Showing posts with label ஆதிவம்சாவதரணப் பர்வம். Show all posts
Showing posts with label ஆதிவம்சாவதரணப் பர்வம். Show all posts

Wednesday, March 27, 2013

பூமி பாரத்தைக் குறைக்க தேவர்கள் பிறப்பு! | ஆதிபர்வம் - பகுதி 64

Gods born to reduce the mass of earth! | Adi Parva - Section 64 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : பூமியில் பிறந்த அசுரர்கள்; பிரம்மனிடம் முறையிட்ட பூமாதேவி; தேவர்களைப் பூமியில் பிறக்கும்படி பிரம்மன் உத்தரவிட்டது; இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க நாராயணன் அவதரிக்க உடன்பட்டது...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, நீர் பெயர் குறிப்பிட்டவர்களைப் பற்றியும், பெயர் குறிப்பிடாதவர்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பற்றியும் விவரமாகச் சொல்வீராக.(1) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே {வைசம்பாயனரே}, தேவர்களுக்கு இணையானவர்களான அந்த மஹாரதர்கள் பூமியில் பிறந்த காரணம் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள் " என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(2)

Sunday, March 24, 2013

உபரிசரன் (எ) வசு! | ஆதிபர்வம் - பகுதி 63அ

Uparichara (a) Vasu! | Adi Parva - Section 63a | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : கடுந்தவம் இருந்த உபரிசரனைச் சமாதானப்படுத்திய இந்திரன் சேதி நாட்டைக் கவனமாக ஆளச் சொல்வது...

வானத்தில் பறக்கும் உபரிசரன்
வைசம்பாயனர் சொன்னார், "உபரிசரன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தவனாக இருந்தான். வேட்டைக்கும் அவன் அடிமையாக இருந்தான்.(1)

வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் {உபரிசரன்}, இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான்.(2) சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், அவன் {உபரிசரன்} தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை {உபரிசரனை} அணுகினர்.(3) தேவர்கள், அவன் {உபரிசரன்} முன் தோன்றி, மென்மையாகப் பேசி அவனைத் தவத்தைக் கைவிடவைத்து வெற்றி பெற்றனர்.(4)  தேவர்கள், "ஓ பூமியின் தலைவா! {உபரிசரனே} பூமியில் அறம் குறையாதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னால் காக்கப்பட்ட அந்த அறம், பதிலுக்கு இந்த அண்டத்தையே காக்கும்" என்றனர்.(5)

Wednesday, March 20, 2013

பாரதம் படிப்பது வேதம் படிப்பதற்குச் சமம்! | ஆதிபர்வம் - பகுதி 62

Reading Bharatha is equal unto Vedas! | Adi Parva - Section 62 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : மகாபாரதப் பாத்திரங்களின் செயல்பாட்டில் உள்ள தன் சந்தேகங்களைக் கேள்விகளாக வைசம்பாயனரிடம் வைத்த ஜனமேஜயன்; மஹாபாரதத்தை விரிவாகச் சொல்லும்படி வைசம்பாயனரை வேண்டினான்; மகாபாரதத்தின் பெருமைகளை எடுத்துரைத்த வைசம்பாயனர்...

ஜனமேஜயன் "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {வைசம்பாயனரே} குருக்களின் {குரு குலத்தவர்களின்} பெரும் செயல்களை விளக்குவதும், மஹாபாரதம் என்று அழைக்கப்படுவதுமான வரலாற்றை நீர் சுருக்கமாகச் சொல்லிவிட்ட போதிலும்,(1) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {வைசம்பாயனரே} அந்த அற்புதமான விவரிப்பை முழுமையாகச் சொல்வீராக. அதைக் கேட்பதில் நான் {ஜனமேஜயனாகிய நான்} பெரும் ஆவல் கொண்டுள்ளேன்.(2) எனவே, அதை நீர் முழுமையாகச் சொல்வீராக. இப்படி அந்தப் பெரும் வரலாற்றை மணிச்சுருக்கமாகக் கேட்பதில் நான் மனநிறைவுகொள்ளவில்லை.(3) கொல்லத்தகாதவர்களைக் {ஆசிரியர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும்} கொன்ற அந்த அறவோர் {பாண்டவர்கள்}, அதற்காகக் கொண்டாடப்படுகிறார்கள் என்றால் அதன் காரணம் சிறியதாக இருக்கமுடியாது.(4) நேர்மையானவர்களும், தாங்களே பழி வாங்கும் திறன் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, ஏன், அந்தப் பொல்லாத குருக்களின் {கௌரவர்களின்} துன்புறுத்தலை அமைதியாக ஏற்றனர்?(5)

பாண்டவர் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 61

The History of Pandavas! | Adi Parva - Section 61 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தின் கதைச்சுருக்கம்...

வைசம்பாயனர் சொன்னார், "எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,[1] என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.(1,2) இதை அறியப்போகும் ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் {வியாசரின்} கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை[2]  நான் உணரவில்லை.(3) "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், (குருக்களின்) ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே! {ஜனமேஜயனே!} கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.(4,5)

மஹாபாரதம் ஆரம்பம்! | ஆதிபர்வம் - பகுதி 60

Mahabharatham Begins! | Adi Parva - Section 60 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் யாகத்திற்கு வியாசர் வருவது; வியாசரின் பெருமை; பாண்டவர் வரலாற்றை ஜனமேஜயன் வியாசரிடம் கேட்பது; அக்கதையைச் சொல்லும்படி வைசம்பாயனரைப் பணித்த வியாசர்...

சௌதி சொன்னார், "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்