புதிய தலைமுறை இதழில் முழுமஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு நன்றி...
**************************************************
சாரு அவர்கள் புதிய தலைமுறை இதழில் "வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்"
என்ற தொடரை எழுதிவருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில், 26 மார்ச் 2015 தேதியிட்ட புதிய தலைமுறை
இதழில் "மஹாபாரதத்தை மறக்கலாமா?" என்ற தலைப்பின் கீழ் நமது முழு
மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
அவர் முழுமஹாபாரதம் குறித்து அறிமுகப்படுத்தியிருக்கும் பாராக்களை மட்டும் தட்டச்சு செய்து கீழே இடுகிறேன்...
**************************************************
நூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் 18 தினங்கள் இரவு முழுவதும் அமர்ந்து பாரதம் பார்த்தார்கள்.
அதையே 21-ஆம் நூற்றாண்டிலும் செய்தால் சரியா? தெருக்கூத்துக்குப் பதிலாக இப்போது தொலைக்காட்சி மகாபாரதம்.
இந்த நிலை மாறி மகாபாரதத்தை எப்போது வாசிக்கப் போகிறோம்?
அப்படி வாசிக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்?
ம.வீ.ரா., பதிப்பில் இரண்டு பிரச்சனைகள். ஒன்று மணிப்பிரவாள நடை. இன்னொன்று, 18 பர்வங்களும் மறுபதிப்பு இன்னும் தயாராகவில்லை.
இந்நிலையில், செ.அருட்செல்வப்பேரரசன் முழு மகாபாரதத்தையும் வியாசர் எழுதியபடியே தமிழில் மொழிபெயர்த்து அதை இணையதளத்திலும் (http://mahabharatham.arasan.info) வெளியிட்டு வருகிறார்.
பகலில் DTP வேலையும், இரவில் மகாபாரத வேலையுமாக ஒரு தனி மனிதர் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் / சமஸ்கிருதப் பேராசிரியர்களும் செய்ய வேண்டிய வேலை.
இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த மகாபாரதத்தை லட்சக்கணக்கான மக்களிடம் எடுத்துச் செல்ல நம் பதிப்பகங்கள் முன் வர வேண்டும்.
அருட்செல்வப்பேரரசனின் தமிழ் சாமானிய மனிதனுக்கும் புரியக் கூடியதாக இருக்கிறது.
நன்றி : 26 மார்ச் 2015 தேதியிட்ட புதிய தலைமுறை இதழ்....

தான் பங்காற்றிவரும் பல்வேறு தளங்களின் மூலம் தனது வாசகர்கள் அனைவருக்கும் நமது முழுமஹாபாரதத்தை அறிமுகப்படுத்திவரும் திரு.சாரு அவர்களுக்கு கோடனுகோடி நன்றிகள்.