The Birth of Asuras! | Adi Parva - Section 67a | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாருடைய அம்சங்கள் என்ற விரிவு...
ஜனமேஜயன், "ஓ போற்றுதலுக்குரியவரே! {வைசம்பாயனரே}, மனிதர்களுக்கிடையே தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், சிங்கங்கள், புலிகள், பிற விலங்குகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அனைத்து உயிர்களும் பிறந்த விவரத்தை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். மேலும், மனித வடிவை ஏற்ற {அவதாரமெடுத்த} பிறகு, அவர்களின் செயல்களையும், சாதனைகளையும், முறையான வரிசையில் அறிய விரும்புகிறேன்" என்றான்.(1,2)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மனிதர்களின் மன்னா! {ஜனமேஜயா}, நான் முதலில், மனிதர்களுக்கிடையில் பிறந்த தேவர்கள் மற்றும் தானவர்கள் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(3) விப்ரசித்தி என்ற பெயரில் அறியப்பட்ட தானவர்களில் முதன்மையானவனே மனிதர்களில் காளையான ஜராசந்தன் என்று அறியப்பட்டான்.(4) ஓ மன்னா! {ஜனமேஜயா}, மேலும் ஹிரண்யகசிபு என்ற அறியப்பட்ட திதியின் மைந்தன், இவ்வுலகின் மனிதர்களுக்கிடையில் பெரும் பலம்வாய்ந்த சிசுபாலனாக அறியப்பட்டான்.(5) பிரஹலாதனின் தம்பியும், சம்ஹலாதன் என்றும் அறியப்பட்டவன், மனிதர்களுக்கிடையில் பாஹ்லீகர்களில் காளையான புகழ்வாய்ந்த சல்லியனாக ஆனான்.(6) அனைவருக்கும் இளையவனும் உற்சாகமுள்ளவனுமான அனூஹ்லாதன், இவ்வுலகில் திருஷ்டகேது என்று குறிப்பிடப்பட்டான்.(7)
ஓ மன்னா {ஜனமேஜயா} சிபி என்று அறியப்பட்ட திதியின் மைந்தன், உலகத்தில் புகழ்வாய்ந்த ஏகாதிபதி துருமனாக ஆனான்.(8) பெரும் அசுரனாக அறியப்பட்ட பாஷ்கலன், பூமியில் பெரும் பகதத்தனாக ஆனான்.(9) பெரும் சக்திகளைக் கொடையாகக் கொண்ட ஐந்து பெரும் அசுரர்களான அயசிரன், அஸ்வசிரன், உற்சாகமுள்ள அயசங்கு, ககனமூர்த்தன், மற்றும் வேகவத் {வேகவான்}(10) ஆகியோர் அனைவரும் கேகயத்தின் மன்னர் பரம்பரையில் பிறந்து பெரும் ஏகாதிபதிகளாகத் திகழ்ந்தனர்.(11) பெரும் சக்திகொண்டு கேதுமத் {கேதுமான்} என்ற பெயரில் அறியப்பட்ட மற்றுமொரு அசுரன், பூமியில் கொடூர செயல்கள் புரியும் ஏகாதிபதி அமிதௌஜசாக ஆனான்.(12) சுவர்ணபானு என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் கடுமையான செயல்கள் புரியும் உக்கிரசேனனாக ஆனான்.(13)
அஸ்வன் என்ற பெரும் அசுரன், பூமியில் போரில் வெல்லப்பட முடியாத, பெரும் ஆற்றலைக் கொண்ட ஏகாதிபதி அசோகனாக ஆனான்.(14) ஓ மன்னா! {ஜனமேஜயா} அஸ்வனின் தம்பியும், அஸ்வபதி என்ற பெயரில் அறியப்பட்டவனுமான திதியின் புதல்வன், ஹார்த்திக்யன் {கிருதவர்மனின் தந்தை} என்ற பலம்வாய்ந்த ஏகாதிபதியாக ஆனான்.(15) பெரும்பேறு பெற்றவனும், விருஷபர்வன் என்ற பெயரில் அறியப்பட்டவனுமான அசுரன், பூமியில் மன்னன் தீர்க்கப்பிரக்ஞன் என்று அறியப்பட்டான்.(16) ஓ மன்னா {ஜனமேஜயா}, அஜகன் என்ற பெயரில் அறியப்பட்ட விருஷபர்வனின் தம்பி, பூமியில் மன்னன் சால்வனாக அறியப்பட்டான்.(17) சக்திவாய்ந்தவனும், வலிமைமிக்கவனும், அஸ்வகிரீவன் என்ற பெயரில் அறியப்பட்டவனுமான அசுரன், பூமியில் மன்னன் ரோசமானனாக அறியப்பட்டான்.(18)
