந்த {சுக்திமதி} நதியிடம் இரட்டையரான இரு மக்களைப் பெற்றெடுத்தது. கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த வசுவுக்கு {உபரிசரனுக்கு} நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த {சுக்திமதி} ஆறு அவனுக்கே {உபரிசரனுக்கே} கொடுத்தது.(37) அரசமுனிகளில் சிறந்தவனும், பொருளளிக்கும் வள்ளலும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான வசு {உபரிசரன்}, அந்த {சுக்திமதி} ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான்.(38) கிரிகை என்ற அந்த {சுக்திமதி} நதியின் மகள், வசுவால் {உபரிசரனால்} மணந்து கொள்ளப்பட்டாள். வசுவின் மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது நிலையைத் தனது தலைவனிடம் {உபரிசரனிடம்} தெரிவித்தாள். ஆனால், அதே நாளில் பித்ருக்கள், ஏகாதிபதிகளில் சிறந்தவனும், விவேகிகளில் முன்னவனுமான அந்த வசுவிடம் {உபரிசரனிடம்} வந்து,(39-40) தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள். மன்னனும் {உபரிசரனும்}, பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி,(41) பெரும் அழகைக் கொடையாகக் கொண்ட, மற்றுமொரு ஸ்ரீயாக (லட்சுமியாக) இருந்த கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.(42)
அது வசந்த காலமாகையால், மன்னன் {உபரிசரன்} சென்ற கானகம், கந்தர்வ மன்னனின் தோட்டத்தைப் போல அழகாக இருந்தது. அங்கே அசோகங்களும், சம்பகங்களும் {செண்பகங்களும்}, சுதங்களும் {மாமரங்களும்}, அதிமுக்தங்களும் {தினிசமரங்களும்} நிறைந்திருந்தன. அங்கே புன்னாகம் {புன்னை}, கர்ணீகரம் {கொன்றை}, வாகுலம் {மகிழம்}, திவ்யபாதாளம் {பாதிரிமரங்கள்},(43) பாதாளம் {பலா}, நாரிகேளம் {தென்னை}, சந்தனம், அர்ஜுனம் {மருதமரம்} போன்ற அழகான புனிதமான மரங்கள் பெரும் நறுமணத்தோடும், சுவை நிறைந்த கனிகளோடும் காட்சியளித்தன.(44)
அந்த முழுக் கானகமே கோகிலப் பறவைகளின் {குயில்களின்} இனிய நாதத்தால் பித்துப்பிடித்தது போல இருந்தது. போதையுடனிருந்த வண்டுகளின் ஹூங்காரத்தை அந்தக் கானகம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.(45) மன்னன் {உபரிசரன்} மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தான், ஆனால் தனது மனைவியை {கிரிகையை} தன் முன்னால் காணவில்லை. ஆசையால் பித்துப்பிடித்து, அந்தக் கானகம் முழுதும் அங்குமிங்கும் அலைந்தான். அடர்ந்த இலைகளைக் கொண்டதும், அழகான மலர்களால் மூடப்பட்ட கிளைகளை உடையதுமான அசோக மரத்தைக் கண்டு,(46,47) அதன் நிழலில் அமர்ந்தான். அந்தக் காலத்தின் இனிமையாலும், சுற்றியிருந்த மலர்களின் நறுமணத்தாலும், இதமான தென்றலாலும், அவனால் {உபரிசரனால்} அவன் மனதை அழகான கிரிகையை நினைக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை.(48,49) [2]
துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் (அறம்) மற்றும் அர்த்தம் (பொருள்) குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த அவன் {மன்னன் உபரிசரன்} அதனிடம் {பருந்திடம்} சென்று,(53) "இனிமையானவனே, இந்த எனது வித்தை {உயிரணுவை} எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் {கிரிகையிடம்} இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது" என்றான் {சேதி நாட்டின் மன்னன் உபரிசரன்}.(54) அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் {உபரிசரனிடம்} அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.(55) அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.(56) இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.(57)
உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.(58) வசுவின் {உபரிசரனின்} வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.(59) சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த {அப்சரஸ் அத்ரிகை} மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.(60) அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, (அவர்கள் அந்த மன்னனின் குடிகளாக இருப்பதால்) மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.(61) அவர்கள் {மீனவர்கள்}, "ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்" என்றனர். ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.(62) அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.(63)
அவள் {அப்சரஸ் அத்ரிகை} முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் (சபித்தவரால்), தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.(64) அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.(65) அதன்பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.

