Birth of all lives! | Adi Parva - Section 65 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : பிரம்மாவின் மானஸ புத்திரர்கள்; கஸ்யபருக்கும் தக்ஷனின் மகள்களுக்கும் பிறந்தவர்கள்; இந்தப் பகுதியைப் படிப்பதால் உண்டாகும் பலன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதன்பிறகு இந்திரன், நாராயணனிடம், தேவர்கள் அனைவருடன் அவரவர் அம்சங்களுக்கேற்ப பின்னவன் {நாராயணன்} எவ்வாறு சொர்க்கத்தில் இருந்து பூமியில் இறங்கப் போகிறான் என்பது குறித்துக் கலந்தாலோசித்தான்.(1) தேவலோகவாசிகள் அனைவருக்கும் கட்டளையிட்ட பிறகு இந்திரன் நாராயணனின் இருப்பிடத்திலிருந்து திரும்பினான்.(2)
அசுரர்களின் அழிவுக்காகவும், மூவுலகங்களின் நன்மைக்காகவும் தேவலோகவாசிகள் ஒவ்வொருவராகப் பூமியில் அவதாரம் எடுத்தனர்.(3) அதன்பிறகு தேவர்கள், ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, பிரம்ம முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் குலத்தில் தாங்கள் விரும்பியவாறே பிறப்பை எடுத்தனர்.(4) {அப்படிப் பிறந்து}, தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், மனிதனைத் தின்போர் மற்றும் பிற உயிரினங்கள் பலவற்றையும் அவர்கள் கொன்றனர்.(5) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, தேவர்கள் குழந்தைகளாகப் இருக்கும்போதே பலம்பொருந்தியவர்களாக இருந்ததால், தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் ஆகியோரால் அவர்களைக் கொல்ல முடியவில்லை" {என்றார் வைசம்பாயனர்}.(6)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், மனிதர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பிறப்பை முதலில் இருந்தே கேட்க நான் விரும்புகிறேன். எனவே, அனைத்து உயிரினங்களின் பிறப்பைக் குறித்தும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(7,8)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தான்தோன்றியை {சுயம்புவான பிரம்மனை} என் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, தேவர்கள் மற்றும் பிற உயிரினங்களின் தோற்றத்தைக் குறித்து உண்மையாகவே உனக்கு விரிவாகச் சொல்கிறேன்.(9) பிரம்மனுக்கு மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது என ஆறு ஆன்ம மகன்கள் {மனத்தினால் உண்டாக்கப்பட்ட மகன்கள்} இருந்ததாக அறியப்படுகிறது.(10) மேலும் மரீசியின் மகன் கசியபர் ஆவார். கசியபரிடமிருந்தே இந்த உயிரினங்கள் எழுந்தன.
(பிராஜாபதிகளில் ஒருவரான) தக்ஷனுக்குப் பெரும் நற்பேற்றைக் கொண்ட பதிமூன்று {13} மகள்கள் பிறந்திருந்தனர்.(11) ஓ! மனிதர்களில் புலியே, பாரதக் குல இளவரசனே {ஜனமேஜயனே}, அதிதி, திதி, தனு, காலை, தனாயு, சிம்ஹிகை, குரோதை, பிராதை, விஸ்வை[1], வினதை, கபிலை, முனி மற்றும் கத்ரு ஆகியோரே அந்தத் தக்ஷனின் மகள்களாவர். இவர்களின் மகன்களும், பேரன்களும் பெரும் சக்திகளைக் கொடையாகக் கொண்டு கணக்கிலடங்காதவர்களாக இருந்தனர்.(12,13)