ஓ மன்னா {ஜனமேஜயா} சூக்ஷுமன் என்று அறியப்பட்டவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், பெரும் சாதனைகளைச் செய்தவனுமான அசுரன் {சூக்ஷுமன்}, பூமியில் புகழ்பெற்ற மன்னன் பிருஹத்ரதன் என்று அறியப்பட்டான்.(19) துஹுண்டன் என்ற பெயரில் அறியப்பட்ட அசுரர்களின் முதன்மையானவன், பூமியின் சேனாபிந்து என்ற ஏகாதிபதியாக அறியப்பட்டான்.(20) இஷுபா {இஷுபாத்} என்ற பெயரில் அறியப்பட்ட பெரும் பலம் வாய்ந்த அசுரன், பூமியில் புகழ்பெற்ற ஆற்றலைக் கொண்ட ஏகாதிபதி நக்னஜிதன் என்று அறியப்பட்டான்.(21) ஏகச்சக்கரன் என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் பிரதிவிந்தியன் என்று அறியப்பட்டான்.(22) பல போர் முறைகளை அறிந்த விருபாக்ஷன் என்ற பெரும் அசுரன் பூமியில் மன்னன் சித்திரவர்மன் {சித்திரதர்மன்} என்று அறியப்பட்டான்.(23) எதிரிகளின் பெருமைகளைச் சிறுமையாக்குபவனும், தானவர்களின் முதன்மையான வீரனுமான ஹரன், பூமியில் பேறும் புகழும் பெற்ற சுபாஹுவாக அறியப்பட்டான்.(24) {பெரும் ஆற்றலுடையவனும், எதிரிகளை அழிப்பவனுமான அஹரன் என்பவன் பூமியில் பாஹ்லீகன் என்ற பெயர் கொண்ட மன்னனாகப் பிறந்தான்}[1].(25) பெரும் சக்தி வாய்ந்தவனும், எதிரிகளை அழிப்பவனுமாகச் சுகுத்ரன் {நிசந்திரன்} என்ற அசுரன், பூமியில் பேறு பெற்ற ஏகாதிபதியான முஞ்சகேசன் என்று அறியப்பட்டான்.(26) தனது நுண்ணறிவுக்குப் பெயர் பெற்றவனும், போரில் வெற்றிகொள்ளப்படாதவனும், நிகும்பன் என்று அழைக்கப்பட்டவனுமான பெரும் அசுரன், பூமியில் மன்னன் தேவாதிபனாகப் பிறந்து, ஏகாதிபதிகளில் முதன்மையானவனாக இருந்தான்.(27)
திதியின் மைந்தர்களில் சரபன் என்று அழைக்கப்பட்ட பெரும் அசுரன், பூமியில் பௌரவன் என்று அழைக்கப்பட்ட அரசமுனியாக ஆனான்.(28) பெரும் சக்தி கொண்டவனும், பேறுபெற்றவனுமான குபடன் என்ற பெரும் அசுரன், பூமியில் புகழ்வாய்ந்த ஏகாதிபதி சுபார்ஸ்வனாகப் பிறந்தான்.(29) ஓ மன்னா {ஜனமேஜயா}, கிராதன் {கபடன்} என்றழைக்கப்பட்ட பெரும் அசுரன், பூமியில் தங்க மலையைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய வடிவத்துடன் அரசமுனி பர்வதேயனாகப் பிறந்தான்.(30) அசுரர்களில் இரண்டாம் சலபன் என்று அறியப்பட்டவன், பாஹ்லீகர்களின் நாட்டில் ஏகாதிபதி பிரகலாதனாக ஆனான்.(31) சந்திரன் என்ற பெயரால் அறியப்பட்டவனும். நட்சத்திரங்களின் தலைவனைப் போல் அழகு நிறைந்தவனுமான திதியில் மைந்தர்களில் முதன்மையானவன், பூமியில் காம்போஜ நாட்டின் மன்னன் சந்திரவர்மனாக அறியப்பட்டான்.