The wrong done by Parikshit! | Adi Parva - Section 40 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : ஜரத்காருவின்
பெயர்க்காரணம்; பரிக்ஷித் அடித்த மான்; பேசாத சமீகர்; சமீகரை அவமதித்த
பரிக்ஷித்; கிருசனும் சிருங்கியும் பேசிக் கொண்டது; சிருங்கியை கோபமடைய
வைத்த கிருசன் ...
சமீகரை அவமதித்த பரிக்ஷித் |
சௌனகர், "ஓ சூத மைந்தா! {சௌதியே}, அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஜரத்காரு, இந்த உலகத்தில் அந்தப் பெயரால் ஏன் அழைக்கப்பட்டார். ஜரத்காரு என்ற பெயருக்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டார்.(1,2)
சௌதி சொன்னார், "`ஜரை’, என்றால் உதவாதது என்றும், காரு என்றால் பெரியது என்று பொருள் எனச் சொல்லப்படுகிறது. இந்த முனிவர் {ஜரத்காரு} பெரும் உடலுடையவராக இருந்தார்[1]. ஆனால் அதைத் தனது கடுமையான தவத் துறவுகளால் படிப்படியாகக் குறைத்தார். ஓ பிராமணர்களே, அதே காரணத்துக்காகவே, வாசுகியின் சகோதரியும் ஜரத்காரு {பெரியதைக் குறைத்தவள்} என்று அழைக்கப்பட்டாள்" {என்றார் சௌதி}.(3,4)
நற்குணம் பொருந்திய சௌனகர், இதைக்கேட்டுப் புன்னகைத்து உக்ரச்ரவனிடம் {சௌதியிடம்}, "இதுவும் அப்படியா?" என்று சொன்னார்.(5) பிறகு சௌனகர் "இதற்கு முன் நீ சொன்னதையெல்லாம் கேட்டேன். ஆஸ்தீகர் எப்படிப் பிறந்தார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றார்.(6)
இந்த வார்த்தைகளைக் கேட்ட சௌதி, சாத்திரங்களில் {புராணங்களில்} எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே சொல்லத் தொடங்கினார். சௌதி சொன்னார், "வாசுகி {பாம்பு மன்னன்}, முனிவர் ஜரத்காருவுக்குத் தனது சகோதரியை {ஜரத்காருவை} அளிக்க விருப்பங்கொண்டு, பாம்புகளுக்கு (தேவையான) உத்தரவுகளை இட்டிருந்தான்.(7) ஆனால் நாட்கள் கழிந்தன, முனிவர் {ஜரத்காரு} கடுந்தவங்களிலும், துறவுகளிலும் ஈடுபட்டாரே தவிர, மனைவியைத் தேடவில்லை.(8) அந்த உயர் ஆன்ம முனிவர் {ஜரத்காரு}, கல்வியிலும், தவத்திலும் ஆழ்ந்து ஈடுபட்டுத் தனது உயிர்வித்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, மனைவியைப் பெறுவதில் விருப்பமில்லாமல், முழு உலகையும் அச்சமில்லாமல் சுற்றித் திரிந்தார்.(9)
பின்னர், ஒரு காலத்தில், ஓ பிராமணரே {சௌனகரே}, கௌரவக் குலத்தில் பிறந்த பரீக்ஷித் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான்.(10) அவன் {பரீக்ஷித்}, தனது முப்பாட்டன் பாண்டுவைப் போலப் பலம் கொண்ட கைகளுடனும், போரில் வில்லேந்தியவர்களில் முதன்மையானவனாகவும், வேட்டையில் விருப்பம் கொண்டவனாகவும் இருந்தான்.(11) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, மான்கள், காட்டுப்பன்றிகள், ஓநாய்கள், எருமைகள் மற்றும் பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டிருந்தான்.(12) ஒரு நாள் {வேட்டை ஆடும்போது} கூரிய அம்பொன்றினால் ஒரு மானை அதன் முதுகில் தைத்தான்.