[2] வெளிப்படையான காரணத்தினால், சுலோகம் 50 முதல் 52 வரை மொழிபெயர்க்கவில்லை என்று மன்மதநாததத்தர் குறிப்பிடுகிறார். கங்குலியிலும் அவ்வரிகள் இல்லை. கும்பகோணம் பதிப்பில், "தற்செயலாகப் புஷ்பங்களால் கிளைகளின் நுனிகள் மறைக்கப்பட்டதும், தளிர்களினால் சோபிக்கின்றதும், அழகானதும், பூங்கொத்துக்களால் மறைக்கப்பட்டதுமாகிய ஓர் அசோக மரத்தைக் கண்டான். அதன் கீழ் நிழலில் ஸுகமாக வீற்றிருந்த ராஜன் காற்றினால் கொண்டுவரப்பட்டதும், தேன்மணமுள்ளதுமாகிய அந்த இனிய புஷ்பவாஸனையை மோந்து ஸந்தோஷமடைந்தான். மனைவியை நினைக்கும்போது அந்த ராஜாவுக்கு காமமென்னும் அக்னி விருத்தியாயிற்று. அவன் இருண்ட காட்டில் ஸஞ்சரிக்கும்போது அவனுடைய வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட மாத்திரத்தில், அந்த அரசன், "என்னுடைய வீரியம் வீணாகக் கூடாது" என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். ராஜா அந்த வீரியத்தில் தன் மோதிரத்தினால் முத்திரை வைத்துச் சிவந்த அசோக புஷ்பங்களாலும், தளிர்களினாலும் மூடிக் கட்டினான். "இந்த என் வீரியம் வீணாக விழுந்ததாகாமலும், அந்த என் பத்தினியின் ருது காலம் வீணாகமலும் எவ்வாறிருக்கும்" என்று அறம், பொருள் இவைகளின் நுட்பமான உண்மையை அறிந்திருந்த அந்த ஸமர்த்தனாகிய ராஜஸ்ரேஷ்டன் சிந்தித்துப் பலமுறை ஆராய்ந்து பார்த்து, தன் வீரியம் வீணாவதில்லையென்பதை நிச்சயித்து, அதைத் தன் பத்தினிக்கு அனுப்புவதற்கு, "இது காலம்: என்று நினைத்து, அதற்குக் கர்ப்பாதான மந்திரத்தை ஜபித்தான்" என்றிருக்கிறது. இவையே 50 முதல் 52 வரையுள்ள ஸ்லோகங்களாக இருக்க வேண்டும். பிபேகத் திப்ராயின் பதிப்பில் மேற்கண்ட வரிகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன.
துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் (அறம்) மற்றும் அர்த்தம் (பொருள்) குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த அவன் {மன்னன் உபரிசரன்} அதனிடம் {பருந்திடம்} சென்று,(53) "இனிமையானவனே, இந்த எனது வித்தை {உயிரணுவை} எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் {கிரிகையிடம்} இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது" என்றான் {சேதி நாட்டின் மன்னன் உபரிசரன்}.(54) அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் {உபரிசரனிடம்} அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.(55) அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.(56) இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.(57)
உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.(58) வசுவின் {உபரிசரனின்} வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.(59) சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த {அப்சரஸ் அத்ரிகை} மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.(60) அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, (அவர்கள் அந்த மன்னனின் குடிகளாக இருப்பதால்) மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.(61) அவர்கள் {மீனவர்கள்}, "ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்" என்றனர். ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.(62) அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.(63)
அவள் {அப்சரஸ் அத்ரிகை} முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் (சபித்தவரால்), தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.(64) அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.(65) அதன்பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.
ஆங்கிலத்தில் | In English |