(32) ஆர்கா {சூரியன்} என்ற பெயரில் அறியப்பட்ட தானவர்களில் காளை, பூமியில் அரசமுனி ரிஷிகனாக ஆனான்.(33) மிருதபன் என்று அறியப்பட்ட அசுரர்களில் சிறந்தவன், பூமியில், பச்சுமானூபகன் என்ற ஏகாதிபதியாக ஆனான்.(34) கரிஷ்டன் {கவிஷ்டன்} என்று அறியப்பட்டவனும், பெரும் சக்தி கொண்டவனுமான பெரும் அசுரன் பூமியில் மன்னன் துருமசேனனாகப் பிறந்தான்.(35) மயூர்யன் என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் ஏகாதிபதி விஸ்வனாக அறியப்பட்டான்.(36) சுபர்ணன் என்று அழைக்கப்பட்ட மயூர்யனின் தம்பி, பூமியில் ஏகாதிபதி காலகீர்த்தியாக அறியப்பட்டான்.(37) சந்திரஹந்தரி {சந்திரஹந்தா} என்று அறியப்பட்ட வலிமைமிக்க அசுரன், பூமியில் அரசமுனி சுனகனாக ஆனான்.(38) சந்திரவினாசனன் {சந்திரப்ரமர்த்தனன்} என்று அழைக்கப்பட்ட பெரும் அசுரன், பூமியில் ஏகாதிபதி ஜானகியாக அறியப்பட்டான்.(39)
ஓ குரு குலத்தின் இளவரசனே! {ஜனமேஜயா}, தீர்க்கஜிஹ்வன் என்று அழைக்கப்பட்ட தானவர்களில் காளை, பூமியில் காசிராஜன் என்று அறியப்பட்டான்.(40) {தக்ஷகனின் மகளும், கசியபரின் 13 மனைவியருள் ஒருத்தியுமான} சிம்ஹிகையால் பெறப்பட்டவனும், சூரியனையும் சந்திரனையும் தண்டிப்பவனுமான கிரகம் {ராகு}, பூமியில் ஏகாதிபதி கிராதன் என்று அறியப்பட்டான்.(41) {தக்ஷகனின் மகளும், கசியபரின் 13 மனைவியருள் ஒருத்தியுமான} தனாயுவின் நான்கு மகன்களில் மூத்தவனாக விக்ஷரன் என்ற பெயரில் அறியப்பட்டவன், பூமியில் உற்சாகமான ஏகாதிபதி வசுமித்ரனாக ஆனான்.(42) பெரும் அசுரன் விக்ஷரனுக்கு அடுத்துப் பிறந்தவன் {விக்ஷரனின் தம்பி} {பலன் என்ற அசுரன்}, பாண்டிய என்று அழைக்கப்பட்ட நாட்டின் {பாண்டிய நாட்டின்} மன்னனாகப் பிறந்தான்.(43) வலினன் என்ற பெயரில் அறியப்பட்ட அசுரர்களில் சிறந்தவன், பூமியில் ஏகாதிபதி பௌண்ட்ரமாத்ஸ்கனாக ஆனான்.(44) ஓ மன்னா {ஜனமேஜயா}, விருத்திரன் என்று அறியப்பட்ட பெரும் அசுரன், பூமியில் அரசமுனி மணிமத் {மணிமான்} என்ற பெயரில் அறியப்பட்டான்.(45) விருத்திரனின் தம்பியும், குரோதஹந்தரி என்று அறியப்பட்டவனுமான அசுரன், பூமியில் மன்னன் தண்டன் என்று அறியப்பட்டான்.(46) குரோதவர்தனன் என்ற பெயரில் அறியப்பட்டவனான மற்றொரு அசுரன், பூமியில் ஏகாதிபதி தண்டதாரனாக அறியப்பட்டான்.(47)
காலேயனின் எட்டு மகன்களில் {காலகேயர்களில்} பூமியில் பிறந்த அனைவரும், புலிகளின் ஆற்றலைக் கொண்ட பெரும் மன்னர்களாக ஆனார்கள்.(48) அவர்கள் அனைவரிலும் மூத்தவன், மகத நாட்டின் மன்னன் ஜயத்சேனனாக ஆனான்.(49) அவர்களில் இரண்டாமவன், இந்திரனைப் போன்ற ஆற்றலுடன் கூடியவனாகப் பூமியில் அபராஜிதனாக அறியப்பட்டான்.(50) பெரும் சக்தியும், மாயை உண்டாக்குவதில் பலமும் கொண்டவனான அவர்களில் மூன்றாமவன், பெரும் ஆற்றலைக் கொடையாகக் கொண்ட நிஷாதர்களின் {வேடர்களின்} மன்னனாகப் பூமியில் பிறந்தான்.(51) அவர்களில் நான்காவதாக அறியப்பட்ட மற்றொருவன், பூமியில் அரசமுனிகளில் சிறந்த சிரேணிமத் {சிரேணிமான்} என்று அறியப்பட்டான்.