{1.தக்ஷனின் முதல் மகளான} அதிதியிலிருந்து இந்த அண்டத்தின் தலைவர்களான {லோக ஈஸ்வரர்களான} பனிரெண்டு {12} ஆதித்யர்கள் தோன்றினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெயர் வரிசையில் உனக்கு அவர்களை விவரித்துச் சொல்கிறேன்.(14) தாத்ரி {தாதா}, மித்ரன், அர்யமா, சக்ரன் {இந்திரன்}, வருணன், அம்சன், பகன், விவஸ்வத் {விவஸ்வான்}, உஷா {பூஷா}, சாவித்ரி {சவிதா},(15) த்வஷ்த்ரி {த்வஷ்டா} மற்றும் விஷ்ணு ஆகியோரே அவர்கள். எனினும், இளையவன் {விஷ்ணு} தகுதியால் அவர்கள் அனைவரையும் விட மேன்மையானவனாக இருந்தான்.(16)
{2.தக்ஷனின் இரண்டாவது மகளான} திதிக்கு ஹிரண்ய கசிபு[2] என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். அந்தச் சிறப்புமிகுந்த ஹிரண்யகசிபுவுக்கு உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஐந்து மகன்கள் இருந்தனர்.(17) அவர்கள் அனைவருக்கும் மூத்தவனாகப் பிரஹலாதனும், அடுத்தவனாக ஸாஹ்ரதன் {ஸம்ஹ்லாதன்}, மூன்றாமவனாக அனுராதன் {அனுஹ்லாதன்}, அவனுக்கு அடுத்தவர்களாகச் சிபியும், பாஷ்கலனும் இருந்தனர்.(18) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிரஹலாதனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்கள் விரோசனன், கும்பன் மற்றும் நிகும்பன் ஆவர்.(19) விரோசனனுக்குப் பெரும் ஆற்றல்மிக்கப் பலி என்ற ஒரு மகன் பிறந்தான். அந்தப் பலியின் மகனே பாணன் என்ற பெரும் அசுரனாக அறியப்பட்டான்.(20) பெரும் நற்பேறால் அருளப்பட்ட பாணன், ருத்ரனைப் பின்பற்றுபவனாகவும், மஹாகாலன் என்ற பெயரால் அறியப்படுபவனாகவும் இருந்தான்.(21)
{3.தக்ஷனின் மூன்றாவது மகளான} தனு நாற்பது {40} மகன்களைப் பெற்றாள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரில் மூத்தவன் பெரும் புகழ் பெற்ற விப்ரசித்தி, மற்றவர்கள் "சம்பரன், நமுசியும், பௌலமனும் {புலோமன்}, அசிலோமன், கேசி, துர்ஜயன், அயசிரன், அஸ்வசிரன், பலம் மிகுந்த அஸ்வசங்கு, ககனமூர்த்தன், வேகவத் {வேகவான்}, கேதுமத் {கேதுமான்}, சுவர்பானு, அஸ்வன், அஸ்வபதி, விருஷபர்வன், அஜகன், அஸ்வகிரீவன், சூக்ஷமன், பெரும்பலம் பொருந்திய துஹுண்டன், ஏகபாதன் {இக்ஷுபாத்}, ஏகசக்ரன், விருபாக்ஷன், மஹோதரன், நிசந்திரன், நிகும்பன், குபடன், கபடன், சரபன், சுலபன், சூரியன், சந்திரமஸ் ஆகியோராவர்;(22-26) இவர்களே தனுவின் குலத்தில் வந்தவர்களில் நன்கறியப்பட்டவர்கள். தேவர்களின் சூரியனும் சந்திரனும் வேறானவர்கள், அவர்கள் மேற்குறிப்பிட்டபடி தனுவின் மகன்கள் அல்ல. ஓ! மன்னா, பெரும் பலத்தையும், வீரத்தையும் கொடையாகக் கொண்ட பின்வரும் பத்துபேரும் தனுவின் குலத்தில் பிறந்தவர்களே: ஏகாக்ஷன், பெரும் வீரம் கொண்ட அம்ருதபன், பிரலம்பன், நரகன், வாதாபி, சத்ருதபனன், சடன், கவிஷ்டன், வனாயு, தீர்க்கஜிஹ்வன் ஆகியோரே அவர்கள்.(27-30) ஓ! பாரதா, இவர்களுக்குப் பிறந்த மகன்களும் பேரன்களும் கணக்கிலடங்காதவர்களாவர்.