(13) அப்படித் தைத்தபிறகு, முற்காலத்தில் சிறப்புமிக்க ருத்ரன் கையில் வில்லேந்தி, மானாக உருவெடுத்த வேள்வியைத் {வேள்விப்புருஷனை}[2] தேவலோகத்தில் துரத்தியது போல, வில்லைத் தன் முதுகில் மாட்டிக்கொண்டு, அந்த மானை இங்கேயும், அங்கேயும் தேடிக்கொண்டு காட்டுக்குள்ளே ஊடுருவினான்.(14) பரீக்ஷித்தினால் துளைக்கப்பட்ட எந்த மானும் இதுவரை இப்படி உயிருடன் காட்டுக்குள் தப்பியதில்லை. எனினும், இந்த மானோ ஏற்கனவே காயம்பட்டிருந்தாலும், மன்னன் {பரீக்ஷித்} சொர்க்கத்தை அடைவதற்கு (நெருங்கிய) காரணமாக வேகமாகத் தப்பியோடியது.(15)
மனிதர்களின் மன்னனான பரீக்ஷித்தால் துளைக்கப்பட்ட அந்த மான், அவனைக் கானகத்திற்குள் வெகு தொலைவிற்கு அழைத்து வந்து, அவனது பார்வையில் இருந்து மறைந்து விட்டது.(16) களைப்பும், தாகமும் கொண்ட அவன் {பரீக்ஷித்}, அந்தக் கானகத்தில் மாட்டு மந்தையில் அமர்ந்து, தாயிடம் பாலருந்தும் கன்றுகளின் வாயிலிருந்து உமிழப்படும் நுரையை (பால் நுரை) உறிஞ்சி {வயிறு} நிரம்பக் குடித்துக் கொண்டிருந்த ஒரு முனிவரிடம் {முனிவரின் பெயர் சமீகர்} வந்தடைந்தான். பசியும் சோர்வுமாய் இருந்த அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} விரைவாக அவரை அடைந்து, தனது வில்லை உயர்த்தி, அந்தக் கடும் நோன்புகள் கொண்ட முனிவரிடம் {முனிவர் சமீகரிடம்}, "ஓ பிராமணரே, நான் அபிமன்யுவின் மகன், மன்னன் பரீக்ஷித் ஆவேன்.(17-19) என்னால் துளைக்கப்பட்ட மான் ஒன்றைக் காணவில்லை. அதை நீர் கண்டீரா?" என்று கேட்டான். ஆனால், அப்போது பேசா நோன்பு நோற்றுக் கொண்டிருந்த அந்த முனிவர் {சமீகர்} அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(20)
கோபம் கொண்ட மன்னன் {பரீஷித்}, அங்குக் கிடந்த ஓர் இறந்த பாம்பைத் தனது வில்லின் நுனியால் எடுத்து அவரது {சமீகரின்} தோளில் போட்டான். முனிவர் {சமீகர்} எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் {அமைதியாக} வேதனையைத் {அவமானத்தைத்} தாங்கிக் கொண்டார்.(21) நன்மையாகவோ, தீமையாகவோ யாதொரு வார்த்தையும் கூறவில்லை. அவரை {சமீகரை} அந்நிலையில் கண்ட மன்னன் {பரீக்ஷித்} தன் கோபத்தை விட்டு {தன் செயலை உணர்ந்து} வருத்தமடைந்தான். அவன் {பரீக்ஷித்} தன்னுடைய தலைநகரத்துக்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினாலும், அந்த முனிவர் {சமீகர்} அதே நிலையிலேயே தொடர்ந்தார். மன்னிக்கத் தெரிந்த {பொறுமையுள்ள} அந்த முனிவர் {சமீகர்}, மன்னர்களில் புலியான அந்த ஏகாதிபதி தன் வகையின் கடமைகளுக்கு உண்மையாக இருப்பவன் என்றும் அறிந்து,(22,23) தான் அவமதிக்கப்பட்டிருந்தாலும், அவனைச் {பரீக்ஷித்தை} சபிக்காதிருந்தார். ஏகாதிபதிகளில் புலியான அந்தப் பரதகுலத்தில் முதன்மையானவனும் {பரீக்ஷித்தும்}, தான் அவமதித்த அந்த மனிதர் ஓர் அறம் சார்ந்த முனிவர் என்பதை அறியவில்லை. இதன் காரணமாகவே அவன், அவரை இப்படி அவமதித்துவிட்டான்.
பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவனும், ஆழ்ந்த தவம் கொண்டவனும், கடுமையான நோன்புகள் கொண்டவனும்,(24,25) அமைதிப்படுத்த முடியாத கடும் கோபக்காரனும், சிருங்கி என்ற பெயரைக் கொண்டவனும், இளவயதுடையவனுமான மகன் ஒருவன் அந்த முனிவருக்கு {சமீகருக்கு} இருந்தான். அவ்வப்போது அவன் {சிருங்கி}, உயிர்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதில் எப்போதும் ஈடுபடுபவரும், தன் இருக்கையில் சுகமாக வீற்றிருப்பவருமான தன் {குருவிடம் சென்று} குருவை கவனத்துடனும், மரியாதையுடனும் வழிபட்டு வந்தான். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {சௌனகரே}, {அப்படிச் செய்துவிட்டுத்} தனது குருவின் உத்தரவின் பேரில் அவன் {சிருங்கி} வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(26,27) கிருசன் என்ற பெயரைக் கொண்டவனும், ஒரு முனிவரின் மகனுமான அவனது தோழன் ஒருவன், அவனுடன் {சிருங்கியுடன்} விளையாட்டுத்தனமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு வந்தான். {அப்போது} நஞ்சைப் போன்ற கோபம் நிறைந்தவனான சிருங்கி, தன் தந்தையைக் குறித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு சினத்தால் எரிந்தான்.(28,29)
கிருசன், "செருக்காயிராதே, ஓ சிருங்கி, உன்னைப்போன்ற தவசியும், சக்தி கொண்டவருமான உன் தந்தை {சமீகர்}, இறந்த பாம்பொன்றைத் தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்கிறார்.(30) ஆகையால், எங்களைப் போன்ற உண்மை அறிவும், ஆழ்ந்த ஆன்மிகத் தவமும் கொண்டு, அவற்றில் வெற்றியும் கண்ட முனி மைந்தர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாதே.(31) உன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் போகிறாயே, உன் ஆண்மை எங்கே? செருக்கினால் நீ உதிர்க்கும் அந்த உயர்ந்த வார்த்தைகள் எங்கே?(32) ஓ முனிவர்கள் அனைவரிலும் சிறந்தவனே {சிருங்கியே}, உனது தந்தை {சமீகர்} இந்த நிலையை அடைய, அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை. இதன் காரணமாகவே நானே தண்டிக்கப்பட்டது போல உணர்ந்து வருத்தப்படுகிறேன்" என்றான் {கிருசன்}.(33)

[1] கும்பகோணம் பதிப்பில் பெயர் காரணம் இன்னொரு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜரை என்றால் கெடுவது என்றும், காரு என்றால் துன்பத்தைத் தருவது என்றும், சிறந்த ஞானமுள்ள முனிவருக்கு வைராக்கியத்தின் காரணமாக இந்த உடலானது துன்பத்தைத் தருவதாகத் தோன்றியதால் இந்தப் பெயர் அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. மூல ஸ்லோகத்தில் கும்பகோணத்துப் பதிப்பில் உள்ளது போலவே ஜரை என்றால் ஷயம் அதாவது கெடுவது என்றும், காரு என்றால் துன்பம் தருவது என்றுமே சொல்லப்பட்டிருக்கிறது.