(52) அவர்களில் ஐந்தாமவனான பெரும் அசுரன், பூமியில் எதிரிகளை ஒடுக்குபவனான மன்னன் மஹாஜனன் என்று அறியப்பட்டான்.(53) அவர்களில் பெரும் நுண்ணறிவு கொண்டவனும் ஆறாமவனுமான பெரும் அசுரன், அரச முனிகளில் சிறந்தவனான அபீருவாகப் பூமியில் அறியப்பட்டான்.(54) அவர்களில் ஏழாமவன், நடுக்கடலில் இருந்து பூமி முழுமையும் அறியப்பட்டவனும், சாத்திரங்களின் உண்மையை நன்கறிந்தவனுமான மன்னன் சுமுத்திரசேனனாக அறியப்பட்டன்.(55) காலகேயர்களில் எட்டாமவனாக பிருஹத் என்று அறியப்பட்டவன், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடும் அறம் சார்ந்த மன்னனாக ஆனான்.(56)
குக்ஷி என்ற பெயரில் அறியப்பட்ட வலிமைமிக்கத் தானவன், தங்க மலையைப் போன்ற தன் பிரகாசத்தால் பூமியில் பார்வதீயனாக ஆனான்.(57) பெரும் சக்தியையும், வலிமைமையையும் கொண்ட அசுரன் கிரதனன், பூமியில் ஏகாதிபதி சூர்யாக்ஷனாக அறியப்பட்டான்.(58) சூரியன் என்ற பெயரில் அறியப்பட்டவனும், அழகான தன்மைகள் கொண்டவனுமான பெரும் அசுரன், பூமியில் மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனான பாஹ்லீக நாட்டு ஏகாதிபதி தரதனாக அறியப்பட்டான்.(59) ஓ மன்னா {ஜனமேஜயா}, நான் ஏற்கனவே சொன்னவர்களான குரோதவசர்கள் என்றழைக்கப்பட்ட அசுர இனத்தைச் சேர்ந்தவர்கள் பூமியில் வீர மன்னர்களாகப் பிறந்திருந்தனர்.(60) மத்ரகன், கர்ணவேஷ்டன், சித்தார்த்தன், கீடகன், சுவீரன், சுபாஹு, மஹாவீரன், பாஹ்லீகன், கிரதன், விசித்திரன், சுரதன், அழகான மன்னன் நீலன், சீரவாசன், பூமிபாலன், தந்தவக்த்ரன் {தந்தவக்ரன் / தந்தவக்தரன்}, துர்ஜயன் என்றழைக்கப்பட்டவன், மன்னர்களில் புலியான ருக்மி, மன்னன் ஜனமேஜயன், அஷாடன், வாயுவேகன், பூரிதேஜஸ், ஏகலவ்யன், சுமித்திரன், வாடதானன், கோமுகன், கரூஷகர்கள் என்றழைக்கப்பட்ட மன்னர்களின் இனத்தைச் சேர்ந்தோர், க்ஷேமதூர்த்தி, சுருதாயுஸ், உத்வஹன், பிருஹத்சேனன், க்ஷேமன், கலிங்கர்களின் மன்னனான உக்ரதீர்த்தன் {அக்ரதீர்த்தன்}, மன்னன் ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்ட மதிமத் {மதிமான்}[2], ஆகிய(61-66) இந்த முதன்மையான மன்னர்கள் அனைவரும் குரோதவச அசுர குலத்திலிருந்து பிறந்தவர்களாவர். பெரும் வலிமை மற்றும் மகத்தான சாதனைகளைக் கொண்டவனும், செழுமையின் பெரும் பங்கால் அருளப்பட்டவனும், தானவர்களுக்கு மத்தியில் காலநேமி என்ற பெயரில் அறியப்பட்டவனுமான வலிமைமிக்க அசுரன் ஒருவனும் பூமியில் பிறந்திருந்தான். அவன் உக்ரசேனனின் வலிமைமிக்க மகனாகி பூமியில் கம்சன் என்ற பெயரால் அறியப்பட்டான்.(67,68) இந்திரனைப் போன்ற பிரகாசம் கொண்டவனும், அசுரர்களுக்கு மத்தியில் தேவகன் என்ற பெயரால் அறியப்பட்டவனுமான ஒருவன் {அசுரன்}, பூமியில் கந்தர்வர்களின் முதன்மையான மன்னனாகப் பிறந்தான்.(69)