{6.தக்ஷனின் ஆறாவது மகளான} சிம்ஹிகை சூரியனையும் சந்திரனையும் விழுங்கும் ராகுவையும்,(31) சுசந்திரன், சந்திரஹந்தரி {சந்திரஹர்தன்}, சந்திரபிரமர்தனன் ஆகிய பிற மூவரையும் பெற்றெடுத்தாள்.
{7.தக்ஷனின் ஏழாவது மகளான} குரூரையின் {குரோதையின்} கணக்கிலடங்கா புதல்வர்கள் அவளை {குரோதையைப்} போலவே தீயவர்களாக {குரோதகவசர்கள்} இருந்தனர்.(32) அவர்களின் இனமானது தீய செயல்களைக் கொண்டதும், கோபம் நிறைந்ததாகவும், பகைவர்களைத் தண்டிப்பதாகவும் இருந்தது.
{5.தக்ஷனின் ஐந்தாவது மகளான} தனாயுவுக்கு அசுரர்களில் காளையரான நான்கு மகன்கள் இருந்தனர்.(33) விக்ஷரன், பலன், வீரன், பெரும் அசுரனான விருத்திரன் ஆகியோரே அவர்கள்.
{4.தக்ஷனின் நான்காவது மகளான} காலையின் மைந்தர்கள் அனைவரும் யமனைப் போன்றவர்களாகவும், எதிரிகள் அனைவரையும் தாக்குபவர்களாகவும் இருந்தனர்.(34) {அவர்கள், தானவர்களில் பெரும் புகழைக் கொண்டவர்களாகவும் பலமிக்கவர்களாகவும், தங்கள் எதிரிகளை ஒடுக்குபவர்களாகவும் இருந்தனர்.}(35) அந்தக் காலையின் மகன்கள் விநாசனன், குரோதன், குரோதஹந்தரி, குரோதசத்ரு ஆகியோராவர். காலையின் மகன்களின் இன்னும் பலரும் இருந்தனர். ரிஷியின் {பிருகு முனிவரின்} மகனான சுக்ரன் {சுக்ராசாரியார்}, அசுரர்களுக்குத் தலைமைப் புரோகிதராக இருந்தார்.(36) கொண்டாடப்பட்டவரான சுக்ரன், அசுரர்களுக்குப் புரோகிதர்களாக இருந்த நான்கு மகன்களைக் கொண்டிருந்தார். அவர்கள் தாஷ்டதரா {த்வஷ்டா}, அத்ரி மற்றும் கடும் செயல்களைச் செய்யும் மற்றும் இருவராவர்.(37) சக்தியில் சூரியனைப் போன்றிருந்த அவர்கள், பிரம்ம லோகத்தை அடையத் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர். இப்படியே பெரும் சக்தியும், பலமும் கொண்ட தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இரு சந்ததிகளைக் குறித்தும் புராணங்களில் கேட்டது போலவே நான் உரைத்துவிட்டேன். ஓ! மன்னா {ஜனமேஜயா} இந்த வம்சாவளியினர் எண்ணற்றவர்களாகவும், புகழுக்கு அறியப்படாதவர்களாகவும் இருப்பதால், நான் அவர்களை எண்ணும் திறனற்றவனாக இருக்கிறேன்.(38,39)
{10.தக்ஷனின் பத்தாவது மகளான} வினதையின் மகன்களாக தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, கருடன், அருணன், ஆருணி, வாருணி ஆகியோர்களாவர்.(40)
{13.தக்ஷனின் பதிமூன்றாவது மகளான} கத்ருவின் மகன்களாக சேஷன் அல்லது அநந்தன், வாசுகி, தக்ஷகன்,(41) கூர்மன் {குமாரன்}, குலிகன் ஆகியோர் அறியப்படுகிறார்கள்;