நற்குணம் பொருந்திய சௌனகர், இதைக்கேட்டுப் புன்னகைத்து உக்ரச்ரவனிடம் {சௌதியிடம்}, "இதுவும் அப்படியா?" என்று சொன்னார்.(5) பிறகு சௌனகர் "இதற்கு முன் நீ சொன்னதையெல்லாம் கேட்டேன். ஆஸ்தீகர் எப்படிப் பிறந்தார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றார்.(6)
இந்த வார்த்தைகளைக் கேட்ட சௌதி, சாத்திரங்களில் {புராணங்களில்} எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே சொல்லத் தொடங்கினார். சௌதி சொன்னார், "வாசுகி {பாம்பு மன்னன்}, முனிவர் ஜரத்காருவுக்குத் தனது சகோதரியை {ஜரத்காருவை} அளிக்க விருப்பங்கொண்டு, பாம்புகளுக்கு (தேவையான) உத்தரவுகளை இட்டிருந்தான்.(7) ஆனால் நாட்கள் கழிந்தன, முனிவர் {ஜரத்காரு} கடுந்தவங்களிலும், துறவுகளிலும் ஈடுபட்டாரே தவிர, மனைவியைத் தேடவில்லை.(8) அந்த உயர் ஆன்ம முனிவர் {ஜரத்காரு}, கல்வியிலும், தவத்திலும் ஆழ்ந்து ஈடுபட்டுத் தனது உயிர்வித்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, மனைவியைப் பெறுவதில் விருப்பமில்லாமல், முழு உலகையும் அச்சமில்லாமல் சுற்றித் திரிந்தார்.(9)
பின்னர், ஒரு காலத்தில், ஓ பிராமணரே {சௌனகரே}, கௌரவக் குலத்தில் பிறந்த பரீக்ஷித் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான்.(10) அவன் {பரீக்ஷித்}, தனது முப்பாட்டன் பாண்டுவைப் போலப் பலம் கொண்ட கைகளுடனும், போரில் வில்லேந்தியவர்களில் முதன்மையானவனாகவும், வேட்டையில் விருப்பம் கொண்டவனாகவும் இருந்தான்.(11) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, மான்கள், காட்டுப்பன்றிகள், ஓநாய்கள், எருமைகள் மற்றும் பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டிருந்தான்.(12) ஒரு நாள் {வேட்டை ஆடும்போது} கூரிய அம்பொன்றினால் ஒரு மானை அதன் முதுகில் தைத்தான்.(13) அப்படித் தைத்தபிறகு, முற்காலத்தில் சிறப்புமிக்க ருத்ரன் கையில் வில்லேந்தி, மானாக உருவெடுத்த வேள்வியைத் {வேள்விப்புருஷனை}[2] தேவலோகத்தில் துரத்தியது போல, வில்லைத் தன் முதுகில் மாட்டிக்கொண்டு, அந்த மானை இங்கேயும், அங்கேயும் தேடிக்கொண்டு காட்டுக்குள்ளே ஊடுருவினான்.(14) பரீக்ஷித்தினால் துளைக்கப்பட்ட எந்த மானும் இதுவரை இப்படி உயிருடன் காட்டுக்குள் தப்பியதில்லை. எனினும், இந்த மானோ ஏற்கனவே காயம்பட்டிருந்தாலும், மன்னன் {பரீக்ஷித்} சொர்க்கத்தை அடைவதற்கு (நெருங்கிய) காரணமாக வேகமாகத் தப்பியோடியது.(15)
[2] தக்ஷன் சிவனை அவமதித்து நடத்திய வேள்வியைச் சிவன் அழித்தான். அப்போது யாகப்புருஷன் மான் வடிவெடுத்துத் தப்பிக்கப் பார்க்க சிவன் அவனை அம்பால் அடித்ததாகப் புராணக் கதை உண்டு.
மனிதர்களின் மன்னனான பரீக்ஷித்தால் துளைக்கப்பட்ட அந்த மான், அவனைக் கானகத்திற்குள் வெகு தொலைவிற்கு அழைத்து வந்து, அவனது பார்வையில் இருந்து மறைந்து விட்டது.(16) களைப்பும், தாகமும் கொண்ட அவன் {பரீக்ஷித்}, அந்தக் கானகத்தில் மாட்டு மந்தையில் அமர்ந்து, தாயிடம் பாலருந்தும் கன்றுகளின் வாயிலிருந்து உமிழப்படும் நுரையை (பால் நுரை) உறிஞ்சி {வயிறு} நிரம்பக் குடித்துக் கொண்டிருந்த ஒரு முனிவரிடம் {முனிவரின் பெயர் சமீகர்} வந்தடைந்தான். பசியும் சோர்வுமாய் இருந்த அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} விரைவாக அவரை அடைந்து, தனது வில்லை உயர்த்தி, அந்தக் கடும் நோன்புகள் கொண்ட முனிவரிடம் {முனிவர் சமீகரிடம்}, "ஓ பிராமணரே, நான் அபிமன்யுவின் மகன், மன்னன் பரீக்ஷித் ஆவேன்.(17-19) என்னால் துளைக்கப்பட்ட மான் ஒன்றைக் காணவில்லை. அதை நீர் கண்டீரா?" என்று கேட்டான். ஆனால், அப்போது பேசா நோன்பு நோற்றுக் கொண்டிருந்த அந்த முனிவர் {சமீகர்} அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(20)