ஓ மன்னா {ஜனமேஜயா}, எந்தப் பெண்ணின் மூலமும் பிறக்காதவரும், பரத்வாஜரின் மகனுமான துரோணர் {குடத்தில் பிறந்தவர்}, மகத்தான சாதனைகளைக் கொண்ட தெய்வீக முனிவர் பிருஹஸ்பதியின் பகுதிகளில் {உயிர்ப்பகுதிகளில்} இருந்து உதித்தவர் என்பதை அறிவாயாக.(70) அவர் வில்லாளிகள் அனைவரின் இளவரசனாகவும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவராகவும், வலிமைமிக்கச் சாதனைகள் மற்றும் பெரும் சக்தியைக் கொண்டவராகவும் இருந்தார்.(71) அவர் {துரோணர்} வேதங்களையும், ஆயுதங்களின் அறிவையும் நன்கறிந்தவராக இருந்தார் என்பதையும் நீ அறிய வேண்டும். அவர் அற்புதமான செயல்களைச் செய்பவராகவும், தம் குலத்தின் பெருமையாகவும் இருந்தார்.(72)
ஓ மன்னா {ஜனமேஜயா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், கொடையாக மிக அதிகமான சக்தியையும் கொண்டவனாக, எதிரிகள் அனைவருக்கும் பயங்கரனாக, எதிரிகளை அடக்குவதில் மிகப் பெரியவனுமான அவரது மகன் அஸ்வத்தாமனானவன், மகாதேவன், யமன், காமன் மற்றும் குரோதனின் ஒருங்கிணைந்த பகுதிகளைக் கொண்டவனாகப் பூமியில் பிறந்தான்.(73,74)
வசிஷ்டரின் சாபம், மற்றும் இந்திரனின் ஆணை ஆகியவற்றால், எட்டு வசுக்களும், கங்கைக்கு அவளது கணவனான சந்தனு மூலம் பிறந்தனர்.(75) அவர்களில் {அப்படிப் பிறந்தவர்களில்} இளையவரான பீஷ்மர், குருக்களின் அச்சங்களைப் போக்குபவராகவும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவராகவும், வேதங்களை அறிந்தவராகவும், பேச்சாளர்களில் முதன்மையானவராகவும், எதிரிகளின் படையணிகளைக் குறைப்பவராகவும் இருந்தார்.(76) வலிமையும் சக்தியும் கொண்டவராக, ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவராக இருந்த அவர் {பீஷ்மர்}, பிருகு குல ஜமதக்னியின் மகனான சிறப்புமிக்க ராமரிடமே {பரசுராமரிடமே} போரிட்டவராவார்.(77)
ஓ மன்னா {ஜனமேஜயா}, கிருபர் என்ற பெயரில் பூமியில் அறியப்பட்ட பிராமண முனிவர், ருத்ரர்களின் குலத்திலிருந்து ஆண்மையின் வடிவமாகப் பிறந்தவராவார்.(78) சகுனி என்ற பெயரில் அறியப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், மன்னனுமான அந்த எதிரிகளை நசுக்குபவன் {சகுனியானவன்}, (மூன்றாவது யுகமான) துவாபரனே என்பதை அறிவாயாக.(79) விருஷ்ணி குலத்தின் பெருமையை உயர்த்துபவனும், எதிரிகளை ஒடுக்குபவனும், உறுதியான இலக்கைக் கொண்டவனுமான சாத்யகி என்பவன், மருத்துக்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் பகுதியில் இருந்து பிறந்தவனாவான்.(80) ஆயுதம் தரித்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், பூமியில் ஏகாதிபதியாக இருந்தவனும், அரசமுனியுமான துருபதனும், தேவர்களின் அதே {மருத்துக்களின்} குலத்திலிருந்தே பிறந்தவனாவான்.(81)
ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் இளவரசனும், எவனாலும் விஞ்சமுடியாத செயல்களைக் கொண்டவனும், க்ஷத்திரியக் காளைகள் அனைவரிலும் முதன்மையானவனுமான கிருதவர்மனும், அதே தேவர்களின் {மருத்துக்களின்} பகுதியிலிருந்தே பிறந்தவனாவான் என்பதையும் நீ அறிய வேண்டும். பிறரின் அரசாங்கங்களை எரிப்பவனும், எதிரிகள் அனைவரையும் ஒடுக்குவதில் மிகப்பெரியவனும், விராடன் என்ற பெயர் கொண்டவனுமான அந்த அரச முனியும், அதே தேவர்களின் {மருத்துக்களின்} பகுதியிலிருந்து பிறந்தவனேயாவான்.(82,83) ஹம்சன் என்ற பெயரில் அறியப்பட்டவனான அரிஷ்டையின் மகன், குரு குலத்தில் பிறந்து, கந்தர்வர்களின் ஏகாதிபதியானான்.(84) அவனே கிருஷ்ண துவைபாயனரின் {வியாசரின்} வித்தில் பிறந்தவனும், நீண்ட கரங்கள், பெரும் சக்தி ஆகியவற்றைக் கொடையாகக் கொண்டவனும், ஏகாதிபதியாகவும், ஞானக் கண் கொண்டவனாக அறியப்பட்டவனுமான திருதராஷ்டிரன் என்ற பெயரில் அறியப்பட்டவன், தன் தாயின் {அம்பிகையின்} தவறாலும், முனிவரின் {வியாசரின்} கோபத்தாலும் குருடனாக ஆனான். பெரும் பலத்தைக் கொண்ட அவனது {திருதராஷ்டிரனது} தம்பியானவன், உண்மையில், பாண்டு என்று அறியப்பட்டு, உண்மைக்கும் {சத்தியத்திற்கும்}, அறத்திற்கும் {தர்மத்திற்கும்} அர்ப்பணிப்புள்ளவனாகவும், தூய்மையின் திருவடிவமாகவும், பெரும் மனிதனாகவும் இருந்தான்.(85,86) ஓ மன்னா! {ஜனமேஜயா}, அறம்சார்ந்தோர் அனைவரிலும் முதன்மையானவனும், நீதிதேவனே ஆனவனுமாக விதுரன் என்று பூமியில் அறியப்பட்டவன், முனிவர் அத்ரியின் சிறப்புமிக்க, பெரும் நற்பேறுபெற்ற மகனாவான் என்பதை நீ அறிய வேண்டும்.(87)
குருக்களின் நல்ல புகழை அழித்தவனும், தீய எண்ணம் கொண்டவனுமான தீய மன்னன் துரியோதனன், பூமியில் {நான்காவது யுகமான} கலியின் பகுதியிலிருந்து பிறந்தவனாவான்.(88) அவனே உயிரினங்கள் அனைத்தும் கொல்லப்படுவதற்கும், பூமி வெறுமையானதற்கும் காரணமானான்; மேலும் அவனே பகைமையின் தழலை மூட்டி அனைவரையும் எரித்தவனானான். புலஸ்தியரின் மகன்களே (ராட்சசர்களே), துச்சாசனன் முதலிய நூறு தீயவர்களாக, துரியோதனனுக்குத் தம்பிகளாகப் பூமியில் பிறந்தனர்.(89,90) ஓ பாரத இளவரசர்களில் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனை (அவனது திட்டங்கள் அனைத்திலும்) எப்போதும் ஆதரித்தவர்களான துர்முகன், துஹ்ஸஹன் மற்றும் நான் பெயர் குறிப்பிடாத இன்னும் பிறர் உண்மையில் புலஸ்தியரின் மகன்களே ஆவர். இந்த நூறு பேருக்கும் மேல், திருதராஷ்டிரன், ஒரு வைசிய மனைவியிடம் யுயுத்சு என்ற பெயரில் ஒரு மகனையும் கொண்டிருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(91,92)
ஜனமேஜயன், "ஓ சிறப்புமிக்கவரே {வைசம்பாயனரே}, திருதராஷ்டிரனுடைய மகன்களின் பெயர்களை மூத்தவனிலிருந்து தொடங்கி அவர்களுடைய பிறப்பின் வரிசைப்படி எனக்குச் சொல்வீராக" என்றான்.