Mahabharatham Begins! | Adi Parva - Section 60 | Mahabharata In Tamil
(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் யாகத்திற்கு வியாசர் வருவது; வியாசரின் பெருமை; பாண்டவர் வரலாற்றை ஜனமேஜயன் வியாசரிடம் கேட்பது; அக்கதையைச் சொல்லும்படி வைசம்பாயனரைப் பணித்த வியாசர்...
சௌதி சொன்னார், "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3)
தவங்களாலும், முயற்சியுடன் கூடிய கல்வியாலும், {அத்யாயனத்தினாலும்}, விரதங்களாலும், உண்ணாநோன்புகளாலும், குலத்தினாலும், யாகத்தினாலும் மற்றவர் அடைய முடியாதவற்றை {வேதங்களின் முழுமையான அறிவை} அவர் எளிதாக அடைந்தார்.(4) வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான அவர் {வியாசர்}, வேதங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். அந்த பிராமண முனிவர் {வியாசர்} பிரம்மனைக் குறித்த ஞானத்துடன் இருந்தார். கடந்ததை {இறந்த காலத்தை} மனத்தால் அறிந்தார். அவர் {வியாசர்} தெய்வீகத்தன்மையுடன், உண்மையைப் போற்றி வாழ்ந்தார்.(5) புனிதமான செயல்களையும், பெரும் புகழையும் கொண்ட அவர் {வியாசர்}, சந்தனுவின் பரம்பரை தொடர்ச்சிக்காகப் பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன் ஆகியோரை பெற்றெடுத்தார்.(6)
அந்த உயரான்ம முனிவர் {வியாசர்}, வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்த தனது சீடர்களுடன் {சீடர் வைசம்பாயனர் போன்றோருடன்}, ஜனமேஜயன் அமர்ந்திருந்த வேள்விச்சாலைக்கு வந்தார்.(7) மன்னன் ஜனமேஜயன், சதயஸ்யர்களும், பட்டாபிஷேகம் செய்துகொண்ட பலநாட்டு மன்னர்களும், பிரம்மனுக்கு ஒப்பான ரித்விக்குகளும் சூழ அந்த வேள்வியில் இந்திரனைப் போல அமர்ந்திருப்பதைக் கண்டார்.(8,9) பாரதக் குலத்தின் முதன்மையானவனும், அரசமுனியுமான அந்த ஜனமேஜயன், முனிவர் {வியாசர்} வருவதைக் கண்டு, தன்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் பெருமகிழ்வோடு வேகமாக முன்வந்து அவரை வரவேற்றான்.(10) அந்த மன்னன் {ஜனமேஜயன்} சதஸ்யர்களின் அனுமதியோடு, இந்திரன் பிருஹஸ்பதிக்குக் கொடுத்ததைப் போல, அந்த முனிவருக்கு {வியாசருக்கு} ஒரு பொன் ஆசனத்தைக் கொடுத்தான்.(11)
வரங்களை அருளவல்லவரும், தெய்வீக முனிவர்களாலும் போற்றபடுபவருமான, அந்த முனிவர் {வியாசர்} அமர்ந்தபோது, அந்த மன்னர்மன்னன் {ஜனமேஜயன்} சாத்திரங்களில் சொல்லப்பட்ட உரிய மரியாதைகளுடன் வணங்கினான்.(12) மன்னன் {ஜனமேஜயன்}, முற்றிலும் தகுதிவாய்ந்த தனது பாட்டன் கிருஷ்ணருக்கு {கிருஷ்ண துவைபாயனர்=வியாசருக்கு} கால்கள் மற்றும் வாயைக் கழுவ நீரும், அர்க்கியமும், பசுக்களையும் கொடுத்தான்.(13) அந்தப் பாண்டவ ஜனமேஜயனின் காணிக்கைகளை ஏற்று, பசுக்களைக் கொல்லக்கூடாது என்று சொல்லி, வியாசர் பெரும் மனநிறைவு கொண்டார்.(14)
அந்த மரியாதைகளுக்குப் பிறகு மன்னன் {ஜனமேஜயன்} தனது முப்பாட்டனை {வியாசரை} வணங்கி, மகிழ்ச்சியுடன் அமர்ந்து அவரது நலத்தைக் கேட்டறிந்தான்.(15) அந்தச் சிறப்புமிக்க முனிவர் {வியாசர்} அவன் {ஜனமேஜயன்} மீது தனது பார்வையைச் செலுத்தி அவனின் {ஜனமேஜயனின்} நலத்தைப் பற்றிக் கேட்டார். சதஸ்யர்களால் வணங்கப்பட்ட அவர் {வியாசர்}, பதிலுக்கு அவர்களை வணங்கினார்.(16) அதன்பிறகு, மன்னன் {ஜனமேஜயன்} தனது சதஸ்யர்களுடன் கரங்கள் கூப்பி, பிராமணர்களில் முதன்மையானவரிடம் {வியாசரிடம்} கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.(17)
{ஜனமேஜயன்}, "ஓ பிராமணரே {வியாசரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் செயல்களைத் தங்கள் கண்ணாலேயே கண்டிருக்கிறீர். நீங்கள் உரைக்க அந்த வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்.(18) அவர்களை {கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களை} செயற்கரிய காரியங்களைச் செய்ய வைத்த அந்தச் சச்சரவுக்குக் காரணம் என்ன? எண்ணற்ற உயிர்கள் மடியக் காரணமான அந்தப் பெரும்போர் எனது பாட்டன்களுக்குள் ஏன் நடந்தது? அவர்கள் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? ஓ பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, அதை எனக்கு முழுமையாக, எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.(19,20)
ஜனமேஜயனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரிடம்,(21) "பழங்காலத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த பிணக்குகளை, நீ என்னிடம் கேட்டறிந்தவாறே இந்த மன்னனுக்கு {ஜனமேஜயனுக்கு} முழுமையாகச் சொல்வாயாக" என்றார் {வியாசர்}.(22)
அதன்பிறகு அருள்நிறைந்த அந்த பிராமணர் {வைசம்பாயனர்}, தனது ஆசானின் {வியாசரின்} கட்டளைப்படி மன்னனுக்கும் {ஜனமேஜயனுக்கும்}, சதஸ்யர்களுக்கும் மற்றும் அங்குக் கூடியிருந்த பிற மன்னர்களுக்கும் அந்த முழு வரலாற்றையும் கூறினார். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகைமையையும், அவர்கள் முழுமையாக அழிந்ததையும் முழுமையாகச் சொன்னார்" {என்றார் சௌதி}[2].(23,24)
[1] இங்குச் சக்தி {சக்திரி} என்று சொல்லப்படுபவர், வசிஷ்டரின் புதல்வராவார்.

[2] இப்படி வியாசரின் சீடர் வைசம்பாயனர், ஜனமேஜயன் நடத்திய நாக வேள்வியில் சொல்லப்பட்டதே மகாபாரதம்.
ஆங்கிலத்தில் | In English |