{12.தக்ஷனின் பன்னிரண்டாவது மகளான} முனியின் மகன்களாக பீமசேனன், உக்ரசேனன், சுபர்ணன், வருணன்,(42) கோபதி, திருதராஷ்டிரன், ஏழாவதாகச் சூரியவர்ச்சஸ், சத்யவசாஸ், அர்க்கபர்ணன், பிரயுதன்,(43) பீமன், புகழுக்காகவும், கல்விக்காவும், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதாலும் அறியப்பட்ட சித்ரரதன், சாலிசிரஸ் {காலிசிரஸ்}, பதினான்காவதாகப் பிரஜன்யன்,(44) பதினைந்தாவதாகக் கலி, பதினாறாவதாக நாரதன் ஆகிய இந்தத் தேவர்களும் கந்தர்வர்களும் (முன்பு சொன்னது போலத் தக்ஷனின் மகளான) முனியின் மகன்களாக அறியப்படுகின்றனர்.(45)
{8.தக்ஷனின் எட்டாவது மகளான} பிராதையின் மகள்களாக, ஓ! பாரதா {ஜனமேஜயா}, இன்னும் பலரை நான் நினைவுகூர்கிறேன். அனவத்யை, மனு, வம்சை, அசுரை, மார்க்கணப்பிரியை,(46) அரூபை {அனுபை}, சுபகை, பாசி ஆகியோர் பெறப்பட்டார்கள். சித்தன், பூர்ணன், பர்ஹிஸ், பெரும் புகழ்வாய்ந்த பூர்ணாயுஸ்,(47) பிரம்மச்சாரி, ரதிகுணன், ஏழாவதாகச் சுபர்ணன், விஸ்வாவசு, பானு, பத்தாவதாகச் சுசந்திரன்,(48) ஆகியோர் பிராதையின் மகன்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தேவலோகத்துக் கந்தர்வர்கள் ஆவர். பெரும் நற்பேறு பெற்ற பிராதை தெய்வீக முனிவர் (தனது கணவர் கசியபர்) மூலம்[3] புனித அப்சரஸ்களான, அலம்புஷை, மிச்ரகேசி, வித்யுத்பர்ணை, திலோத்தமை,(49,50) அருணை, ரக்ஷிதை, ரம்பை, மனோரமை, கேசினி, சுபாஹு, சுரதை,(51) சுரஜை, சுப்ரியை ஆகியோரை மகள்களாகவும், கந்தர்வர்களில் சிறந்தவர்களான அதிபாஹூ, கொண்டாடப்படும் ஹாஹா, ஹூஹூ, தும்புரு[4] ஆகியோரை மகன்களாவும் பெற்றெடுத்தாள் என்றும் அறியப்படுகிறது.(52)
{11.தக்ஷனின் பதினொறாவது மகளான} புராணக்கூற்றுப்படிகபிலைக்கு {அமுதம்}, பிராமணர்கள், பசுக்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் பிறந்தவர்களாவர்.(53)
இப்படியே கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பாம்புகள், சுபர்ணர்கள் {கருடர்கள்}, ருத்திரர்கள், மருத்துக்கள் {தேவர்கள்}, கோக்கள் {பசுக்கள்}, பெரும் நற்பேறு கொண்டவர்களும், புனித செயல்களைச் செய்பவர்களுமான பிராமணர்கள் மற்றும் அனைத்து உயிர்களின் பிறப்பைப் பற்றியும் சொல்லிவிட்டேன்.(54,55) புனிதமானதும், புகழனைத்துக்கும் தகுந்ததும், காதுகளுக்கு இன்பத்தை அளிக்கக்கூடியதுமான இந்த விவரிப்பு (படித்தால்) வாழ்வின் அளவை நீட்டிக்கிறது. எப்போதும் சரியான மனநிலையுடனே இது கேட்கப்படவும், பிறருக்கு உரைக்கப்படவும் வேண்டும்.(56) இந்த உயரான்ம உயிரினங்கள் அனைத்தின் பிறப்பு விவரிப்பைத் தேவர்கள் மற்றும் பிராமணர்கள் முன்னிலையில் முறையாகப் படிப்பவன், நல்ல சந்ததியையும், நற்பேற்றையும், புகழ் மற்றும் சிறந்த உலகங்களையும் அடைவான்" {என்றார் வைசம்பாயனர்}.(57)

[1] விஸ்வை-என்பவளின் பிள்ளைகளைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை.