(93)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் : துரியோதனன், யுயுத்சு, துச்சாசனன், துஸ்ஸஹன், துச்சலன், துர்முகன், விவின்சதி {விவிம்சதி}, விகர்ணன், ஜலசந்தன், சுலோச்சனன், விந்தன், அனுவிந்தன், துர்த்தர்ஷன், சுபாஹு, துஷ்பிரதர்ஷணன், துர்மர்ஷணன், {இங்கே ஒன்று விடுபட்டிருக்க வேண்டும்}, துஷ்கர்ணன், கர்ணன், சித்ரன், உபசித்ரன், சிர்தாக்ஷன், சாருசித்ரன், அங்கதன், துர்மதன், துஷ்பிரஹர்ஷணன், விவித்சு, விகடன், சமன், ஊர்ணநாபன், பத்மநாபன், நந்தன், உபநந்தன், சேனாபதி, சுஷேணன், குண்டோதரன், மஹோதரன், சித்ரபாஹு, சித்ரவர்மன், சுவர்மன், துர்விரோசனன், அயோபாஹு, மஹாபாஹு, சித்ரசாபன், சுகுண்டலன், பீமவேகன், பீமபலன், பலாகி, பீமவிக்ரமன், உக்ராயுதன், பீமசரன், கனகாயு, திருடாயுதன், திருடவர்மன், திருடக்ஷத்ரன், சோமகீர்த்தி, அனாதரன் {அனூதரன்}, ஜராசந்தன், திருடசந்தன், சத்யசந்தன், சஹஸ்ரவேகன், உக்ரசிரவஸ், உக்ரசேனன், க்ஷேமமூர்த்தி, அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன், துராதரன், திருடஹஸ்தன், சுஹஸ்தன், வாதவேகன், சுவர்ச்சஸ், அதித்யகேது, பஹ்வாசி, நாகதத்தன், அனுயாயீ, நிஷங்கீ, குவசீ {கவசீ}, தண்டீ, தண்டதாரன், தனுக்கிரஹன், உக்கிரன், பீமரதன், வீரன், வீரபாஹு, அலோலூபன், அபயன், ரௌத்திரகர்மன், திருடரதன், அனாத்ருஷ்யன், குண்டவேதன், விராவி, தீர்க்கலோசனன், தீர்க்கபாஹு, மஹாபாஹு, வியூடோரு, கனகாங்கதன், குண்டஜன், சித்ரகன் ஆகியோராவர். வைசிய மனைவியின் மூலம் திருதராஷ்டிரனுக்குப் பிறந்த யுயுத்சு, அந்த நூறு பேருக்கும் அதிகமானவனாவான்[3].(94-106) அந்த நூறுபேருக்கு மேல், துச்சலை என்ற பெயரில் மகள் ஒருத்தியும் இருந்தாள்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே (திருதராஷ்டிரனின்) அந்த நூறு மைந்தர்களின் பெயரையும், அந்த மகளின் பெயரையும் உரைத்துவிட்டேன். இப்போது நீ அவர்கள் பிறந்த வரிசையின்படி அவர்களது பெயரை அறிந்து கொண்டாய்.(107) அவர்கள் அனைவரும் வீரர்களாகவும், பெரும் தேர்வீரர்களாகவும், போர்க்கலையில் திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அதையும் தவிர, ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் வேதாங்கங்களை அறிந்தவர்களாகவும், சாத்திரங்களைப் படித்தவர்களாகவும் இருந்தனர்.(108) அவர்கள் அனைவரும் தாக்குவதிலும் தடுப்பதிலும் வலிமை மிக்கவர்களாகவும், கல்வியில் அருள் கொண்டவர்களாகவும் இருந்தனர். மேலும், ஓ ஏகாதிபதி! அவர்கள் அனைவரும் அருளிலும், சாதனைகளிலும் தங்களுக்குத் தகுதியான மனைவியரைக் கொண்டிருந்தனர்.(109) ஓ மன்னா {ஜனமேஜயா}, நேரம் வந்த போது, அந்தக் கௌரவ ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சகுனியின் ஆலோசனையை ஏற்று, தனது மகள் துச்சலையை, சிந்து மன்னன் ஜெயத்ரதனுக்குக் கொடுத்தான்[4].(110)

[1] கங்குலியில் இந்த ஸ்லோகம் விடுபட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.

[2] கும்பகோணம் பதிப்பில் இந்த இடம் சற்றே மாறுபடுகிறது. "கலிங்க மன்னன் குஹரன், மதிமான் எனும் மன்னன், ஈஸ்வரன் என்ற பெயருள்ளவன்" என்று வருகிறது.