கோபம் கொண்ட மன்னன் {பரீஷித்}, அங்குக் கிடந்த ஓர் இறந்த பாம்பைத் தனது வில்லின் நுனியால் எடுத்து அவரது {சமீகரின்} தோளில் போட்டான். முனிவர் {சமீகர்} எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் {அமைதியாக} வேதனையைத் {அவமானத்தைத்} தாங்கிக் கொண்டார்.(21) நன்மையாகவோ, தீமையாகவோ யாதொரு வார்த்தையும் கூறவில்லை. அவரை {சமீகரை} அந்நிலையில் கண்ட மன்னன் {பரீக்ஷித்} தன் கோபத்தை விட்டு {தன் செயலை உணர்ந்து} வருத்தமடைந்தான். அவன் {பரீக்ஷித்} தன்னுடைய தலைநகரத்துக்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினாலும், அந்த முனிவர் {சமீகர்} அதே நிலையிலேயே தொடர்ந்தார். மன்னிக்கத் தெரிந்த {பொறுமையுள்ள} அந்த முனிவர் {சமீகர்}, மன்னர்களில் புலியான அந்த ஏகாதிபதி தன் வகையின் கடமைகளுக்கு உண்மையாக இருப்பவன் என்றும் அறிந்து,(22,23) தான் அவமதிக்கப்பட்டிருந்தாலும், அவனைச் {பரீக்ஷித்தை} சபிக்காதிருந்தார். ஏகாதிபதிகளில் புலியான அந்தப் பரதகுலத்தில் முதன்மையானவனும் {பரீக்ஷித்தும்}, தான் அவமதித்த அந்த மனிதர் ஓர் அறம் சார்ந்த முனிவர் என்பதை அறியவில்லை. இதன் காரணமாகவே அவன், அவரை இப்படி அவமதித்துவிட்டான்.
பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவனும், ஆழ்ந்த தவம் கொண்டவனும், கடுமையான நோன்புகள் கொண்டவனும்,(24,25) அமைதிப்படுத்த முடியாத கடும் கோபக்காரனும், சிருங்கி என்ற பெயரைக் கொண்டவனும், இளவயதுடையவனுமான மகன் ஒருவன் அந்த முனிவருக்கு {சமீகருக்கு} இருந்தான். அவ்வப்போது அவன் {சிருங்கி}, உயிர்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதில் எப்போதும் ஈடுபடுபவரும், தன் இருக்கையில் சுகமாக வீற்றிருப்பவருமான தன் {குருவிடம் சென்று} குருவை கவனத்துடனும், மரியாதையுடனும் வழிபட்டு வந்தான். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {சௌனகரே}, {அப்படிச் செய்துவிட்டுத்} தனது குருவின் உத்தரவின் பேரில் அவன் {சிருங்கி} வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(26,27) கிருசன் என்ற பெயரைக் கொண்டவனும், ஒரு முனிவரின் மகனுமான அவனது தோழன் ஒருவன், அவனுடன் {சிருங்கியுடன்} விளையாட்டுத்தனமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு வந்தான். {அப்போது} நஞ்சைப் போன்ற கோபம் நிறைந்தவனான சிருங்கி, தன் தந்தையைக் குறித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு சினத்தால் எரிந்தான்.(28,29)
கிருசன், "செருக்காயிராதே, ஓ சிருங்கி, உன்னைப்போன்ற தவசியும், சக்தி கொண்டவருமான உன் தந்தை {சமீகர்}, இறந்த பாம்பொன்றைத் தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்கிறார்.(30) ஆகையால், எங்களைப் போன்ற உண்மை அறிவும், ஆழ்ந்த ஆன்மிகத் தவமும் கொண்டு, அவற்றில் வெற்றியும் கண்ட முனி மைந்தர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாதே.(31) உன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் போகிறாயே, உன் ஆண்மை எங்கே? செருக்கினால் நீ உதிர்க்கும் அந்த உயர்ந்த வார்த்தைகள் எங்கே?(32) ஓ முனிவர்கள் அனைவரிலும் சிறந்தவனே {சிருங்கியே}, உனது தந்தை {சமீகர்} இந்த நிலையை அடைய, அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை. இதன் காரணமாகவே நானே தண்டிக்கப்பட்டது போல உணர்ந்து வருத்தப்படுகிறேன்" என்றான் {கிருசன்}.(33)
ஆங்கிலத்தில் | In English |