[2] மூத்தவனின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. இளையவன் ஹிரண்யாக்ஷன், வராஹ அவதாரத்தில் கொல்லப்படுகிறான்.

[3] மூல ஸ்லோகத்தில் பெரும் நற்பேறு பெற்ற பிராதை தெய்வீக முனிவர் (தனது கணவர் கசியபர்) மூலம் என்ற வார்த்தைகள் இல்லை, எனவே இவர்கள் கபிலையின் மக்கள் என்றே கொள்ளலாம்.
[4] கும்பகோணம் பதிப்பில் இந்த நால்வரும் சுபகையின் மகன்கள் என்று கூறப்படுகிறது. சுபகை என்பது யாரை குறிக்கிறது என்று தெரியவில்லை. கங்குலியின் பதிப்பும், மன்மதநாததத்தரின் பதிப்பும் இங்கே ஒன்றுபோலவே இருக்கின்றன. ஹூஹூ என்ற கந்தர்வன், தேவலர் நீராடும் போது அவரை தொல்லை செய்ததால் சபிக்கப்பட்டு முதலையானவன். முதலையால் கவ்வப்பட்ட யானை ஆதி மூலமே என அழைத்த போது விஷ்ணு ஹரியின் வடிவத்தில் வந்து சக்ரத்தால் ஹூஹூவின் சிரசைக் கொய்து, அவனது சாபத்தைத் தீர்த்தான். ஹாஹா, ஹூஹூ இருவரும் நாட்டியக் கலையில் இணையற்றவர்கள். தும்புரு நாரதருக்கு இணையாக இனிமையாய் கானமிசைக்க வல்லவன். வனபர்வம் பகுதி 43 இல் ஹாஹா-ஹூஹூ மற்றும் தும்புரு ஆகியோரை அர்ச்சுனன் சந்திக்கிறான்.
{11.தக்ஷனின் பதினொறாவது மகளான} புராணக்கூற்றுப்படிகபிலைக்கு {அமுதம்}, பிராமணர்கள், பசுக்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் பிறந்தவர்களாவர்.(53)
இப்படியே கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பாம்புகள், சுபர்ணர்கள் {கருடர்கள்}, ருத்திரர்கள், மருத்துக்கள் {தேவர்கள்}, கோக்கள் {பசுக்கள்}, பெரும் நற்பேறு கொண்டவர்களும், புனித செயல்களைச் செய்பவர்களுமான பிராமணர்கள் மற்றும் அனைத்து உயிர்களின் பிறப்பைப் பற்றியும் சொல்லிவிட்டேன்.(54,55) புனிதமானதும், புகழனைத்துக்கும் தகுந்ததும், காதுகளுக்கு இன்பத்தை அளிக்கக்கூடியதுமான இந்த விவரிப்பு (படித்தால்) வாழ்வின் அளவை நீட்டிக்கிறது. எப்போதும் சரியான மனநிலையுடனே இது கேட்கப்படவும், பிறருக்கு உரைக்கப்படவும் வேண்டும்.(56) இந்த உயரான்ம உயிரினங்கள் அனைத்தின் பிறப்பு விவரிப்பைத் தேவர்கள் மற்றும் பிராமணர்கள் முன்னிலையில் முறையாகப் படிப்பவன், நல்ல சந்ததியையும், நற்பேற்றையும், புகழ் மற்றும் சிறந்த உலகங்களையும் அடைவான்" {என்றார் வைசம்பாயனர்}.(57)
ஆங்கிலத்தில் | In English |