[3] கிசாரி மோகன் கங்குலியின் மொழிபெயர்ப்பின்படி மேற்கண்ட கௌரவர்கள் பெயர்ப்பட்டியலில் 98 பெயர்கள்தான் வருகின்றன. ஆகையால் நூறு பேர் யார் என்பது தெளிவாகத் அறிய http://en.wikipedia.org/wiki/Kaurava என்ற லிங்குக்குச் சென்று பார்த்ததில். அங்கே Puranic Encyclopedia of Vettom Mani. Mahabharata Aadiparvam – chapter 67 Compiled by T.J.Neriamparampil என்ற புத்தகத்திலிருந்து அப்பெயர்களைக் கொடுத்திருந்தார்கள் அந்தப் பெயர் வரிசை பின்வருமாறு: துரியோதனன், துச்சாசனன், துட்சலன், ஜலகந்தன், சாமன், சாஹன், விந்தன், அனுவிந்தன், துர்முகன், சித்திரசேனன், துரதர்ஷன், துர்மர்ஷன், துஸ்ஸஹா, துர்மதன், விகர்ணன், துஷ்கர்ணன், துர்தரன், விவின்சதி, துர்மார்ஷனன், துர்விஷாஹன், துர்மோசனன், துஷ்பிரதர்ஷா, துர்ஜயன், ஜைத்திரன், பூரிவலன், ரவி, ஜெய்சேனன், சுஜாதா, சுரூதவன், சுரூதந்தன், ஜெயா, சித்திரன், உபசித்திரன், சாருசித்திரன், சித்திராக்ஷன், சரசனன், சித்ரயுதன், சித்திரவர்மன், சுவர்மண், சுதர்ஷனன், தனுர்கிரஹன், விவித்சு, சுபாஹு, நந்தா, உபநந்தா, கிராதா, வடவேகா, நிஷாகின், கவஷின், பாசி, விகடன், சோமன், சுவர்சஸஸ், தனுர்தரன், அயோபாஹு, மஹாபாஹு, சித்ராம்கன், சித்ரகுண்டலன், பீமரதன், பீமவேகன், பீம்பேலன், உக்கிராயுதன், குண்டாதரன், பிருந்தாரகன், திருதவர்மன், திருதாக்ஷத்ரா, திருதசந்தா, ஜராசந்தா, சத்தியசந்தா, சதாசுவாக், உக்கிரஸ்ரவஸ், உக்கிரசேனன், சேனாயி, அபராஜிதா, குந்தாசாய், திருதஹஸ்தா, சுஹஸ்தா, சுவர்ச்சா, ஆதித்யகேது, உக்கிரசாய், கவச்சி, கிராதனா, குந்தை, பீமவிக்ரன், அலோலூபன், அபயா, திரிர்மாவு, திரிதராஸ்ரயா, அனாதருஷ்யா, குந்தபேதி, விரவை, சித்திரகுண்டலா, பிரதாமா, அமபிரமாதி, தீர்க்கரோமன், சுவீர்யவான், தீர்க்கபானு, காஞ்சனாத்வஜன், குந்தாசி, விராஜஸ் என்பதாகும்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே (திருதராஷ்டிரனின்) அந்த நூறு மைந்தர்களின் பெயரையும், அந்த மகளின் பெயரையும் உரைத்துவிட்டேன். இப்போது நீ அவர்கள் பிறந்த வரிசையின்படி அவர்களது பெயரை அறிந்து கொண்டாய்.(107) அவர்கள் அனைவரும் வீரர்களாகவும், பெரும் தேர்வீரர்களாகவும், போர்க்கலையில் திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அதையும் தவிர, ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் வேதாங்கங்களை அறிந்தவர்களாகவும், சாத்திரங்களைப் படித்தவர்களாகவும் இருந்தனர்.(108) அவர்கள் அனைவரும் தாக்குவதிலும் தடுப்பதிலும் வலிமை மிக்கவர்களாகவும், கல்வியில் அருள் கொண்டவர்களாகவும் இருந்தனர். மேலும், ஓ ஏகாதிபதி! அவர்கள் அனைவரும் அருளிலும், சாதனைகளிலும் தங்களுக்குத் தகுதியான மனைவியரைக் கொண்டிருந்தனர்.(109) ஓ மன்னா {ஜனமேஜயா}, நேரம் வந்த போது, அந்தக் கௌரவ ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சகுனியின் ஆலோசனையை ஏற்று, தனது மகள் துச்சலையை, சிந்து மன்னன் ஜெயத்ரதனுக்குக் கொடுத்தான்[4].(110)
[4] கும்பகோணம் பதிப்பில் இது, "ராஜாவே, குரு வம்சத்தவனாகிய திருதராஷ்டிர மகாராஜா துச்சலையென்னும் பெண்ணை விவாகத்துக்குரிய பருவத்தில் காந்தாரியின் அபிப்பிராயப்படி சிந்து தேசத்தரசனாகிய ஜயத்ரதனுக்குக் கன்னிகாதானஞ்செய்தான்" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |